Published:Updated:

IMT பாதுகாப்பா... ஜாலியா?

 ஹூண்டாய் வென்யூ IMT Petrol
பிரீமியம் ஸ்டோரி
News
ஹூண்டாய் வென்யூ IMT Petrol

ஃபர்ஸ்ட் டிரைவ்: ஹூண்டாய் வென்யூ IMT Petrol

கார்களில் ஏதாவது புதுமைகளைப் புகுத்திக் கொண்டே இருப்பதில் ஹூண்டாய்தான் பெஸ்ட். சின்ன காரில் ரியர் ஏசி வென்ட், டிரைவர் ரியர்வியூ மானிட்டர், வென்ட்டிலேட்டட் சீட்ஸ், ஒயர்லெஸ் சார்ஜிங் - இப்படிப் பல விஷயங்களைச் சொல்லலாம். இப்போது கியர்பாக்ஸில் புதுமையைத் தொடங்கி விட்டது ஹூண்டாய். க்ளட்ச் இல்லாத IMT எனும் கியர்பாக்ஸைத் தனது வென்யூ காரில் கொண்டு வந்திருக்கிறது ஹூண்டாய்.
 வழக்கமான அதே H பேட்டர்ன் கியர்தான். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் ஓகே. ஆனால், பக்கத்தில் இருப்பவர்கூட கியர் என்கேஜ் செய்யலாம் என்பது மைனஸ்.  க்ளட்ச் பெடல் இல்லை. ஓட்டுவதற்குக் கொஞ்சம் பழக வேண்டும்.  வென்யூவின் டர்போ மாடலில் மட்டும்தான் இந்த IMT கியர்பாக்ஸ் மாடல் கொண்டு வந்துள்ளது ஹூண்டாய்.
வழக்கமான அதே H பேட்டர்ன் கியர்தான். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் ஓகே. ஆனால், பக்கத்தில் இருப்பவர்கூட கியர் என்கேஜ் செய்யலாம் என்பது மைனஸ். க்ளட்ச் பெடல் இல்லை. ஓட்டுவதற்குக் கொஞ்சம் பழக வேண்டும். வென்யூவின் டர்போ மாடலில் மட்டும்தான் இந்த IMT கியர்பாக்ஸ் மாடல் கொண்டு வந்துள்ளது ஹூண்டாய்.

ஏஎம்டி தெரியும்; டார்க் கன்வெர்ட்டர் தெரியும்; DSG தெரியும். அதென்ன IMT?

‘ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்தானே... இதுல என்ன புதுமை இருக்கு’ என்கிறீர்களா? ஆட்டோமேட்டிக் போலவே இதில் க்ளட்ச் இருக்காது; ஆனால் கியர் இருக்கும். அதாவது மேனுவல் கியர்பாக்ஸ்... மேனுவலாக நாம்தான் கியர் போட வேண்டும். டிரைவர்களுக்கான உடல் உளைச்சலைக் குறைப்பதற்காக இந்த IMT –யைக் கொண்டு வந்ததாகச் சொல்கிறது ஹூண்டாய். லாக்டெளன் தளர்வுகள் ஆரம்பித்த ஒரு கடுமையான டிராஃபிக்கில், வென்யூ IMT–யை ஓட்டிப் பார்த்தேன்.

காம்பேக்ட் எஸ்யூவி செக்மென்ட்டில் கடுமையான டஃப் கொடுத்துக் கொண்டிருக்கும் வென்யூவைப் பற்றி உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கும். இப்போது அங்கங்கே சிவப்பு நிற வேலைப்பாடுகளுடன் ஸ்போர்ட்ஸ் எனும் மாடல் வென்யூவில் வந்திருக்கிறது. நமக்கு வந்தது வெள்ளை நிற சாதாரண IMTதான். கார் சிறுசாக இருந்தாலும் டைமண்ட் கட் அலாய் வீல்கள், அகலமான கிரில், சின்ன சன்ரூஃப் என இதன் ரோடு பிரசன்ஸ் அற்புதமாகவே இருக்கிறது. இப்போது நேரடியாக IMT–க்குப் போய் விடலாம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

காரில் உட்கார்ந்தவுடனேயே சட்டென உணர்ந்தது, கீழே இரண்டு பெடல்கள்தான். ஆட்டோமேட்டிக் ஓட்டுபவர்கள் ஒரு விஷயத்தை நிச்சயம் கடைப்பிடியுங்கள். கப் சிப்பென்று இடது காலை டெட் பெடலில் வைத்து விட வேண்டும். க்ளட்ச் இல்லாத ஒரு காரில், மேனுவலாக ஒரு கியர் லீவரைப் பார்ப்பதே புதுமையாகத்தான் இருந்தது. வழக்கமான அதே H பேட்டர்ன், 6 ஸ்பீடு கியர்பாக்ஸ்தான். இன்ஜினும் அதே 1.0லிட்டர் டர்போ பெட்ரோல்தான். 120bhp பவரும் 17.2kgm டார்க்கும்.

ஹூண்டாய் வென்யூ IMT Petrol
ஹூண்டாய் வென்யூ IMT Petrol

ஆட்டோமேட்டிக் பாதி; மேனுவல் மீதி என்பதுதான் இதன் அர்த்தம். மேலோட்டமாகவும் சரி; டெக்னிக்கலாகவும் சரி – இதுதான் உண்மை. பொதுவாக, ஏஎம்டி மற்றும் ஆட்டோமேட்டிக் கார்களில் உள்ள ஆக்சுவேட்டர்கள் மற்றும் சென்ஸார்கள், க்ளட்ச் ப்ளே – கியர் ஷிஃப்ட்டிங் என இரண்டையுமே கவனித்துக் கொள்ளும். இதில் க்ளட்ச் ப்ளே மட்டும்தான் ஆக்சுவேட்டர்களின் வேலை. கியர் உங்கள் பொறுப்பு.

இதில் க்ளட்ச் இல்லை; ஆனால் இருக்கு. அதாவது, நீங்கள் கியர் மாற்றும் தன்மையைக் கணக்கிட்டு, இந்த க்ளட்ச் ப்ளே கண்ணுக்குத் தெரியாமல் நடக்கும்.

கார் டிரைவிங்கில் பழம் தின்று கொட்டை போட்டவர்களாக இருந்தாலும், வென்யூ IMT –யில் உட்கார்ந்தால், ‘அட, புதுசா இருக்கே’ என்று ஒரு புன்முறுவல் தானாகப் பூத்துவிடும். நியூட்ரலில்தான் சிரித்துக் கொண்டே காரை ஸ்டார்ட் செய்தேன். கியரில் ஸ்டார்ட் செய்ய முடியவில்லை.

IMT பாதுகாப்பா... ஜாலியா?

ஆட்டோமேட்டிக் கார்கள்போல பிரேக்கில் இருந்து காலை எடுத்துவிட்டால், கார் தானாக மூவ் ஆகிறது. ஆம், Creep Functionதான். அடுத்த கியர் மாற்றும்போது, க்ளட்ச்சைத் தேட ஆரம்பிக்கிறது இடது கால். குறிப்பிட்ட ஆர்பிஎம் தாண்டியதும் கியர் ஷிஃப்ட் செய்யச் சொல்லி இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டரில் வார்னிங் வருகிறது.

அதிக ஆர்பிஎம்–ல் குறைந்த கியரிலோ, குறைந்த ஆர்பிஎம்–ல் அதிக கியரிலோ போனால், பீப் சவுண்ட் படுத்தி எடுத்துவிடும். ஆனால், ஒரு நல்ல விஷயம் – கார் எந்த இடத்திலும் ஆஃப் ஆகவில்லை. உதாரணத்துக்கு, சிக்னலில் நான்காவது கியரில் 60 கி.மீ வேகத்தில் போய், சடர்ன் பிரேக் அடித்தேன். கியர் மாற்றவில்லை; ‘பீப்’ வார்னிங் மட்டும் வந்தது. கார் ஆஃப் ஆகவில்லை. பதற்றமான நேரங்களில் இது மிகவும் கைகொடுக்கும். ஆனால், மூன்றாவது கியர் மாற்றும்போது, தடங்கல் வருவது எனக்கு மட்டும்தானா என்று தெரியவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மலைப்பாதைகளில் IMT செமயாக இருக்கும். கார் பின்னால் இறங்காமல், மேலேற உதவுகின்றன இதன் சென்ஸார்கள். ஏனென்றால், ஆக்சுவேட்டர்களும் சென்ஸார்களும் க்ளட்ச்சை மட்டும் கவனித்துக் கொண்டால் போதும்தானே! ஜாலியாக பிரேக்கில் இருந்து காலை எடுத்து ஆக்ஸிலரேட்டர் மிதிக்கலாம். இந்த நேரத்தில் கார் பின்னால் போகவில்லை. இன்னும் பலன் வேண்டுமென்றால், வென்யூவின் ஹில் அசிஸ்ட் கன்ட்ரோல் வசதி கொண்ட டாப் வேரியன்ட்டையும் முயற்சிக்கலாம்.

IMT பாதுகாப்பா... ஜாலியா?

இன்னொரு சந்தேகம் எழுந்தது. ஆக்ஸிலரேட்டர் பெடல் ஃப்ளோரில் இருக்கும்போது, கியர் விழுமா? 70 கிமீ வேகத்தில் ஆக்ஸிலரேட்டரை மிதித்துக் கொண்டே கியர் மாற்றினேன். அட, 6–வது கியருக்குத் தொந்தரவே இல்லாமல் மாறிவிட்டது. ஆனால், இதில்தான் ஓர் ஆபத்தும் அடங்கியிருக்கிறது.

பொதுவாக, மேனுவல் கார்களில் க்ளட்ச்சை அழுத்தினால்தான் கியர் என்கேஜ்டு ஆகும். இதில் க்ளட்ச்சை மிதிக்காமலே கியர் விழுவதால், பக்கத்தில் சேட்டை பார்ட்டிகள் மற்றும் குழந்தைகளை வைத்துக் கொண்டு இந்த IMT–யை ஓட்டும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சும்மா ஜாலிக்காக நான் ஆக்ஸிலரேட்டர் மிதிக்க, கோ டிரைவர் சீட்டில் அமர்ந்து கொண்டு நமது புகைப்பட நிபுணர் கியர் மாற்றிக் கொண்டே வந்தார். அச்சச்சோ... ரிவர்ஸ் கியரும் என் கவனத்துக்கு வராமலே விழுந்தது. இது ஜாலிக்கு வேண்டுமானால் ஒர்க்–அவுட் ஆகும். ஆனால், பயணங்களின்போது இது எடுபடுமா? எப்போதுமே டிரைவிங் கன்ட்ரோல், ஓட்டுநரிடம்தான் இருக்க வேண்டும் என்பதுதானே விதி?

உண்மையில், கியர் மாற்றுவதில் ஏற்படும் தடங்கலைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், இந்த IMT பம்ப்பர் டு பம்ப்பர் டிராஃபிக்கில் ஓட்ட ஃபன்னாகவே இருக்கிறது. ஆனால், ஆரம்பத்தில் சொல்வதுபோல், எவ்வளவு பெரிய ஜாம்பவான் என்றாலும் இந்த IMT–யைப் பழகப் பழகத்தான் பிடிக்கும்.

IMT பாதுகாப்பா... ஜாலியா?