காம்பேக்ட் ஹேட்ச்பேக்கில் ராஜா ஆல்ட்டோ என்றால், க்விட் தளபதி. டட்ஸனின் ரெடி கோ, இந்தப் போட்டியில் சாமுராயாக ஆவதற்கே முட்டி மோதிக் கொண்டிருக்கிறது. நிஸானும் ரெனோவும் பார்ட்னர்கள் என்பதால், க்விட்டின் CMF-A ப்ளாட்ஃபார்மில் ரெடி செய்து 2020 ரெடி கோ-வைக் களம் இறங்கியுள்ளது டட்ஸன்.

டிசைன்

புதிய ரெடி கோ, முன் பக்கம் Angry Bird முறைப்பதுபோல உள்ளது. கிரில், இப்போது இன்னும் பெரிதாகி இருக்கிறது. மெலிதான ஹெட்லைட்கள் மற்றும் ‘L’ வடிவ LED DRL, ஷார்ப். இந்த செக்மென்ட்டில் LED பனி விளக்குகள் உள்ள கார் இதுதான். டிசைனில் தனது டால் பாய் டிசைனைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது டட்சன். தடிமனான 165/70 டயருடன் 14 இன்ச் வீல்கள் (பழசு 155/80 R13) சூப்பர். கிரவுண்ட் கிளியரன்ஸ் 2 மிமீ ஏற்றி, 187 மிமீ உயரத்தில் நிற்கிறது ரெடி கோ. டட்ஸன் பேட்ஜ், டூயல்-டோன் வீல் கவர்கள் மற்றும் பாடி கலர் மிரர்கள் புதுசு. பின் பக்கம், LED டெயில் லைட்ஸ் தவிர்த்து, மாற்றங்கள் இல்லை.

கேபின் வசதிகள்

8.0 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில், ஆப்பிள்/ஆண்ட்ராய்டு சப்போர்ட் உண்டு.

பழசில் இருந்த சில காஸ்ட் கட்டிங் சமாச்சாரங்கள், எர்கானமிக்ஸ் சிக்கல்கள் இதில் இல்லை. க்ளோவ்பாக்ஸ் பெரிதாகியுள்ளது; வெளிப்புறக் கண்ணாடிகளை உள்ளிருந்து அட்ஜஸ்ட் செய்யலாம்; பின் பக்கப் பயணிகளுக்கான சீட் பெல்ட்கள் தானாக ரிட்டர்ன் ஆகும்.அந்த ஒற்றை வைப்பரை டபுள் ஆக்க முடியாதா நிஸான்?

இந்த செக்மென்ட்டிலயே சிறிய வீல் பேஸ் கொண்ட காராக இருந்தாலும், ‘டால் பாய்’ டிசைன் காரணமாக போதுமான ஹெட்ரூம் உள்ளது. என்ன, மூன்று பேர் அமர்வது சிரமமாக இருக்கும். டாப்- வேரியன்ட்டில் முன்பக்க பாசஞ்ஜர் ஏர்பேக் சேர்க்கப்பட்டுள்ளது.

ஓட்டுதல் அனுபவம்

பவர், டார்க்கில் மாற்றம் இல்லை. 0.8லி மற்றும் 1.0லி என இரு பெட்ரோல் இன்ஜின்களும் 54bhp & 68bhp பவரை அளிக்கின்றன. ஸ்டீயரிங், கியர் லீவர், பெடல்கள் என அதிர்வுகள் நன்கு கட்டுப்படுத்தபட்டிருந்தன. 3 சிலிண்டர் என்பதால், சிக்னலில் இருந்து சீறிப் பாயும் அளவிற்கு பெர்ஃபாமென்ஸ் இல்லையென்றாலும், சிட்டி ட்ராஃபிக்கைச் சமாளிக்க, 2000rpm தாண்டி நல்ல தம் இருக்கிறது. லைட்டான ஸ்டீயரிங், நகர நெருக்கடிக்குள் புகுந்து வர உதவுகிறது.

நெடுஞ்சாலையில் விரட்டினால் 3,500 - 4,000 என rpm உயர உயர, 3 சிலிண்டர் இன்ஜின் சத்தம் கேபினுக்குள் அதிகமாகிறது. நெடுஞ்சாலையில் விரட்ட போதுமான பவர் இல்லை. 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனின் ‘dog - leg ‘ ரிவர்ஸ் கியர் புதிய டிரைவர்களை நிச்சயம் குழப்பும். ஸ்லாட் செய்வதற்குப் பயிற்சி தேவை. ஆனால், க்ளட்ச் லைட் வெயிட். U-டர்ன் அடித்தால் ஸ்டீயரிங் தானாக சென்டர் வராதது மைனஸ்.

சஸ்பென்ஷன் ஸ்டிஃப் செட்-அப். சாலையின் மேற்பரப்பை உணர முடிகிறது. உயரமாக அமரக் கூடிய இருக்கைகள் சாலையைத் தெளிவாகக் காட்டினாலும், தடிமனான `C’ பில்லர், பார்க்கிங் செய்யும் போது கண்ணாடியை ஆக்கிரமிக்கிறது. இதற்காகவே ரியர்வியூ கேமரா உள்ள டாப் எண்ட்தான் வாங்க வேண்டும்போல!

சிற்சில ஓட்டுதல் குறைகள், பெப்பியான பெர்ஃபாமென்ஸை விட்டுத் தள்ளுங்கள்; ஆனால், பழசில் இருந்த பல குறைகள் இப்போது ரெடி கோவில் மிஸ் ஆனதற்காகவே லைக்ஸ். அதைத் தாண்டி, விலையில் கவர்கிறது ரெடி கோ. எஸ்-ப்ரெஸ்ஸோ, க்விட்டை விட விலை குறைவான ஹேட்ச்பேக் விரும்புபவர்கள், ரெடி... கோ!

ரெடி கோ 800 சிசி - D, A, T, T(O) ஆகிய நான்கு வேரியன்ட்களில் வருகிறது. இதன் ஆன் - ரோடு விலைகள் ரூ.3.62 முதல் 5.14 லட்சம் வரை. 1.0 லி இன்ஜின் T(O) டாப் வேரியன்ட்டில் மட்டும்தான். இதன் மேனுவல் மாடல் 5.46 லட்சம், AMT மாடல் 5.84 லட்சம் ஆன் ரோடு.