Published:Updated:

1.60 ரூபாய்க்கு ஒரு கிமீ! சீனாவின் எலெக்ட்ரிக் கார் BYD e6

BYD e6
பிரீமியம் ஸ்டோரி
News
BYD e6

கவர் ஸ்டோரி: எலெக்ட்ரிக் கார் BYD e6

இதன் எக்ஸ் ஷோரூம் விலையே 29 லட்சத்துக்கு மேல் என்றாலும் - இதில் ஆப்பிள் கார் ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, 7 சீட்டர் ஆப்ஷன்ஸ் போன்றவைகூட இல்லை என்பது ஏமாற்றத்தைத் தருகிறது. டொயோட்டா இனோவாவை மீறி இதை ஒரு டாக்ஸி பயன்பாட்டுக்காக ஒருவர் வாங்க வேண்டும் என்றால், இது ஒரு பசுமைக் கார் என்பதும், ரூ.1.60 பைசா செலவில் ஒரு கிமீ போக முடியும் என்ற வாக்குறுதியும்தான் காரணமாக இருக்க வேண்டும். அத்துடன், பேட்டரிக்கு 8 வருடங்கள் அல்லது 5,00,000 கிமீ என இவர்கள் கொடுக்கும் வாரன்ட்டி சலுகைகூட, டாக்ஸி செக்மென்ட்டைத் தன் பக்கம் இது திரும்பிப் பார்க்க வைக்கலாம்.ஜப்பான், தென் கொரியா, அமெரிக்கா, ஜெர்மனி, ஃபிரான்ஸ், செக் குடியரசு ஆகிய நாடுகளைத் தொடர்ந்து, சீனாவும் நம் நாட்டில் ஆட்டோமொபைல் துறைக்குள் வந்து விட்டது. எம்ஜி - அடிப்படையில் இங்கிலாந்து கம்பெனி என்றாலும், இப்போது அது இருப்பது சீனாவின் வசம்தான். இந்த நிலையில் முழுக்க முழுக்க சீனா கம்பெனி என்ற அடையாளத்துடன், நம் நாட்டுக்கு வந்திருக்கும் ஆட்டோமொபைல் கம்பெனி BYD. சென்னை இருங்காட்டுக்கோட்டையில்தான் இவர்களது தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. ஒரு சில ஆண்டுகளாக பஸ் உற்பத்தியில் மட்டும் கவனம் செலுத்தி வந்த இவர்கள், இப்போது முதல் முதலாக e6 என்ற பெயரில் எம்பிவி கார் ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.

இந்த காரை சென்னைக் கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஒரு சில மணி நேரம் ஓட்டி டெஸ்ட் டிரைவ் செய்தோம். அந்த ரிப்போர்ட்டைக் கொடுப்பதற்கு முன்... BYD கம்பெனி பற்றி ஒரு சின்ன முன்னோட்டம். Build Your Dreams என்பதன் சுருக்கம்தான் BYD. இந்தக் கம்பெனி ஆரம்பித்து 25 ஆண்டுகள் ஆகின்றன. இந்தக் குறுகிய காலகட்டத்தில் உலகின் ஐந்து கண்டங்களிலும் கால் பதித்து விட்டார்கள். ஆட்டோமொபைல், ரயில் போக்குவரத்து, மரபுசாரா மின்உற்பத்தி மற்றும் கைபேசி போன்ற மின்னணுச் சாதனங்கள் என்று நான்கு ஏரியாக்களிலும் இமாலய வளர்ச்சி கண்டிருக்கிறார்கள். நம்மூரில் விற்பனையாகும் பெரும்பாலான ஷாவ்மீ கைபேசிகள், இருங்காட்டுக்கோடையில் இவர்களது செல்போன் தொழிற்சாலையில்தான் உற்பத்தியாகின்றன. ஆட்டோமொபைல் என்று எடுத்துக் கொண்டால் வெறும் காரோடு நிற்காமல் பஸ், ட்ரக், வேன் என்று ஆரம்பித்து எட்டுத் திசைகளையும் கட்டி ஆண்டு கொண்டிருக்கிறார்கள்.

