கார்ஸ்
Published:Updated:

705 குதிரை சக்தி… 712 Nm டார்க்… 6 கோடி ரூபாய் ஃபெராரி எஸ்யூவி!

Ferrari Purosangue
பிரீமியம் ஸ்டோரி
News
Ferrari Purosangue

சூப்பர் கார்: ஃபெராரி ப்யூரோசங்யூ (Ferrari Purosangue)

705 குதிரை சக்தி… 712 Nm டார்க்… 
6 கோடி ரூபாய் ஃபெராரி எஸ்யூவி!

இத்தாலியின் சூப்பர் கார் மற்றும் ஸ்போர்ட்ஸ் கார்ஸ் தயாரிப்பு நிறுவனமான ஃபெராரி, தனது முதல் எஸ்யூவியான புதிய ஃபெராரி ப்யுரோசங்யூ (Ferrari Purosangue) காரை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இது ஃபெராரியின் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல். சிறந்த ஸ்போர்ட்ஸ் கார்களைத் தயாரிக்கும் புகழைப் பெற்ற பெராரியின் தனித்துவம் இந்த காரிலும் தொடர்கிறது.

இந்த ஃபெராரி ப்யூரோசங்யூ, லம்போர்கினியின் உருஸ், போர்ஷே கெய்ன், ஆஸ்ட்டன் மார்ட்டின் டிபிஎக்ஸ், பென்ட்லி பென்டாய்கா W12 மற்றும் மஸராட்டி லெவன்டே ஆகிய கார்களுக்குப் போட்டியாகக் களம் இறங்கி உள்ளது. இந்த ப்யுரோசங்யூ காரின் விற்பனை ஐரோப்பியச் சந்தைகளில் 2023–ல் தொடங்கும். இந்தியாவில் 2023–ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இந்த காரின் விலை சுமார் ரூபாய் 6 கோடி (எக்ஸ் ஷோரூம்) இருக்கும்.

வெளித்தோற்றம்:

ஃபெராரியின் தனித்துவமான ஸ்டைலில் களம் இறங்கியுள்ளது இது. காரின் முன் பகுதியில் உள்ள செவ்வக வடிவிலான காற்றுத் துவாரங்கள் இழுவையைக் குறைத்து காற்றோட்டத்தை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மேல் டே டைம் ரன்னிங் LED ஹெட் லைட் மெல்லிய கோடு போல காரின் கண்களாக அமைந்துள்ளன. காரின் இரு பக்கவாட்டில் அமைந்துள்ள இரண்டு கதவுகள் நம்மை காருக்குள் வரவேற்பதைப்போல இடம்பெற்று இருக்கிறது. இந்தக் கதவுகள் 79 டிகிரி ஸ்விங்குடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. கூபே - எஸ்க்யூ ட்ராப்லைன், நீண்ட பேனட், குவாட் எக்ஸாஸ்ட் பைப்புகள், பின்புற டிஃப்யூஸர், 22 இன்ச் முன் மற்றும் 23 இன்ச் பின்புற அலாய் வீல்கள், காரின் முன்புறமும் அலாய் வீல்களின் நடுவிலும் ஃபெராரியின் மஞ்சள் நிறக் குதிரை லோகோ இடம் பெற்றுள்ளது. சைடு மிரருக்குக் கீழே ஃபெராரி பேட்ஜும், காரின் பின்புறம் குதிரை முத்திரையும் தனி ஸ்டைலைக் கொடுக்கிறது.

உள்ளலங்காரம்:

‘டூயல் காக் பிட்’ டேஷ்போர்டு அடிப்படையில் அமைந்துள்ள இன்டீரியர் கேபின் பெரிதும் ஈர்க்கப்படுகிறது. சென்டர் கன்சோல் போக, தனியாக டிரைவர் மற்றும் முன்பக்கப் பயணிக்கு இரண்டு 10.2” இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன்கள் வடிவில் கொடுத்திருக்கிறார்கள். வசதி தொடர்பான கன்ட்ரோல்ஸ் டேஷ்போர்டின் மையப்பகுதியில் உள்ள ரோட்டரி நாப் மூலம் அமைந்துள்ளது. மேலும் பின்புறப் பயணிகள் இரண்டாவது ரோட்டரி நாப் வழியாக அந்தச் செயல்பாடுகளை அணுகலாம்.

ஃபெராரியின் வரலாற்றில் முதன்முறையாக, நான்கு தனித்தனி மற்றும் இண்டிபெண்டன்ட் அட்ஜஸ்ட் வசதி கொண்ட இருக்கைகள் இடம் பெற்றுள்ளன. SUV–ல் உள்ள ப்ரீமியம் இருக்கைகள், வயர்லெஸ் சார்ஜிங் வசதி, 3D சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம், ஏர் குவாலிட்டி சென்சார், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே கனெக்டிவிட்டி ஆகிய வசதிகளும் இடம் பெற்றுள்ளன.

705 குதிரை சக்தி… 712 Nm டார்க்… 
6 கோடி ரூபாய் ஃபெராரி எஸ்யூவி!

பாதுகாப்பு வசதிகள்

இந்த எஸ்யூவி அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் (ADAS) வசதியைப் பெற்றுள்ளது. மேலும் இந்த காரில் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் (ACC) , ஆட்டோமேட்டிக் எமர்ஜென்சி பிரேக் சிஸ்டம் (AEB) , ஆட்டோ ஹை பீம் (HBA/HBAM), லேன் டிப்பார்ச்சர் வார்னிங் (LDW), லேன் கீப்பிங் அசிஸ்ட் (LKA), பிளைன்ட் ஸ்பாட் டிடெக்ஷன் (BSD), ரேர் க்ராஸ் டிராபிக் அலர்ட் (RCTA), டிராபிக் சைன் ரெகக்னைஷன் (TSR) ஆகிய வசதிகளுடன் இடம் பெற்றுள்ளன. மேலும் டிரைவர் தூங்கும் நிலையைக் கண்டறியும் வசதியையும் (DDA), பின்புற பார்க்கிங்கைக் கவனிக்கும் கேமரா (NSW) வசதியையும் கொண்டுள்ளது. மொத்தம் 10 காற்றுப்பைகள்!

இன்ஜின்

இது 7750rpm–ல் 705bhp சக்தியையும், 6,250rpm–ல் 716 Nm அளவுக்கு டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. இந்த எஸ்யூவி, 6.5 V12 பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இந்த இன்ஜின், 8 ஸ்பீடு டூவல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது நான்கு சக்கரங்களுக்கும் சக்தியைக் கடத்துகிறது. இந்த ப்யுரோசாங்யு கார், 100 கிமீ வேகத்தை வெறும் 3.3 விநாடிகளில் எட்டி விடும். மணிக்கு 310 கிமீ வேகத்திற்கு மேல் செல்லும்.