Published:Updated:

டிக்‌ஷ்னரி: பாதுகாப்பில் இவ்வளவு அம்சங்கள் இருக்கா!

டிக்‌ஷ்னரி
பிரீமியம் ஸ்டோரி
டிக்‌ஷ்னரி

டிக்‌ஷ்னரி: ADAS விதிமுறைகள்

டிக்‌ஷ்னரி: பாதுகாப்பில் இவ்வளவு அம்சங்கள் இருக்கா!

டிக்‌ஷ்னரி: ADAS விதிமுறைகள்

Published:Updated:
டிக்‌ஷ்னரி
பிரீமியம் ஸ்டோரி
டிக்‌ஷ்னரி
விபத்துக்கான காரணங்களில் பாதி சதவிகிதத்துக்கும் மேல் நமது கவனக்குறைவுதான், என்றாலும், அதனைக் கட்டுப்படுத்தும்படியான தொழில்நுட்பங்கள் ஏற்கெனவே நடைமுறையில் இருக்கின்றன. (ஏபிஎஸ், ஏர்பேக், ESP, TCS, 3 பாயின்ட் சீட் பெல்ட், ISOFIX). தற்போது ADAS எனப்படும் Advanced Driver Assistance Systems மீது, ஆட்டோமொபைல் துறை முதலீடு செய்துவருகிறது. சர்வதேச அளவில் இந்த வசதியை உள்ளடக்கிப் பல வாகனங்கள் இருந்தாலும், இந்தியாவில் நம் நாட்டில் அடியெடுத்து வைக்கிறது. சமீபத்தில் MG நிறுவனம் அறிமுகப்படுத்திய Gloster எனும் XL சைஸ் எஸ்யூவியில், Pedestrian detection, Lane departure warning, Traffic sign recognition, Automatic emergency braking, Blind spot detection, Adaptive Cruise Control, 360 டிகிரி கேமரா போன்ற அடிப்படையான ADAS அம்சங்கள் இருக்கின்றன. இதனுடன் ஒப்பிடும்போது, டிரைவர் இல்லாமல் தானாக இயங்கும் கார்களில், ADAS முற்றிலும் வேறு பரிமாணத்தில் இருக்கும் என்பதைக் கவனிக்க வேண்டும். எனவே உலகளவில், Advanced Driver Assistance Systems கொண்ட வாகனங்களில் பிரதானமாக இருக்கும் அம்சங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல்

ACC எனச் சுருக்கமாக அழைக்கப்படும் இது, நீண்ட தூரம் நெடுஞ்சாலைப் பயணங்களில் மிகவும் உதவியாக இருக்கும். ஓய்வின்றி தொடர்ச்சியாக அதிக நேரம் வாகனத்தை ஓட்டும்போது, வாகனத்தின் ஆக்ஸிலரேஷன் மற்றும் பிரேக்கிங் ஆகியவை ACC தாமாகவே கட்டுப்படுத்தும். இங்கே ஸ்டீயரிங்கில் மட்டும் டிரைவர் தனது கவனத்தைச் செலுத்தினாலே போதுமானது. மேலும் சில சந்தர்ப்பங்களில், வாகனத்தை உடனடியாக நிறுத்தக்கூடிய பணியையும் ACC மேற்கொள்ளும் என்பது ப்ளஸ்.

டிக்‌ஷ்னரி: பாதுகாப்பில் இவ்வளவு அம்சங்கள் இருக்கா!

Glare-Free High Beam

பெரும்பான்மையான கார்களில், தற்போது தேவையறிந்து தானாக இயங்கக் கூடிய ஹெட்லைட்களைப் பார்க்க முடிகிறது. இதிலிருக்கும் சென்சார்கள், வெளிப்புறத்தில் இருக்கும் ஒளியின் அளவைப் பொறுத்து, ஹெட்லைட்டின் திறனைத் தகவமைத்துக் கொள்கின்றன. இதனால் எதிர்திசையில் வருபவர்களின் கண்களைக் கூசவைக்காது. இந்த அமைப்பின் மேம்பட்ட வெர்ஷன், Adaptive Light Control என அழைக்கப்படுகிறது.

ஆட்டோமேட்டிக் பார்க்கிங்

காரைப் பார்க் செய்யும்போது, ஓட்டுனருக்கு உதவும் பணியை இது செய்கிறது. ரியர் வியூ மிரர்கள் இருக்கும் என்றாலும், ரிவர்ஸ் கேமரா இருந்தால் அது கூடுதல் நம்பிக்கையைத் தரும் என்பதே உண்மை. தாமாகவே காரைப் பார்க் செய்யக்கூடிய Autonomous Valet Parking அமைப்பு, ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட பெரிய எஸ்யூவிகள் அல்லது லக்ஸூரி செடான்களில் உண்டு. இது காரை கச்சிதமாகப் பார்க் செய்ய வேண்டிய இடத்தைக் கண்டறிந்து, அதற்கேற்ப அதன் ஸ்டீயரிங் - ஆக்ஸிலரேட்டர் - பிரேக் ஆகியவற்றைத் தானாகவே இயக்கும். இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட பஸாத் மற்றும் எண்டேவரில் இருந்தது Semi Autonomous சிஸ்டம் என்பதால், அதன் ஆக்ஸிலரேட்டர் - பிரேக் - கியர் ஆகியவற்றை ஓட்டுனர்தான் கையாள வேண்டியிருந்தது. மற்றபடி வாகனத்தை நிறுத்த வேண்டிய இடம் மற்றும் ஸ்டீயரிங்கை, அந்த அமைப்பு தானாகக் கட்டுப்படுத்தும். MG Gloster-ல் இது எல்லாமே ஆட்டோமேட்டிக்காக நடைபெறும்.

டிக்‌ஷ்னரி: பாதுகாப்பில் இவ்வளவு அம்சங்கள் இருக்கா!

நேவிகேஷன் சிஸ்டம்

வாய்ஸ் கமாண்ட் மற்றும் காரின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வாயிலாக, வழி தெரியாத இடத்துக்குக்கூட ஒருவர் சரியாகச் சென்றடைய முடியும். இதில் போகும் வழியில் இருக்கும் டிராஃபிக்கின் அளவு, அத்தியாவசியமான நிலையங்கள் (ஹோட்டல், ஏடிஎம், மால்கள், பெட்ரோல் பங்க்) ஆகியவை தெளிவாகக் காண்பிக்கப்படும் என்பதுடன், சென்றடைய வேண்டிய இடத்தை விரைவாகச் சென்றடையக் கூடிய மாற்றுவழியையும் நேவிகேஷன் அமைப்பு தேவைக்கேற்பக் காட்டிவிடும். ஆனால் டச் ஸ்க்ரீனைப் பார்த்துக் கொண்டே செல்வது ஓட்டுனருக்குக் கவனச்சிதறலை ஏற்படுத்தலாம் என்பதால், செல்ட்டோஸ் போன்ற சில கார்களில் HuD எனப்படும் Heads Up Display அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது (பல கார்களில் இது ஆக்ஸசரியாகவும் கிடைக்கிறது). லக்ஸூரி கார்களில், இது காரின் விண்ட் ஸ்க்ரீனிலேயே இருக்கும்.

நைட் விஷன்

சாலை விளக்குகள் இல்லாத பகுதிகளில் செல்லும்போது, வாகனத்தின் ஒளியை மட்டுமே நம்பிப் பயணிப்பது திகிலான விஷயம். மலைச் சாலைகள் அல்லது காட்டுப் பகுதிகளில் இது இன்னும் பயத்தைத் தரக்கூடும். இதற்கான தீர்வான நைட் விஷன் அமைப்பில் இருவகை உண்டு. இதில் Active வகையானது, infrared light-யை உமிழ்ந்து, அதன் மூலமாகத் தனக்கு முன்னே இருக்கும் பொருள்களைக் கண்டறியும். Passive அமைப்பு தன்னைச் சுற்றி இருக்கும் வாகனங்கள் (சாலைகள்), விலங்குகள் (காட்டுப்பகுதி) ஆகியவை உமிழக்கூடிய வெப்பத்தைக் கணக்கில் கொண்டு, வாகன ஓட்டுனருக்கு உதவி செய்யும்.

டிக்‌ஷ்னரி: பாதுகாப்பில் இவ்வளவு அம்சங்கள் இருக்கா!

ப்ளைண்ட் ஸ்பாட் மானிட்டரிங்

இது சில வாகனங்களில் பாதுகாப்பு கருதி, ஏ-பில்லரைக் கொஞ்சம் தடிமனாக வடிவமைத்திருப்பார்கள். இதனால் காரின் பக்கவாட்டுப் பகுதியில் இருக்கும் வாகனங்கள், அதன் ஓட்டுனருக்குத் தெரியாமல் போகக்கூடும். சில நேரங்களில் இதே பிரச்னை, காரின் பெரிய ரியர் வியூ மிரர்களால் கூட நிகழலாம். எனவே தவறான லேனில் செல்லும்போதோ, அல்லது உங்கள் வாகனத்துக்கு மிக நெருக்கத்தில் வேறு வாகனம் இருந்தாலோ, சமிக்ஞை ஒலி எழுப்பப்பட்டு அது ஓட்டுனரை அலெர்ட் செய்யும். இந்த அமைப்பில், முன்பக்க பார்க்கிங் சென்சார்கள்/கேமரா பயன்படுத்தப்படும்.