1.60 ரூபாய்க்கு ஒரு கிமீ! 
சீனாவின்  எலெக்ட்ரிக் கார் BYD e6
1.60 ரூபாய்க்கு ஒரு கிமீ! 
சீனாவின்  எலெக்ட்ரிக் கார் BYD e6
1.60 ரூபாய்க்கு ஒரு கிமீ! 
சீனாவின்  எலெக்ட்ரிக் கார் BYD e6


எலெக்ட்ரிக் கார் தயாரிக்கும் சில கம்பெனிகள் பெட்ரோல்-டீசல் கார் தயாரிக்கும் அதே ப்ளாட்ஃபார்மிலேயே எலெக்ட்ரிக் கார் தயாரிப்பார்கள். ஆனால் BYD அப்படியில்லை. ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்தே, எலெக்ட்ரிக் வாகனங்களில் மட்டும்தான் கவனம் செலுத்துவது என்று தெளிவாக முடிவெடுத்து பஸ், ட்ரக் போன்ற கனரக வாகனங்களை எல்லாம்கூட எலெக்ட்ரிக் வாகனங்களாக உற்பத்தி செய்கிறவர்கள் இவர்கள். இந்த e6 முழுக்க முழுக்க இதற்காகவே வடிவமைக்கப்பட்ட e-ப்ளாட்ஃபார்மில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது.

SKD (Semi Knocked downkit) என்ற வடிவில் - நம் நாட்டுக்கு வந்து இருங்காட்டுக் கோட்டைத் தொழிற்சாலையில் அசெம்பிள் செய்யப்படும் e6 ஒரு எம்பிவி. `இனோவா, எர்டிகாவெல்லாம் எங்களுக்குப் போட்டியே கிடையாது. டெஸ்லாதான் எங்களுக்குப் போட்டி' என்று அதீத தன்னம்பிக்கையோடு பேசினாலும், e6 இப்போது டாக்ஸி, அதாவது B2B செக்மென்ட்டில் மட்டும்தான் அறிமுகமாகியிருக்கிறது.

டாக்ஸி செக்மென்ட் என்பதால் வெளித்தோற்றத்திலும் சரி, உள்ளலங் காரத்திலும் சரி... அதிக ஆர்ப்பாட்ட மில்லாமல் டிசைன், வசதிகள் என எல்லாவற்றிலும் அடக்கியே வாசித்திருக்கிறது BYD. டாக்ஸி காராச்சே... ஓட்டலில் இருந்து ஏர்போர்ட், ஏர்போர்ட்டில் இருந்து ஓட்டல் போன்ற பயன்பாட்டுக்குத்தான் இது அதிகமாக பயன்படுத்தப்படும் என்பதால், பெட்டி படுக்கைகள் வைக்கும் டிக்கியை 580 லிட்டர் அளவுக்கு மிகப் பெரிதாக வடிவமைத்திருக் கிறார்கள்.

வெளித்தோற்றம்:

இப்போதைக்கு நீலம் மற்றும் வெள்ளை நிறத்தில் மட்டுமே வந்திருக்கும் எலெக்ட்ரிக் எம்பிவியான e6-ன் முகப்பில் கிரில் தேவையில்லை. அதனால் கிரில் இருக்கும் இடத்தில் அறுங்கோண வடிவில் ஒரு டிசைனைக் கொடுத்திருக்கிறார்கள். சீனர்கள் நல்ல சகுனமாகக் கருதும் டிராகனின் அடையாளங்கள் இதில் இருப்பதாகச் சொல்கிறார்கள். பக்கவாட்டை நோக்கி நீளும் ஹெட்லைட், LED DRL ஆகியவற்றின் டிசைன் மட்டும்தான் முகப்பில் பளிச்சென்று தெரிகின்றன. இதன் 17 அலாய்வீல்கூட அதிக ஆர்ப்பாட்டம் இல்லாமல் டிசைன் செய்யப்பட்டிருக்கிறது. இதன் மேற்கூரை, பில்லர்கள் எல்லாம் பிளாக் அவுட் செய்யப்பட்டிருப்பது காரின் தோற்றத்தை மேம்படுத்துகிறது. பிளாஸ்டிக் கிளாடிங் இருக்க வேண்டிய இடத்தில்கூட கறுப்பு பெயின்ட் தீட்டியிருக்கிறார்கள். ஸ்பாய்லர், ஷார்க் ஃபின் ஆன்ட்டெனா, தாராளமான ரியர் பம்பர் என எல்லாமே கறுப்பு வண்ணத்தில் இருப்பதால், பின்னால் இருந்து சுலபமாக அடையாளம் கண்டுகொள்ள முடியும். BYD என்கிற லோகோ, கியாவின் பழைய லோகோவை நினைவுபடுத்துகிறது.

உள்ளலங்காரம்:

சிறிய திருகுகள்கூட இல்லாமல் சிம்பிளாக இருக்கும் டேஷ்போர்டில் கவனத்தை ஈர்ப்பது 10.1 இன்ச் டிச் ஸ்கீரின். காரின் பேட்டரி எந்த அளவுக்கு வேகமாக சார்ஜாகிறது என்பதை இதில் பார்த்துக் கொள்ள முடிகிறது. இதை வசதிக்கு ஏற்ற வகையில் செங்குத்தாகவும் திருப்பிக்கொள்ள முடியும். ரிவர்ஸ் கேமராவும் இதே! இந்தத் தொடுதிரைக்கு BYD பயன்படுத்தியிருப்பது ஓப்பன் சோர்ஸ் என்பதால், வரும்காலத்தில் கனைக்டட் கார் தொழில்நுட்பங்களை இதில் சேர்ப்பது சுலபம்.

கியர் நாப் இருக்கும் இடத்தில் நியூட்ரல், ரிவர்ஸ், டிரைவ் என்று மூன்றே மூன்று ஆப்ஷன்கள் கொண்ட ஒரு திருகு. பிரேக் போடும்போது உண்டாகும் சக்தியை மின்சார சக்தியாக மாற்றி பேட்டரியில் சேமித்துக் கொள்ளும் வசதியைத் தேர்ந்தெடுக்க ஒரு தனி பட்டன், 3 ஸ்போக் ஸ்டீயரிங் வீலில்கூட நான்கு ஐந்து பட்டன்கள் மட்டுமே இருக்கின்றன. BYD என்கிற லோகோ அந்த ஸ்டீயரிங் வீலுக்குப் பொருத்தமாக இருக்கிறது.

ஒயர்லெஸ் சார்ஜருக்கான இடம்போல ஒன்று இருக்கிறது. ஆனால், அது கிடையாது. வெறுமனே அங்கே போனை வைத்துக் கொள்ளலாம். இது தவிர முன்சீட்டில் இரு பக்கங்களிலும் இரண்டு வாட்டர் பாட்டில்கள், இரண்டு சீட்டுக்கும் இடையே மேலும் இரண்டு பாட்டில்களை வைக்க இடமிருக்கிறது. அதன் பக்கத்தில் ஸ்டோரேஜ் பாக்ஸ் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், டிரைவர் கைகளை வைத்துக் கொள்ள அதில் வசதி இல்லை.

டாக்ஸி கார் என்பதால், பின்னிருக்கை களுக்குத்தான் இதில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பின்னிருக்கைகளுக்கு ஒரே ஒரு ஏசி வென்ட்தான் இருக்கிறது. இரண்டு USP போர்ட் கொடுத்திருக்கிறார்கள். பின்னிருக்கைகள் தாராளமாகவும் சொகுசாகவும் இருக்கின்றன. கால் முட்டி முன் சீட்டில் இடிக்கவில்லை. ஆனால், சீட்டில் தொடைக்கான சப்போர்ட் இல்லை. சீட்டிற்குக் கீழேதான் பேட்டரி இருக்கிறது என்பதுதான் காரணமாக இருக்க வேண்டும். பின்னிருக்கைகள் இரண்டுக்கும் இடையே, மூன்றாவது பயணிக்கும் ஒரு ஹெட் ரெஸ்ட் கொடுத்திருக்கிறார்கள். மூன்றாவது பயணி இல்லை என்றால், பொதுவாக கைகளை வைக்க ஆர்ம் ரெஸ்ட் கொடுப்பார்கள். இதில் அது இல்லை.

5 இன்ச் கொண்ட் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் சிம்பிளாக இருந்தாலும், தெளிவாகக் காட்சியளிக்கிறது. இதில் டயர்களில் எவ்வளவு காற்று இருக்கிறது; பேட்டரியில் எந்த அளவுக்கு சார்ஜ் இருக்கிறது; மேற்கொண்டு எவ்வளவு கிமீ தூரம் போக முடியும் போன்ற விவரங்களை அது காட்டுகிறது. CN95 ஏர் ஃபில்ட்டர், டெலிஸ்கோப்பிக் ஸ்டீயரிங் ஆகியவை இருக்கின்றன.

1.60 ரூபாய்க்கு ஒரு கிமீ! 
சீனாவின்  எலெக்ட்ரிக் கார் BYD e6


பேட்டரி:

இதில் இருப்பது 71.7kWh லித்தியம் ஐயன் பாஸ்பேட் பேட்டரி. இதை இவர்கள் பிளேடு பேட்டரி என்கிறார்கள். 70Kwh அளவுக்கு அதாவது 94bhp அளவுக்கு இந்தக் கார் சக்தியையும், 180 Nm அளவுக்கு டார்க்கையும் கொடுக்கிறது. சிட்டி டிராஃபிக்காக இருந்தாலும் சரி, ஈசிஆர் போன்ற வெறிச்சோடிய சாலைகளாக இருந்தாலும் சரி... போதுமான அளவுக்கு கார் சக்தியை வெளிப்படுத்தியது. மணிக்கு 125 கிமீ வரைக்கும் வேகம் செல்ல முடிந்தது. மின்சார கார்களுக்கே உரிய அம்சமான உடனடி டார்க் இதிலும் உடனடியாக வெளிப்படுகிறது. அதனால், நெடுஞ்சாலைகளில் ஓவர் டேக் செய்வதும் சுலபமாகவே இருந்தது. நிலைத்தன்மையோடு ஓடினாலும் திருப்பங்களில் செல்லும்போது, இதன் ஸ்டீயரிங் வீல் நம்பிக்கையைக் கொடுக்கவில்லை. சஸ்பென்ஷன் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம்.

பேட்டரி கார் என்றால் இதை எவ்வளவு நேரம் சார்ஜ் செய்ய வேண்டும்? ஒரு முறை சார்ஜ் செய்தால் எவ்வளவு தூரம் போக முடியும்? எவ்வளவு பாதுகாப்பானது... இப்படி ஏராளமான கேள்விகள் வரும்.

இதை இவர்கள் `நெயில் பெனட்ரேஷன் டெஸ்ட்' என்ற ஒரு சோதனைக்கு உட்படுத்திக் காட்டுகிறார்கள். அதாவது, 260 சதவிகிதம் இதை சார்ஜ் செய்து காட்டுகிறார்கள். 300 டிகிரி வரை தீயில் வைத்துக் காட்டுகிறார்கள். ஆணிகூட அடித்துக் காட்டி... இது ஒரு பாதுகாப்பான பேட்டரி என்று மதர் ப்ராமிஸ் செய்கிறார்கள். வாட்டர் ப்ரூஃப் என்பதால், மழை நீர் தேங்கி நிற்கும் பகுதிகளில் ஓட்டிச் சென்றாலும் ஒன்றும் ஆகாது என்கிறார்கள்.

இதை ஒரு முறை சார்ஜ் செய்தால், 415-ல் இருந்து 520 கிமீ வரை வரும் என்கிறார்கள். நாம் நடத்திய சோதனையில் சுமார் 380 கிமீ-க்கு மேலாகவே இது ஓடும் என்பது தெரிந்தது. 60 Kw சார்ஜராக இருந்தால் 90 நிமிடத்திலும், 40 Kw சார்ஜராக இருந்தால் 2 மணி நேரத்திலும் இது ஃபுல் சார்ஜாகிறது. இதுவே 6.6 Kw சார்ஜராக இருந்தால் ஃபுல் சார்ஜாக 12 மணி நேரமாகும். அவசரத்துக்கு சார்ஜ் செய்ய வேண்டும் என்றால், 60 Kw DC சார்ஜர் கொண்டு சார்ஜ் செய்தால் அரைமணி நேரத்தில் ஐம்பது சதவிகிதம்வரை மோட்அதாவது 30% - 80% வரை சார்ஜ் செய்து கொள்ள முடியும்.

1.60 ரூபாய்க்கு ஒரு கிமீ! 
சீனாவின்  எலெக்ட்ரிக் கார் BYD e6

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

மோட்டார் விகடன் தீர்ப்பு

இதன் எக்ஸ் ஷோரூம் விலையே 29 லட்சத்துக்கு மேல் என்றாலும் - இதில் ஆப்பிள் கார் ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, 7 சீட்டர் ஆப்ஷன்ஸ் போன்றவைகூட இல்லை என்பது ஏமாற்றத்தைத் தருகிறது. டொயோட்டா இனோவாவை மீறி இதை ஒரு டாக்ஸி பயன்பாட்டுக்காக ஒருவர் வாங்க வேண்டும் என்றால், இது ஒரு பசுமைக் கார் என்பதும், ரூ.1.60 பைசா செலவில் ஒரு கிமீ போக முடியும் என்ற வாக்குறுதியும்தான் காரணமாக இருக்க வேண்டும். அத்துடன், பேட்டரிக்கு 8 வருடங்கள் அல்லது 5,00,000 கிமீ என இவர்கள் கொடுக்கும் வாரன்ட்டி சலுகைகூட, டாக்ஸி செக்மென்ட்டைத் தன் பக்கம் இது திரும்பிப் பார்க்க வைக்கலாம்.