Published:Updated:

டிக்‌ஷ்னரி

கார்
பிரீமியம் ஸ்டோரி
கார்

இனி ரோட்ல போறவங்களுக்கும் அடிபடாது!

டிக்‌ஷ்னரி

இனி ரோட்ல போறவங்களுக்கும் அடிபடாது!

Published:Updated:
கார்
பிரீமியம் ஸ்டோரி
கார்

சாலைப் பாதுகாப்பு என வரும்போது, பலரும் கவனிக்காமல் இருக்கும் விஷயம்தான் பாதசாரிகளுக்கான பாதுகாப்பு. உலகளவில் இதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் நிலையில் (2009-லேயே Euro Ncap-ல் தனிப்பிரிவு), இந்தியாவில் நாம் இப்போதுதான் அதைக் கருத்தில் கொள்ள ஆரம்பித்திருக்கிறோம்.

டிக்‌ஷ்னரி

நம் நாட்டின் அராய் அமைப்பு வகுத்திருக்கும் புதிய CMVR-படி (AIS100), 2,500 கிலோ (மொத்த எடை) உள்ள வாகனங்களின் முன்பக்கம், பாதசாரிகளுக்குப் பாதகம் தராத வகையில் வடிவமைக்கப்பட வேண்டும். இதனால் விபத்து நேர்ந்தால்கூட, அவர்கள் உயிரிழக்காமல் காயங்களுடன் தப்பிப் பிழைப்பதற்கான சாத்தியங்களை காரின் முன்பக்கம் ஏற்படுத்தும். இந்த விதிமுறை அக்டோபர் 2018 முதலாக அமலில் இருக்கிறது (புதிய கார்களுக்கு). ஏற்கெனவே விற்பனையில் உள்ள மாடல்களை அதற்கேற்ப மேம்படுத்த, அக்டோபர் 2020 வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 2020-ல் நாடெங்கும் BS-6 மாசு விதிகள் பயன்பாட்டுக்கு வரும் நிலையில், இந்திய ஆட்டோமொபைல் துறையின் அடுத்த சவால் இதுதான்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சர்வதேச கார்களில், பாதசாரிகளுக்கான பாதுகாப்பு அம்சங்கள் என்னென்ன?

டிக்‌ஷ்னரி

அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில், ஒரே சாலையைத்தான் மனிதர்களும் வாகனங்களும் சேர்ந்து பயன்படுத்த வேண்டிய சூழல் நிலவுகிறது. இதில் ஒருவர் போக்குவரத்து விதிகளை மீறும்போதோ அல்லது கவனச்சிதறல் ஏற்படும்போதோ, சாலை விபத்து என்பது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. இதனால் சாலையில் செல்பவருக்கு ஏற்படக்கூடிய சேதத்தைத் தவிர்க்கும் நோக்கில், கார்களில் Pedestrian Protection Airbag மற்றும் Active Hood Lifters ஆகியவை இடம்பெற்றுள்ளன.

பாதசாரிகளுக்கான காற்றுப்பை

ஒருவேளை கார், பாதசாரியின் மீது மோதினால் ஏ-பில்லர் மற்றும் விண்ட் ஸ்க்ரீனை கவர் செய்யும்விதமாக, காற்றுப்பை ஒன்று உடனடியாக வெளிவந்துவிடும். இதனால் அந்தப் பாதசாரி, பானெட் மற்றும் விண்ட்ஸ்க்ரீன் மீது விழுந்தாலும், அவர் விபத்தின் தன்மை பொறுத்து காயங்களுடன் தப்பிப் பிழைத்துவிடுவார்; வால்வோ V40 ஹேட்ச்பேக்கில் இது உலகளவில் முதன்முறையாக அறிமுகமான நிலையில், அடுத்தபடியாக லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவியில் இடம் பெற்றது.

Active Hood Lifters என்றால் என்ன?

காரின் முன்பகுதியில், ஆக்ஸிலரேஷன் சென்சார் மற்றும் ப்ரஷர் டியூப் சென்சார் ஆகியவை பொருத்தப்படும். இவை இரண்டும் காரின் காற்றுப்பைக்கான கன்ட்ரோல் யூனிட்டுடன் இணைக்கப்பட்டிருக்கும். இதனால் காரின் முன்பகுதி ஒரு நபரின்மீது மோதும்போது, முன்னே சொன்ன சென்சார்களால் தூண்டப்படும்போது, 5 மில்லி செகண்ட்களில் பானெட்டுக்கு அடியே உள்ள Active Hood Lifter, பானெட்டை அப்படியே மேல்நோக்கி உயர்த்திவிடும்.

டிக்‌ஷ்னரி

இப்படி தேவையான Crumple Zone கிடைப்பதால், அந்த நபர் பானெட்டின் மீது விழுந்தாலும், காரின் இன்ஜின் - பேட்டரி - சஸ்பென்ஷன் டவர் ஆகியவற்றின் தாக்கத்திலிருந்து தப்பித்துவிடுவார். அவரின் தலை மற்றும் கால் மூட்டில் அடிபடுவதும் தவிர்க்கப்படும்.

பாதசாரிகள் எப்படித் தப்பிப்பார்கள்?

சாலையைக் கடக்கும் ஒருவரை, சிக்னலில் நிற்காமல் செல்லும் வாகனம் மோதிவிடுகிறது என எடுத்துக் கொள்வோம். இந்த நேரத்தில் அந்த நபரின் கால் மூட்டுப் பகுதி பம்பரிலும், தலைப்பகுதி பானெட் அல்லது விண்ட் ஷீல்டின் மீதும் மோதியிருக்கும். அந்த வாகனத்தின் வேகத்தைப் பொறுத்து, ஒன்று அவர் தூக்கி வீசப்படுவார் அல்லது காரின் முன்பகுதியின் மீது விழுந்திருப்பார். இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக, முன்பக்க பம்பரின் வடிவமைப்பு மற்றும் பானெட் லைனின் உயரத்தை மாற்றியமைப்பது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வருகின்ற அக்டோபர் 2019 முதலாக அமலுக்கு வரப்போகும் க்ராஷ் டெஸ்ட் விதிகளுக்கு ஏற்ப காரின் முன்பக்கத்தை மேம்படுத்தும்போது (அதிக நீளம் - திறன்மிக்க Crumple Zone - காற்றுப்பைகளுக்கான சென்சார்கள்), பம்பரை கூரான பாணியிலிருந்து கொஞ்சம் தட்டையான வடிவத்துக்கு மாற்றிவிட்டார்கள்;

டிக்‌ஷ்னரி

மேலும் பானெட்டின் உயரத்தை அதிகரிக்கும்போது, இன்ஜின் மற்றும் பானெட்டுக்கு இடையேயான இடைவெளி (Cushion Effect) அதிகமாகிவிடுகிறது. முன்னே சொன்ன மாற்றங்களால், விபத்தின்போது பாதசாரிக்கு அடையக்கூடிய சேதம் மட்டுப்படுத்தப்படும். வெளிநாடுகளில் உள்ள கார்களுக்கு இணையாக இது இருக்காது என்றாலும், ஓரளவுக்கு விபத்தின் தன்மை பாதசாரியைத் தாக்காமல் இருப்பது நடக்கும். இதன் எதிரொலியாக, 2023-ல் எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி ப்ரோகிராம் (ESP) மற்றும் அட்டானமஸ் எமெர்ஜென்சி பிரேக்கிங் (AEB) ஆகிய தொழில்நுட்பங்களைக் கட்டாயப்படுத்தும் முடிவில் சாலைப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் BNCAP அமைப்பு இருக்கிறது.

க்ராஷ் டெஸ்ட் மற்றும் BS-6 மாசு விதிகளால், எதிர்காலத்தில் கார்களின் பாதுகாப்பு மற்றும் விலை அதிகரிக்கும்; என்றாலும் அவற்றால் ஏற்படக்கூடிய காற்று மாசும் குறையும். இப்படிப்பட்ட சூழலில், கார் உற்பத்தியாளர்களுக்கு அடுத்த இலக்காக இருக்கப்போவது பாதசாரிகளுக்கான பாதுகாப்புதான்!