ஆசிரியர் பக்கம்
கார்ஸ்
Published:Updated:

X1 - ல் இனி ஆஃப்ரோடு பண்ண முடியாதா?

பிஎம்டபிள்யூ X1
பிரீமியம் ஸ்டோரி
News
பிஎம்டபிள்யூ X1

ஃபர்ஸ்ட் டிரைவ்: பிஎம்டபிள்யூ X1

X1–யைத் தாண்டித்தான் பிஎம்டபிள்யூவுக்குள் நுழைய வேண்டும். ஆம், X1தான் பிஎம்டபிள்யூவின் என்ட்ரி லெவல் எஸ்யூவி. X1 இப்போது BS-6 இன்ஜினோடு சில மாற்றங்களுடன் ஃபேஸ்லிஃப்ட் ஆகி வந்துவிட்டது.

வழக்கம்போல் கிட்னி கிரில்தான்; இப்போது சிங்கிள் பீஸ் யூனிட்டில் X5, X6, X7 போன்ற பெரிய எஸ்யூவிகளில் இருப்பதுபோல் கொஞ்சம் பெரிதாகி இருக்கிறது. பனிவிளக்குகளை இடம் மாற்றியிருக்கிறார்கள். LED DRL–ல்கூட வித்தியாசம். ஸ்லிம் அண்ட் ஸ்லீக்காக படுக்கைவசத்தில் வைத்திருக்கிறார்கள், அழகு. எல்இடி ஹெட்லைட்ஸும் ரீ–டிசைன் செய்யப்பட்டிருக்கின்றன. பின் பக்கத்தில் LED டெயில் லைட்ஸ், பம்பர், எக்ஸாஸ்ட் போன்றவற்றில் சின்ன மாற்றம். மற்றபடி அதே 17 இன்ச் அலாய் வீல்ஸ்தான்.

புரொஃபைலில் வேறெந்த மாற்றமும் இல்லை. இன்டீரியரிலும் லேசான மாற்றங்கள்தான். 8.8 இன்ச் டச் ஸ்க்ரீன் நடுநாயகமாக வீற்றிருக்கிறது. பெரிய விசாலமான கேபினுக்கு இந்த அளவு சிறுசுதான். இதில் i-Drive இன்டர்ஃபேஸின் புது வெர்ஷன் சேர்த்திருக்கிறார்கள். வயர்லெஸ் ஆப்பிள் கார் ப்ளே இதில் உண்டு. எதிர்பார்த்தபடியே ஆண்ட்ராய்டு ஆட்டோ இல்லை. சரிதான்; பிஎம்டபிள்யூ வைத்திருப்பவர்கள் ஆண்ட்ராய்டு போன் வைத்திருக்க மாட்டார்களோ என்னவோ?

பிஎம்டபிள்யூ X1
பிஎம்டபிள்யூ X1

கியர் லீவரிலும் சின்ன டிசைன் மாற்றம். கொஞ்சம் ரிச் லுக்குக்காக ஆம்பியன்ட் லைட்டிங், கான்ட்ராஸ்ட் கலரில் இரட்டைத் தையல் வேலைப்பாடுகள் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், X1-ன் இன்டீரியருக்கு வயதாகிக் கொண்டே போகிறது என்பதை பிஎம்டபிள்யூ உணர வேண்டும். மற்றபடி இடவசதி, பனோரமிக் சன்ரூஃப் போன்றவற்றில் மாற்றம் இல்லை. 500 லிட்டர் பூட் வசதி, இந்த செக்மென்ட் பெஸ்ட். பின் பக்கம் இரண்டு ‘C’ டைப் சார்ஜர்கள் இருந்தன.

பெட்ரோல்/டீசல் இரண்டுமே BS-6. 2.0 லிட்டர் டீசல், 190bhp பவரையும், 40kgm டார்க்கையும் கொடுக்கிறது. இது BS-4–ல் இருக்கும் அதே அம்சங்கள்தான். அப்போ எப்படி BS-6? ஆம், வழக்கம்போல் டீசல் பர்ட்டிகுலேட் ஃபில்ட்டரிலும், செலெக்ட்டிவ் கேட்டலிக் ரிடக்ஷனிலும் தான் விஷயமே இருக்கிறது. இதன் Adblue போர்ட், ஃப்யூல் டேங்க் ஃபில்லருக்குப் பக்கத்தில் கொடுத்திருக்கிறார்கள். இது பிஎம்டபிள்யூவின் ஃபேவரைட்.

BS–4–யை ஒப்பிடும்போது, ஐடிலிங்கில், ரெவ்வில் – இது அவ்வளவாகச் சத்தம் போடவில்லை. ரிஃபைன்மென்ட் லெவல் அருமை. இதன் இன்ஜின் மேப்பிங், இப்போது பவர் டெலிவரியை இன்னும் லீனியர் ஆக்கியிருக்கிறது. இதனால், சிட்டிக்குள் ஓட்ட டிரைவ் எளிதாகி இருக்கிறது. பர்ஃபாமென்ஸும்தான். பழைய மாடல் 0–100 கி.மீ–க்கு 8.07 விநாடிகள் எடுத்துக் கொள்ளும். இந்த X1–க்கு 7.72 விநாடிகள்தான் ஆயின. வழக்கம்போல் ஃபன் கிடைக்க வேண்டும் என்றால், ‘ஸ்போர்ட்’ மோடுக்குத்தான் டாகிள் செய்ய வேண்டும். இந்த 8 ஸ்பீடு கியர்பாக்ஸில் பேடில் ஷிஃப்டர்களும் இருந்தன. இதன் 17 இன்ச் வீல்கள் மோசமான சாலைகளை எளிதாகச் சமாளிக்கிறது. இதன் சஸ்பென்ஷன் செட்–அப்பிலும் கொஞ்சம் வேலை பார்த்திருக்கிறது பிஎம்டபிள்யூ.

X1 - ல் இனி ஆஃப்ரோடு பண்ண முடியாதா?

நாம் டெஸ்ட் செய்த X1 Sdrive 20d X-Line வேரியன்ட்டின் எக்ஸ் ஷோரூம் விலை 39.90 லட்சம் வருகிறது. பழசைவிட 60,000 வரை அதிகம். பேஸ் வேரியன்ட்டான SportX மாடலின் விலை 35.90 லட்சம். இது பழசைவிட சுமார் 2.75 லட்சம் குறைவு. BS-6 இன்ஜின், அழகான மாற்றங்கள் என எல்லாம் ஓகே! ஆனால், முக்கியமான ஆல்வீல் டிரைவ் அம்சத்தைக் காலி செய்துவிட்டது பிஎம்டபிள்யூ. டாப் வேரியன்ட்டான M- sport–ல்கூட இனி ஃப்ரன்ட் வீல் டிரைவ்தான் என்று கறாராகச் சொல்லிவிட்டது பிஎம்டபிள்யூ. ஆஃப்ரோடு விரும்பிகளும் கறாராக இருந்துவிடப் போகிறார்கள்.