Published:Updated:

ஒரு கோடி ரூபாய் கார்... ஒரு ரூபாய்க்கு ஒரு கிமீ!

விலை: சுமார் 1.13 கோடி (சென்னை ஆன்ரோடு)
பிரீமியம் ஸ்டோரி
விலை: சுமார் 1.13 கோடி (சென்னை ஆன்ரோடு)

ஃபர்ஸ்ட் டிரைவ்: பென்ஸ் EQC எலெக்ட்ரிக்

ஒரு கோடி ரூபாய் கார்... ஒரு ரூபாய்க்கு ஒரு கிமீ!

ஃபர்ஸ்ட் டிரைவ்: பென்ஸ் EQC எலெக்ட்ரிக்

Published:Updated:
விலை: சுமார் 1.13 கோடி (சென்னை ஆன்ரோடு)
பிரீமியம் ஸ்டோரி
விலை: சுமார் 1.13 கோடி (சென்னை ஆன்ரோடு)
ல்லாவற்றிலுமே முன்னோடி பென்ஸ். 70-களிலேயே ஏபிஎஸ், 80-களிலேயே ESP, 2000-த்தில் அட்டென்ஷன் அசிஸ்ட் என்று எல்லாவற்றையுமே முதலில் ஆரம்பித்து வைத்துவிடும் பென்ஸ். எலெக்ட்ரிக் விஷயத்தில் மட்டும் கொஞ்சம் லேட்டாகத்தான் என்ட்ரி ஆகியிருக்கிறது என்று சொல்லலாம். தனது முதல் காரான EQC காரை லாஞ்ச் செய்திருக்கிறது மெர்சிடீஸ் பென்ஸ். AMG என்றால் பெர்ஃபாமன்ஸ், Maybach என்றால் சொகுசு என்பதுபோல், இனிமேல் பென்ஸில் இருந்து வரும் எலெக்ட்ரிக் கார்கள் எல்லாமே இந்த EQ சீரிஸில்தான் வரும். 1 கோடி ரூபாய் EQC எலெக்ட்ரிக் எஸ்யூவியில், மாசு நிரம்பிய சென்னையில், சத்தமே போடாமல், புகையையே எழுப்பாமல் ஒரு நாள் முழுக்க ரவுண்ட் அடித்தோம்.

வெளியே

பென்ஸ் எதையுமே டெடிகேஷனாகச் செய்யும். EQC விஷயத்தில் அப்படி இல்லைபோல! இதற்கென தனி ப்ளாட்ஃபார்ம் ஏதாவது அமைத்திருக்கும் என்று நினைத்தால்… இல்லை. GLC-ன் அதே ப்ளாட்ஃபார்மில், அதே ஆக்ஸில் நீளத்தில்தான் (2,873மிமீ) வந்திருக்கிறது EQC. ஆனால், வெளிப்பக்கத்தில் EQC, GLC-யிடம் இருந்து நிறைய வேறுபட்டிருக்கிறது.

1.  இன்டீரியர், விமானத்தின் காக்பிட் போல ஸ்டைலாக இருக்கிறது.  2. இரண்டு மோட்டார்கள். 408bhp பவர்... இது பெரிய ஏஎம்ஜி கார்களுக்கு இணையானது.
1. இன்டீரியர், விமானத்தின் காக்பிட் போல ஸ்டைலாக இருக்கிறது. 2. இரண்டு மோட்டார்கள். 408bhp பவர்... இது பெரிய ஏஎம்ஜி கார்களுக்கு இணையானது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பெரிய கிரில், அதற்கு நடுவே பெரிய பென்ஸ் லோகோ… செம ஸ்டைல். இதன் ஹெட்லைட்ஸில் ஒரு ஸ்பெஷல். இது ஒரு அடாப்டிவ் மல்ட்டி பீம் எல்இடி ஹெட்லைட்ஸ். இரவில் இதை ஓட்டிப் பார்த்தோம். 650 மீட்டர் என்று க்ளெய்ம் செய்கிறது பென்ஸ். நிஜமாகவே அரை கிமீ தாண்டி வெளிச்சம் அடிக்கிறது.

நடுவே சிங்கிள் ஸ்ட்ரிப்பில், ஒரே நீளமாக கார் முழுதும் DRL எரிவது செம அழகு. இதே அழகு பின்பக்கமும்தான். நீளமான பின் பக்க லைட்டும் அருமை. யூனிக்கான டிசைன் இது. பெரிய 20 இன்ச் வீல்கள் சரியான ரோடு பிரசன்ஸைத் தருகின்றன .

முக்கியமான மாற்றம் என்றால் இதுதான். வெளிப்புறம் கிரில், ஹெட்லைட்களில், பம்ப்பருக்குக் கீழே என அங்கங்கே நீலநிற ஆக்ஸென்ட்களில் `நான் ஒரு எலெக்ட்ரிக்’ என்கிறது EQC. அட, அலாய் வீல்களுக்குக்கூட நீல நிற வேலைப்பாடுகள் செம! பின்னால் சரிந்து விழும் டிசைனால், இது கூபேவா, எஸ்யூவியா என்று ஒரு நிமிடம் சிந்திக்க வைக்கிறது டிசைன். ஆனால், எதுவாக இருந்தாலும் அழகுதான்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உள்ளே… இடவசதி!

டச் ஸ்க்ரீனா, பெரிய டிவியா என்று குழப்பியடித்தது சென்டர் கன்சோல். ஆனால் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் மீட்டரையும், டச் ஸ்க்ரீனையும் சேர்த்து, டெயில் லைட் டிசைன் போல் நீளமாக வடிவமைத்திருக்கிறார்கள். செமயாக இருக்கிறது. இரண்டும் தலா 10.25 இன்ச் அளவு. இன்ஸ்ட்ரூமென்ட் டயல்களில் இன்னொரு புதுமை. அதாவது, டிஜிட்டலுக்குள் ஒரு அனலாக் மீட்டர் அற்புதம். ஆர்பிஎம் மீட்டருக்குப் பதில் பவர் மீட்டரை பெர்சன்டேஜ் அளவில் கொடுத்திருந்தார்கள். வித்தியாசமாக இருந்தது.

விலை: சுமார் 1.13 கோடி (சென்னை ஆன்ரோடு)
விலை: சுமார் 1.13 கோடி (சென்னை ஆன்ரோடு)

3 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் வாவ்! டச் ஸ்க்ரீனில் லம்பர் சப்போர்ட், சீட் சொகுசு எல்லாவற்றையும் அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம் என்பது செம! பென்ஸின் MBUX சிஸ்டம் வைத்திருந்தார்கள். டிராஃபிக், மழை, காபி ஷாப், பிரியாணிக் கடை, நேவிகேஷன் என்று எல்லாமே வாய்ஸ் கமாண்ட் மூலம் கேட்டுக் கொள்ளலாம். கனெக்டட் கார் என்பதால், மொபைல் ஆப் மூலமும் EQC –யை கன்ட்ரோல் செய்யலாம். பென்ஸில் மசாஜ் சீட்கள் இல்லாமலா? இருக்கு. ஆனால், வென்டிலேட்டட் சீட்கள் மிஸ்ஸிங்.

இப்போது சின்ன கார்களில்கூட 7 காற்றுப் பைகள் என்பது பென்ஸின் டிரேட்மார்க். EQC-லும் முழங்காலுக்கும் சேர்த்து 7 காற்றுப்பைகள். ஏபிஎஸ், இபிடி, ட்ராக்ஷன் அசிஸ்ட் என எல்லா பாதுகாப்பு வசதிகளுமே இருந்தன. சீட்கள் செம சொகுசு. ஒரு 7 சீட்டர் காரை 5 சீட்டராக வடிவமைத்தால் இடவசதி எத்தனை தாராளமாக இருக்கும்? பின் சீட்களில் அவ்வளவு இடவசதி. பூட் ஸ்பேஸ் சுமார் 500 லிட்டர் இருக்கும்போல! பெரிய டூர் அடிக்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இன்ஜினுக்குப் பதில் என்ன இருக்கு?

இந்த பென்ஸ் EQC-ல் மொத்தம் 2 மோட்டார்கள். இரண்டுமே சேர்ந்து சுமார் 408 bhp பவரை வெளிப்படுத்துகிறது. இது பெரிய ஏஎம்ஜி பெர்ஃபாமன்ஸ் கார்களின் பவர். இதன் டார்க் 76.5kgm. எம்மாடியோவ். V8 ட்வின் டர்போ டீசல்தான் ஞாபகம் வந்தது. இதில் 85kWh லித்தியம் ஐயன் பேட்டரி கொடுத்திருக்கிறார்கள். இந்த பேட்டரியின் எடையே ஒரு மாருதி 800 காரின் கெர்ப் எடைக்குச் சமம். அதாவது, 652 கிலோ.

ஒரு கோடி ரூபாய் கார்... ஒரு ரூபாய்க்கு ஒரு கிமீ!

சத்தமே இல்லாத டிரைவிங்!

NVH லெவலில்தான் பென்ஸ் பின்னி எடுக்கும். பெட்ரோல்/டீசல் இன்ஜினே அவ்வளவாகச் சத்தம் போடாது. இது எலெக்ட்ரிக் வேறு. சுத்தமாக சத்தமே இல்லை. மோட்டார்களின் இன்சுலேஷன் வேலை அப்படி. கேபினுக்குள் வெளிச்சத்தம் கேட்கவே இல்லை.

