பாதுகாப்பு.... கார்களை வாங்கும்போது நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சமாகிவிட்டது. இந்த லாக்டெளன் காலத்தில் அறிமுகமான பல கார்கள், அதிகப்படியான வசதிகளால் மக்களின் கவனத்தைத் தன்வசம் ஈர்த்திருந்ததைப் பார்க்க முடிந்தது. ஆனால் சர்வதேச Global NCAP அமைப்பு நடத்திய க்ராஷ் டெஸ்ட்டின் ரிப்போர்ட்கள் வெளிவந்தபிறகு, புதிய தொழில்நுட்பங்களுடன் பயணிகள் பாதுகாப்பும் முக்கிய இடத்தைப் பிடித்திருப்பது வரவேற்கத்தக்க விஷயமே!

வழக்கம்போல ஆசிய நிறுவனங்களின் தயாரிப்புகள், க்ராஷ் டெஸ்ட்டில் சராசரியான ரேட்டிங்கையே பெற்றுள்ளன. மாருதி எஸ்-ப்ரெஸ்ஸோ - 0 ஸ்டார், கிராண்ட் i10 நியோஸ் - 2 ஸ்டார், கியா செல்ட்டோஸ் - 3 ஸ்டார் ஆகியவை அதற்கான உதாரணம். மற்றபடி மராத்ஸோ மற்றும் XUV 3OO வரிசையில், மஹிந்திராவின் தார் எஸ்யூவியும் க்ராஷ் டெஸ்ட்டில் நல்ல ரேட்டிங்கைப் பெற்றுவிட்டது. ஒரு இந்திய தயாரிப்பு, 4 ஸ்டார்களைப் பெறுவது மகிழ்ச்சியானதுதான்! இந்த நேரத்தில், புதிதாக ஒருவர் வாங்கப் போகும் காரில், என்னென்ன பாதுகாப்பு வசதிகள் இருந்தால் நன்றாக இருக்கும்... பார்க்கலாம்.

பாதுகாப்பு வசதிகளை, Active Safety Systems மற்றும் Passive Safety Systems என இரண்டு வகையாகப் பிரிக்கலாம். விபத்து ஏற்படுவதைத் தவிர்க்கும் நோக்கில் செயல்படுபவை Active Safety Systems. ஒருவேளை விபத்து நேர்ந்துவிட்டால், அந்த நேரத்தில் காருக்குள்ளே இருப்பவர்களுக்கும், சாலையில் உள்ள மற்றவர்களுக்கும் எந்தக் காயமும் ஏற்படாமல் இருக்கச் செய்பவை Passive Safety Systems எனலாம்.

Active Safety Systems

Electronic Stabilisation Control (ESC): நிலையான வேகத்தில் செல்லும்போது திருப்பத்தில் திடீரென காரின் திசையை மாற்ற நேரிட்டால், அப்போது வாகனத்தின் நிலைத்தன்மை குறைவதற்கான சாத்தியம் ஏற்படும். அதனைக் கட்டுக்குள் கொண்டு வருவதே இந்த அம்சம். காரில் இருக்கும் ABS, BAS, TCS, EDL போன்ற பல அம்சங்கள், இதனுடன் சேர்ந்து செயல்படுவது கவனிக்கத்தக்க விஷயம்.

Anti-lock Braking System (ABS): எதிர்பார்க்காத தருணத்தில் பிரேக் பிடிக்கும்போது, வீல்கள் லாக் ஆகாமல் இருப்பதை, இந்த அம்சம் உறுதிபடுத்துகிறது. மேலும் கார் Skid ஆகாமல், நிலையாக ஒரு இடத்தில் நிற்பதும் இந்த நேரத்தில் நடைபெற்றுவிடும். இந்த அம்சம் கொண்ட கார்களில், பிரேக்கில் சீரான அழுத்தத்தைக் கொடுப்பது அவசியம். புதிய விதிகள் காரணமாக, இந்த அம்சம் இல்லாத காரே தற்போது கிடையாது.

Traction Control System (TCS): திருப்பங்களில் காரைச் செலுத்தும்போது, சில சந்தர்ப்பத்தில் அனைத்து வீல்களிலும் சமமான ரோடு கிரிப் கிடைக்காமல் போகலாம். அப்போது Wheel Spin உண்டாகாமல், காரின் பவரை மட்டுப்படுத்தி, எந்தச் சிக்கலும் இல்லாமல் ஓட்டுனர் வாகனத்தைக் கையாள்வதற்கு, இந்த அம்சம் உதவி செய்யும். சில கார்களில், இந்த அம்சத்தைத் தேவைபட்டால் ஆஃப் செய்யும் வசதி உண்டு. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட கார்கள் மற்றும் பெர்ஃபாமன்ஸ் மாடலில், இந்த வசதி நிச்சயம் இருக்கும்.

Electronic Brake Force Distribution (EBD): காரில் சடர்ன் பிரேக் பிடிக்கும்போது, அதன் Centre of Gravity அப்படியே முன்பக்கத்துக்கு மாறும். இதனால் காரின் ரோடு கிரிப் குறைவதற்கான வாய்ப்பு உண்டாகும். அதனைத் தவிர்த்து, அனைத்து வீல்களுக்கும் அதிகப்படியான பிரேக்கிங் திறன் கிடைக்கச் செய்வதே இந்த அம்சத்தின் கடமை. மேலும் எமர்ஜென்சி பிரேக்கிங்போது, காரின் பின்பக்கம் நிலையாக இருக்கும்படி பார்த்துகொள்ளும்.

Reverse Parking Sensors: நெரிசல்மிக்க இடங்களில் காரைப் பார்க் செய்யும்போது, ஆபத்பாந்தவனாகக் கைகொடுப்பவை இந்த அம்சம். எனவே காருக்குச் சேதம் விளைவிக்காமல், குறிப்பிட்ட இடத்தில் காரை நிறுத்துவதற்குக் கைகொடுக்கிறது. புதிய விதிகள் காரணமாக, அனைத்து கார்களிலும் இந்த அம்சம் கட்டாயமாக்கப் பட்டுவிட்டது. ரிவர்ஸ்/360 டிகிரி கேமராவுடன் இதன் கூட்டணி நச்சென அமைந்திருக்கிறது. சில கார்களின் முன்பக்கத்திலும், பார்க்கிங் சென்சார்கள் உடன் வருவது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது (கியா).

Passive Safety Systems

Seat belts: Safety Belt என அழைக்கப்படும் இவை, விபத்து நேரத்தில் காரிலிருந்து பயணிகள் வெளியே தூக்கி எறியப்படுவதைக் தடுக்கும். மேலும் அவர்கள் முன்னே இருக்கும் பொருள்கள் மீது மோதிக்கொள்ளாமல் பாதுகாக்கும். இதில் 3 பாயின்ட் வகையறாவை, தற்போதைய கார்களில் பார்க்க முடிகிறது. மேலும் இதனுடன், சீட் பெல்ட் Pretensioner/Load Limiter ஆகிய வசதிகடன் வருகின்றன.

Supplemental Restraint System (SRS): ஏர்பேக் என அறியப்படும் இவை, விபத்தின்போது முன்பக்கத்தில் இருக்கும் பயணிகள் டேஷ்போர்டின் மீது மோத நேர்ந்தாலும், அவர்களுக்குச் சேதம் ஏற்படுவதைத் தவிர்க்கும். சீட் பெல்ட்டுடன் இணைந்து பணிபுரியும் காற்றுப்பைகளை, தற்போது கேபினின் Side மற்றும் Curtain ஆகிய இடங்களிலும் பார்க்கலாம். விபத்தின் தன்மைக்கேற்ப அவை செயல்படும் (ஒருமுறை மட்டும்தான் இது இயங்கும்). விபத்தின்போது, காரின் கதவுகள் அனைத்தும் தானாக Unlock செய்யப்படுவதும் நடக்கும்.

Child Seats: காரில் இருக்கும் 12 வயதுக்குட்பட்ட குழந்தையின் பாதுகாப்பும் முக்கியம் என்ற நோக்கில் உதயமானதே இந்த அம்சம். ISOFIX எனப் பரவலாக அடையாளப்படுத்தப்படும் இது, Child Seat அமைப்புடன் சேர்ந்து, விபத்தின்போது குழந்தை முன்னோக்கி நகராமல் இருப்பதை உறுதி செய்யும். பின்பக்க இருக்கையின் நடுவே, இதற்கான மவுன்ட் இருக்கும். அதனுடன் Lap Belt/3 பாயின்ட் பெல்ட்டை யும் பயன்படுத்தவும்.

Child Door Lock: Child Safety Lock என மற்றுமொரு பெயரைக் கொண்ட இது, காரின் பின்பக்கக் கதவுகளில் காணப்படும். இது ஆன் செய்யப்படும்போது, காரின் கதவை வெளிப்புறத்தில் இருந்து மட்டுமே திறக்க முடியும். ஒருவேளை காரில் குழந்தைகள் இருக்க நேரிட்டால், அவர்கள் தவறுதலாக கதவைத் திறக்க முயற்சிப்பதை இது தடுத்துவிடும். இந்த நேரத்தில், வெளியே இருந்து சாவியைக் கொண்டு கதவைப் பூட்டவோ திறக்கவோ செய்யலாம். இதுவே காருக்குள் இருந்து சென்ட்ரல் லாக்கிங்கைப் பயன்படுத்தும்போது, காரின் கதவுகள் - டெயில் கேட் ஆகியவற்றை ஒருசேர பூட்டவோ திறக்கவோ முடியும்.

Chassis, Stiff Roof, Crumple Zones: காரின் சேஸியில்தான் சஸ்பென்ஷன், ஸ்டீயரிங், இன்ஜின் - கியர்பாக்ஸ், பிரேக்ஸ், பெட்ரோல் டேங்க் போன்ற பாகங்கள் பொருத்தப்படும். எனவே, இது விபத்தின்போது உருக்குலையாமல் உறுதியாக இருப்பது அவசியம்.

காருக்கு வெளியே இருக்கும் சூழலால், காருக்குள்ளே இருப்பவர்கள் பாதிப்படையாமல் பார்த்துக் கொள்கிறது. தவிர, விபத்தின்போது கார் தலைகீழாக உருண்டோடினால், பில்லர்களுடன் சேர்ந்து காருக்குள்ளே இருப்பவர்கள் அடிபடாமல் இருப்பதை இது கவனித்துக்கொள்ளும். காரின் மீது ஏதேனும் பொருள் மோதும்போது, அதனால் உண்டாகும் சக்தியை உள்வாங்குவதே Crumple Zones. இவை விபத்தினால் ஏற்படும் அதிர்வுகளை, காருக்குள்ளே இருப்பவர்கள் மீது கடத்தாது. இவை காரின் நான்கு பக்கத்திலும் பொருத்தப்பட்டிருக்கும்.

Battery Cut-off: பெரும்பான்மையான கார்களில், அதன் பேட்டரி இன்ஜின் Bay-வில்தான் இருக்கும். ஆனால் சில மாடல்களில், கேபின் அல்லது பூட் பகுதியில் பேட்டரியைப் பார்க்க முடியும் (நானோ, SHVS கொண்ட மாருதி சுஸூகி மாடல்கள், எலெக்ட்ரிக் கார்கள்). அதுபோன்ற மாடல்களில், இந்த அம்சம் கட்டாயமாக இடம்பெறும்.

விபத்தின்போது, Alternator மற்றும் Starter Motor ஆகியவற்றுக்குச் செல்லும் மின்சக்தி இதனால் நிறுத்தப்படும். எனவே Short Circuit உண்டாகி, தீ விபத்து ஏற்படுவது கட்டுப்படுத்தப்படும். இதுவே பெட்ரோல்/டீசலில் இயங்கும் கார்கள் என்றால், அதில் கூடுதலாக Fuel Cut-Off வசதியையும் பார்க்க முடியும். இதனால் இன்ஜினும் ஆஃப் ஆகிவிடும்.