Published:Updated:

மாற்றுத் திறனாளிகளுக்கான ஆட்டோமேட்டிக் சீட் வசதியுடன் வந்துடுச்சு எக்ஸ்யூவி700 கார்... என்ன ஸ்பெஷல்?

எக்ஸ்யூவி700

டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வாங்கிய அவனி லேகராவுக்கு, தனது சிறப்பு எக்ஸ்யூவி700 காரை உருவாக்கியிருக்கிறது மஹிந்திரா! மாற்றுத்திறனாளிக்களுக்கான இந்த காரில் என்ன ஸ்பெஷல்?

மாற்றுத் திறனாளிகளுக்கான ஆட்டோமேட்டிக் சீட் வசதியுடன் வந்துடுச்சு எக்ஸ்யூவி700 கார்... என்ன ஸ்பெஷல்?

டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வாங்கிய அவனி லேகராவுக்கு, தனது சிறப்பு எக்ஸ்யூவி700 காரை உருவாக்கியிருக்கிறது மஹிந்திரா! மாற்றுத்திறனாளிக்களுக்கான இந்த காரில் என்ன ஸ்பெஷல்?

Published:Updated:
எக்ஸ்யூவி700

தீபா மாலிக் – கேல்ரத்னா, பத்மஸ்ரீ, அர்ஜூனா என்று பல தேசிய விருதுகளை வாங்கிக் குவித்த பாராலிம்பியன், ரியோ 2016 ஒலிம்பிக் தங்க மங்கை. ‘‘எனக்கு எஸ்யூவி ஓட்டுவது ரொம்பப் பிடிக்கும். ஆனால், அதில் உள்ளே போய் வெளியே வருவது சாதாரணமானவர்களுக்கே கஷ்டம். எங்களைப் போன்ற மாற்றுத் திறனாளிகளுக்கு இப்படி ஒரு வசதியான கார் இந்தியாவில் தயாரிக்கப்பட்டால் எப்படி இருக்கும்!’’ என்று டோக்கியோவில் ஒரு பெரிய எஸ்யூவி காரில், ஆட்டோமேட்டட் சேரில் உள்ளே போவது போன்ற ஒரு வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டிருந்தார்.

அதை டாடா, எம்ஜி மோட்டார்ஸ், மஹிந்திரா நிறுவனம் என்று பல நிறுவனங்களுக்கும் டேக் செய்திருந்தார் தீபா மாலிக். ட்விட்டரில் செம ஆக்டிவ்வாக இருக்கும் மஹிந்திராவின் தலைவர் ஆனந்த் மஹிந்திராவின் காதுகளுக்கு இது போக, உடனே 5ஜி நெட்வொர்க் வேகத்தில் ஸ்பீடு ரிப்ளை பறந்தது.

மஹிந்திரா ரிசர்ச் வேலியில் தீபா மாலிக்
மஹிந்திரா ரிசர்ச் வேலியில் தீபா மாலிக்
‘‘அன்புள்ள தீபா… உங்களின் கோரிக்கையும் சவாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. எனது மஹிந்திரா டிசைன் டீம் வேலு மற்றும் ரிசர்ச் வேலி டீமுடன் கலந்து இதற்கு ஒரு நல்ல பதில் தருவோம்!’’ என்று பதிலளித்தது மட்டுமல்லாமல், தடாலடி ஆக்ஷனிலும் இறங்கிவிட்டார். மஹிந்திராவின் டிசைன் டீம் தலைவர் வேலுசாமியுடன் சட்டெனக் கலந்தாலோசித்து, மாற்றுத் திறனாளிகளுக்கான எக்ஸ்ட்ரா சீட் – அதுவும் ஆட்டோமேட்டட் வசதியுடன் கொண்ட எக்ஸ்யூவி700 தயாராகி விட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இப்போது பாராலிம்பிக்ஸ் 2020 போட்டியில் தங்கம் குவித்தவர்களுக்கு இந்த கார் ரெடியாகி வருகிறது. நேஷனல் கேம்ஸில் தங்கம் வென்றாலே மஹிந்திராவின் சார்பாக ஒரு புது கார் அன்பளிப்பாகப் பறக்கும். பாராலிம்பிக்ஸ் என்றால் விடுவாரா ஆனந்த் மஹிந்திரா! ஏற்கெனவே ஒலிம்பிக்கில் தங்கம் வாங்கிய நீரஜ் சோப்ரா மற்றும் சுமித் அந்தில் போன்றவர்களுக்கு, மஹிந்திராவின் ஃப்ளாக்ஷிப் எஸ்யூவி பரிசாகப் போய்விட்டது. இதைத் தொடர்ந்து, டோக்கியோ 2021 பாராலிம்பிக்ஸில் துப்பாக்கி சுடுதலில் தங்கம் வாங்கிய அவனி லேகரா (Avani Lekhara)-வுக்கு, ஒரு ஸ்பெஷல் எக்ஸ்யூவி700 தயாராகிவிட்டது. True Assis Tech எனும் நிறுவனத்தோடு சேர்ந்து இதைச் சாத்தியமாக்கி இருக்கிறார் ஆனந்த் மஹிந்திரா.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தயாரான கையோடு, தீபா மாலிக்கை தனது மஹிந்திரா ரிசர்ச் வேலிக்கு வரவழைத்து, அந்த ஸ்பெஷல் மாடல் இருக்கையில் அமர வைத்தும் காட்டிவிட்டார் ஆனந்த்.

ஆம், இதில் தீபா மாலிக் கேட்டதுபோல், மாற்றுத் திறனாளிகள் எளிதாக அமர்ந்து உள்ளே போய் வரும் வகையில் ஆட்டோமேட்டட் எக்ஸ்ட்ரா சீட் வசதியுடன் எக்ஸ்யூவி700 காரை கஸ்டமைஸ் செய்திருக்கிறது மஹிந்திரா டீம்.

Co-Driver Automated Seat
Co-Driver Automated Seat

ஒரு பட்டன் மூலம் இந்த சீட்டை Forward/Return என இரு ஆப்ஷன்களில் ஆட்டோமேட்டிக்காக இயக்கிக் கொள்ளலாம். ஃபார்வேர்டு என்பது காருக்கு வெளியே போவது, வெளியே உள்ள சீட்டில் உட்கார்ந்து ரிட்டர்ன் பட்டனைத் தட்டினால் சீட் தானாக உள்ளே போகும். இதில் சீட்டை விரும்பிய உயரத்துக்கு ஏற்றி இறக்கிக் கொள்ளும் Ingress மற்றும் Egress வசதிகளும் இருக்கின்றன. இது டிரைவருக்குப் பக்கத்தில் கோ-டிரைவர் சீட்டாக ரெடியாகி இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தங்கம் வாங்கிய தங்க மங்கையைக் குறிக்கும் விதமாக, காருக்கு உள்ளேயும் வெளியேயும் அங்கங்கே தங்க முலாம் வேறு பூசப்பட்டு இருக்கிறது. தங்க கிரில்லில் பளபளக்கும் இந்த மாடலின் பெயர் எக்ஸ்யூவி700 AX7L. உள்ளே ஆறு சீட்களிலும் உள்ள ஹெட்ரெஸ்ட்டுக்கும் தங்கத் தையல் வேலைப்பாடுகள். டேஷ்போர்டிலும் தங்க வேலைப்பாடு.

இதையெல்லாம் விட காரின் ஹைலேட்டே இதுதான் – அவனி லேகரா கலந்து கொண்ட போட்டியின் பெயர் 10M Air Rifle Standing SH1. இதை நினைவுபடுத்தும்விதமாக காரின் பின் பக்கம் SH1–10M என்று ஒரு பேட்ஜ். அதுவும் தங்க நிறத்தில் ஜொலிக்கிறது. அதாவது, இது ஸ்பெஷல் கஸ்டமைஸ்டு மாடல் என்பதைக் குறிக்க இந்த பேட்ஜ்.
பின் பக்கம் 
SH1–10M பேட்ஜ்
பின் பக்கம் SH1–10M பேட்ஜ்

‘‘என் கோரிக்கையைச் செவிசாய்த்து, அதைச் சாத்தியப்படுத்திய ஆனந்த் மஹிந்திரா சாருக்கு நன்றி!’’ என்று தீபா மாலிக்கும், ‘‘இதுபோன்ற கார்கள் விரைவில் சாலையில் ஓடவேண்டும். நன்றி சார்’’ என்று அவனி லேகராவும் மாறி மாறித் தங்களின் நன்றிகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள் மஹிந்திராவுக்கு.

இதற்கு முன்பு நம் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் டொயோட்டா அல்ஃபார்டு காரிலும் இப்படி ஒரு வசதி இருந்தது. ஆனால், அது ஆஃப்டர் மார்க்கெட்டில் ஸ்பெஷலாக அசெம்பிள் செய்யப்பட்டது. ஆனால், இந்த எக்ஸ்யூவி700 மஹிந்திரா தொழிற்சாலைக்குள்ளேயே ஸ்பெஷலாகவே தயாராகியது என்பதற்காகவே மஹிந்திராவுக்கு குடோஸ்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism