Published:Updated:

எண்டேவர்... எஸ்யூவிகளின் ஆண்டவர்!

ஃபோர்டு எண்டேவர் 2020
பிரீமியம் ஸ்டோரி
News
ஃபோர்டு எண்டேவர் 2020

ஃபர்ஸ்ட் டிரைவ்: ஃபோர்டு எண்டேவர் 2020

எல்லா கார்களும் BS-6 இன்ஜினுக்கு மாறிவரும் நிலையில், ஃபோர்டு தனது எண்டேவரில் புது 170bhp BS-6 இன்ஜினையும், புது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸையும் பொருத்தியுள்ளது. அதெல்லாம் இருக்கட்டும், பார்த்தவுடனேயே இது BS-6 மாடல்தான் என்று எப்படிக் கண்டுபிடிப்பது?

புது LED ஹெட்லைட் இதற்கு உதவுகிறது. பழைய ஹெட்லைட்டில் இருந்து கொஞ்சம் மாற்றி வடிவமைக்கப்பட்டுள்ளதால், இதன் வித்தியாசத்தைப் பார்த்தவுடனேயே கண்டுபிடித்துவிடலாம். வெளிச்சமும் முன்பைவிட இதில் அருமை. ஃபெண்டரில் இருக்கும் வென்ட் டிசைனில் முன்பு இன்ஜின் வகையைக் குறிப்பிட்டிருப்பார்கள். இப்போது எண்டேவர் என பொதுவாக வருகிறது. இவை இரண்டையும் தவிர வேறு எந்த வித்தியாசமும் இல்லை. வெளியேதான் இப்படி. பானெட்டைத் திறந்தால் இன்ஜின், கியர்பாக்ஸ் என எல்லாமே புதுசு. இந்த 2.0 லிட்டர் இன்ஜினுக்கு பேந்தர் (கறுஞ்சிறுத்தை) என்று அடைமொழி வைத்திருக்கிறார்கள் ஃபோர்டு இன்ஜினியர்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இந்த இன்ஜின் வெளிப்படுத்தும் 170bhp பவர், டொயோட்டாவின் 2.8 லிட்டர் இன்ஜினுக்குச் சமமானது. இன்ஜினை ஸ்டார்ட் செய்து பார்த்தால் பெரிய பல்க்கான, எஸ்யூவிகளின் இன்ஜின் போன்றே உணர்வே இதில் இருந்து கிடைக்கவில்லை. செடான் கார்களின் இன்ஜின்போல ரீஃபைண்டாக, அமைதியாக இருக்கிறது.

ஃபோர்டு எண்டேவர் 2020
ஃபோர்டு எண்டேவர் 2020

உற்றுக் கவனித்தால் பெடல்களில் கொஞ்சம் வைப்ரேஷன் தெரியும். ஆனால் டிரைவிங்குக்கு அது இடையூறாக இல்லை. ஆக்ஸிலரேட்டரை மிதித்ததும், தடதடக்கும் சத்தம் எதுவும் இல்லாமல் கார் நகர்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இன்ஜினுடன் 10 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உண்டு. ஆரம்பத்தில் இருந்தே சுறுசுறுப்பாக காரை நகர்த்தும் இந்த ஆட்டோமேட்டிக், சீரான பவர் டெலிவரியைக் கொடுக்கிறது. ஆரம்பத்தில் சில இடங்களில் கியர்பாக்ஸ் ஒரே கியரில் மாட்டிக்கொண்டதுபோல இருந்தாலும், 1,800 rpm தாண்டிவிட்டால் நம் உடலைப் பின்னோக்கித் தள்ளும் அளவுக்குப் பெரிய டார்க் கிடைக்கிறது. இது 2.0 லிட்டர் இன்ஜின் என்பதை நம்பமுடியவில்லை. த்ராட்டிலை அழுத்த அழுத்த 3,500rpm வரை பவர் கிடைத்துக்கொண்டே இருக்கிறது. அதற்குப் பிறகு பவர்-டார்க் கிராஃப் இறங்கிவிட்டது.

 1.  இன்டீரியர் தரம் அருமை. 10 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் புதுசு. 
 2.  2.0 லிட்டர் இன்ஜின், 170bhp பவரைத் தருகிறது. இந்த புது BS-6 இன்ஜினின் ரிஃபென்மென்ட் செம ஸ்மூத்!
 3. இந்த LED ஹெட்லைட்தான் BS-6 எண்டேவரில் பெரிய மாற்றம். ஹெட்லைட் பவரும் கூடியிருக்கிறது.
 4. மொபைல்போன் மூலம் காரை ஸ்டார்ட் செய்வது. ஏ.சி ஆன் செய்து கொள்வது என்று 55 வேலைகளைச் செய்யலாம்.
 5.  காரின் பக்கவாட்டில் எண்டேவர் எனும் லோகோ, செம ஸ்போர்ட்டி.
1. இன்டீரியர் தரம் அருமை. 10 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் புதுசு. 2. 2.0 லிட்டர் இன்ஜின், 170bhp பவரைத் தருகிறது. இந்த புது BS-6 இன்ஜினின் ரிஃபென்மென்ட் செம ஸ்மூத்! 3. இந்த LED ஹெட்லைட்தான் BS-6 எண்டேவரில் பெரிய மாற்றம். ஹெட்லைட் பவரும் கூடியிருக்கிறது. 4. மொபைல்போன் மூலம் காரை ஸ்டார்ட் செய்வது. ஏ.சி ஆன் செய்து கொள்வது என்று 55 வேலைகளைச் செய்யலாம். 5. காரின் பக்கவாட்டில் எண்டேவர் எனும் லோகோ, செம ஸ்போர்ட்டி.

வேகமாகச் செல்லும்போது, தேவைக்கேற்ப கியர்களை தானாக ஸ்கிப் செய்துவிடும் அம்சம் இந்த 10 ஸ்பீடு கியர்பாக்ஸில் உண்டு. இதை ரியல் டைம் அடாப்டிவ் அல்காரிதம் என்கிறார்கள். உதாரணத்துக்கு, 7-வது கியரில் ஆக்ஸிலரேட்டரை கடைசி வரை அழுத்தினால், டார்க் கிடைக்க ஏழாவது கியரில் இருந்து மூன்றாவது கியருக்கும், க்ரூஸிங் ஸ்பீடு வரும்போது ஐந்தாவது கியரில் இருந்து எட்டாவது கியருக்கும் என படிப்படியாக இல்லாமல் தேவையான படியில் உடனே குதிக்கிறது கியர்பாக்ஸ். இதனால், இன்ஜினின் டார்க்கைச் சரியாகப் பயன்படுத்த முடிகிறது. இதில் இருக்கும் இன்னொரு வசதி, Progressive range selection. இதனால், கியர்களை லாக் செய்ய முடியும். தேவையென்றால் மட்டும் கியர்களை மாற்றலாம். இது ஆஃப்ரோட்டில் பயன்படும் வசதி.

ஓட்டுதல் தன்மையில், புது எண்டேவர் சுறுசுறுப்பாக இருப்பதுபோல் தெரிந்தாலும், உண்மையில் இது சோம்பேறித்தனமான வாகனம்தான். 0-100 கி.மீ வேகம் தொட 12.75 நொடிகளை எடுத்துக்கொள்கிறது. ஆனால், 10 கியர் இருப்பதால் இதே ஆக்ஸிலரேஷன் மங்கிப் போகாமல் 100 கி.மீ வேகத்தைத் தாண்டிய பிறகும் தொடர்கிறது. பேடில் ஷிஃப்டர்கள் மிஸ்ஸிங். அதற்குப் பதிலாக கியர் லீவரிலேயே மேனுவலாக கியர் செலக்ட் செய்துகொள்ள ஸ்விட்ச் கொடுத்துள்ளார்கள். இது பயன்படுத்த அவ்வளவு சிறப்பாக இல்லை.

ஃபோர்டு எண்டேவர் 2020
ஃபோர்டு எண்டேவர் 2020

ரைடு குவாலிட்டி அதிகரித்திருப்பதால், மோசமான சாலைகளில் கவலையில்லாமல் வேகமாகச் செல்ல முடிகிறது. பெரிய டயர்களும், லாங் டிராவல் சஸ்பென்ஷனும் கேபினில் அசைவுகள் அதிகம் இல்லாமல் கப்பல்போல இயக்குகின்றன. சாஃப்ட்டான சஸ்பென்ஷன் செட்டப். ஆனாலும், அதிவேகத்தில் இதன் நிலைத்தன்மை நம்பிக்கை தருகிறது. ஸ்டீயரிங் கொஞ்சம் யோசித்துத்தான் வேலை செய்கிறது. கார்னரிங்கில் வேகமாகத் திரும்புவது உற்சாகமாக இல்லை.

காரின் இன்டீரியரில், புது கியர் லீவர் தவிர்த்துக் கூடுதலாகச் சேர்ந்திருக்கும் விஷயம் ஃபோர்டு பாஸ் (Ford Pass). ஹூண்டாயின் ப்ளூலிங்க், கியா UVO, எம்ஜி i-smartபோல ஃபோர்டு கார்களுக்கான கனெக்டட் செயலி இது. காரை ரிமோட் மூலம் ஸ்டார்ட் செய்யலாம், ஏசி ஆன் செய்து வைக்கலாம், எங்கே எனது எண்டேவர் எனத் தேடாமல், மொபைலைப் பார்த்தே கார் இருக்கும் இடத்தைச் சொல்லிவிடலாம். இப்படி மொத்தம் 55 வசதிகள் இதோடு வருகின்றன.

எண்டேவர்... எஸ்யூவிகளின் ஆண்டவர்!

இந்த மாற்றங்களைத் தாண்டி எண்டேவரின் இன்டீரியரில் புதிதாக எதுவும் இல்லை. இரண்டாம் வரிசையின் இடவசதி அருமை. BS-6 மாடலில் முன் இருந்ததைவிடச் சிறப்பான கியர்பாக்ஸ், சத்தமில்லாத ஸ்மூத்தான இன்ஜின், சிரமப்படாத டிரைவிங் கிடைத்தாலும், ஆரம்பத்தில் பிக்அப் இன்னும் சிறப்பாக இருக்கலாம்.

விலையிலும் அசத்தியிருக்கிறது ஃபோர்டு. பழைய மாடலை ஒப்பிடும்போது ஆரம்ப வேரியன்ட் 35,000 மட்டுமே விலை கூடியுள்ளது. 4 வீல் டிரைவ் கொண்ட டாப் வேரியன்ட் 1.5 லட்சம் ரூபாய் விலை குறைந்திருக்கிறது. நீங்கள் படிப்பது சரிதான், விலை குறைந்திருக்கிறது. ஆனால், இந்த விலை வெறும் அறிமுக விலையே! மே, 1-ம் தேதிக்கு மேல் ரூ.70,000 வரை எண்டேவர் விலை கூடும்.