Published:Updated:

க்ரெட்டாவில் எல்லாம் இருக்கு!

ஹூண்டாய் க்ரெட்டா 1.5 டீசல்
பிரீமியம் ஸ்டோரி
News
ஹூண்டாய் க்ரெட்டா 1.5 டீசல்

ஃபர்ஸ்ட் டிரைவ்: ஹூண்டாய் க்ரெட்டா 1.5 டீசல்

க்ரெட்டா.... இந்தப் புகழ்பெற்ற மிட்சைஸ் எஸ்யூவியின் இரண்டாவது தலைமுறை மாடலை, ஊரடங்கு உத்தரவுக்கு முன்பாகவே அறிமுகப்படுத்தி விட்டது ஹூண்டாய். அந்த நேரத்தில் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் - 7 ஸ்பீடு DCT கொண்ட காரை மட்டுமே ஓட்டிப் பார்க்க முடிந்தது.

ஆனால் 5 விதமான இன்ஜின் - கியர்பாக்ஸ் காம்பினேஷனில் க்ரெட்டா கிடைப்பது தெரிந்ததே. தற்போது 1.5 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் - 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட வெர்ஷனை ஓட்டுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது. இந்த இன்ஜின் - கியர்பாக்ஸ் காம்பினேஷன், ஆரம்ப E வேரியன்ட் தொடங்கி டாப் SX (O) வேரியன்ட் வரை இருப்பது செம! ஏனெனில் இதுவரை விற்பனையான க்ரெட்டாவில் 56% டீசல் மாடல்கள் என்பது கவனிக்கத்தக்கது. இதுவே வென்யூவைப் பொறுத்தவரை, 25%-க்கும் குறைவான அளவில்தான் டீசல் மாடல்கள் விற்பனை ஆகியிருக்கின்றன. இதர மாடல்கள் அனைத்துமே பெட்ரோல் வெர்ஷன்கள்தான்!

இன்ஜின் I 1,493சிசி பவர் I 115bhp டார்க் I 25kgm விலை I சுமார் 13-20 லட்சம்
இன்ஜின் I 1,493சிசி பவர் I 115bhp டார்க் I 25kgm விலை I சுமார் 13-20 லட்சம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இன்ஜின் பர்ஃபாமன்ஸ், ஓட்டுதல் அனுபவம்

முதல் தலைமுறை க்ரெட்டாவில் இருந்த 1.6 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின், 128bhp பவர் மற்றும் 26kgm டார்க்கைத் தந்தது தெரிந்ததே! இந்த காரில் இருந்ததிலேயே சிறப்பான இன்ஜின் இதுதான் என்பதுடன், கார் ஆர்வலர்களிடையே ஸ்மூத்னெஸ் & பவர் டெலிவரியில் நற்பெயரைச் சம்பாதித்திருக்கிறது. வேரியபிள் ஜியோமெட்ரி டர்போசார்ஜர் பொருத்தப்பட்டிருந்தாலும், முந்தைய க்ரெட்டாவைவிடக் குறைவான செயல்திறனையே புதிய மாடல் வெளிப்படுத்துகிறது. 1.5 லிட்டர் - 4 சிலிண்டர், BS-6 டர்போ டீசல் இன்ஜின், 115bhp பவர் & 25kgm டார்க்கைத் தருகிறது. ஆள் அரவமில்லாத சாலைகளில் காரை விரட்டியபோது, 0 - 100கிமீ வேகத்தை 11.75 விநாடிகளில் எட்டிப் பிடித்தது புதிய க்ரெட்டா. முதல் தலைமுறை மாடலைவிட இது 1 விநாடி அதிகம். ஆனால் கியர்களுக்கு இடையிலான வேகம் மனநிறைவைத் தருகிறது. இதர BS-6 டீசல் இன்ஜின்களைப் போலவே, இங்கும் பவர் டெலிவரி ஒரே சீராகத்தான் உள்ளது. எனவே குறைவான வேகங்களிலும் (1,200 ஆர்பிஎம்) போதுமான பவர் கிடைத்து விடுகிறது. 2,000 ஆர்பிஎம்மை எட்டும்போது பவர் டெலிவரியில் முன்னேற்றம் தெரிகிறது. அங்கு தொடங்கி 4,000 ஆர்பிஎம் வரை போதுமான பர்ஃபாமன்ஸ் வெளிப்படுகிறது. ஆனால் பழைய 1.6 லிட்டர் டீசல் இன்ஜினில் கிடைத்த பன்ச்சை இங்கே எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். அங்கே 2,000 ஆர்பிஎம்முக்குக் கீழே டர்போ லேக் இருந்தாலும், அதனைத் தாண்டியபிறகு பவர் அப்படியே கொப்புளிப்பது செம அனுபவம்.

க்ரெட்டாவில் எல்லாம் இருக்கு!

மொத்தமாகப் பார்த்தால், 1,493சிசி டர்போ டீசல் இன்ஜின் அதிரடியாக இல்லைதான். என்றாலும் அதன் இயங்குமுறை பிராக்டிக்கலாக மாறியிருக்கிறது. இதனால் அடிக்கடி கியர்பாக்ஸைப் பயன்படுத்துவது குறைந்திருக்கிறது என்பதால், நகரப் பயன்பாட்டில் மூன்றாவது அல்லது நான்காவது கியரிலேயே காரைச் சுலபமாக இயக்க முடிகிறது. இதுவே நெடுஞ்சாலைகளைப் பொறுத்தவரை, ஐந்தாவது அல்லது ஆறாவது கியரில் ரிலாக்ஸாக க்ரூஸ் செய்வது ஈஸி. எனவே, மைலேஜ் விஷயத்தில் உறுதியாக முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். இரண்டாம் தலைமுறை க்ரெட்டா, 21.4கிமீ அராய் மைலேஜைத் தருவதாக ஹூண்டாய் கூறியுள்ளது. மற்றபடி லைட்டான கிளட்ச் மற்றும் கியர்பாக்ஸ், பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்கின்றன. பெட்ரோல் இன்ஜின் அளவுக்கு இல்லாவிட்டாலும், டீசல் இன்ஜின் சைலன்ட்டாகவே தனது பணியைச் செய்கிறது. 3,500 ஆர்பிஎம்மைத் தாண்டிய பிறகுதான், இன்ஜின் சத்தம் காருக்குள்ளே கேட்கிறது. எதிர்பார்த்தபடியே பானெட்டுக்கு அடியே எடை அதிகமான டீசல் இன்ஜின் இருப்பதால், டர்போ பெட்ரோல் வெர்ஷன்களைவிட டீசல் மாடலின் சஸ்பென்ஷன் இறுக்கமாக இருப்பதை உணர முடிகிறது. இதனால் கரடுமுரடான சாலைகளில் செல்லும்போது, கார் கொஞ்சம் ஆட்டம் போடுகிறது. மேலும் திருப்பங்களில் காரைச் செலுத்தும் போது, அதிகமான பாடி ரோல் தெரிகிறது. ஸ்டீயரிங்கும் போதுமான ஃபீட்பேக் இல்லாமல் தடுமாறுகிறது. இதனால் டிரைவர்ஸ் கார் வேண்டும் என்பவர்கள், செல்ட்டோஸ் பக்கம் சென்றுவிடலாம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
க்ரெட்டாவில் எல்லாம் இருக்கு!

கேபின் மற்றும் சிறப்பம்சங்கள்

ஹூண்டாய் க்ரெட்டா 1.5 டீசல்
ஹூண்டாய் க்ரெட்டா 1.5 டீசல்

SX (O) டாப் வேரியன்ட்டைப் பொறுத்தவரை, பனோரமிக் சன்ரூஃப் - முன்பக்க கூல்டு சீட்கள் - எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் உடனான டிரைவர் சீட் - கனெக்ட்டிவிட்டி உடனான 10.25 இன்ச் டச் ஸ்க்ரீன் ஆகிய முக்கிய வசதிகள் இருக்கின்றன. ஆனால் டிரைவிங் மோடுகள், 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட மாடலில் மிஸ்ஸிங். டர்போ பெட்ரோல் மாடலில் கறுப்பு நிற கேபின் இருந்த நிலையில், டீசல் மாடலில் Brushed Aluminium வேலைப்பாடுகளுடன் கூடிய கறுப்பு - பீஜ் கேபின் இடம்பெற்றிருக்கிறது. இதனால் டேஷ்போர்டு மற்றும் கதவுகளில் இடம் பெற்றிருக்கும் இறுக்கமான ப்ளாஸ்டிக்ஸ் மீது கவனம் திரும்பாமல், ப்ரீமியம் ஃபீலிங்கில் அப்படியே மனம் லயித்துவிடும். க்ரோம் - கறுப்பு வேலைப்பாடுடன் கூடிய டூயல் டோன் அலாய் வீல்கள், காரின் தோற்றத்துடன் பொருந்திப் போகின்றன. டர்போ பெட்ரோல் மாடலில் சிம்பிளான கிரே நிற அலாய் வீல்கள் இருந்தது தெரிந்ததே. Chauffeur Driven காராகவே க்ரெட்டா அறியப்படுவதால், பின்பக்க இடவசதியில் கவனம் செலுத்தியிருக்கிறது ஹூண்டாய். பின்பக்க இருக்கையின் குஷனிங் மற்றும் தொடைகளுக்கான சப்போர்ட் நன்றாக இருப்பதுடன், முதுகுப்பகுதிக்கான Backrest Recline Angle-ம் பக்காவாக இருக்கிறது. ஹெட்ரெஸ்ட்டில் குட்டியாக தலையணை இருப்பது வெரி நைஸ் என்பதுடன், USB சார்ஜிங் பாயின்ட் வழங்கப்பட்டிருப்பது நைஸ்.

க்ரெட்டாவில் எல்லாம் இருக்கு!

முதல் தீர்ப்பு

குறைவான விலையில் க்ரெட்டா வேண்டும் என்பவர்களுக்கு பெட்ரோல் மாடல்களும், பர்ஃபாமன்ஸ் பிரியர்களுக்கு டர்போ பெட்ரோல் வேரியன்ட்டும், குறைவான ரன்னிங் காஸ்ட் வேண்டும் என்பவர்கள் டீசல் மாடல்களையும் தேர்வு செய்வார்கள். எந்த வெர்ஷனாக இருந்தாலும், ஸ்மூத்தான ஓட்டுதல் - அதிகப்படியான வசதிகள் - சிறப்பான பின்பக்க இடவசதி, அனைத்து இன்ஜின்களுக்கும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் என க்ரெட்டா கவர்கிறது. என்றாலும், இதன் டிசைன் இதுவரை பரவலான கருத்துகளையே பெற்றிருக்கிறது. மேலும் டிரைவர்ஸ் கார் என இதை வகைப்படுத்தவும் முடியாது. அடுத்தபடியாக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட க்ரெட்டாவை ஓட்டிப் பார்க்க ஆர்வமாகவே இருக்கிறோம்.