கார்ஸ்
ஆசிரியர் பக்கம்
பைக்ஸ்
Published:Updated:

ஹாட்ரிக் அடிக்குமா கியா?

கியா சோனெட்
பிரீமியம் ஸ்டோரி
News
கியா சோனெட்

டிரைவ் ரிப்போர்ட்: கியா சோனெட்

“ஒரு கார் வாங்க ஆசை...! ஹேட்ச்பேக்கும் வேண்டாம்; மிட்சைஸ் செடானும் வேண்டாம்; எஸ்யூவி கார் ஓகேதான்... ஆனா பட்ஜெட்...?’’ என்று இழுப்பவர்களுக்கு ஏகப்பட்ட ஆப்ஷன்கள் இருக்கின்றன. நம் ஊர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மென்ட் அப்படி!

இந்த வரிசையில் மாருதி சுஸூகி விட்டாரா பிரெஸ்ஸா, மஹிந்திரா எக்ஸ்யூவி300, ஃபோர்டு எக்கோஸ்போர்ட், ஹூண்டாய் வென்யூ, டாடா நெக்ஸான், டொயோட்டாவின் அர்பன் க்ரூஸர், வரவிருக்கும் நிஸான் மேக்னைட்... அப்பாடா... எத்தனை ஆப்ஷன்கள். `போட்டிக்கு நானும் வரலாமா?’ என்று கியாவும் தனது அடுத்த அஸ்திரத்தை இறக்கி விட்டிருக்கிறது.

 சோனெட்டின் இன்டீரியர் ப்ரீமியம் ரகம். ஆல் பிளாக் தீம் என்றால், GT Line. Tech Line மாடல் என்றால், கறுப்பு-பீஜ் டூயல் டோன் கேபின் இருக்கும். 10.25 இன்ச் டச் ஸ்க்ரீன் எவ்ளோ பெருசு! வென்ட்டிலேட்டட் சீட்ஸ், அசத்தல் வசதி.  செமி டிஜிட்டல் ரீட் அவுட், செம ஸ்போர்ட்டி. ஸ்பீடோ மீட்டர் பெரிதாக, பார்க்க வசதியாக இருக்கிறது.  பின்னால் அமர்பவர்களுக்கு ரியர் ஏசி வென்ட்.
சோனெட்டின் இன்டீரியர் ப்ரீமியம் ரகம். ஆல் பிளாக் தீம் என்றால், GT Line. Tech Line மாடல் என்றால், கறுப்பு-பீஜ் டூயல் டோன் கேபின் இருக்கும். 10.25 இன்ச் டச் ஸ்க்ரீன் எவ்ளோ பெருசு! வென்ட்டிலேட்டட் சீட்ஸ், அசத்தல் வசதி. செமி டிஜிட்டல் ரீட் அவுட், செம ஸ்போர்ட்டி. ஸ்பீடோ மீட்டர் பெரிதாக, பார்க்க வசதியாக இருக்கிறது. பின்னால் அமர்பவர்களுக்கு ரியர் ஏசி வென்ட்.

பொதுவாக கியா தொட்டதெல்லாம் துலங்கி விடும். முதல் கார் செல்ட்டோஸ் விற்பனையில் பட்டையைக் கிளப்ப, எம்பிவி செக்மென்ட்டில் கார்னிவல் கம்பீரமாய் நிற்க, சுறுசுறுப்பாக சோனெட்டைக் கொண்டு வந்த கியா, ``சோனெட்டில் டிரைவ் அடிக்க வர்றீங்களா?’’ என்று பெங்களூருவுக்கு அழைத்திருந்தது. போன மாதமே கியா சோனெட்டின் ஃபர்ஸ்ட் லுக், அவுட்லுக் என எல்லாமே பார்த்துவிட்டோம். நாம் கண்ட ஏக்கம் நிறைவேறப் போகிறது. இப்போது ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக டிரைவ் மட்டும் பார்த்து விடலாம்.

 புலி மூக்கு கிரில்தான், கியாவின் டிரேட்மார்க். கறுப்பு கிரில்லுக்கு நடுவே GT Line எனும் சிவப்பு நிற லோகோ மற்றும் டச்சிங், செம ஸ்போர்ட்டி.  பிராக்டிக்காலிட்டியில் கியா எப்போதுமே கலக்கும். டோர் பாக்கெட்டுகளில் பெரிய வாட்டர் பாட்டில்கள் வைக்கும் அளவுக்கு இடவசதி.
புலி மூக்கு கிரில்தான், கியாவின் டிரேட்மார்க். கறுப்பு கிரில்லுக்கு நடுவே GT Line எனும் சிவப்பு நிற லோகோ மற்றும் டச்சிங், செம ஸ்போர்ட்டி. பிராக்டிக்காலிட்டியில் கியா எப்போதுமே கலக்கும். டோர் பாக்கெட்டுகளில் பெரிய வாட்டர் பாட்டில்கள் வைக்கும் அளவுக்கு இடவசதி.

கியா கார்களில் Tiger Nose கிரில் மிஸ் ஆகாது. ப்ரீமியம் கார் போன்ற தோற்றம் கொடுப்பதற்கு சில்வர் வேலைப்பாடுகள் மற்றும் ஸ்போர்ட்டி லுக் கொடுப்பதற்கு Crown Jewel LED ஹெட்லைட்கள், Heartbeat LED DRL, ஷார்ப்பான பம்ப்பர் மற்றும் ஸ்கிட் பிளேட் ஆகியவை செமயான ரோடு பிரசன்ஸைத் தருகின்றன. பக்கவாட்டில் எஸ்யூவி கார்களுக்கே உரித்தான சைடு கிளாடிங், கறுப்பு A பில்லர், B பில்லர் - C பில்லரில் ப்யானோ பிளாக் வேலைப்பாடுகள், அலாய் வீல் மற்றும் கிளாடிங்கில் சிவப்பு டச்சிங் - க்ளாஸாக இருக்கின்றன. சோனெட் வாவ் டிசைனெல்லாம் இல்லை; ஆனால் ஃப்ரெஷ் அப்பீலில் கலக்குகிறது. சாலையில் போகும்போது, ``என்ன கார் இது’’ என்று பலர் விசாரிக்கத் தவறவில்லை.

உள்ளேதான் சோனெட்டின் ப்ரீமியம் தெரிகிறது. டேஷ்போர்டு, ஃப்ளாட் பாட்டம் ஸ்டீயரிங் வீல், டோர் பேடு, சீட்கள் எல்லாமேதான். அதைவிட ப்யூச்சர்ஸைக் கவனியுங்கள். டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், 10.25 இன்ச் பெரிய டச் ஸ்க்ரீன், (எம்மாடியோவ், வேறு எந்த காம்பேக்ட் எஸ்யூவியிலும் இவ்வளவு பெருசு இல்லை) Uvo கனெக்ட்டிவிட்டி, நேவிகேஷன், வாய்ஸ் கமாண்ட்ஸ், சன்ரூஃப், 7 ஸ்பீக்கர்களைக் கொண்ட Bose சவுண்ட் சிஸ்டம், ஆட்டோ ஹெட்லைட்ஸ் & வைப்பர்கள், எலெக்ட்ரிக் மிரர்கள், க்ரூஸ் கன்ட்ரோல், TPMS, க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி, Sound Mood Lights போன்ற பல்வேறு வசதிகள் உள்ளன. ரொம்பப் பிடித்தது கூல்டு வயர்லெஸ் சார்ஜிங்கும், அந்த வென்டிலேட்டட் சீட்களும்தான்.

விலை: பெட்ரோல் ரூ.8.11–14.68 லட்சம் 
டீசல்: 9.62 – 14.75 லட்சம் (சென்னை ஆன்ரோடு)
விலை: பெட்ரோல் ரூ.8.11–14.68 லட்சம் டீசல்: 9.62 – 14.75 லட்சம் (சென்னை ஆன்ரோடு)

பாதுகாப்புக்கு 6 காற்றுப்பைகள், ஏபிஎஸ், EBD, ESC, HAC, VSM, பிரேக் அசிஸ்ட், முன்/பின் பார்க்கிங் சென்ஸார்கள், ரிவர்ஸ் கேமரா, டிராக்‌ஷன் கன்ட்ரோல், ESC, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் ஆகியவை உண்டு.

ஹாட்ரிக் அடிக்குமா கியா?

முன்பக்க இருக்கைகளில் இடவசதி அருமை. ஆனால், பின்பக்க இருக்கைகளின் இடவசதியில்தான் கியா ஸ்கோர் செய்யத் தவறிவிட்டதோ? இரண்டு பேர் வேண்டுமானால், தாராளமாக அமரலாம். நம் ஊரில் மூன்று பேருக்கான எதிர்பார்ப்புதான் அதிகமாக இருக்கும். 392 லிட்டர் பூட் ஸ்பேஸ், இந்த செக்மென்ட்டில் டாப்.

வசதிகளில்தான் அதிகம் என்று நினைத்தால், இன்ஜின்களிலும் எத்தனை ஆப்ஷன்? 1.2 லிட்டர் பெட்ரோல், 1 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல்.

எதை ஓட்ட என்றே தெரியவில்லை. 5 ஸ்பீடு மேனுவல், 7 ஸ்பீடு DCT / 6 ஸ்பீடு iMT, 6 ஸ்பீடு மேனுவல் / 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக்... இப்பவே கண்ணைக் கட்டினாலும், வாடிக்கையாளர்கள் மத்தியில் இங்கேதான் இடம் பிடிக்கிறது கியா. அதாவது, மொத்தம் 15 வேரியன்ட் சோனெட்களை நீங்கள் கியா ஷோரூமில் பார்க்கலாம்.

ஹாட்ரிக் அடிக்குமா கியா?

எனக்குக் கிடைத்தது - GT Line - 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக். இது 120bhp பவர், 17.2kgm டார்க் கொண்ட இன்ஜின். அதிர்வுகள் அவ்வளவாகத் தெரியவில்லை. NVH லெவலில் சரியாக வேலை பார்த்திருக்கிறது போல கியா. இத்தனைக்கும் 3 சிலிண்டர்தான். அப்போ பெர்ஃபாமன்ஸ்?

அதுக்குத்தான் டர்போவும் கொடுத்திருக்கிறார்கள். ஆச்சரியம் - டர்போ லேக்கே இல்லை. டீசல் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. பெட்ரோலின் பவர் டெலிவரி அருமை. ராக்கெட் மாதிரி பாய்ந்து செல்கிறது சோனெட். நகர்ப்புறச் சாலையிலும் சரி; ஹைவேஸிலும் சரி - பறக்கிறது சோனெட். கியர் ஷிஃப்ட் என்கேஜ் ஆவதும் சூப்பர் ஸ்மூத். டாப் ஸ்பீடு சுமார் 150 கிமீ வரை பறந்தேன். இன்னும் மிதித்தால் பறக்கத் தயாராய் இருந்ததுபோல சோனெட். என்ன, ரோடுதான் இல்லை. ஆனால், முழு பெங்களூருவும் சுற்றிவிட்டேன்.

கியா சோனெட்டில் பெரிதாகக் குறைகள் கண்டுபிடிக்க முடியவில்லை; இந்தப் பின் சீட் இடவசதியைத் தவிர்த்து. இரண்டு பேர் மட்டும் தாராளமாக அமர்ந்து வரலாம். மூன்று பேருக்கு என்றால் கொஞ்சம் சிக்கல்தான். ஆனால், முன் பக்க இடவசதி செம கம்ஃபர்ட்.
கியா சோனெட்டில் பெரிதாகக் குறைகள் கண்டுபிடிக்க முடியவில்லை; இந்தப் பின் சீட் இடவசதியைத் தவிர்த்து. இரண்டு பேர் மட்டும் தாராளமாக அமர்ந்து வரலாம். மூன்று பேருக்கு என்றால் கொஞ்சம் சிக்கல்தான். ஆனால், முன் பக்க இடவசதி செம கம்ஃபர்ட்.

நான் ஏற்கெனவே வென்யூ ஓட்டியிருக்கிறேன். இரண்டிலும் அதே இன்ஜின்கள்தான். ஆனால், சோனெட்டின் ஓட்டுதலில் பெரிய வித்தியாசம் தெரிந்தது. காரணம், இதன் சஸ்பென்ஷன் செட் அப். ‘வென்யூவுக்கும் இதுக்கும் என்ன வித்தியாசம்’ என்றபோது, ஏற்கெனவே இதை கியா சொல்லியிருந்தது. நிஜம்தான். வென்யூவின் கி.கிளியரன்ஸ் 195 மிமீ. சோனெட்டுக்கு 205 மிமீ. குட்டி ஆஃப்ரோடே செய்யலாம். நான் ஆஃப்ரோடையும் விடவில்லை. அசத்தலாகக் கைகொடுத்தது இதன் கையாளுமை.

7 ஸ்பீடு DCT-ன் அராய் மைலேஜ் 18.3 கிமீ. இதுவே 6 ஸ்பீடு iMT என்றால் 18.2 கிமீ என்பது பட்ஜெட் வாடிக்கையாளர்களுக்குச் சந்தோஷம்தான். 15 வேரியன்ட்களில் பெட்ரோலோ... டீசலோ... சுமார் 8.15 லட்சத்தில் இருந்து 14.75 லட்சம் வரை எந்த சோனெட் வேண்டும் என்பது உங்கள் சாய்ஸ்!