பின்னால் 4Matic என்ற லோகோ பார்த்ததும், 4வீல் டிரைவோ என்று நினைத்தேன். இது ரியல்டைம் 2வீல் டிரைவ். 4 வீல் டிரைவ் ஆப்ஷனும் உண்டு. ஆனால், நாம் இதை மேனுவலாக கன்ட்ரோல் செய்ய முடியாது. நமது ட்ராக்ஷனுக்கு ஏற்ப இது 4வீல் டிரைவுக்கு என்கேஜ் ஆகி, டிஸ்என்கேஜ் ஆகிக்கொள்கிறது. அவுட்டர் ரிங் ரோட்டில் சுமார் 160 கிமீ ஸ்பீடில் பறந்தேன் EQC-ல். 4வீல் டிரைவ் மாறுவது தெரிந்தது. வழக்கம்போல் டிரைவிங் மோடுகள் இருந்தன. ஸ்போர்ட் மோடில் வெறித்தனம் போங்கள்! ஆக்ஸிலரேஷன் கொடுத்தால்… நாம் சீட்டுக்குப் பின்னால் போகிறோம். விர்ரென இழுத்தது. 5.1 விநாடிகளில் 100 கிமீ வேகத்தைத் தொட்டது EQC. சுமார் 2,400 கிலோ எடை கொண்ட பென்ஸுக்கு இது செம ரெஸ்பான்ஸ்! 0 rpm-ல் இருந்தே பவர் கிடைப்பதால், IC இன்ஜின்கள் போல் டர்போ லேக்கும் சுத்தமாக இல்லை. ஆரம்ப டெலிவரி செம ஸ்மூத் அண்ட் லீனியர்.

இதில் ரீ-ஜெனரேட்டிவ் பிரேக்கிங்குக்கும் மோடுகள் இருந்ததுதான் செம! இதில் D, D-, D- - என்று மோடுகள் இருந்தன. இதில் கடைசி `D- -‘ மோடுதான் பேட்டரி ரீ-க்யூப்ரேஷனுக்கான அதிகபட்ச மோடு. பேடில் ஷிஃப்ட்டர் மூலம் இதை செலெக்ட் செய்யலாம். இதில் இன்ஜின் பிரேக்கிங் அதிகமாக இருந்ததால், பேட்டரிக்கு எனெர்ஜி கூடுதலாகக் கிடைக்கும். கூடவே, இதில் எக்ஸ்ட்ரா ரேஞ்ச் நிச்சயம் கிடைக்கும்.

சார்ஜிங்

இதில் இருப்பது 80kWh கொண்ட ஹை வோல்டேஜ் பேட்டரி. இதன் ரேஞ்ச் தூரமாக 450-470 கிமீ என்று க்ளெய்ம் செய்கிறது பென்ஸ். ஆனால், நிச்சயம் இதில் ரியல்டைம் ரேஞ்ச் 375-400 கிமீ ஆவது இருக்கலாம். ஒரு தடவை ஃபுல் சார்ஜ் செய்ய சுமார் 10 மணி நேரம் ஆகும் என்கிறது பென்ஸ். இதற்கென வால்பாக்ஸ் சார்ஜரும் ஃபிட் செய்து கொடுத்து விடுகிறார்கள். ஒரு ஃபுல் சார்ஜிங்குக்கு 80 யூனிட் ஆகுமாம். ஒரு யூனிட்டுக்கு 5 ரூபாய் என்று வைத்துக்கொண்டாலே 400 ரூபாய்க்கு 400 கிமீ மைலேஜ் தருகிறது பென்ஸ் EQC. கோடி ரூபாய் கொடுத்து பென்ஸ் வாங்குபவர்களுக்கு, இது ஒரு மேட்டரே இல்லை. ஆனால், அதையும் தாண்டி 5 ஆண்டுகள் (டயர்கள் தவிர) Nil Maintenance வாரன்ட்டியும், பேட்டரிக்கு 8 ஆண்டுகளும் வாரன்ட்டியும் தருகிறது பென்ஸ்.

EQC வாங்கலாமா?

பென்ஸ் எது செய்தாலும் செமையாக இருக்கிறது. இதன் டிசைனில் இருந்து இன்டீரியர், சொகுசு, ஓட்டுதல் வரை எந்தக் குறையும் கண்டுபிடிக்க முடியவில்லை. பெரிய ஏஎம்ஜி கார் ஓட்டுவதுபோல் இருக்கிறது EQC. சார்ஜிங்கும் ரேஞ்சும் அருமை. 3.4Kw-ல் 15A Plug மூலமும் சார்ஜ் செய்து கொள்ளக் கூடிய வசதியும் உண்டு. இதற்கு 21 மணி நேரம் ஆகும். பென்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி செய்து தந்தால் நலமாக இருக்கும். கூடவே வென்டிலேட்டட் சீட்ஸ் கொடுத்திருக்கலாம்.

பெரிய குறை என்று பார்த்தால், இதன் குறைவான கிரவுண்ட் கிளியரன்ஸ். சின்ன ஸ்பீடு பிரேக்கர்களிலேயே பார்த்துப் பார்த்துப் பயணிக்க வேண்டியிருக்கிறது. இதன் பேட்டரி கீழேதான் மவுன்ட் செய்யப்பட்டிருப்பதால், இன்னும் கவனம் தேவை. இதனால் இதை ஒரு கம்ப்ளீட் எஸ்யூவியாக ஒப்புக் கொள்ள முடியவில்லை. `என்கிட்டயும் பென்ஸ் இருக்கு; அதுவும் எலெக்ட்ரிக்’ என்று சமூகத்தில் கெத்துக் காட்ட, பகுசாய் வலம் வர இந்த பென்ஸ் EQC செம சாய்ஸ்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism