Published:Updated:

டிக்‌ஷ்னரி

சன்ரூஃப்
பிரீமியம் ஸ்டோரி
சன்ரூஃப்

இந்த வசதிகள் எல்லாம் தேவையா?

டிக்‌ஷ்னரி

இந்த வசதிகள் எல்லாம் தேவையா?

Published:Updated:
சன்ரூஃப்
பிரீமியம் ஸ்டோரி
சன்ரூஃப்
டிக்‌ஷ்னரி
டிக்‌ஷ்னரி

ற்போது பட்ஜெட் கார்களிலேயே டச் ஸ்க்ரீன் எல்லாம் வந்துவிட்டது! இதனால் ப்ரீமியம் ஹேட்ச்பேக்குகளில் சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜிங், ஹைபிரிட் என மாடர்ன் வசதிகளை கார்களில் அதிகமாகப் பார்க்க முடிகிறது.

இதனால் காரின் விலை அதிகரித்தது ஒருபுறம் என்றால், அவற்றின் பராமரிப்பும் முன்பைவிட அதிகமாகியிருக்கிறது. ஒரு காரில் இருக்கும் அனைத்து வசதிகளையும் ஒருவர் தினசரி பயன்படுத்துகிறாரா என்பதே கேள்விக்குறியாக இருக்கும் சூழலில், இப்படி அதிகப்படியான வசதிகளால் - சில சந்தர்ப்பங்களில் அந்தக் காரின் ரீ-சேல் மதிப்பு குறைவதற்கும் வாய்ப்பிருக்கிறது. ஒரு காருக்கு இந்த வசதிகளெல்லாம் தேவையா, இல்லையா என்பதை நீங்களே முடிவு செய்யுங்களேன்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
வென்டிலேட்டட் சீட்கள்
வென்டிலேட்டட் சீட்கள்

வென்டிலேட்டட் சீட்கள்

வெளியே வெயில் வாட்டி வதைக்கும்போது, காரில் சில்லென ஏசி இருப்பது எப்படியான அனுபவம் தெரியுமா? கூடவே உட்காரப் போகும் சீட்டும் கூலாக இருப்பது செம விஷயம் இல்லையா! இது கேட்பதற்கு நன்றாக இருந்தாலும், நிஜத்தில் இது அந்தளவுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா என்பது கேள்விக்குறிதான். ஏனெனில், இதன் கூலிங் திறன், ஒவ்வொரு காரைப் பொறுத்தும் வேறுபடுகிறது.

தவிர உடல் பருமனான ஆட்களுக்கு, இது முழுப் பலன் தராது. இதன் மெக்கானிசம் சீட்டுக்கு அடியே இருப்பதால், சீட் கவர் மாற்றுவது - இன்டீரியர் க்ளீனிங் ஆகிய நேரங்களில் கொஞ்சம் கவனம் தேவை.

வயர்லெஸ் சார்ஜிங்
வயர்லெஸ் சார்ஜிங்

வயர்லெஸ் சார்ஜிங்

ந்த 4G, 5G யுகத்தில், காரின் கேபினில் முன்னேற்றம் கண்ட மற்றுமொரு அம்சம் சார்ஜிங் திறன். முன்பு சாதாரண சார்ஜிங் பாயின்ட்டாக இருந்த இது, ஃபாஸ்ட் சார்ஜிங்குக்குப் பிறகு வயர்லெஸ் சார்ஜிங் வரை வந்துவிட்டது! USB-AUX பாயின்ட்களைப் போலவே, ஃபாஸ்ட் சார்ஜிங் பாயின்ட் இருப்பதும் பெரிய ப்ளஸ்.

ஆனால் வயர்லெஸ் சார்ஜிங் கொண்ட காரை வாங்கும் அனைவரிடமும் அந்த வசதி கொண்ட மொபைல் இருக்குமா என்பது சந்தேகமே! தவிர இந்த அம்சம் வந்துவிட்டதால், சென்டர் கன்ஸோலில் மற்ற பொருள்களை வைப்பதற்கான இடம் கொஞ்சம் குறைந்துவிட்டதே?

சன்ரூஃப்
சன்ரூஃப்

சன்ரூஃப்

மேலிருந்து பார்க்கும்போது காருக்கு ஒரு ப்ரீமியம் லுக் வந்து விடுவது உண்மைதான். வெளியே குளுமையான காற்று இருக்கும் போது வேண்டுமானால், சன்ரூஃப்பைத் திறந்து விட்டுக் கொண்டு செல்வது அலாதியான அனுபவத்தைத் தரலாம்.

ஆனால் இதை பகல் நேரத்தில் திறந்து விட்டால், வெளியே இருக்கும் தூசு அப்படியே காருக்குள் வந்துவிடும்! மேலும் சன்ரூஃபுக்கு வழங்கப் பட்டிருக்கும் Rubber Beading-ன் இடுக்குகளில் இலை மற்றும் சிறு கற்கள் சிக்கிக் கொள்வதற்கு அதிக சாத்தியம் இருக்கிறது.

எனவே சில நேரங்களில், சன்ரூஃப் சரியாக மூட முடியாமல் போகலாம். தவிர மெட்டல் ரூஃபைவிட, கண்ணாடி கொண்ட ரூஃப்பின் திடத்தன்மை குறைவு தான். இதுபோன்ற காரணங்களுக்காகவே, டொயோட்டா தனது தயாரிப்புகளில் (கரோலா, இனோவா, ஃபார்ச்சூனர்) இந்த வசதியைக் கொடுக்காமல் விட்டு விட்டது.

கூல்டு க்ளோவ்பாக்ஸ்/கூல்டு ஸ்டோரேஜ்
கூல்டு க்ளோவ்பாக்ஸ்/கூல்டு ஸ்டோரேஜ்

கூல்டு க்ளோவ்பாக்ஸ்/கூல்டு ஸ்டோரேஜ்

வெப்பம் மிகுந்த நம் நாட்டில், குளிர்ந்த நீர்/குளிர்பானங்கள் பருகுவது சுகமான அனுபவத்தைத் தரக் கூடியதுதான்.

இதற்காகவே காரில் மினி ஃபிரிட்ஜ் எல்லாம் பயன்படுத்தியவர்கள் நிறைய பேர். இதனாலேயே மாருதி சுஸூகியின் சில கார்களில், ஏசி வென்ட்களுக்கு அருகே கப் ஹோல்டர் இருப்பதைப் பார்க்கமுடியும்.

இது நல்ல மாற்றாக இருந்தாலும், அதன் நீட்சியாகவே கூல்டு க்ளோவ் பாக்ஸைப் பார்க்கலாம். பெரிய இடத்தில் கொஞ்சம் குளிர்ந்த காற்றைப் படர விடுவதன் வாயிலாக, க்ளோவ் பாக்ஸில் உள்ள பொருள்களைக் குளிர்ச்சியாக வைத்திருக்கலாம். ஆனால் இதுவும் எதிர்பார்த்த பலனைத் தருமா என்பதை நீங்களே `இங்கி பிங்கி’ போட்டுப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

ஹீட்டட் மிரர்கள்
ஹீட்டட் மிரர்கள்

ஹீட்டட் மிரர்கள்

ரோப்பிய நிறுவங்களின் தயாரிப்புகள் இந்தியாவில் வந்துவிட்டதில், அப்படியே கார்களில் இடம்பெயர்ந்த வசதிகளில் ஒன்றுதான் இது.

இவை பனிபடர்ந்த பிரதேசங்களில் பயனுள்ளதாக இருக்கும் என்றாலும், அடிக்கடி வெயில் மிகுந்த பகுதியான நம் நாட்டில் அதற்கு என்ன வேலை இருக்கப் போகிறது? மழைக் காலங்களில் வேண்டுமானால் இது உபயோகமாக இருக்கலாம்.

ஆனால் கதவுக் கண்ணாடிகளில் படிந்திருக்கும் நீர்த்துளிகளை என்ன செய்ய? இந்த வசதி கொண்ட மிரர்களின் விலை மிக அதிகம் என்பதால், இவை எதிர்பாராத விதமாக உடைந்து போனால், பணச் செலவுடன் மனஉளைச்சலும் அதிகமே!