கடந்த மோட்டார் விகடன் இதழ்களில், இருசக்கர வாகனங்களில் பரவலாக இடம்பெறும் பலவகையான பிரேக் கேலிப்பர் மற்றும் பிரேக் பேடுகள் பற்றிப் பார்த்தோம்.

தற்போது இந்த இதழில் கார்களில் இடம்பெறும் பிரேக் டிஸ்க் மற்றும் அதனைத் தயாரிக்கத் தேவைப்படும் மெட்டீரியல்கள் பற்றியும் பார்க்கலாம். காரின் பிரேக்கிங் சிஸ்டத்தில் பிரதானமான பாகமாக இருக்கும் பிரேக் டிஸ்க், வாகனத்தின் சக்கரத்தின் ஊடே அதன் திசையில்தான் சுழலும். எனவே பிரேக்கை அழுத்தும்போது, காரின் வேகம் தானாகக் கட்டுப்படுத்தப்படுகிறது. வாகனத்தின் திறனுக்கேற்ப, அதில் இருக்கும் பிரேக் டிஸ்க்கின் வடிவம் - சைஸ் - மெட்டீரியல் மாறுபடும்.

Solid/Flat பிரேக் டிஸ்க்: இருப்பதிலேயே சிம்பிளான வகை பிரேக் டிஸ்க் இதுதான். இதன் இருபுறமும் இருக்கக்கூடிய தட்டையான பகுதியில்தான் பிரேக் பேடு உரசும். அதாவது வாகனத்தின் Kinetic Energy, பிரேக்கில் Heat Energy ஆக மாற்றம் காணும். இதனைத் தயாரிப்பது சுலபம் என்பதால், உற்பத்திச் செலவு மிகவும் குறைவு என்பது பெரிய ப்ளஸ். பிரேக் பிடிக்கும்போது பிரேக் டிஸ்க் மற்றும் பிரேக் பேடு ஒன்றொடொன்று உரசுவதால், அந்தப் பாகங்களில் ஏற்படும் வெப்பம் வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும். இதை வாகனத்தில் இருந்து புறந்தள்ளுவது கடினம் என்பதே இதன் மைனஸ்.

Ventillated பிரேக் டிஸ்க்: இரு பிரேக் டிஸ்க்குகள் சேர்ந்ததுபோன்ற வடிவமைப்பில் இருக்கும் இவற்றின் இடையே, சிறிய ஸ்போக்குகள் போன்ற மெல்லிய பாகம் இருக்கும். இதன் காரணமாக, பிரேக்கைப் பயன்படுத்துவதால் உண்டாகும் வெப்பம் அதிலிருந்து வெளியேற்றப்படும். இதனால் பிரேக் டிஸ்க் கூலாகவே இருக்கும். ஆனால் Solid பிரேக் டிஸ்க்கை விட, Ventillated பிரேக் டிஸ்க்கின் எடையும் விலையும் அதிகம்.

Drilled பிரேக் டிஸ்க்: இதன் பெயருக்கேற்ப, பிரேக் டிஸ்க்கின் மேல்பகுதியில் ஓட்டைகள் காணப்படும். இவை போதுமான இடைவெளியில் இருக்கும் என்பதுடன், பிரேக் டிஸ்க்கின் உறுதித்தன்மையிலும் எந்த மாறுதலும் இருக்காது. எனவே, வழக்கத்தைவிட குறைவான வெப்பநிலையில் Drilled பிரேக் டிஸ்க் இருக்கும் என்பது செம!

Slotted பிரேக் டிஸ்க்: இந்த பிரேக் டிஸ்க்கின் மேல்பகுதியில் Shallow Grove அல்லது சாய்ந்த திசையில் இருக்கும் வெட்டுகள் காணப்படும். எனவே, பிரேக் பயன்படுத்தும்போது உண்டாகும் வெப்பம் அதிலிருந்து வெளியேற்றப்பட்டு, பிரேக் டிஸ்க் கூலாக இருக்கும்.

Combination பிரேக் டிஸ்க்: முன்னே சொன்ன பிரேக் பேடுகளின் வகைகள் மொத்தமும் ஒன்றுசேர்ந்ததுதான் Combination பிரேக் டிஸ்க். எனவே இதன் தயாரிப்புச் செலவுகள் மற்றும் விலையும் அதிகம் என்பது தெரிந்ததே!

Cast Iron Rotors: இது பரவலாகக் கிடைக்கும் மெட்டீரியல் என்பதால், இதன் விலை குறைவு. மேலும் இதனைத் தேவையான விதத்தில் மெஷினிங் செய்யலாம் என்பதால், Cast Iron Rotors-ன் உற்பத்திப் பணிகளும் சுலபம். எனவே, நம் நாட்டில் விற்பனை செய்யப்படும் பெரும்பான்மையான கார்களில் இவைதான் இடம் பெற்றிருக்கும். ஆனால் இந்த பிரேக் டிஸ்க்கின் எடை அதிகம் என்பதுடன், இவை எளிதில் துருப்பிடிக்கும் தன்மையைக் கொண்டுள்ளன. வாகனம் ஒரே இடத்தில் நீண்ட நாள்கள் பயன்படுத்தப்படாமல் நிற்கும்போது, துருப்பிடிக்கும் பிரச்னை இன்னும் அதிகமாகக் காணப்படும்.

Stainless Steel Rotors: பிரேக் டிஸ்க்குகள் துருப்பிடிப்பதைத் தவிர்ப்பதற்கான தீர்வாக வந்தவைதான் Stainless Steel Rotors. மேலும் Cast Iron Rotors விட இதன் எடையும் குறைவு என்பது ப்ளஸ். ஆனால் இதன் விலை அதிகம்.

Carbon Ceramic Rotors: தொடர்ச்சியாகப் பயன்படுத்தும்போது, முன்னே சொன்ன பிரேக் பேடுகளின் வெப்பநிலை அதிகமாகவே இருக்கும். சில சந்தர்ப்பங்களில் அவை சேதமடையவோ அல்லது உடைவதைக்கூடப் பார்க்கலாம். இதனால் பெர்ஃபாமென்ஸ் கார்களில், Carbon Ceramic Rotors பயன்படுத்தப்படுகின்றன. Silicon Resin உடன் சிறிய அளவிலான Carbon Fibre துகள்கள் சேரும்போது, Carbon Ceramic உருவாகிறது. இந்த மெட்டீரியல், பிரேக் டிஸ்க்கின் Mould-ல் ஊற்றப்பட்டு உருவானதே இந்த Rotors ஆகும். தனித்தன்மையான தோற்றத்தில் இருக்கக்கூடிய Carbon Ceramic பிரேக் டிஸ்க், அதிகப்படியான வெப்பநிலையிலும்கூட சீரான பிரேக்கிங் பர்ஃபாமன்ஸை வழங்கும் திறனைக் கொண்டுள்ளன. ஆனால் போதிய இயங்குதிறனைப் பெறுவதற்கு, இவற்றுக்குச் சில நேரம் தேவைப்படுவது நெருடல் (Warm-up). இதனாலேயே கார்களுடன் ஒப்பிடும்போது, பைக்குகளில் இந்தவகை பிரேக் டிஸ்க்குகள் அதிகளவில் பயன்படுத்தப்படவில்லை.

ஆனால் மோட்டோ ஜிபி பைக்குகளில் மட்டுமே Carbon Ceramic Rotors இடம்பெற்றுள்ளன. இதில் வெப்பநிலையைத் தக்கவைக்க, Shrouds போன்ற அமைப்பு இருக்கும். மற்றபடி பல சூப்பர் கார்களிலும் ஹைப்ப ர்கார்களிலும் இடம்பிடித்திருக்கும் Carbon Ceramic Rotors, ஸ்டாண்டர்டாகவோ அல்லது ஆப்ஷனலாகவோ வழங்கப்படுகின்றன.

இதன் விலையைப் பற்றித் தெரிந்துகொள்ள, இரு உதாரணங்களைப் பார்ப்போம். பிஎம்டபிள்யூ M5 காரில் இருக்கும் Carbon Ceramic Rotor-ன் உத்தேச விலை 11.5 லட்ச ரூபாயும், போர்ஷே 911 டர்போ காரில் உள்ள Carbon Ceramic Rotor-ன் விலை சுமார் 17 லட்ச ரூபாய். இருப்பதிலேயே பெரிய Carbon Ceramic Rotor பொருத்தப்பட்டுள்ள கார் லம்போர்கினி Urus! சும்மாவா பின்னே.. பிரேக் என்பது உயிர் சம்பந்தப்பட்டதாச்சே!