ஆட்டோமேட்டிக் எமெர்ஜென்ஸி பிரேக்கிங்

சாலையில் நீங்கள் சென்றுகொண்டி ருக்கும்போது, முன்னே செல்லும் நபர்களின் மீதோ அல்லது எதிரே வரும் வாகனங்களின் மீதோ மோதிவிடுவதற்கான சூழல் உண்டு. அப்போது உங்களுக்கும் அந்த வாகனத்துக்கும் அல்லது நபருக்கும் இடையே உள்ள இடைவெளியைக் கணக்கில்கொண்டு, ADAS அமைப்பு ஓட்டுனருக்கு எச்சரிக்கை தரும். அதற்கு அவர் அசைந்துகொடுக்காத பட்சத்தில், AEB அமைப்பு தானாகவே வாகனத்தின் பிரேக்கை அடித்துவிடும். இந்த நேரத்தில் சீட் பெல்ட் தாமாகவே இறுக்கமாகிவிடும் என்பதுடன், ஸ்டீயரிங்கும் வாகனத்தின் நிலைத்தன்மையில் சரிவு ஏற்படாதபடி செயல்படும். இதற்குப் பெயர்தான் Automatic Emergency Braking.

டிக்‌ஷ்னரி: பாதுகாப்பில் இவ்வளவு அம்சங்கள் இருக்கா!

கிராஸ்விண்ட் ஸ்டெபிலைசேஷன்

நீங்கள் செல்லும் நெடுஞ்சாலையில் எதிர்க்காற்று மிகவும் அதிகமாக இருக்க நேர்ந்தால் (கடுமையான மழை/சூறாவளிக் காற்று), அது நல்ல வேகத்தில் சென்று கொண்டிருக்கும் வாகனத்தின் நிலைத்தன்மையைப் பாதிக்கக்கூடும். இதன் வெளிப்பாடாக, சக்கரங்களில் வழக்கத்தைவிட அதிகமான அழுத்தத்தில் காற்று படரும். இதுபோன்ற நேரத்தில் பிரேக் தாமாக இயங்கி, வாகனத்தின் நிலைத்தன்மை குலையாதவாறு பார்த்துக் கொள்ளும். ரியல் டைம் நேவிகேஷனுக்கு இன்டர்நெட் கனெக்ட்டிவிட்டி அவசியம் என்பதால், ஹூண்டாய் மற்றும் MG ஆகிய நிறுவனங்கள், டச் ஸ்க்ரீனில் சிம் கனெக்ட்டிவிட்டியைக் கொண்டு வந்துவிட்டன. இதன் வாயிலாக, இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தின் மென்பொருளை, over-the-air (OTA) வழியில் அப்டேட் செய்யமுடியும். இவை ADAS அமைப்பில் உள்ள புதிய தொழில்நுட்பங்கள் என்பது கவனிக்கத்தக்கது.

Driver Drowsiness Detection

தூக்க மயக்கத்தில் ஒருவர் கார் ஓட்டினால், அவரின் தலை அசைவை வைத்தே அவரின் நிலையை கேபின் கேமரா உதவியுடன் இந்த அமைப்பு தெரிந்து கொள்ளும். இந்தச் சமயத்தில் ஏதேனும் சத்தம், ஸ்டீயரிங்கில் அதிர்வு, கேபின் விளக்கைப் போடுதல் போன்றவற்றால் ஓட்டுனரைச் சமநிலைக்குக் கொண்டுவர முயலும். இதற்கும் அவர் அசைந்து கொடுக்காத பட்சத்தில், முற்றிலுமாகக் காரை இந்த அமைப்பு நிறுத்திவிடும். தனது கார்களின் பாதுகாப்புக்குப் பெயர்பெற்ற வால்வோ நிறுவனம், இந்த வசதிகளை உள்ளடக்கிய Driver Monitoring System-யைத் தனது கார்களில் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது. மேலும் சில நேரங்களில் இடைவெளி இல்லாமல் வாகனம் இயங்கும்போது, அந்தக் கால ஓட்டத்தைக் கணக்கில்கொண்டு அதிலிருக்கும் MID எச்சரிக்கையை எழுப்பி, வாகனத்தை நிறுத்தச் சொல்லும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism