Published:Updated:

காருக்குள் பால் கொட்டியதால் வந்த வினை!

காருக்குள் பால் கொட்டியதால் வந்த வினை!
பிரீமியம் ஸ்டோரி
காருக்குள் பால் கொட்டியதால் வந்த வினை!

தொடர் #8. சர்வீஸ் அனுபவம்

காருக்குள் பால் கொட்டியதால் வந்த வினை!

தொடர் #8. சர்வீஸ் அனுபவம்

Published:Updated:
காருக்குள் பால் கொட்டியதால் வந்த வினை!
பிரீமியம் ஸ்டோரி
காருக்குள் பால் கொட்டியதால் வந்த வினை!

ப்போது போன்கள் முதல் மீம்கள் வரை எல்லாமே ஸ்மார்ட் ஆகிவிட்டன. அதாவது, பல்வேறு விதமான வேலைகளை ஒரு பொருள் (ஒரே நேரத்திலும் எளிதாகவும்) செய்தால், அது ஸ்மார்ட். கார்களும் இப்போது ஸ்மார்ட்தான். புளூடூத், மியூசிக் சிஸ்டம், ஜிபிஎஸ் என ஒவ்வொரு காரையும் நான் ஸ்மார்ட் கார் என்றுதான் சொல்வேன். ஆனால் ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் நான் உடன்பட மாட்டேன். அது காரை ஹோட்டல் ஆக்குவது.

எங்கள் PDA (பிக்-அப் டிராப் அசோஸியேட்), காரை சர்வீஸ் செய்வதற்காக வாடிக்கையாளர்கள் வீட்டுக்கே சென்று டெலிவரி எடுக்கும்போது, கார்களில் விலை மதிப்பற்ற பொருள்கள், பணம், காரைச் சுற்றி டென்ட்கள்/சிராய்ப்புகள் ஏதும் இருக்கின்றனவா என செக் செய்வார்கள். அப்படிப் பார்க்கும்போது பல கார்களில் பிரிக்கப்பட்ட சிப்ஸ் பாக்கெட்கள், தின்பண்டங்கள் ஆகியவை கேபினில் இருக்கும்.

`இதிலென்ன இருக்கு... லாங் டிராவல் போகும்போது, பசிச்சா கார்ல ஸ்நாக்ஸ் சாப்பிடுறது குத்தமா?’ எனும் உங்களின் குரல் கேட்கிறது. அதில் பெரிய தவறொன்றும் இல்லை. ஆனால் சிறிய தவறுதான் என்றும் இதை ஒதுக்கவும் முடியாது. சில நேரங்களில் இது நம்மை எவ்வளவு பெரிய சிக்கலில் கொண்டு போய்விடும் என்பதற்கான உதாரணம்தான் இது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வாடிக்கையாளரின் கார் ஒன்று சர்வீஸுக்கு வந்திருந்தது. அவரே கொண்டு வந்துவிட்டு, ஜாப் கார்டு போட்டார். போகும்போது, முக்கியமாக ஒன்றைச் சொல்லிவிட்டுப் போனார். ``சார் குடும்பத்தோட டூர் போயிட்டு வந்தோம். குழந்தையோட பால் பாட்டிலில் இருந்து பால் சிந்திடுச்சு. பிசுபிசுன்னு இருக்கு. அதை மட்டும் கொஞ்சம் நல்லாவே க்ளீன் பண்ணிடுங்க!’’ என்று காரின் பின்பக்கத்தைக் காட்டினார்.

காருக்குள் பால் கொட்டியதால் வந்த வினை!

பொதுவாக காரில் ஸ்டாண்டர்டாக வரும் ஃப்ளோர்கள், ஸ்பான்ச் போன்றுதான் இருக்கும். இவற்றிலுள்ள பிரச்னை என்னவென்றால், எதுவாக இருந்தாலும் உடனே அப்ஸார்ப் செய்துவிடும். இது வாக்குவம் க்ளீனர் வைத்துப் பயன்படுத்தும்போது, மிகவும் சிக்கலை ஏற்படுத்தும் என்பதுதான் உண்மை. அதனால் எல்லோரும் புது கார் வாங்கிய பிறகு, கீழே ஃப்ளோரில் எக்ஸ்ட்ராவாக ஒரு ரெக்ஸின் மேட் அடித்து, அதன் மேலே ஒரு ரப்பர் அல்லது நூடுல்ஸ் மேட் என்று சொல்லக்கூடிய, எளிதில் சுத்தம் செய்யக்கூடிய மேட்களை வாங்கிப் போட்டுவிடுவார்கள். அந்த காரில் ஒரிஜினாலிட்டி போகக் கூடாது என்பதற்காகவோ என்னவோ, எந்த மேட்டும் பயன்படுத்தவில்லை அந்த வாடிக்கையாளர்.

ஃப்ளோரை அழுத்திப் பார்த்தால், பிசுபிசுவென தரை கீழே அமுங்கித் தள்ளியது. ஏனென்றால், இதற்குக் கீழே ஸ்பான்ச் போன்ற மெட்டீரியல்தான் இருக்கும். இதை வாக்குவம் க்ளீனர் வைத்துச் சுத்தம் செய்வது மிகவும் கஷ்டம். ஆனாலும் ஒருவழியாக பிரஷ் போட்டுத் தேய்த்து சுத்தம் செய்து, காரை டெலிவரி கொடுத்தாகிவிட்டது. கறையெல்லாம் க்ளீன். சந்தோஷமாக டெலிவரி எடுத்துக்கொண்டு போனவர், ஐந்து நாள் கழித்து பயங்கரக் கோபத்தோடு சர்வீஸ் சென்டருக்கு வந்தார்.

``1,800 ரூபாய் பணம் கொடுத்து இன்டீரியர் க்ளீனிங் பண்ணின லட்சணம் இதுதானா’’ என்று கோபத்தில் சத்தம் போட்டார். காரைத் திறந்து பின்பக்கம் பார்த்தால்... செம ஷாக்! கறை போய்விட்டது.

ஆனால்..... கறை காணப்பட்ட அந்த வடிவத்துக்குள், குட்டிக் குட்டியாகப் புழுக்கள் நெளிந்து கொண்டிருந்தன. கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கில் புழுக்கள்! பார்க்கவே அருவருப்பாக இருந்தது. எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. திரும்பவும் ஏதாவது கொட்டியதா என விசாரித்தால்... இல்லை. புழுக்களைச் சுத்தம் செய்து அனுப்பினால், மூன்று நாளில் மீண்டும் அதே புழுக்களோடு, கார் சர்வீஸ் சென்டருக்கு வந்தது.

திரும்பவும் யோசனை. சுத்தம் செய்யச் செய்ய நாள் ஆக ஆக புழுக்கள் உருவாகிக் கொண்டே இருந்தன. சீனியர் டெக்னீஷியனின் உதவியோடு, அந்த ஐடியாவை நடைமுறைப்படுத்தினேன்.

பின்பக்க சீட்கள் எல்லாவற்றையும் கழற்றச் சொன்னேன். நான் ஏற்கெனவே சொன்னபடி, எல்லா கார்களின் ஃப்ளோருக்குக் கீழேயும், தடிமனான ஸ்பான்ச் மெட்டீரியலால் செய்யப்பட்ட ஒரு லேயர் இருக்கும். அது காரின் ஃப்ளோரோடு ஒட்டித்தான் இருக்கும். ஃப்ளோரில் இருந்து அதை முழுவதுமாகப் பிரித்தெடுத்து, பால் கொட்டிய அந்த இடத்தைப் பார்த்தால்... அந்த ஏரியா காயாமல் சொதசொதவென இருந்தது. அங்கே இதைவிட நூற்றுக்கணக்கில் பாக்டீரியாக்கள். அந்த பாக்டீரியாக்கள்தான் வளர்ந்து, புழுவாக உருவெடுத்து ஃப்ளோரின் மேலே இடம் பெயர்ந்திருக்கின்றன.

அந்தப் பஞ்சைச் சுத்தம் செய்தாலும் மீண்டும் அதே பிரச்னை வரத்தான் செய்யும். அந்த ஸ்பான்சைப் பிரித்து எடுத்துவிட்டு, வேறு ஒரு ஸ்பான்ச் ஏரியாவை ஃபிட் செய்து, அதை வெயிலில் நன்கு காயவைத்துவிட்டு, திரும்பவும் சரி செய்தபிறகுதான் புழுப் பிரச்னை ஓய்ந்தது. சிறிதுதான் பால் கொட்டியது... ஆனால் எவ்வளவு பெரிய சிக்கலில் தள்ளிவிடுகிறது பார்த்தீர்கள்தானே!

காருக்குள் பால் கொட்டியதால் வந்த வினை!

பால் பிரச்னைபோல தண்ணீராலும் ஒரு சிக்கல் வந்தது. நண்பர் ஒருவர் காரை பார்க் செய்யும்போது, கதவுக் கண்ணாடிகளை மூட மறந்துவிட்டார். அப்போது மழை வர, உள்ளே தண்ணீர் புகுந்துவிட்டது. ஃப்ளோர் மேட் இல்லாத கார் என்பதால், `பொதுக் பொதுக்’ எனப் பாதாளச் சகதிக்குள் நடப்பது போல மாறிவிட்டது ஃப்ளோர். ஒருவழியாக சுத்தம்செய்து காயவைத்த பிறகும், ஈர வாடை மாதக்கணக்கில் வீசிக் கொண்டேயிருந்தது. மேலே சொன்ன அதே பிரச்னைதான். பிறகென்ன... அதே சிகிச்சைதான். கார் வாங்கியதும் சீட்களையே கழற்றிவிட்டு, ஒரு பெரிய ஃப்ளோர் மேட் அதன்மேலே எக்ஸ்ட்ராவாக ஃபிட் செய்யும்படி ஒரு ஆப்ஷன் இருக்கிறது. அதை தயவுசெய்து ஆலோசியுங்கள்.

அந்த ஃப்ளோர்மேட்டுக்கு மேல் ஒரு ரப்பர் மேட் போடுவது பெஸ்ட். நூடுல்ஸ் மேட்கூட விலை மலிவான ஆப்ஷன்தான். வீட்டுக்கு கால்மிதி மாதிரி, காருக்கும் கால்மிதி அவசியம். அதைத் தாண்டி, காரை ஹோட்டல் ஆக்குவதை நிறுத்துவது அத்தியாவசியம்!

என்ன பண்ண வேண்டும்?

`ஏ.சி ஒத்துக்காது’ என்று, சிலர் கண்ணாடியை இறக்கிவிட்டுப் பயணிப்பர். வீட்டுக்குப் போய்ச் சேரும்போது, கார் முழுவதும் ஏகப்பட்ட மண் கிடக்கும்.

கார் வாங்கிய உடனேயே சீட்களைக் கழற்றிவிட்டு, அதன்மேல் எக்ஸ்ட்ராவாக ஃப்ளோர்மேட் போட்டு, பிறகு ஒரு ரப்பர் மேட் போட்டுவிடுங்கள். பின்னர் தேவைப்படும்போது, ரப்பர் மேட்டைத் தட்டி சுத்தம் செய்துவிட்டுப் பயணிக்கலாம்.

காருக்குள் ஸ்நாக்ஸ், கூல்டிரிங்ஸ், டீ/காபி, தண்ணீர் போன்றவற்றைப் பயன்படுத்துவதை முடிந்தவரை தவிருங்கள். கார் ஒன்றும் ஹோட்டல் அல்ல.

காரை பார்க் செய்யும்போது, கீழே தின்பண்டங்கள் சிந்தி இருந்தால் துடைத்துவிடுங்கள். இவற்றுக்கு எறும்புகள், எலிகள் என எல்லாமே வர வாய்ப்புண்டு.

ஃப்ளோர்மேட்டில் பால், டீ/காபி, ஜூஸ் போன்ற இனிப்புத் திரவங்கள் சிந்தினால், உங்களுக்கே தெரியாமல் பெரிய செலவு காத்திருக்கிறது.