Published:Updated:

டஸ்ட்டரின் 7 சீட்டர் ஜாகர்... இந்தியாவுக்கு வந்தால்?

டேஸியா ஜாகர்
பிரீமியம் ஸ்டோரி
டேஸியா ஜாகர்

வெளிநாட்டு கார்: டேஸியா ஜாகர்

டஸ்ட்டரின் 7 சீட்டர் ஜாகர்... இந்தியாவுக்கு வந்தால்?

வெளிநாட்டு கார்: டேஸியா ஜாகர்

Published:Updated:
டேஸியா ஜாகர்
பிரீமியம் ஸ்டோரி
டேஸியா ஜாகர்
டேஸியா ஜாகர்  உட்புற வசதிகள்
டேஸியா ஜாகர் உட்புற வசதிகள்
ஜாகர்
ஜாகர்

ரெனோ டஸ்ட்டரின் SUV ஸ்டைலில், எர்டிகா போன்றொரு 7-சீட்டர் MPV - ஐ கற்பனை செய்து பாருங்கள். கேட்கவே உற்சாகமாக இருக்கிறது, இல்லையா? ஐரோப்பாவில் ரெனோவின் துணை பிராண்ட் டேஸியா (Dacia), சென்ற ஆண்டு ஜாகர் (Jogger) ஐ வெளியிட்டபோது பலரும் உற்சாகமானர்கள்! ஐரோப்பாவில் டஸ்ட்டரும் இதே டேஸியா பிராண்டில்தான் விற்பனையாகிறது. இந்தியாவில் ஜாகர் அறிமுகம் பற்றிய செய்திகள் எதுவும் இல்லாவிட்டாலும், இந்திய வெளியீடு ஏன் மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கும் என்பதைப் பார்ப்போம்.

வசீகரிக்கும் தோற்றம்

ரெனோவின் CMF-B ஃப்ளாட்பார்மில் தயாரிக்கப்படும் ஜாகர், 4,547 மிமீ நீளம் மற்றும் 4,897 மிமீ விசாலமான வீல்பேஸ் கொண்டது. இதனால் இந்தியாவில் ஜாகர் அறிமுகப்படுத்தும்போது, ​​அது செக்மென்ட்டில் சிறந்த வீல்பேஸ் மற்றும் கிரவுண்ட் கிளியரன்ஸைக் கொண்டிருக்கும்.

200 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ், பாடி கிளாடிங், செதுக்கப்பட்ட பானெட், Y - வடிவ LED DRL உடன் கூடிய ஹெட்லேம்ப்கள் மற்றும் பின்புற விண்ட் ஸ்கிரீன் ஆகியவை முரட்டுத்தனமான SUV லுக்கை ஜாகருக்குத் தருகின்றன. ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால், `ஜாகர் இஸ் கார்ஜியஸ்!’

டேஸியா ஜாகர், போட்டி கார்களைச் சீர்குலைக்கத் தேவையான உத்திகளைக் கொண்டுள்ளது. ஏனென்றால், ஒரு எஸ்யூவியின் ஸ்டைல் உடன் எம்பிவியின் நடைமுறைத்தன்மையும் அடிப்படை டிசைனில் கலந்திருக்கிறது.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்களைப் பொறுத்தவரை, மிதக்கும் 8-இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டருக்குள் ஒருங்கிணைக்கப்பட்ட 3.5-இன்ச் டிரைவர் டிஸ்பிளே, ஆட்டோமேட்டிக் ஏசி, வயர்லெஸ் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் அட்ஜஸ்ட்டபிள் இருக்கைகள் போன்றவற்றை ஜாகரில் டாஸியா வழங்குகிறது.

உட்புற வசதிகள்

ஜாகரின் நடுவரிசை இருக்கைகளை 60:40 விகிதத்தில் பிரித்துக் கொள்ள முடியும். அதேபோல எந்தப் பக்கமும் மடக்கிக் கொண்டு, மூன்றாவது வரிசையை அடைய முடியும் என்பது ப்ளஸ்! மூன்றாம் வரிசை இருக்கைகளையும் 50:50 விகிதத்தில் மடிக்கலாம். பின்புறம் பெரிய குவார்ட்டர் பேனல்கள் உள்ளதால், மூன்றாவது வரிசை இருக்கைகளில் இருப்பவர்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டே பயணம் செய்யலாம்.

இதன் பொருட்டு, அனைத்து இருக்கைகளுடன் 213 லிட்டர் பூட் ஸ்பேஸையும், மூன்றாவது வரிசையை மடித்தால் 712 லிட்டர், நடுத்தர வரிசையை மடித்தால் பிரம்மாண்டமான 1,819 லிட்டர் பூட் ஸ்பேஸையும் வழங்குகிறது ஜாகர். ஆக, நடைமுறையில் தற்போது விற்பனையில் இருக்கும் ட்ரைபர்போல இல்லாமல், உண்மையிலேயே 3-வரிசை குடும்பக் காராக ஜாகர் உள்ளது.

இன்ஜின் & பெர்ஃபாமன்ஸ்

இன்ஜினைப் பொறுத்தவரை, ஐரோப்பாவில் ஜாகருக்கு 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினை வழங்கி வருகிறது டேஸியா. இந்த இன்ஜின் 110PS பவர் மற்றும் 200Nm டார்க்கை வெளிப்படுத்துகிறது. அதாவது, ரெனோ கைகரைவிட ஜாகரின் இன்ஜின் 10PS பவர் மற்றும் 40Nm டார்க்கைக் கூடுதலாக வெளியிடுகிறது.

1.6 லிட்டர் இன்ஜினுடன் இரண்டு 1.2 kWh பேட்டரிகளையும் ஜாகரில் பொருத்தி, ஹைபிரிட் மாடலையும் உருவாக்கி வருகிறது டேசியா. நம்ம ஊர் கதைக்கு வருவோம். ஜாகரை இந்தியாவுக்குக் கொண்டுவர ரெனோ தீர்மானித்தால், அதில் கைகரின் 1 லி டர்போ பெட்ரோல் இன்ஜினும், டஸ்ட்டரில் உள்ள 1.5 லி பெட்ரோல் இன்ஜினும் பொறுத்தப்படவே வாய்ப்புகள் அதிகம்.

ஏன் இந்தியாவுக்கு வர வேண்டும்?

ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், ஜாகர் ஓர் அற்புதமான பேக்கேஜ். வந்த வேகத்திலேயே மாருதி எர்டிகா, XL 6 போன்ற போட்டியாளர்களை நேரடியாக விஞ்சலாம்.

ஏற்கெனவே டஸ்ட்டரின் போட்டியா ளரான ஹூண்டாய் - க்ரெட்டா, அல்கஸார் என்னும் 7 சீட்டர் சகோதரனைக் கொண்டுவந்து, ஃபேமிலி ஆடியன்ஸிடம் வெற்றியும் கண்டுள்ளது. இதே வழியைப் பின்பற்றி, டஸ்ட்டரின் 7 சீட்டர் பதிப்பாக டேஸியா ஜாகர் வந்தால், சபாஷ்... சரியான போட்டியாகத்தானே இருக்கும்!

ஜாகர்
ஜாகர்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism