Published:Updated:

ஜாகுவார் இப்போ இன்னும் ஜம்முனு!

ஜாகுவார் XE P250
பிரீமியம் ஸ்டோரி
ஜாகுவார் XE P250

ஃபர்ஸ்ட் டிரைவ்: ஜாகுவார் XE P250

ஜாகுவார் இப்போ இன்னும் ஜம்முனு!

ஃபர்ஸ்ட் டிரைவ்: ஜாகுவார் XE P250

Published:Updated:
ஜாகுவார் XE P250
பிரீமியம் ஸ்டோரி
ஜாகுவார் XE P250

ழைய XE-க்குக் கிடைத்த வாடிக்கையாளர்களின் ஃபீட்பேக்கை வைத்து, அதிரடியாகப் பல மாற்றங்களோடு XE ஃபேஸ்லிஃப்ட் செடானைக் கொண்டு வந்திருக்கிறது ஜாகுவார். டிசைன் ஃபீல் மட்டுமில்லாது, 180bhp பவர் தரக்கூடிய BS- 6 டீசல் இன்ஜினுடன், அதிரடியாக 250bhp பவர் தரும் BS-6 பெட்ரோல் இன்ஜினும் இருக்கிறது.

ஜாகுவார் இப்போ இன்னும் ஜம்முனு!
ஜாகுவார் இப்போ இன்னும் ஜம்முனு!

LED ஹெட்லைட் முன்பைவிட மெலிதாகியிருக்கிறது. வழக்கமான இண்டிகேட்டருக்குப் பதில் டைனமிக் இண்டிகேட்டர், பெரிய கிரில், க்ரோம் வேலைப்பாடுகளுக்குப் பதில் பிளாக் ஃபினிஷ் என வெளிப்புறம் கொஞ்சம் மாறிவிட்டது. கிரே நிற வீல்களும், கால்ட்ரே சிவப்பு வண்ணமும் இன்னும் ஸ்போர்ட்டி.உள்ளேயும் கறுப்பு நிறம்தான். க்ளைமேட் கன்ட்ரோல் ஏரியாவில் பட்டன்களுக்குப் பதில் எல்லாமே டச் பேனல்கள். கியர் செலக்ட் செய்யும் ரோட்டரி டயலுக்குப் பதில், வழக்கமான லீவர் வந்துவிட்டது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ரோல்ஸ்ராய்ஸ் போல மரவேலைப்பாடுகள் கொடுத்திருக்கிறார்கள். இன்ஃபோடெயின் மென்ட் ஸ்கிரீன் பெரிதாகிவிட்டது. ஸ்மார்ட்ஃபோன் கனெக்ட்டிவிட்டி, ஒயர்லெஸ் சார்ஜிங் உண்டு. மற்றபடி டேஷ்போர்டின் வடிவமைப்பில் மாற்றமில்லை. மெமரி சீட்டில் ஒரு புதுமை செய்திருக்கிறது ஜாகுவார். சீட் மட்டுமில்லை, மிரர் பொசிஷன், ஏசி அளவைக்கூட ஞாபகம் வைத்துக் கொள்கிறது இந்த சீட்.

 ஃபர்ஸ்ட் டிரைவ்: ஜாகுவார் XE P250
ஃபர்ஸ்ட் டிரைவ்: ஜாகுவார் XE P250

இது ஓட்டுநர்களுக்கான கார் என்பதால், முன் வரிசை அளவுக்குப் பின்பக்கம் அவ்வளவு சிறப்பாக இல்லை. கதவுகள் குறுகலாக இருப்பதால், உள்ளே சென்று வெளியே வருவது வயதானவர்களுக்குச் சிரமம். பெரிய ரியர் ஏசி வென்ட்டும், ஃப்ளோரில் இருக்கும் உயரமான மேடும், மூன்று நபர் உட்காரும்போது நடுவில் உட்காருபவருக்குச் சிரமமாக இருக்கும்.

XE மாடலில் வரும் 2.0 லிட்டர் பெட்ரோல் டர்போ இன்ஜின், 250bhp/36.5kgm டியூனிங்கில் மட்டுமே கிடைக்கிறது. த்ராட்டிலை அழுத்திப் பிடித்தால் பறக்கிறது ஜாகுவார். மிட் ரேஞ்ச் மற்றும் பவர் டெலிவரி செம பஞ்ச்!

ஐடிலிங்கில் மட்டுமே இன்ஜின் ரிஃபைண்டாக இருக்கிறது. ஆக்ஸிலரேட்டர் அழுத்தினால் வைப்ரேஷன் தெரிகிறது. 8 ஸ்பீடு ZF ட்ரான்ஸ்மிஷன், பிஎம்டபிள்யூ காரில் இருக்கும் அளவுக்கு ஸ்மூத்தாக இல்லை. மழை, பனி, ஐஸ் என டிரைவிங் மோடு உண்டு. இவை, குறைவான டிராக்‌ஷனிலும் காரை எடுக்க உதவுகின்றன.

இந்தப் புதிய மாடலில் உள்ள டிரைவர் கண்டிஷன் மானிட்டர் மிக முக்கியமான அம்சம். நீண்டதூரப் பயணத்தின்போது ஓட்டுநரின் டிரைவிங் பிஹேவியரை வைத்தே, அவருக்கு ஓய்வு தேவை என்பதைச் சொல்கிறது. Lane Keep Assist - நாம் வாகனம் தடம் மாறினால், ஸ்டீயரிங் வீலுக்குச் சின்ன வைப்ரேஷன் கொடுத்து நம்மை அலெர்ட் செய்கிறது.

 டேஷ்போர்டு, ஃபுல் பிளாக் தீம்.. பட்டன்களுக்குப் பதில் எல்லாமே டச் கன்ட்ரோல்...
டேஷ்போர்டு, ஃபுல் பிளாக் தீம்.. பட்டன்களுக்குப் பதில் எல்லாமே டச் கன்ட்ரோல்...

மேடு பள்ளங்களை உள்வாங்கும் சஸ்பென்ஷன், சாலையை நன்றாக உணர்ந்து செயல்படும் ஸ்டீயரிங், பவர்ஃபுல் இன்ஜின் என டிரைவிங் விரும்பிகளுக்கேற்ற கார் இந்த ஜாகுவார்.

இந்த காரை ஓட்டிய கொஞ்சம் நேரத்தில், இது தந்த அந்த ஸ்பெஷல் ஃபீல் மற்றும் சாலையில் எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்த ஸ்டைலிங், இந்த இரண்டு விஷயங்களுக்காக மட்டுமே இந்த ஜாகுவாரை தனவான்கள் வாங்குவார்கள் என்பதைத் தெரிந்து கொண்டேன்.