Published:Updated:

சாதா வெர்னாவா... தாதா வெர்னாவா?

ஹூண்டாய் வெர்னா 1.5 லி MPi - ஆட்டோமேட்டிக்
பிரீமியம் ஸ்டோரி
ஹூண்டாய் வெர்னா 1.5 லி MPi - ஆட்டோமேட்டிக்

ஃபர்ஸ்ட் டிரைவ்: ஹூண்டாய் வெர்னா 1.5 லி MPi - ஆட்டோமேட்டிக்

சாதா வெர்னாவா... தாதா வெர்னாவா?

ஃபர்ஸ்ட் டிரைவ்: ஹூண்டாய் வெர்னா 1.5 லி MPi - ஆட்டோமேட்டிக்

Published:Updated:
ஹூண்டாய் வெர்னா 1.5 லி MPi - ஆட்டோமேட்டிக்
பிரீமியம் ஸ்டோரி
ஹூண்டாய் வெர்னா 1.5 லி MPi - ஆட்டோமேட்டிக்

விற்பனை பற்றி யெல்லாம் கவலைப் படவில்லை ஆட்டோமொபைல் நிறுவனங்கள். இந்த லாக்டெளனில் மட்டும் வரிசையாக பல கார்கள் லாஞ்ச் ஆகியிருக்கின்றன. ஹூண்டாயின் பங்கும் அதில் உண்டு. புது எலான்ட்ராவையும் வெர்னாவையும் இந்த கேப்பில் லாஞ்ச் செய்துவிட்டது ஹூண்டாய்.

விலை ரூ: 11.95 – 13.99 லட்சம் (Ex Showroom)
விலை ரூ: 11.95 – 13.99 லட்சம் (Ex Showroom)

புது ஹோண்டா சிட்டிக்குக் கடும்போட்டியை ஏற்படுத்தத்தான் வந்திருக்கிறது புது வெர்னா. சரியான நேரத்தில் தனது 5-வது ஜெனரேஷன் மாடல் சிட்டியையும் லாஞ்ச் செய்துவிட்டது ஹோண்டா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இ-பாஸ் வாங்காமல் வெர்னாவை, சென்னை நகரத்தின் சந்துபொந்துகளில், நெடுஞ்சாலைகளில், ஏன் ரேஸ் ட்ராக்கில் கூட ஓட்ட வாய்ப்பு கிடைத்தால் விட முடியாதே?

வெளியே.. என்ன புதுசு?

நீளம் அதே 4.5 மீட்டருக்குள்ளே தான். 4440 மிமீ நீளம் இருந்தாலும், எனக்கென்னவோ பழைய வெர்னாவின் சின்னத் தம்பிபோல்தான் தெரிகிறது புது வெர்னா. மாற்றம் மொத்தமும் கிரில்லில் இருந்தும் ஹெட்லைட்டில் இருந்தும் தொடங்கியிருக்கிறது. ஹனிகோம்ப் கிரில்லில் விளையாடி இருக்கிறார்கள் டிசைனர்கள். இது நிறைய பேருக்குப் பிடிக்குமா தெரியவில்லை. இதுவே டர்போ மாடலின் கிரில், ஆல் பிளாக்கில் செம ஸ்போர்ட்டியாக இருந்தது. எல்இடி ஹெட்லைட்ஸ் அடுத்த மாற்றம். 4 ஸ்ட்ரிப்புகள் இருந்தன. இரவிலும் ஓட்டிப் பார்த்தோம். வெள்ளை நிறத்தில் வெளிச்சம் பீய்ச்சி அடித்தது. இரவுப் பயணங்களில் செமையாக இருக்கும். அட, பனிவிளக்குகள்கூட புரொஜெக்டரில் கொடுத்திருக்கிறார்கள்.

1. ரெகுலர் வெர்னாவுக்கு டூயல் டோன். டர்போ என்றால், ஆல் பிளாக் தீம். ஃபிட் அண்ட் ஃபினிஷ் சூப்பர். 
 2. IVT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், இன்னும் கொஞ்சம் ரெஸ்பான்ஸிவ்வாக இருக்க வேண்டும். 
3.  பின் பக்கம் ஏ.சி வென்ட்.. கூடவே USB சார்ஜிங் பாய்ன்ட்டும் உண்டு.
1. ரெகுலர் வெர்னாவுக்கு டூயல் டோன். டர்போ என்றால், ஆல் பிளாக் தீம். ஃபிட் அண்ட் ஃபினிஷ் சூப்பர். 2. IVT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், இன்னும் கொஞ்சம் ரெஸ்பான்ஸிவ்வாக இருக்க வேண்டும். 3. பின் பக்கம் ஏ.சி வென்ட்.. கூடவே USB சார்ஜிங் பாய்ன்ட்டும் உண்டு.

அலாய்வீல்கள் 16 இன்ச், செம ஸ்டைலிஷ். டர்போ மாடலில் இதைவிட ஸ்டைலாக இருக்கும். S வேரியன்ட்டில் அளவு 15 இன்ச் ஆகக் குறைந்துவிடும். நாம் ஓட்டியது SX(O). டெயில் லைட்டும் நீளமாக பூமராங் வடிவில் கலக்குகிறது. ஹூண்டாய் இதிலும் ஒரு புதுமையைப் புகுத்தி விட்டது. ஹார்டு பிரேக்கிங்கில் இதன் சிவப்பு விளக்கு அபாய விளக்காக மாறி, பின்னால் வரும் வாகனங்களை எச்சரிக்கும். இதற்குப் பெயர் ESS. (Emergency Stop Signal). ஹைவேஸில் பிரச்னை இல்லை. காரின் மேலே சின்ன சன் ரூஃப், வெர்னாவுக்கு எடுப்பாக இருந்தது. பின் பக்கம் குட்டி ஸ்பாய்லர், அதுவும் ஒரு நுணுக்கம்தான். இதன் சைடு புரொஃபைல், ரொம்பவும் அழகாகவே இருந்தது. எக்ஸாஸ்ட் சிங்கிள்தான். இதுவே டர்போ என்றால், டபுள் எக்ஸாஸ்ட்டில் கெத்தாக இருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உள்ளே போலாமா?

பட்டாம்பூச்சியின் இறகுகளை நினைவுபடுத்தும் அந்த டயல்கள் அற்புதம்.டூயல் டோனில் டேஷ்போர்டு நீட் அண்ட் க்ளீனிங் ஆக இருந்தது. இதுவே டர்போ மாடல் என்றால், ஆல் பிளாக் தீமில் ஸ்போர்ட்டினெஸ் ஃபீல் கிடைக்கும். செமி ஃப்ளோட்டிங் டிசைனில் சென்டர் கன்ஸோலில் பாதி மிதந்தபடி ஆடி ஸ்டைலில் இருந்தது 8 இன்ச் டச் ஸ்க்ரீன். டச்சும் நன்றாக வேலை செய்தது.

ஸ்டீயரிங் வீலிலேயே ஏகப்பட்ட கன்ட்ரோல்கள். வாய்ஸ் கமாண்ட், க்ரூஸ் கன்ட்ரோலுக்கான பட்டன்களும் இருந்தன. இதுவே டர்போ மாடலில் பேடில் ஷிஃப்டர்கள் இருக்கும். இந்த ரெகுலர் வெர்னாவில் அது மிஸ்ஸிங். மற்றபடி பழைய வெர்னாவில் இருந்து வேறெந்த மாற்றங்களும் இல்லை. பிளாஸ்டிக்குகள் தரம், ஃபிட் அண்ட் ஃபினிஷ், அதே!

பிராக்டிக்காலிட்டி

பயன்பாட்டில்தான் வெர்னா இறங்கி அடிக்கிறது. சீட்களிலேயே ஆரம்பித்து விடுகிறது ஆட்டம். சென்டர் கன்ஸோலுக்குக் கீழே இரண்டு பட்டன்கள் இருந்தன. அட, வென்டிலேட்டட் சீட்கள்.

ஒயர்லெஸ் சார்ஜிங் வசதி உண்டு. கூடவே இரண்டு யுஎஸ்பி ஸாக்கெட்டுகள். மற்ற போன்களையும் சார்ஜ் போட்டுக் கொள்ளலாம். இதில் ஒன்று ஃபாஸ்ட் சார்ஜிங். பார்க்கிங் பிரேக் லீவருக்குப் பக்கத்தில் இரண்டு பாட்டில் ஹோல்டர்கள் இருந்தன. மற்றபடி இரண்டு பக்கமும் கதவுகளில் பாக்கெட்டுகள் இடம் இருந்தன. வேறெங்கும் இடம் இல்லை. க்ளோவ் பாக்ஸிலும் ஏ.சி வந்தது. சீட்களுக்கு மெமரி வசதி இல்லை. லீவரை இழுத்துத்தான் அட்ஜஸ்ட் செய்தேன். ஆனால், ஸ்டீயரிங்குக்கு ரேக் அண்ட் ரீச் ஆப்ஷன் இருந்ததால், எப்படிப்பட்டவர்களும் கார் ஓட்ட ஈஸியாகவே இருக்கும்.

 1. ஹார்டு பிரேக்கிங்கில் ஹஸார்டு லைட்டுகளாக மாறும் டெயில் லைட்டுகள்  2. விங் மிரரிலேயே இண்டிகேட்டர்கள். 
 3. பின் சீட் இடவசதியில்தான் இன்னும் முன்னேற்றம் வேண்டும் வெர்னாவில். லெக்ரூம் டைட்.
1. ஹார்டு பிரேக்கிங்கில் ஹஸார்டு லைட்டுகளாக மாறும் டெயில் லைட்டுகள் 2. விங் மிரரிலேயே இண்டிகேட்டர்கள். 3. பின் சீட் இடவசதியில்தான் இன்னும் முன்னேற்றம் வேண்டும் வெர்னாவில். லெக்ரூம் டைட்.

சன்ரூஃபுக்கான பட்டனை ஆப்பரேட் செய்தால், சின்ன சன்ரூஃப் திறக்கிறது. மிட் சைஸ் செக்மென்ட்டில் சிட்டிக்கும் வெர்னாவுக்கும் மட்டும்தான் இந்தப் பெருமை. ரேபிட், சியாஸ், யாரிஸ், வென்ட்டோ எல்லாம் இன்னும் தூரம் போக வேண்டும்.

பின் பக்கத்தில் ஸ்மார்ட் ட்ரங்க் வசதியும் வெர்னாவில் கொண்டு வந்துவிட்டது ஹூண்டாய். காருக்குக் கீழே காலை நீட்டினாலே போதும்; பூட் தானாகத் திறக்கும். பூட் இடவசதி 480 லிட்டர். ஒரு பெரிய டூர் அடிக்கப் போதுமானதாக இருக்கிறது.

வசதிகள்

டச் ஸ்க்ரீனில் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் ப்ளே வசதிகள் இருந்தன. வென்யூ போல புளூலிங்க் கனெக்ட்டிவிட்டி உண்டு. வீட்டில் இருந்தபடியே இன்ஜினை ஸ்டார்ட் செய்யலாம்; வெயில் நேரங்களில் முன்கூட்டியே ஏ.சி-யை ஆன் செய்யலாம். ஜியோஃபென்சிங் மற்றும் ஆன்போர்டு நேவிகேஷன் வசதியும் இருந்தன.

இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டரில் டயர் ப்ரஷர் மானிட்டர் சிஸ்டம் இருக்கிறது. சர்வீஸ் ரிமைண்டர், ரியல் டைம் ஃப்யூல் ஸ்டேட்டஸ், SOS, எமர்ஜென்சி அசிஸ்ட் ஆகியவையும் உண்டு. பின் பக்கம் வழக்கம்போல் ரியர் ஏ.சி வென்ட் இருந்தது. கூடவே, சார்ஜிங் பாயின்ட்டும்.

மற்றபடி பாதுகாப்பைப் பொறுத்தவரை ஆறு காற்றுப் பைகள், ESC, ட்ராக்ஷன் கன்ட்ரோல் எல்லாமே உண்டு. ஆனால், பின் பக்கம் டிஸ்க் இல்லை. இது டர்போ மாடலில் மட்டும்தான்.

பின் பக்கம்

கால்களை நீட்டி மடக்கி உட்கார இன்னும் கொஞ்சம் வசதி வேண்டும். இத்தனைக்கும் இதன் வீல்பேஸ் 2,600 மிமீ. ஸ்போர்ட்டியாக இறங்கும் பின் பக்கம், கொஞ்சம் ஹெட்ரூமிலும் கை வைத்து விடுகிறது. உயரம் அதிகமானவர்களுக்குக் கொஞ்சம் சிக்கலாகத்தான் இருக்கும். வழக்கம்போல், அந்த சார்ஜிங் டனல், நடுப்பயணிக்கு மிகப் பெரிய சிக்கலை ஏற்படுத்தும். ஆனால், சீட்கள் நல்ல ரெக்லைன்ட் ஆக, சொகுசாக இருக்கின்றன. நடுவே உள்ள ஆர்ம் ரெஸ்ட்டை இறக்கிவிட்டால், இரண்டு கப் ஹோல்டர்கள். இரண்டு பேர் என்றால், பின்பக்கம் சூப்பராகப் போகலாம்.

சாதா வெர்னாவா... தாதா வெர்னாவா?

டிரைவிங் எப்படி?

1.5 MPi பெட்ரோல், 1.5 லிட்டர் U2 CRDi டீசல், 1.0 Kappa Turbo GDI பெட்ரோல் என மூன்று இன்ஜின் ஆப்ஷன்களில் வருகிறது வெர்னா. எல்லாவற்றிலுமே மேனுவல், ஆட்டோமேட்டிக் என இரண்டுமே உண்டு. டர்போவில் மட்டும் 7 ஸ்பீடு DCT.

நாம் ஓட்டியது முதல் இன்ஜின். பழைய 1.6 லிட்டரில் இருந்து 100 சிசி குறைந்து 1,497 சிசியாகி இருக்கிறது. BS-6 நார்ம்ஸுக்காக பவரிலும் டார்க்கிலும்கூட அளவுகளைக் குறைத்திருக்கிறார்கள். இந்த வெர்னா BS-6 –ன் பவர், 115bhp. டார்க் 14.7 kgm. இதில் இருந்தது 6 ஸ்பீடு IVT. CVT-யைத்தான் IVT (Intelligent Variable Transmission) என்கிறது ஹூண்டாய்.

சிட்டிக்குள் ஓட்ட ஏதுவாக இருக்கிறது வெர்னா IVT. டிராஃபிக்கில் பவர் டெலிவரி லீனியராகவே இருக்கிறது. அதேபோல், ஹைவே க்ரூஸிங்கிலும் ஓகே! ரெட்லைன் 4,500 ஆர்பிஎம் வரை இழுக்கிறது. ஆனால், ஏதோ டர்போ லேக் இருப்பது போலவே தெரிகிறது. குறைந்த க்ரூஸிங்குகள் வ்வ்ர்ர்ரூம்’ என கார் பறப்பதுபோல் இருக்கிறது. ஆனால், சத்தம்தான் கேட்கிறது. ரப்பர் பேண்ட் எஃபெக்ட் நன்றாகவே தெரிகிறது.

சாதா வெர்னாவா... தாதா வெர்னாவா?

ஹோண்டா சிட்டி அளவுக்கு மிட் ரேஞ்ச் பன்ச்சும் இல்லை. ஓவர்டேக்கிங்கில் கொஞ்சம் முன்கூட்டியே திட்டமிட வேண்டும். கியர்பாக்ஸ் இரண்டு விநாடிகள் நேரம் எடுத்துக் கொள்கிறது. இந்த நேரத்தில்தான் பவர் குறைபாடும் தெரிகிறது. 7 ஸ்பீடு DCT டர்போ மாடலில் இந்தப் பிரச்னை இருக்காது. கொஞ்சம் ரிலாக்ஸ்டு மேனரில் ஓட்டுபவர்களுக்கு இந்த இன்ஜின் சரியாக இருக்கும். சென்னை ஹைவேஸில் 145 கி.மீ வரை விரட்ட வாய்ப்பு கிடைத்தது. ஆனால், 160-க்கு மேல் ஜம்மென்று பறக்கலாம் வெர்னாவில்.

ஹேண்ட்லிங்

சவுண்ட் இன்ஸுலேஷனில் கொஞ்சம் முன்னேற்றம் வேண்டும் வெர்னாவில். ஓவர் ஸ்பீடிங்கில் சிமெண்ட் சாலைகளில் வெளிச்சத்தம் கேட்கிறது. சஸ்பென்ஷனில் முன்பைவிட நல்ல முன்னேற்றம். ரொம்ப சாஃப்ட் ஆகவும் இல்லாமல், ஸ்டிஃப் ஆகவும் இல்லாமல் பேலன்ஸ்டு ஆக இருக்கிறது. நம் ஊர் குண்டு குழிகளில் ஏற்றி இறக்கும்போது, பெரிதாக இறுக்கமாகவும் இல்லை; அலுங்கிக் குலுங்கி எடுக்கவும் இல்லை. கொஞ்சம் பெரிய பள்ளங்களில் மட்டும் கவனமாக இருக்க வேண்டும். 5 பேர் அமர்ந்து ஃபுல் லோடில் பயணித்தால், கி.கிளியரன்ஸ் ஸ்பீடு பிரேக்கர்களில் நிச்சயம் அடிவாங்கும்.

நெடுஞ்சாலைகளில் ஸ்டீயரிங் ஃபீட்பேக் ஓகே! சிட்டிக்குள் வளைத்துத் திருப்ப ஏதுவாகவும், நெடுஞ்சாலைகளில் ஓரளவு டைட் ஆகவும் மாறுகிறது. ட்ராக்கில் ஓட்டும்போது வளைவுகளில் நல்ல பாடி ரோல் தெரிகிறது.

வெர்னாவில் இன்னும் முன்னேற வேண்டிய விஷயம் பிரேக்கிங். நிச்சயம் பிரேக்கிங் நம்மை இம்ப்ரஸ் செய்யவில்லை. ரியரில் டிஸ்க் இல்லாததுகூடக் காரணமாக இருக்கலாம். டர்போ மாடல் இதில் வேற லெவல்!

வெர்னா வாங்கலாமா?

வெர்னா ஒரு மிட் சைஸ் செடான் கார்தான். ஆனால், வெர்னா வைத்திருப்பது பிரெஸ்ட்டீஜியஸான விஷயம். காரணம், அதன் எக்யூப்மென்ட் வசதிகள், ப்ரீமியம் லுக், டிரைவிங் எல்லாம்தான். இந்த செக்மென்ட்டில் சன்ரூஃப், வென்டிலேட்டட் சீட்கள், ஒயர்லெஸ் சார்ஜிங், ட்ராக்ஷன் கன்ட்ரோல் என்று இன்னும் கலக்குகிறது வெர்னா.

சாதா வெர்னாவா... தாதா வெர்னாவா?

டிரைவர்களுக்கு ரொம்பக் கவனம் செலுத்தி இருக்கும் ஹூண்டாய், கொஞ்சம் பின் பக்கம் லெக்ரூமிலும், ஹெட்ரூமிலும் கவனம் செலுத்தியிருக்கலாம். அதேபோல், இந்த 1.5 NA பெட்ரோல் இன்ஜினில், டிரைவிங் பன்ச்சும் மிஸ் ஆகிறது. ஹோண்டா சிட்டி, இதில் அடித்து முன்னேறுகிறது. வெர்னாவிலும் இதற்கானஆப்ஷன் உண்டு. அதுதான் டர்போ மாடல். 3 சிலிண்டர்தான் என்றாலும், இதன் டிரைவிங் பன்ச்சும், முன்னேறிவிட்ட ஓட்டுதலும், சொகுசும் டர்போவை இந்த மிட்சைஸ் போட்டியில் சாதா வெர்னாவைவிட தாதா ஆக்குகிறது. இதன் மைலேஜும் 19 கி.மீ-க்கு மேல் க்ளெய்ம் செய்கிறது ஹூண்டாய். SX (O)-வில் மட்டுமே கிடைக்கும் டர்போவின் எக்ஸ் ஷோரூம் விலை 13.99 லட்சம். சாதா வெர்னாவின் டாப் எண்ட் SX(O)-ன் விலை 13.84 விலை. வெர்னாதான் என்று முடிவெடுத்துவிட்டால், எக்ஸ்ட்ரா 15,000 ரூபாய் கொடுத்து தாதா டர்போவை டிக் அடிப்பது பெஸ்ட்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism