Published:Updated:

டிக்‌ஷ்னரி

இந்த ஆண்டு எஸ்யூவி அலை, வழக்கத்தைவிடக் கொஞ்சம் அதிகமாகவே அடித்திருக்கிறது. ஹேரியர், XUV 3OO, வென்யூ, ஹெக்டர், செல்ட்டோஸ், கிக்ஸ், கல்லினன், கோனா, எஸ்-பிரஸ்ஸோ எனப் பலவிதமான சைஸ்களில் எத்தனை எஸ்யூவிகள்?

பிரீமியம் ஸ்டோரி

வை வெவ்வேறு செக்மென்ட்களைச் சேர்ந்திருந்தாலும், இவற்றுக்கிடையே சில பல ஒற்றுமைகள் உண்டு. இதனால் விலை குறைவான மாடலை வாங்குபவருக்கே ஆதாயம் அதிகம் என்றாலும் (க்விட்), அதிக தொகை செலவழிப்பவர்கள் அதற்கான தனித்தன்மை கிடைக்காமல் தவிப்பார்கள். அந்த அம்சங்கள் என்னென்ன?

டிக்‌ஷ்னரி

ஹெட்லைட், பனிவிளக்கு

வழக்கமாக ஒரு காரில் ஹெட்லைட் மேலேயும், பனி விளக்கு/DRL கீழேயும் இடம் பெற்றிருக்கும். சமீபத்திய ட்ரெண்ட் என்னவென்றால், இந்த முறை அப்படியே தலைகீழாக மாறியிருக்கிறது. அதன்படி கிரில்லின் இருபுறமும் DRL மற்றும் பம்பரில் ஹெட்லைட், பனி விளக்கு இருக்கும்.

பம்பரின் தாழ்வான இடத்தில் ஹெட்லைட், பனி விளக்கு இருப்பதால், சிறிய விபத்தில்கூட அவை சேதமாவதற்கான சாத்தியம் இருக்கிறது. தவிர இவற்றின் விலையும் முன்பைவிட அதிகம்! வெளிநாடுகளில் விற்பனையாகும் நிஸான் Juke மற்றும் ஸ்கோடா யெட்டிதான் இதற்கு முன்னோடி.

டிக்‌ஷ்னரி

கிரில் மற்றும் ஏர் வென்ட்

பென்ஸ், பிஎம்டபிள்யூ, ஆடி, ஜாகுவார், வால்வோ போன்ற பெரும்பாலான லக்ஸூரி கார்களுக்கு முக்கியமான அடையாளமே கிரில்தான். ஆனால் அந்த அடையாளம், மெல்ல காணாமல் போய்க் கொண்டிருக்கிறது.

ஆம், முன்னே சொன்ன அனைத்து எஸ்யூவிகளையும் அருகருகே நிற்க வைத்துப் பார்த்தால், பெரும்பான்மையான வாகனங்களின் முன்பக்கம் கிட்டத்தட்ட ஒரே மாதிரித்தான் காட்சியளிக்கும்! லைட்களின் பொசிஷனிங்கைத் தாண்டி, அகலமான கிரில் - பெரிய ஏர் டேம் மற்றும் ஏர் வென்ட்கள் - பாடி கிளாடிங் என டிசைன் ஒரே மாதிரி இருப்பதே இதற்கான காரணம். சிறிய காரில் பெரிய இன்ஜின் இருக்கிறதோ என்ற எண்ணத்தை இந்த மாதிரியான விஷயங்கள் ஏற்படுத்தி விடுவதுடன், இவை காருக்கு ஸ்போர்ட்டியான தோற்றத்தைத் தருவது உண்மைதான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டிக்‌ஷ்னரி

ஃப்ளோட்டிங்/டூயல் டோன் ரூஃப் மற்றும் கறுப்பு நிற பில்லர்கள், ரூஃப் ரெயில்

ஒரு காலத்தில் விலை அதிகமான கார்களில் மட்டுமே காணக்கிடைத்த இவை, தற்போது மிட்சைஸ் கார்களிலும் வரத் தொடங்கிவிட்டன. சில கார்கள் ஒருபடி மேலே போய், ரூஃப் ரெயில் மற்றும் டூயல் டோன் ரூஃப் உடன் அசத்தலாக வந்திருக்கின்றன. ஆனால் அவை எல்லா கார்களுக்கும் பொருத்தமாக இருக்கிறதா என்பதை யோசிக்க மறந்து விடுகின்றனர். உதாரணத்துக்கு, ரூஃப் கேரியர்போல காட்சியளிக்கும் ரூஃப் ரெயில், நிஜத்தில் பொருள்களை வைத்துக் கட்டுவதற்கு வாட்டமாக இருக்காது. அதேபோல மாடர்னாகத் தோற்றம் அளிக்கும் கறுப்பு நிற ரூஃப்பினால், காரின் கேபினுக்குள் வெப்பம் அதிகமாகத்தான் செய்யும். இப்போது வெள்ளை நிற ரூஃப்களும் வர ஆரம்பித்து விட்டன (வென்யூ, கேப்ச்சர்). ப்ளோட்டிங் ரூஃப் மற்றும் கறுப்பு நிற பில்லர்கள், சிறிய காருக்குக்கூட தனி அடையாளத்தை தருகின்றன (i10 நியோஸ்).

டச் ஸ்க்ரீன் சிஸ்டம்

ப்ரீமியம் கார்களில் இருந்து பட்ஜெட் கார்களுக்கு இடம் பெயர்ந்த முக்கியமான விஷயங்களில் ஒன்று இது. ஆரம்ப நிலையில் இதில் சாட்டிலைட் நேவிகேஷன் இருந்ததே பெரிய விஷயமாகப் பார்க்கப்பட்டது. நாளடைவில் இன்டர்நெட் வசதி வரை வந்து விட்டது.

ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு கனெக்ட்டிவிட்டி இருப்பதால், ஒரு மொபைலில் இருக்கும் அனைத்து வசதிகளும் காரில் வந்துவிட்டன. டச் ஸ்க்ரீனால் சென்டர் கன்சோலில் உள்ள பட்டன்களின் எண்ணிக்கை குறைந்திருப்பது வரவேற்கத்தக்கதே (ஹெக்டர்)! அதற்காக ஒவ்வொரு தேவைக்கும், சாலையிலிருந்து பார்வையை விலக்கி இங்கே பார்க்க வேண்டியிருப்பது நெருடல்.

டிக்‌ஷ்னரி

டிஜிட்டல் மீட்டர்

கார்களில் அதிகமாக இருப்பது, அனலாக் வகை இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல்தான். டிரைவர்களைத் தாண்டி, வாகன ஆர்வலர்களுக்கு அதன் முள் டயலில் எண்களை வேகமாகத் தாண்டிச் செல்வதைப் பார்ப்பதே அலாதியான அனுபவமாக இருக்கும். ஆனால் அது தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் மொத்தமாக மிஸ்ஸிங். சில கார்களில் அனலாக்-டிஜிட்டல் கலவையில் மீட்டர் இருந்தால், பல கார்களில் அது மொத்தமாகவே டிஜிட்டல் பாணிக்கு மாறி விட்டது (ட்ரைபர்).

டிக்‌ஷ்னரி

சில சந்தர்ப்பங்களில், ஸ்டீயரிங்குக்குப் பின்னே ஒரு பெரிய டிஜிட்டல் வாட்ச் இருப்பதுபோன்ற உணர்வு தானாக வந்துவிடுகிறது. தவிர, வெயிலில் இவை பார்க்க தெளிவாகவும் இல்லை. MID மட்டுமே டிஜிட்டலில் இருப்பது, பார்க்க அழகாக இருக்கும்.

Parts Sharing

மாருதி சுஸுகி தயாரிப்புகளில் அதிகமாகப் பின்பற்றப்படும் இந்தப் பழக்கம், தற்போது மெல்ல மற்ற நிறுவனங்களுக்கும் வந்திருக்கிறது. இதனால் சாதகம் பாதகம் இரண்டுமே சம அளவில் உண்டு. உதாரணத்துக்கு பட்ஜெட் காரில் இருக்கும் அதே டச் ஸ்க்ரீன்தான், மிட்சைஸ் காரிலும் உள்ளது (ரெனோ/டாடா/மாருதி).

டிக்‌ஷ்னரி

சில நிறுவன மாடல்களில், ஒரே ஸ்டீயரிங் வீல் - மிரர்கள் - ஸ்விட்ச்கள்தான் கேபினில் இடம் பிடித்திருக்கும் (ஹூண்டாய்/மாருதி). இத்துடன் முடியாமல், இந்த பாணி இன்ஜின் - கியர்பாக்ஸ் வரைக்கும் கூட நீண்டுவிட்டது. ஆனால், இதே விஷயத்தால்தான் சின்ன கார்களுக்குக்கூட 6 காற்றுப் பைகளைக் கொடுக்கிறார்கள்.

அடுத்த ஆண்டில் அமலுக்கு வரவிருக்கும் BS-6 விதிகளினால், இது தொடர்வதற்கான சமிக்ஞைகள் கண்முன்னே தெரிகின்றன. Individuality இல்லாவிட்டாலும், காசு விஷயத்தில் இது சக்ஸஸ் ஃபார்முலாதான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு