Published:Updated:

TATA முன்னாள் சேர்மன் சைரஸ் மிஸ்ட்ரி விபத்து: காஸ்ட்லியான பென்ஸ் காராக இருந்தாலும் உயிர் போகுமா?

Benz GLC Accident

இந்த பென்ஸில் உள்ள காற்றுப்பைகள், SRS (Supplementary Restraint System) எனும் தொழில்நுட்பம் கொண்டவை. எமர்ஜென்ஸி நேரங்களில் மட்டுமே இது வேலை செய்யும். அதுவும் சீட் பெல்ட் போடுவதுதான் இதன் முதன்மைப் பாதுகாப்பு மெக்கானிசம்.

TATA முன்னாள் சேர்மன் சைரஸ் மிஸ்ட்ரி விபத்து: காஸ்ட்லியான பென்ஸ் காராக இருந்தாலும் உயிர் போகுமா?

இந்த பென்ஸில் உள்ள காற்றுப்பைகள், SRS (Supplementary Restraint System) எனும் தொழில்நுட்பம் கொண்டவை. எமர்ஜென்ஸி நேரங்களில் மட்டுமே இது வேலை செய்யும். அதுவும் சீட் பெல்ட் போடுவதுதான் இதன் முதன்மைப் பாதுகாப்பு மெக்கானிசம்.

Published:Updated:
Benz GLC Accident
சீட் பெல்ட் போடுபவர்களிடம் ஒரு குணம் இருக்கும். ‘பின்னாடிதானே உட்கார்ந்திருக்கேன். எனக்கு எதுக்கு சீட் பெல்ட்? போலீஸ் பிடிக்கமாட்டாங்க!’ என்பார்கள். இது போலீஸுக்கோ அபராதத்துக்கோ பயந்து செய்ய வேண்டிய விஷயமில்லை. கார்களைப் பொருத்தவரை சீட் பெல்ட் என்பது காரில் இருக்கும் மொத்தப் பயணிகளுக்குமே முக்கியமான பாதுகாப்பு அம்சம்.

அதுதான் நிரூபணமாகி இருக்கிறது, டாடா சன்ஸ் முன்னாள் சேர்மனான சைரஸ் மிஸ்ட்ரியின் விபத்து. சம்பவம் நடந்தபோது, இவர் தனது காரில் நண்பருடன் பின் பக்கம் அமர்ந்து பயணித்திருக்கிறார். பின் பக்கப் பயணிகள் இருவருமே சீட் பெல்ட் போடவில்லை என்பதைக் கண்டறிந்திருக்கிறார்கள். உண்மையில் சீட் பெல்ட் போடாததுதான் அவர்களது இழப்புக்குக் காரணம் என்பதும் நிரூபணமாகி இருக்கிறது. இன்னொரு முக்கியமான விஷயத்தையும் கவனிக்க வேண்டும். சீட் பெல்ட் போட்டால்தான் காற்றுப்பைகள் விரிவடையும்.

Benz GLC
Benz GLC

சைரஸ் மிஸ்ட்ரி பயணித்தது பென்ஸ் நிறுவனத்தின் GLC 220D 4Matic எனும் காஸ்ட்லியான எஸ்யூவி. 2017 மாடலான இதன் அப்போதைய விலை – சுமார் 70 லட்ச ரூபாய் இருக்கலாம். 7 காற்றுப்பைகள், ஏபிஎஸ், இஎஸ்பி, ட்ராக்ஷன் கன்ட்ரோல் என வதவதவெனப் பாதுகாப்பு வசதிகள் கொண்ட இந்த பென்ஸ், பாதுகாப்புக்குப் பெயர் பெற்றதுதான். இதில் முழங்கால்களுக்கு என்றும் தனியாகக் காற்றுப்பைகள் விரியும். என்னதான் கார்கள் பாதுகாப்பானவையாக இருந்தாலும், பயணிகளும் விதிகளைக் கடைப்பிடித்தால்… பெரிய பிரச்னைகளைத் தவிர்க்கலாம். இந்த கார் 170 கிமீ வேகத்தில் வந்து தடுப்பில் மோதியதாகச் சொல்கிறார்கள். பென்ஸ் என்று இல்லை; எப்படிப்பட்ட பீரங்கி போன்ற கட்டுமானம் கொண்ட கார்களும் இப்படிப்பட்ட வேகத்தில் விபத்து ஏற்பட்டால்… நிலைகுலைவது வாஸ்தவமே!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த பென்ஸில் உள்ள காற்றுப்பைகள், SRS (Supplementary Restraint System) எனும் தொழில்நுட்பம் கொண்டவை. எமர்ஜென்ஸி நேரங்களில் மட்டுமே இது வேலை செய்யும். அதுவும் சீட் பெல்ட் போடுவதுதான் இதன் முதன்மைப் பாதுகாப்பு மெக்கானிசம். சீட் பெல்ட் சென்சாரைக் கணித்தே பல கார்களில் காற்றுப்பைகள் வேலை செய்கின்றன. இது காஸ்ட்லி பென்ஸாக இருந்தாலும், இந்த காரில் பின் பக்கப் பயணிகளுக்கான, முகத்தைப் பாதுகாக்கும் Front Facing காற்றுப்பைகள் இல்லை என்பதும் இங்கே கவனிக்க வேண்டிய விஷயம். அதாவது, விபத்தின்போது பின் பக்கப் பயணிகளைப் பாதுகாக்க, முன் சீட்களின் பின்னால் இருந்து எழும் காற்றுப்பைகள் இதில் இல்லை என்பதும் மைனஸ்.

இந்த பென்ஸில் Pre Safe System எனக்கூடிய ஒரு பாதுகாப்பு வசதி உண்டு. இது, எமர்ஜென்ஸி நேரங்களில் முன் பக்கப் பயணிகளின் சீட் பெல்ட்டை எலெக்ட்ரிக்கலாக ப்ரீடென்ஷன் ஆக்கி, இறுக்கமாக்குவதுதான். அதனால், விபத்தின்போது முன் பக்கப் பயணிகள் டேஷ்போர்டு மற்றும் விண்ட்ஷீல்டை நோக்கித் தூக்கி எறியாமல், இறுக்கமாகப் பிடித்துக் கொள்ளும்.
Cyrus Mistry
Cyrus Mistry

சைரஸ் மிஸ்ட்ரியின் போஸ்ட்மார்ட்டம் அறிக்கையில், அவருக்கும் அவரது நண்பரான ஜஹாங்கீர் இருவருக்குமே நரம்புகளில், முதுகெலும்பில் பலத்த காயம் ஏற்பட்டதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. Blunt Thorax Trauma என்று சொல்லக்கூடிய மார்பு மற்றும் RIB ஃப்ராக்ச்சர் ஏற்பட்டிருக்கின்றன என்கிறார்கள். ‘‘கார் அதிவேகமாக வந்து மோதியதால், இருவருக்கும் ஃப்ராக்ஷன் ஆஃப் செகண்டில் Blunt Thorax Trauma ஏற்பட்டிருக்கிறது!’’ என்கிறார் ஒரு மருத்துவர். 170 கிமீ எனும் அதிவேகத்தாலும், பின் பக்கம் சீட் பெல்ட் போடாததாலும் இந்த விளைவு.

பென்ஸ் நிறுவனத்திலிருந்து ஒரு குழு, விபத்துப் பகுதியைப் பார்வையிட்டிருக்கிறது. விபத்தான காரைச் சோதனையிட்டு, Encrypted Data-க்களைச் சேகரித்துக் கொண்டிருக்கிறதாம். பிரேக் ஆயில் மற்றும் டயர் ப்ரஷர் போன்றவையும் முறையான விகிதத்தில் இருந்திருக்கிறதா என்றும் சோதனை செய்து வருகிறதாம்.

இதைத் தொடர்ந்து, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, ‘‘மக்கள் காரின் பின் சீட்டில் பயணித்தால் சீட் பெல்ட் தேவையில்லை என்று நினைப்பதைத் தவிர்க்க வேண்டும். அதேபோல், சீட் பெல்ட் அலார்ம் தொந்தரவாக இருக்கிறது என்று சிலர் ஸ்டாப்பர் வைத்தும் பயணிக்கிறார்கள். சாதாரண மக்களின் கார்களை விடுங்கள். நானே 4 முதலமைச்சர்களின் கார்களில் பயணித்திருக்கிறேன். யாரென்று பெயர் சொல்ல விரும்பவில்லை. முன் சீட்டில் நான் பயணித்தபோது, ஏதோ ஒரு க்ளிப் மட்டும் இருந்தது. பெல்ட் போடவில்லை என்றாலும் அலார்ம் அடிக்கவில்லை. நான் அந்த டிரைவர்களை எச்சரித்தேன். இப்போது சீட் பெல்ட்டுக்கான அலாரம் ஸ்டாப்பர்களை நான் தடை செய்கிறேன். அதேபோல், க்ளிப்களையோ, ஸ்டாப்பர்களையோ உற்பத்தி செய்பவர்களுக்கும் கடுமையான தண்டனை உண்டு!’’ என்று காட்டமாகச் சொல்லியிருக்கிறார்.

அதேபோல், எல்லா வேரியன்ட்களிலும் 6 காற்றுப்பைகள் கட்டாயம் என்பதையும் சட்டமாக்க இருக்கிறதாம் மத்திய அரசு. ‘‘ஏற்றுமதி செய்யும் கார்களில் மட்டும் 6 காற்றுப்பைகள் ஸ்டாண்டர்டாக இருக்கின்றன. நமது இந்தியாவுக்கு மட்டும் 4 காற்றுப்பைகள்தானா? நமது உயிருக்கு இவ்வளவுதான் மதிப்பா!’’ என்றும் கார் தயாரிப்பு நிறுவனங்களைப் பார்த்து அவர் கோபமாகக் கேட்டார்.

ஆனந்த் மஹிந்திரா
ஆனந்த் மஹிந்திரா

மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திராவும், ‘‘தயவுசெய்து பின் பக்க சீட்டில் இருந்தாலும், சீட் பெல்ட் போடுங்கள். இது நம் குடும்பத்துக்குச் செய்யும் கடமை!’’ என்று தனது வலைதளத்தில் சொல்லியிருக்கிறார்.

ஆடியாக இருந்தாலும், ஆம்னியாக இருந்தாலும் காற்றுப்பைகளின் உதவியும், சீட் பெல்ட்டின் உதவியும் அவசியம் என்பதைச் சொல்கிறது சைரஸ் மிஸ்ட்ரியின் விபத்து.