Published:Updated:

டிக்‌ஷ்னரி - பிரேக்Pad... நாட்Bad!

டிக்‌ஷ்னரி
பிரீமியம் ஸ்டோரி
News
டிக்‌ஷ்னரி

டிக்‌ஷ்னரி

டந்த இதழில், டிக்‌ஷ்னரி பகுதியில் பிரேக் கேலிப்பர்களைப் பற்றிப் பார்த்தோம். தற்போது அதில் உள்ளே இருக்கும் பிரேக் பேடுகள் மற்றும் அதன் வகைகளைப் பற்றியும் பார்க்கலாம்.

வீல்களுடன் சேர்ந்து சுற்றும் பிரேக், டிஸ்க்குடன் உராய்ந்து வாகனத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பல்வேறு மெட்டீரியல்களில் பல்வேறுவிதமாகக் கட்டமைக்கப்படும் பிரேக் பேடுகள் ஒவ்வொன்றுக்கும், அதற்கேற்ற சாதக பாதகங்கள் உண்டு. 110சிசி கம்யூட்டர் பைக் முதல், 200bhp பவர் கொண்ட சூப்பர் பைக்குகள்வரை திறனுக்கேற்ப, அதன் பிரேக் கேலிப்பருக்குள்ளே இருக்கும் பிரேக் பேடின் வகை மாறுபடும். எந்த வாகனமாகவோ அல்லது நிலப்பரப்பாகவோ இருப்பினும், நினைத்த நேரத்தில் அதன் வேகத்தைக் கட்டுக்குள் கொண்டு வரக்கூடிய பிரேக்கிங் சிஸ்டம் அதில் இருப்பது மிக மிக அவசியம்.

பிரேக்Pad
பிரேக்Pad

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஆர்கானிக் பிரேக் பேடு

ஆரம்ப காலங்களில், Asbestos கொண்டுதான் பிரேக் பேடுகள் தயாரிக்கப்பட்டன. இதனைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்தும்போது கேன்சர் வருவதற்கான அறிகுறிகள் இருந்ததால், பிரேக் பேடுகளில் Asbestos பயன்பாடு நிறுத்தப்பட்டது. தற்கால ஆர்கானிக் பேடுகளில் (Non Asbestos பேடுகள்) ரப்பர் - கார்பன் Compound - ஃபைபர் க்ளாஸ் - Kevlar ஆகிய மெட்டீரியல்களின் கலவை Resin உதவியுடன் ஒன்றாக சேர்ந்து, அவை Backing Plate-ல் இடம் பெறும்.

குறைவான விலையில் நிறைவான செயல்பாட்டினை வழங்குவது இதன் பெரிய ப்ளஸ். குறைவான தட்பவெப்ப நிலையில் இவை சிறப்பாக இயங்கும் என்பதுடன், போதுமான உராய்வுத்திறனும் இவற்றுக்கு உண்டு. மேலும் குறைவான Brake Dust, சத்தமில்லாமல் இயங்கும் தன்மை, பிரேக் டிஸ்க்கைச் சேதப்படுத்தாமல் இருப்பது போன்ற விஷயங்கள், ஆர்கானிக் பிரேக் பேடுகளின் சிறப்பம்சம்.

அன்றாடம் பயன்படுத்தக்கூடிய கம்யூட்டர் பைக்குகளில் (250சிசி வரை) இவை காணப்படுகின்றன என்றாலும், அதிகப்படியான வெப்பநிலையை எதிர்கொள்ளும்போது, இந்த பிரேக் பேடு சொதப்புவதற்கான சாத்தியம் அதிகம். ஏனெனில் பிரேக் பேடுகளில் இருக்கும் மெட்டீரியலை ஒன்றுதிரட்டிப் பிடிக்கும் Resin, இந்தச் சமயத்தில் தனது சமநிலையைத் தவற விட்டுவிடும். இதனால் பிரேக் லீவர் கொஞ்சம் Spongy ஆக இருக்கும் என்பதுடன், பைக்கின் Stopping பவரிலும் சரிவு தெரியும். அடிப்படையில் மென்மையான மெட்டீரியல் இருப்பதால், Rough ஆகப் பயன்படுத்தப்படும்போது ஆர்கானிக் பிரேக் பேடுகளின் தேய்மானம் கொஞ்சம் அதிகம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

மெட்டாலிக் பிரேக் பேடு

செமி மெட்டாலிக் பிரேக் பேடு என அழைக்கப்படும் இவற்றில், சிந்தடிக் (Graphite Lubricant) மற்றும் மெட்டல் (Copper, Iron, Steel) சேர்ந்து தயாரான மெட்டாலிக் ஹைபிரிட் Compound இருக்கிறது. Sintering என்ற செயல்பாட்டினைக் கொண்டு (அதிகமான வெப்ப நிலை மற்றும் அழுத்தம் தரப்படும்), இந்த மெட்டீரியலை Backing Plate-ல் தக்கவைப்பதற்கு ஆர்கானிக் Resin உதவும். இதனால் கச்சிதமான பிரேக் பேடு தயாராகிவிடும். இன்று இருக்கக்கூடிய பெரும்பான்மையான பர்ஃபாமன்ஸ் பைக்குகளில் இவைதான் இடம்பெற்றுள்ளன (கேடிஎம் டியூக் 390). தொடர்ந்து பயன்படுத்தப்படும்போது உண்டாகும் வெப்பம் மற்றும் உராய்வு ஆகியவற்றைத் தாங்கும் தன்மை தவிர, குறைவான தேய்மானத்தைக் கொண்டிருப்பது இதன் சிறப்பு. Sintered பிரேக் பேடுகளில் இருக்கும் மெட்டாலிக் Compound அதற்கான பிரதான காரணி. இதனாலேயே பர்ஃபாமன்ஸ் கார்கள் மற்றும் கனரக வாகனங்களிலும் இவை பயன்படுத்தப்படுகின்றன - அதிகமான பிரேக்கிங் ஆற்றல் தேவை என்பதால்.

கார்
கார்

மெட்டாலிக் பிரேக் பேடு சீராக இயங்க, போதிய வெப்பநிலை அவசியம். எனவே சிறிய வார்ம்-அப்புக்குப் பிறகே, இது கச்சிதமான ஃபீட்பேக்கை வழங்கும். தொடர்ச்சியாகப் பயன்படுத்தும்போது, பிரேக் டிஸ்க்கைச் சேதப்படுத்துவதில் ஆர்கானிக் பிரேக் பேடுகளைவிட மெட்டாலிக் பிரேக் பேடுகளின் பங்கு கொஞ்சம் பெரிது. தவிர, வழக்கமான ஆர்கானிக் பிரேக் பேடுகளைவிடப் ப்ரீமியமான மெட்டாலிக் பிரேக் பேடுகளின் விலை அதிகம். சத்தமும் அதிகமே!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

செராமிக் பிரேக் பேடு

மோட்டார் ரேஸிங்கைப் பொறுத்தவரை, தொடர்ச்சியாகப் பிரேக்குகளை இயக்கும்போது உண்டாகும் வெப்பம் மிக அதிகமாக இருக்கும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் மெட்டாலிக் பிரேக் பேடுகளில் Brake Fade என்பதைத் தவிர்க்க முடியாது. இதற்கான மாற்றாகக் கண்டுபிடிக்கப்பட்டவைதான் செராமிக் பிரேக் பேடுகள். இதன் பெயருக்கு ஏற்றபடியே, இதில் செராமிக் மெட்டீரியல் இடம்பெற்றிருக்கின்றன (மெல்லிய மெட்டல் ஃபைபர்கள் உடன்). மிகச்சிறப்பாக உராய்வை எதிர்கொள்ளும் திறனுடன், வெப்பத்தை உள்வாங்கி வெளியே தள்ளும் தன்மையும் இதற்கு உண்டு. எனவே, உடனடியாக வாகனத்தின் வேகத்தைக் குறைக்க முடிகிறது. இதனால் சூப்பர் கார்கள் மற்றும் ஹைப்பர் கார்களின் பிரேக்குகளில் இது தவிர்க்க முடியாத பொருளாக இருக்கின்றன. (ஐரோப்பிய பர்ஃபாமன்ஸ் தயாரிப்புகள் - கார் & பைக்).

செராமிக் பிரேக் பேடுகள் வடிவமைக்கப்பட்ட விதம் காரணமாக, அவை குளிர்ச்சியான சூழலில் கச்சிதமாக இயங்குவதற்குச் சிறிது நேரம் தேவைப்படும். மேலும் இவற்றின் விலை மிக மிக அதிகம் என்பதால், காஸ்ட்லியான வாகனங்களில் மட்டுமே இவை இடம்பெறும்.