ஒரே செக்மென்ட்டில் இரு கார்களை விற்பனை செய்வது ஹூண்டாய்க்குப் புதிதல்ல. கிராண்ட்i10 இருக்கும்போதே... கிராண்ட்i10 நியாஸூம் விற்பனையாகிறது. அதுபோல, எக்ஸென்ட் இருக்கும்போதே, காம்பேக்ட் செடான் செக்மென்ட்டில் ஹூண்டாய் ஆரா என்ற புதிய காரை அறிமுகம் செய்திருக்கிறது ஹூண்டாய்.

அதனால் இனி எக்ஸென்ட், டாக்ஸி மார்க்கெட்டில் மட்டுமே விற்பனையாகும். டிசையர், அமேஸ், டிகோர், ஏமியோ, ஆஸ்பயர் போன்ற கார்களுக்குப் போட்டியாகக் களம் கண்டிருக்கும் ஆரா எப்படி இருக்கிறது? மத்தியப் பிரதேசத்திலுள்ள இந்தூரில், ஆராவை டெஸ்ட் டிரைவ் செய்தோம்.

வெளித்தோற்றம்

ஸ்விஃப்ட்டுக்கு டிசையர் எப்படியோ, அப்படித்தான் கிராண்ட் i10 நியாஸுக்கு ஆரா! ஒரு ஹேட்ச்பேக், காம்பேக்ட் செடானாக மாறியிருக்கிறது. எனவே, நியாஸ் தயாரிக்கப்படும் அதே ப்ளாட்ஃபார்மில்தான் ஆராவும் தயாரிக்கப்படுகிறது. முன்பக்கத்திலிருந்து பார்த்தால், நியாஸும் ஆராவும் ஒரே மாதிரிதான் இருக்கின்றன.

கிரில்லின் இருபக்கமும் இப்பொழுது இரு DRL மற்றும் காஸ்காடிங் கிரில்லைச் சுற்றி சேட்டின் ஃபினிஷில் ஒரு பார்டர் புதிதாகச் சேர்ந்திருக்கிறது. B-பில்லர் வரை... ஏன் C-பில்லர் வரையிலுமே நியாஸும் ஆராவும், ஏறக்குறைய ஒன்றுபோலவே இருக்கின்றன. ஆராவின் கூரை பின்புறம் சரியும் ஸ்டைல், அதற்கு ஒரு கோணத்தில் கூபே போன்றதொரு தோற்றத்தை லேசாகக் கொடுக்கிறது. கறுப்பு நிறம் வியாபித்திருக்கும் B&C பில்லர்கள், Z-வடிவிலான டெயில் லைட்டின் டிசைனும் புதிது.

உள்ளங்காரம்

டேஷ்போர்டு, ஸ்டீயரிங் வீல், இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர் என இங்கேயும் நியாஸுக்கும் ஆராவுக்கும் அதிக வித்தியாசமில்லை. இதன் இரட்டை வண்ண டேஷ்போர்டின் ஊடே, செப்பு நிறத்தில் உள்ள ஃ பினிஷ் புதிது. உள்ளே போதுமான இடவசதி இருக்கிறது. டிரைவர் சீட்டில் ஹைட் அட்ஜஸ்ட் வசதி இருக்கிறது. 8 இன்ச் டச் ஸ்கிரீனில், வென்யூவில் இருப்பதைப் போன்ற புளூ லிங்க் வசதி இல்லை. ஆனால் புளூ லிங்க் ஆடியோ கன்ட்ரோல் வசதியை மட்டும் கொடுத்திருக்கிறார்கள். DRVM - அதாவது, டிரைவர் ரியர்வியூ மானிட்டர் இருப்பது ப்ளஸ். கார் என்ன வேகத்தில் சென்றாலும் சரி, காருக்குப் பின்னால் இருக்கும் கேமராவில் பதிவாகும் காட்சிகள், இந்தத் திரையில் தெரியும். கீலெஸ் என்ட்ரி, புஷ் பட்டன் ஸ்டார்ட், வயர்லெஸ் சார்ஜர், 8 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், USB சார்ஜர், க்ரூஸ் கன்ட்ரோல், ரியர் ஏசி வென்ட் ஆகியவையும் இதில் உண்டு.

ஹூண்டாய் நியாஸைவிட ஆரா 190 மிமீ அதிக நீளம். மற்றபடி அகலம், உயரம், வீல்பேஸ் ஆகியவற்றில் மாற்றம் இல்லை. அதனால் ஆராவின் பின்சீட்டில், ஒட்டி ஒட்டி உட்கார்ந்தால்தான் மூன்று பேர் உட்கார முடிகிறது.

இன்ஜின்

இங்குதான் போட்டியாளரான மாருதி டிசையரை ஓவர்டேக் செய்கிறது ஆரா. டிசையரில் இனி, டீசல் வேரியன்ட் இல்லை. ஆனால் ஆராவில் உண்டு. ஹூண்டாயின் 1.2 எக்கோ டார்க் டீசல் இன்ஜின், 75 bhp சக்தி - 19 kgm டார்க்கையும் கொடுப்பதால், கார் ஓட்டுவதற்கு உற்சாகமாக இருக்கிறது. ஹூண்டாயிலிருந்து வரும் சிறிய டீசல் கார்களுக்கு, இனி இந்த எக்கோ டார்க் இன்ஜின்தான்.

பெட்ரோலைப் பொறுத்தவரை..

நியாஸில் இருக்கும் அதே 1.2 Kappa இன்ஜின்தான் இதிலும். இது 83 bhp சக்தியையும், 11.4 kgm டார்க்கையும் கொடுக்கிறது. நகர்ப்புறங்களில் என்ன வேகத்தில் சென்றாலும், இந்த இன்ஜின் திக்கல் திணறல் இன்றி ஸ்மூத்தாகச் செயல்படுகிறது. நெடுஞ்சாலைகளிலும் இதை ஓட்ட முடியும்.

ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் இது மூச்சு வாங்குகிறது. 5 ஸ்பீடு மேனுவல், AMT என்று இரண்டுவிதமான கியர் ஆப்ஷன்ஸும் உண்டு. இதில் நம்முடைய தேர்வு மேனுவல். காரணம், இதன் ஸ்மூத்னெஸ். பெட்ரோலில் கூடுதலாக, ஒரு லிட்டர் டர்போ சார்ஜர் கொண்ட இன்ஜின் ஆப்ஷனும் உண்டு. 100bhp சக்தியையும் - 17.2kgm டார்க்கையும் கொடுப்பதால்... பர்ஃபாமென்ஸ் விரும்பிகளின் தேர்வாக இது இருக்கும். ஸ்டீயரிங் வீல், பிடித்து ஓட்டுவதற்கு வசதியாக இருக்கிறது. அதிலும் நகர்ப்புறங்களில் காரை ஓட்டும்போது, இது நாம் சொல்வதைப் புரிந்துகொண்டு நன்றாகவே கைகொடுக்கிறது. பாதுகாப்பிற்கு ABS, EBD, இரு காற்றுப்பைகள், ISOFIX ஆகியவை உண்டு. இதன் 402 லிட்டர் டிக்கி, பொருட்களை வைக்கப் போதுமானதாக இருக்கிறது.

முதல் தீர்ப்பு

நான்கு பேர் தாராளமாகச் செல்லக் கூடிய அளவுக்கு இடம், ப்ரீமியம் ஃபினிஷ், டிசைன், பலவிதமான இன்ஜின் மற்றும் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் என ஆரா அருமை. ஆனால், போட்டி கார்களோடு ஒப்பிடும்போது அளவில் சிறியதாகத் தெரிகிறது. இந்த செக்மென்ட்டில் டிசையர் மாதம் ஒன்றுக்கு, சுமார் 19 ஆயிரம் கார்கள் விற்பனையாகிறது. இப்பொழுது அது தன் டீசல் வேரியன்ட்டை நிறுத்திவிட்டது. அதனால் டீசல் விரும்பிகள், ஆரா பக்கம் போகக்கூடும். மேலும் ஆராவின் விலை போட்டியாளர்களுக்குச் சமமாக இருந்தாலும், இது அளிக்கும் ஒரு சில சிறப்பம்சங்கள், வாடிக்கையாளர்களின் கவனத்தை இதன் பக்கம் திருப்பக்கூடும். எல்லாவற்றுக்கும் மேலாக 5 ஆண்டுகளுக்கு (அல்லது 40 ஆயிரம் கி.மீ) கிடைக்கக்கூடிய வாரன்ட்டி... இதன் மிகப்பெரிய ப்ளஸ் பாயின்ட்!