கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

பார்த்தால் காம்பஸ்... பழகினால் ட்ரையல்ஹாக்!

இன்ஜின் I 1,956சிசி(டீ) பவர் I 173bhp டார்க் I 35kgm.
பிரீமியம் ஸ்டோரி
News
இன்ஜின் I 1,956சிசி(டீ) பவர் I 173bhp டார்க் I 35kgm.

ஃபர்ஸ்ட் டிரைவ்: ஜீப் காம்பஸ் BS-6 ஆட்டோமேட்டிக்

சரசரவென இப்போ எல்லா கார்களுமே BS-6–க்கு அப்டேட் ஆகிக் கொண்டிருக்க, ‘‘BS-6 மட்டுமில்லை; இந்தா பிடி 4வீல் டிரைவ்வும்’’ என்று தனது ஆஃப்ரோடு அம்சத்தையும் சேர்த்து அளித்திருக்கிறது ஜீப்.

‘‘ஆஃப்ரோடுக்குத்தான் ட்ரையல்ஹாக் இருக்கே’’ என்று ஆஃப்ரோடு அன்பர்கள் சட்டென எழுகிறீர்கள்தானே? ஆம், சொந்த வீட்டுக்குள்ளேயே, அதாவது ட்ரையல்ஹாக்குக்கே போட்டியாக வந்துவிடும்போல இந்த காம்பஸ் BS-6. அட ஆமாங்க, ட்ரையல்ஹாக்கைவிட 2 முதல் 3 லட்சம் குறைவான விலையில், அதே இன்ஜின், அதே 4வீல் டிரைவ், அதே கியர்பாக்ஸ் எனும்போது, ஆஃப்ரோடு பிரியர்களுக்கு டீல்தானே! காம்பