Published:Updated:

க்ளட்ச் இல்லை... கியர் உண்டு! iMT - கியர்பாக்ஸ் விதிமுறைகள்

டிக்‌ஷ்னரி
பிரீமியம் ஸ்டோரி
டிக்‌ஷ்னரி

டிக்‌ஷ்னரி

க்ளட்ச் இல்லை... கியர் உண்டு! iMT - கியர்பாக்ஸ் விதிமுறைகள்

டிக்‌ஷ்னரி

Published:Updated:
டிக்‌ஷ்னரி
பிரீமியம் ஸ்டோரி
டிக்‌ஷ்னரி

காம்பேக்ட் எஸ்யூவியான வென்யூவில் ஏற்கெனவே 5 ஸ்பீடு மேனுவல் (1.2 லிட்டர் பெட்ரோல்), 6 ஸ்பீடு மேனுவல் (1.5 லிட்டர் டீசல் & 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல்), 7 ஸ்பீடு ட்வின் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் (1.0 லிட்டர் T-GDi) எனப் பல கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் இருக்கும் சூழலில், புதிதாக iMT எனும் கியர்பாக்ஸை அறிமுகப்படுத்தி உள்ளது ஹூண்டாய். ‘Intelligent Manual Transmission’ என அழைக்கப்படும் இதை, சிம்பிளாக க்ளட்ச் பெடல் இல்லாத மேனுவல் கியர்பாக்ஸ் எனச் சொல்லலாம். கேட்கவே வித்தியாசமாக இருக்கிறது அல்லவா? ‘First-in-Industry’ என்ற பெருமையுடன் வந்திருக்கும் வென்யூ iMT தொடர்பான உங்களின் அத்தனை கேள்விகளுக்குமான விடைகளை இனி பார்க்கலாம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
க்ளட்ச் இல்லை... கியர் உண்டு! iMT - கியர்பாக்ஸ்  விதிமுறைகள்

இதை ஹூண்டாய்தான் முதலில் பயன்படுத்தியுள்ளதா?

இல்லை. பல ஆண்டுகளாக iMT பயன்பாட்டில் இருக்கிறது. 1990-களின் தொடக்கத்தில் வெளியான Mondial காரில், இந்த வகையான கியர்பாக்ஸைப் பொருத்தியிருந்தது ஃபெராரி. இது எடை அதிகமான க்ளட்ச் பெடலில் இருந்து டிரைவர்களுக்கு விடுதலை அளித்ததுடன், தாமாகவே கியர்களை மாற்றக்கூடிய சுகத்தையும் இது ஒருசேர அளித்தது. இந்தியாவில் iMT கொண்ட கார்கள் இதுவரை இல்லாவிட்டாலும், வெளி மார்க்கெட்டில் இந்த கிட்கள் கிடைக்கப் பெற்றன. டூ-வீலர்களைப் பொறுத்தவரை, ஹீரோ ஹோண்டா ஸ்ட்ரீட் (100சிசி Step Through மொபெட்) மற்றும் டிவிஎஸ் ஜைவ் (110சிசி கம்யூட்டர் பைக்) ஆகியவை இந்தத் தொழில்நுட்பத்தைத் தன்வசப்படுத்தி இருக்கின்றன. இது குறித்த விழிப்புஉணர்வு குறைவாக இருந்த காரணத்தாலேயே, இந்த டூ-வீலர்கள் எதிர்பார்த்த வரவேற்பினை அப்போது பெறவில்லை. தற்போது வென்யூவைத் தொடர்ந்து, அந்த காரை அடிப்படையாகக் கொண்டு தயாராகவிருக்கும் கியாவின் சொனெட் காரிலும் iMT இடம்பெறவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

iMT என்றால் என்ன?

மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் சேர்ந்த கலவைதான் iMT. எனவே இதில் க்ளட்ச் பெடல் கிடையாது என்பதுடன், இதர ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட கார்களைப் போலவே இங்கும் பிரேக் மற்றும் ஆக்ஸிலரேட்டர் பெடல்கள் மட்டுமே இருக்கும். மேனுவல் கியர்பாக்ஸைப் போலவே, கியரை மாற்றும் வேலையை டிரைவர்தான் செய்ய வேண்டும். ஆனால் க்ளட்ச் பெடலின் பணியை, தானாகவே Hydraulic Actuator அமைப்பு செய்துவிடுகிறது. கியர் லீவரில் இருக்கக்கூடிய ‘Intention Sensor’, டிரைவர் கியர் மாற்றவிருப்பதை TCU-க்குத் (Transmission Control Unit) தகவல் அனுப்பும். பிறகு Hydraulic Actuator-க்கு, க்ளட்ச்சை அதற்கேற்ப இயக்குவதற்கான சமிக்ஞையை TCU கூறிவிடும்.

க்ளட்ச் இல்லை... கியர் உண்டு! iMT - கியர்பாக்ஸ்  விதிமுறைகள்

iMT - ப்ளஸ் பாயின்ட்கள்

இந்த அமைப்பில் க்ளட்ச் பெடல் கிடையாது என்பதால், நெரிசல்மிக்க நகரச் சாலைகளில் காரை இயக்குவது சுலபமாக இருக்கும். டிரைவர் தானாகக் கியர்களை மாற்றுவார் என்பதால், முழு கன்ட்ரோலும் அவரிடமே இருக்கும். இதனால் வழக்கமான கார்களைப் போலவே போலவே இதன் ஓட்டுதல் இருக்கும். முன்புபோலவே, ஓவர்டேக் - ஏற்ற இறக்கங்களில் தேவையான கியரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளக்கூடிய சுதந்திரம் டிரைவருக்கு உண்டு. டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் போல இதன் இயக்கம் ஓரளவுக்குச் சீராக இருக்கும் என்பதுடன், பெர்ஃபாமன்ஸ் மற்றும் மைலேஜில் சரிவு தெரியாது என்பது செம. மேலும் குறைவான பாகங்களே இருப்பதால், மேனுவல் கியர்பாக்ஸுக்கு அருகாமையில்தான் iMT-ன் விலை மற்றும் பராமரிப்பு இருக்கும். சில சர்வதேச மாடல்களில் இருக்கும் iMT-ல், AMT போல தானாகவே கியர்களை மாற்றும் வசதியும் உண்டு.

iMT vs AMT - என்ன வித்தியாசம்?

iMT, AMT.... இவை இரண்டுமே மேனுவல் கியர்பாக்ஸை அடிப்படையாகக் கொண்டே தயாரிக்கப்படுகின்றன (Input Shaft: Helical Gears, Output Shaft: Mechanical Clutch). Full Automatic பாணியில் இயங்கும் AMT-ல் இருக்கும் மோட்டார்கள் மற்றும் Actuators, க்ளட்ச் மற்றும் கியர்பாக்ஸைத் தாமாகவே இயக்குகின்றன. இதனைக் கட்டுப்படுத்தும் மென்பொருள் அமைப்பு, எப்போது கியர் மாற்ற வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும். AMT-யை மேனுவல் மோடில் இயக்குவதற்கு, அதில் இருக்கும் +/- பட்டன் அல்லது பேடில் ஷிஃப்ட்டர்களைப் பயன்படுத்த வேண்டும்.

க்ளட்ச் இல்லை... கியர் உண்டு! iMT - கியர்பாக்ஸ்  விதிமுறைகள்

இதுவே iMT பொருத்தவரை, க்ளட்ச்சைக் கட்டுப்படுத்துவது மட்டுமே மென்பொருள் மற்றும் Actuators-ன் பணி. இதன் கியர்ஷிஃப்ட் மேனுவல் கியர்பாக்ஸ் போலவே இருப்பதால், இங்கே கியர்மாற்றும் பணியை டிரைவர்தான் செய்ய வேண்டும். AMT போலவே, ஆக்ஸிலரேட்டரில் இருந்து காலை எடுக்காமலேயே இங்கும் கியர்களை மாற்றலாம் என்பது ப்ளஸ் (உபயம்: Rev Matching). எனவே இயங்குமுறையில், வழக்கமான மேனுவல் மற்றும் AMT-க்கு இடையே அழகாக iMT பொசிஷன் ஆகியிருக்கிறது.

க்ளட்ச் இல்லை... கியர் உண்டு! iMT - கியர்பாக்ஸ்  விதிமுறைகள்

iMT - மைனஸ் பாயின்ட்கள்

AMT போலவே, இங்கும் கியர்ஷிஃப்ட் அவ்வளவு ஸ்மூத்தாக இருக்காது. ஒற்றை க்ளட்ச் அமைப்பைத் தனியாகக் கட்டுப்படுத்தும் Actuator அமைப்பின் லேக்தான் இதற்கான பிரதான காரணி. இதற்கான தீர்வாகக் களம் கண்டவைதான் DCT எனப்படும் ட்வின் க்ளட்ச் ட்ரான்ஸ்மிஷன். மேலும் தொடர்ச்சியாக மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட கார்களை ஓட்டிவிட்டு, iMT இருக்கும் காருக்கு மாறும்போது கவனமாக இருத்தல் அவசியம். ஏனெனில் க்ளட்ச் பெடல் இருக்குமிடத்தில் டெட் பெடல்தான் இருக்கும். எனவே கியர் மாற்றும்போது, இடது காலை டெட் பெடலில் பத்திரமாக வைத்திருக்கவேண்டும். பழக்க தோஷத்தில் காலை இயக்கினால், அது தவறிப்போய் பிரேக் லீவரை அழுத்துவதற்கு வாய்ப்பிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism