Published:Updated:

அன்பு வணக்கம்!

ஆசிரியர் பக்கம்
பிரீமியம் ஸ்டோரி
ஆசிரியர் பக்கம்

மதிப்புக்குரிய வாசகப் பெருமக்களே!

அன்பு வணக்கம்!

மதிப்புக்குரிய வாசகப் பெருமக்களே!

Published:Updated:
ஆசிரியர் பக்கம்
பிரீமியம் ஸ்டோரி
ஆசிரியர் பக்கம்

‘கார் பைக்ஸ் எல்லாம் ஆம்பளைகளின் ஏரியா.. நாங்கள் அதற்குள் வரமாட்டோம்’ என்பது மாதிரி ஒரு காலத்தில் பெண்கள் கார் மற்றும் பைக்ஸ் ஆகியவற்றை ஓட்டுவதில் இருந்து சற்று ஒதுங்கி இருந்தார்கள் என்பது உண்மையே! இப்போது ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர், கார் ஆகியவற்றை எல்லாம் தாண்டி, பைக்ஸ் ஓட்டவும் பல பெண்கள் வந்துவிட்டார்கள். சென்னை போன்ற நகரங்களில் ஆண்களுக்கு இணையாக பைக் ஓட்டும் பெண்கள் அனைத்து இடங்களிலும் தென்படுவதே இதற்குச் சாட்சி. ஹோம் மேக்கர்ஸ் துவங்கி, கல்லூரிப் பேராசிரியைகள், கல்லூரி மாணவிகள், பென்பொருள் பொறியாளர்கள் என்று பலதரப்பட்டவர்களும் பைக்ஸ் ஓட்டுவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். இதுபோன்ற பெண்களை எல்லாம் சந்திக்க உங்களுக்கு விருப்பமா... அவர்களின் பைக் ரைடிங் அனுபவங்களை எல்லாம் தெரிந்து கொள்ள விருப்பமா... இவை அனைத்த்தையும் மோட்டார் விகடன் அச்சு இதழில் சொல்லிவிட முடியாது. சில விஷயங்களைப் படிப்பதைவிடப் பார்ப்பது சரியான தேர்வாக இருக்கும். ஆகையால், இதுபோன்ற பெண்களின் பைக் அனுபவங்களைக் காணொளியாகப் பதிவுசெய்து மோட்டார் விகடன் யூட்யூப் சேனலில் பதிவேற்றம் செய்திருக்கிறோம்.

அன்பு வணக்கம்!

அது மட்டுமல்ல; இதுபோன்ற பெண்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுத்தால் இவர்களைப் பின்பற்றி, மேலும் பல பெண்கள் கார் மற்றும் பைக்ஸ் ஆகியவற்றின் மீது ஆர்வம் காட்டுவார்கள் என்பதால், பீஸ்ட் ரைடர்ஸ் என்கிற அமைப்போடு இணைந்து இது போன்ற பெண்களை மேடையேற்றிப் பாராட்டினோம். இந்த நிகழ்வு பெண்கள் தினத்தன்று நடந்தேறியது. எந்தெந்தப் பெண்கள் எல்லாம் பாராட்டுப் பெற்றார்கள் என்கிற விவரங்கள் மோட்டார் விகடனின் சமூக வலைதளங்கள் அனைத்திலும் பதிவேற்றம் செய்திருக்கிறோம். சற்றுநேரம் ஒதுக்கி அந்தப் பக்கங்களைப் பார்ப்பதுடன், அவர்களை நீங்களும் பாராட்டினால் அவர்கள் மேலும் மகிழ்ச்சியடைவார்கள்.

இந்த இதழில் மாருதி சுஸூகி பெலினோ மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா ஆகியவற்றை ஓட்டி நம் டெஸ்ட் ரிப்போர்ட்டை அளித்திருக்கிறோம். இது தவிர, பெலினோவை ஒட்டி வந்திருக்கும் டொயோட்டா கிளான்ஸா மற்றும் ஸ்கோடா ஸ்லாவியாவைத் தொடர்ந்து வந்திருக்கும் ஃபோக்ஸ்வாகன் வர்ட்யூஸ் ஆகியவற்றின் முதல் பார்வையும் இந்த இதழில் இடம் பெற்றிருக்கின்றன.

புதிதாக அறிமுகமாகியிருக்கும் ராயல் என்ஃபீல்டின் ஸ்க்ராம் 411 பைக்கை பெங்களூரில் இருக்கும் ஆஃப் ரோடு ட்ராக்கில் ஓட்டிப் பார்த்து ஒரு ரிப்போர்ட்டும் கொடுத்திருக்கிறோம். அதோடு கோவையில் கரி மோட்டார் ரேஸ் டிராக்கில் நடைபெற்ற ராயல் என்ஃபீல்டின் GT CUP மற்றும் சென்னை ரேஸ் ட்ராக்கில் யமஹா பைக்குகளை ஓட்டிய அனுபவக் கட்டுரைகள் ஆகியவையும் பைக் ரைடர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

இந்த அனுபவங்கள் அனைத்தும் காணொளியாகவும் மோட்டார் விகடன்

யூட்யூப் சேனலில் இடம் பெற்றிருக்கின்றன. பார்க்கவில்லை என்றால் நிச்சயம் பாருங்கள். பரவசம் உத்திரவாதம். https://bit.ly/MoViYouTube

ஆசிரியர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism