Published:Updated:

உயரமான டால்பாய்... மேடு பள்ளங்களில் சூப்பர்... ஆனால் வேகங்களில்?

 ஃபர்ஸ்ட் டிரைவ்
பிரீமியம் ஸ்டோரி
ஃபர்ஸ்ட் டிரைவ்

ஃபர்ஸ்ட் டிரைவ்: டட்ஸன் ரெடி கோ 1.0L Manual BS-6

உயரமான டால்பாய்... மேடு பள்ளங்களில் சூப்பர்... ஆனால் வேகங்களில்?

ஃபர்ஸ்ட் டிரைவ்: டட்ஸன் ரெடி கோ 1.0L Manual BS-6

Published:Updated:
 ஃபர்ஸ்ட் டிரைவ்
பிரீமியம் ஸ்டோரி
ஃபர்ஸ்ட் டிரைவ்

படங்கள்: ஜெ.தி.துளசிதரன்

என்ட்ரி லெவல் ஹேட்ச்பேக்கில் டட்ஸனுக்குக் கைகொடுப்பது ரெடி கோ. இதில் BS-6 ஃபர்ஸ்ட் லுக்கை, கடந்த இதழிலேயே பார்த்தோம். `சென்னையில் ஓட்டிப் பாருங்களேன்’ என்று ரெடி கோவின் சாவியைக் கொடுத்தது டட்ஸன். 800 சிசி-யும் BS-6-க்கு அப்டேட் ஆகிவிட்டது. நான் ஓட்டியது 1.0லிட்டர் இன்ஜின். உண்மையிலேயே இந்த விலைக்கு மதிப்பானதா டட்ஸன் ரெடி கோ?

வெளியே…

டிசைனில் நல்ல முன்னேற்றம் ரெடி கோவில். `ஆங்ரி பேர்ட்’ முறைப்பது போல் க்யூட்டாக இருக்கிறது முன் பக்கம். கிரில், ஏதோ பெரிய எஸ்யூவியில் இருப்பதுபோல் பெரிதாகி இருக்கிறது. ஸ்லிம் அண்ட் ஸ்லீக் டிசைனில் ஹெட்லைட்டுகள், கீழே பூமராங் வடிவ LED DRL நல்ல ரசனை. டெயில் லைட்ஸ்களும் LED. 14 இன்ச் வீல்கள் அதே. பழசில் இருந்து (155/80R13)செக்ஷன் மட்டும் மாறியிருக்கிறது. இப்போது இன்னும் கொஞ்சம் தடிமன் ஆக, 165/70 செக்ஷனுக்கு மாறியுள்ளது ரெடி கோ.

சில மெக்கானிக்கல் அம்சங்கள் அப்படியே க்விட்தான் என்றாலும், க்விட்டுக்கும் ரெடி கோவுக்கும் பயங்கர வித்தியாசங்கள். க்விட் ஒரு காம்பேக்ட்டான ஹேட்ச்பேக் என்றால், டால்பாய் ஹேட்ச்பேக்கில் நீடிக்கிறது டட்ஸன் ரெடி கோ. ஆனால் க்விட் தயாராகும் அதே CMF-A ப்ளாட்ஃபார்மில்தான் ரெடியாகிறது ரெடி கோ. பாதசாரிகள் பாதுகாப்பு மற்றும் க்ராஷ் டெஸ்ட்டுகளைச் சமாளிப்பதற்காக இந்தக் கட்டுமானம்.

உயரமான டால்பாய்... மேடு பள்ளங்களில் சூப்பர்... ஆனால் வேகங்களில்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உள்ளே

பியானோ பிளாக் சென்டர் கன்ஸோல் பார்ப்பதற்கு ஸ்டைலாகத்தான் இருக்கிறது. டேஷ்போர்டு, ஏசி வென்ட்கள் என அங்கங்கே இழையோடும் சில்வர் டெக்ஷர்டு வேலைப்பாடுகள் அருமை. புது 8.0 இன்ச் டச் ஸ்க்ரீன்தான் ரெடி கோவின் மெயின் அட்ராக்ஷன். இதில் ஆப்பிள் கார் ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகள் சேர்த்திருக்கிறார்கள். பயன்படுத்திப் பார்த்தேன்; ஓகேவாகத்தான் இருக்கிறது.

பழசில் கதவு பேனல்களுக்கு ஷீட் மெட்டல் கொடுத்ததைச் சொல்லியிருந் தோம். இந்த ஃபேஸ்லிஃப்ட்டில் அதைச் சரி செய்திருந்தது டட்ஸன். வெளியே உள்ள விங் மிரர்களை இப்போது உள்ளே இருந்தே அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம்; மேனுவலாகத்தான். பவர் விண்டோ பட்டன்களை சென்டர் கன்ஸோலுக்குக் கீழே வைத்திருக்கிறார்கள். மற்றபடி சில எர்கானமிக் குறைகள் சரி செய்யப்பட்டது போல் தெரிகிறது. அந்த சிங்கிள் வைப்பரை மாற்றவே மாற்றாதா டட்ஸன்?

இந்த செக்மென்ட்டில் சின்ன காரான இதன் வீல்பேஸ் மிகவும் குறைவாக இருந்தாலும், (2,348 mm) கேபின் தாராளமாகத்தான் இருக்கிறது. பின் பக்க இடவசதியும் ஓகே ரகம். லெக் ரூமும்தான். டால்பாஸ் டிசைன் என்பதால், ஹெட்ரூமைப் பற்றிக் கவலைப்படவே தேவையில்லை. குறுகலான கேபின் என்பதால், மூன்று பேர் என்றால் கொஞ்சம் கஷ்டம்தான்.

1. பியானோ பிளாக் இன்ட்டீரியர் ஸ்டைல்தான். அந்த 8.0 இன்ச் டச் ஸ்க்ரீன்தான் மெயின் அட்ராக்‌ஷன்.  2.பவர் விண்டோ பட்டன்களை கியர் லீவருக்குப் பக்கத்தில் கொடுத்திருக்கிறார்கள். DogLeg கொண்ட ரிவர்ஸ் கியர், நிறைய பேருக்குப் பிடிக்குமா தெரியவில்லை.  3. போன் வைக்க இடம். சார்ஜிங் ஸாக்கெட்டுகள் இருக்கின்றன.
1. பியானோ பிளாக் இன்ட்டீரியர் ஸ்டைல்தான். அந்த 8.0 இன்ச் டச் ஸ்க்ரீன்தான் மெயின் அட்ராக்‌ஷன். 2.பவர் விண்டோ பட்டன்களை கியர் லீவருக்குப் பக்கத்தில் கொடுத்திருக்கிறார்கள். DogLeg கொண்ட ரிவர்ஸ் கியர், நிறைய பேருக்குப் பிடிக்குமா தெரியவில்லை. 3. போன் வைக்க இடம். சார்ஜிங் ஸாக்கெட்டுகள் இருக்கின்றன.

டிரைவ்

இன்ஜினை ஸ்டார்ட் செய்தால், `ஆமால்ல, 3 சிலிண்டர் இன்ஜின்’ என்று கண்டுபிடித்து விடலாம். ஆனால் பழசைப்போல் ஸ்டீயரிங், பெடல் என்று அதிர்ந்து எடுக்கவில்லை. ஆக்ஸிலரேட்டர் மிதித்தால் கொஞ்சம் யோசித்துத்தான் கிளம்புகிறது ரெடி கோ. கிண்டி சிக்னலில் ஆக்ஸிலரேட்டர் மிதித்துக் கிளம்பிய பிறகும், பின்னால் வருபவர் வேகமாக மூவ் ஆகச் சொல்லி, ஹார்ன் அடித்துக் கொண்டே இருந்தார். ஆனால் 2,000 ஆர்பிஎம் வரைதான் இந்தப் பிரச்னை. அதேநேரம், கடுமையான சிட்டி டிராஃபிக்கைச் சமாளிக்க முடியாத அளவு ரெடி கோ மோசமான ரெஸ்பான்ஸ் என்று சொல்லிவிட முடியாது. இதன் 9.1 kgm டார்க்தான்.

AMT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும் ரெடி கோவில் உண்டு. நான் ஓட்டியது 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ். க்ளட்ச், லைட் வெயிட்டாக ஈஸியாகத்தான் இருந்தது. ஆனால், கியர்பாக்ஸில் இன்னும் நல்ல இ்ம்ப்ரூவ்மென்ட் வேண்டும். இதில் Dog-Leg ரிவர்ஸ் கியர் கொடுத்திருந்தார்கள். இது நிறைய பேருக்குச் சிரமமாகவே இருக்கும்.

2,000 ஆர்பிஎம்-மைத் தாண்டினால், இதன் மொத்த 68bhp பவரும் கிடைக்கிறது. அதன் பிறகு 4,000 ஆர்பிஎம் வரை தம் கொடுத்து இழுக்கிறது 1.0 லிட்டர் இன்ஜின். ஆனால், ஆக்ஸிலரேட்டர் மிதித்தால் கொஞ்சம் கதறுகிறது. கேபினிலும் அதிர்வு தெரிகிறது. ரெடி கோவை அவுட்டர் ரிங் ரோடில் விரட்டிப் பார்த்தேன். வாவ் இல்லை; ஓகேதான். ஆளில்லாத ஹைவேஸில் ரெடி கோவை விரட்டும்போது ஏதோ ஒரு ஃபன் மிஸ் ஆகிறது என்றுதான் சொல்ல வேண்டும். இன்ஜின் ரிஃபைன்மென்ட்டிலும் இன்னும் வேலை பார்க்க வேண்டும் டட்ஸன்.

எர்கானமிக் குறைகள் சரி செய்யப்பட்டுள்ளது இன்டீரியரில்தான் போல. டிரைவிங்கைப் பொறுத்து இன்னும் கொஞ்சம் முன்னேற்றம் வேண்டும். இதன் Footwell கொஞ்சம் குறுகலாக இருப்பதால், கால்களை வசதியாக வைத்து ஓட்ட முடியவில்லை. 40 கிமீ லாங் ரைடுக்கே கால்கள் அசதியாகி விடுகின்றன.

உயரமான டால்பாய்... மேடு பள்ளங்களில் சூப்பர்... ஆனால் வேகங்களில்?

கையாளுமை

ஹைவேஸில் டிரைவிங்கில் வேண்டுமானால், ஃபன் மிஸ் ஆகலாம். ஆனால் டட்ஸனை சிட்டி டிராஃபிக்கில் ஓட்டிப் பாருங்கள். டிவிஎஸ் xl போல வளைத்து நெளித்து ஓட்ட முடியும் என்பது ஜாலியாக இருக்கிறது. ஸ்டீயரிங்கும் செம லைட் வெயிட். ரெடி கோவில் அடுத்து என்னைக் கவர்ந்த அம்சம் இதன்

கி.கிளியரன்ஸ். ஏற்கெனவே 185 மிமீ என்பதே இந்தியாவின் அதிக கி.கிளியரன்ஸ் கொண்ட ஹேட்ச்பேக் என்ற பெருமை இருந்தது. இப்போது இன்னும் 2 மிமீ கூட்டி விட்டார்கள். இது காம்பேக்ட் எஸ்யூவிகளை நெருங்கும் கி.கிளியரன்ஸ். எப்படிப்பட்ட மேடு பள்ளங்களையும் பற்றிக் கவலைப்படவே தேவையில்லை.

இதன் சஸ்பென்ஷன் செட்-அப் கொஞ்சம் டைட்தான். அதனால், வேகமாக வந்து அப்படியே பள்ளங்களில் இறக்கினால், அந்தத் தாக்கம் கேபினுக்குள் தெரிகிறது.

டயர்கள் இன்னும் கொஞ்சம் பெரிதாக இருந்தால், இன்னும் கொஞ்சம் நம்பிக்கை வரும். இந்த இரண்டும்தான் ஹைவேஸில் கொஞ்சம் பயமுறுத்துகிறது. அதாவது, வேகங்களில் பாடி ரோல் எக்கச்சக்கம். எனவே, கவனம்! உயரமான சீட், பெரிய விண்ட்ஷீல்டு என்று இதன் ரோடு விஸிபிலிட்டி நன்றாக இருந்தாலும், இதன் தடிமனான C பில்லர்கள், கொஞ்சம் பார்வையை மறைக்கலாம். அதனால் என்ன, டாப் வேரியன்ட்டில் இருக்கும் ரிவர்ஸ் கேமராவுக்கு நன்றி!

ரெடி கோ வாங்கலாமா?

டாப் வேரியன்ட்டில் மட்டும்தான் இந்த 1.0 லிட்டர் ரெடி கோ கிடைக்கிறது என்பதால், வசதிகளில் காம்ப்ரமைஸ் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. 8.0 இன்ச் டச் ஸ்க்ரீன், ரிமோட் லாக்கிங், முன் பக்க பவர் விண்டோஸ், ஏபிஎஸ், ரியர் பார்க்கிங் சென்ஸார், ரியர்வியூ கேமரா என்று வசதிகளில் முன்னேறுகிறது ரெடி கோ. மேலும், பழசில் இருந்த டிரைவர் சைடு காற்றுப்பையோடு, இப்போது 1 காற்றுப்பையை எக்ஸ்ட்ராவாகக் கொடுத்துள்ளது டட்ஸன். ஆனால், எஸ்-ப்ரெஸ்ஸோ போல ஸ்டீயரிங் மவுன்டட் ஆடியோ கன்ட்ரோல், க்விட்டில் இருப்பதுபோல் பின் பக்க பவர் விண்டோ மற்றும் ஆர்ம் ரெஸ்ட்டெல்லாம் ரெடி கோவில் எதிர்பார்க்க முடியாது.

1.0 லி மேனுவல் 5.45 லட்சத்துக்கும், ஏஎம்டி 5.84 லட்சத்துக்கும் வருகிறது ரெடி கோ. இது க்விட் மற்றும் எஸ்-ப்ரெஸ்ஸோவைவிட குறைவுதான். ஆனால், நாம் ரிவ்யூ செய்தவரை இந்த ரெடி கோவுக்கு இவ்வளவு பணம் கொடுக்க வேண்டுமா என்று பலர் யோசித்ததையும் பார்க்க முடிந்தது. இதன் அராய் மைலேஜ் 22.5 என்கிறது டட்ஸன். இது க்விட், ஆல்ட்டோவைவிடக் குறைவுதான். நமது முழு டெஸ்ட் ரிப்போர்ட்டில் ரியல் மைலேஜ் தெரிய வரலாம்.

ஆனால், சிட்டிக்குள் ஜாலியான கையாளுமை வேண்டும், லைட் வெயிட்டான ஸ்டீயரிங்குடன் - எஸ்யூவி போல் அதிக கி.கிளியரன்ஸுடன் ஒரு மினி ஆஃப்ரோடு செய்யணும் என்பவர்கள், ரெடி கோவுக்கு ரெடி… கோ!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism