Published:Updated:

வருது புது எலான்ட்ரா! சிவிக்குக்கு சிக்கல்!

ஹூண்டாய் எலான்ட்ரா BS-6
பிரீமியம் ஸ்டோரி
News
ஹூண்டாய் எலான்ட்ரா BS-6

ஃபர்ஸ்ட் டிரைவ்: ஹூண்டாய் எலான்ட்ரா BS-6

ப்போதும் `லைம் லைட்'டில் இருப்பது என்பது ஹூண்டாய்க்குக் கைவந்த கலை! மற்ற கம்பெனிகள் BS-6 கார்களை இறக்கிய கையோடு, விலையையும் ஏற்றிக் கொண்டிருக்க… பழைய எலான்ட்ரா BS-4 மாடலைவிட, குறைந்த விலையில் BS-6 மாடலைக் களமிறக்கி இருக்கிறது ஹூண்டாய்.
வருது புது எலான்ட்ரா! சிவிக்குக்கு சிக்கல்!

BS-4 எலான்ட்ராவின் SX மேனுவலின் விலை (எக்ஸ் ஷோரூம்)18.49 லட்சம் என்றால், புது BS-6 மாடலின் SX MT-ன் விலை 17.60 லட்சம். அதாவது, 89,000 ரூபாய் விலைக் குறைப்பு. ஆட்டோமேட்டிக்கிலும் சுமார் 80,000 முதல் 84,000 வரை விலை குறைந்து வந்திருக்கிறது BS-6 எலான்ட்ரா.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஹூண்டாய் எலான்ட்ரா BS-6
ஹூண்டாய் எலான்ட்ரா BS-6

எலான்ட்ராவின் பெட்ரோல் இன்ஜினில் மாற்றம் இல்லை. அதே 2.0லிட்டர், 152bhp பவர், 19.2 kgm டார்க் கொண்ட இன்ஜின்தான். பேஸ் மாடலான S மேனுவல் மட்டும் இனி கிடையாது. அதாவது SX-MT, SX-AT, SX(O)-AT என மூன்று மாடல்கள் மட்டும்தான். ஆட்டோமேட்டிக்கில் கை வைக்கவில்லை.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
வருது புது எலான்ட்ரா! சிவிக்குக்கு சிக்கல்!

டீசலில்தான் பெரிய மாற்றம். பழைய 1.6 லிட்டர் டீசலுக்குப் பதிலாக 100 சிசி குறைந்து 1.5 லிட்டர், (U2 CRDi) 4 சிலிண்டர் டீசல் இன்ஜின் கொடுத்திருக்கிறார்கள். 128bhp பவர் கிடைத்த இடத்தில், இப்போது கிடைப்பதோ 115bhpதான். டார்க் 25kgm. கரெக்ட்... செல்ட்டோஸ், க்ரெட்டாவில் இருக்கும் அதே இன்ஜின்தான் இதிலும்! 6 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் இரண்டுமே உண்டு. `ஏன் இவ்வளவு பவர் குறைப்பு’ என்ற கேள்விக்கு, `மைலேஜ்தான் காரணம்’ என்கிறது ஹூண்டாய்.

ஹூண்டாய் எலான்ட்ரா BS-6
ஹூண்டாய் எலான்ட்ரா BS-6

ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்ஸ், எலெக்ட்ரிக்கல் சன்ரூஃப், டூயல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல், ஆண்ட்ராய்டு ஆட்டோ/ஆப்பிள் கார் ப்ளே கொண்ட 8.0 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், புளூலிங்க் கனெக்ட்டிவிட்டி, புஷ் பட்டன் என்று வசதிகள் நிறைய!

SX(O) என்றால்…10 வே மெமரி அட்ஜஸ்ட், வென்டிலேட்டட் சீட்ஸ், ஒயர்லெஸ் சார்ஜிங், LED ஹெட்லைட்ஸ் போன்ற வசதிகள் உண்டு. ஆக்டேவியா, கொரோலா ஆல்ட்டிஸ்தான் எலான்ட்ராவுக்குப் பெரிய டஃப் கொடுத்துக் கொண்டிருந்தன. இப்போது அந்த இரண்டும் கிடையாது. இப்போதைக்கு சிவிக்கை மட்டும் முந்தினால் போதும். எலான்ட்ராவுக்கு ஏறுமுகம்தான்!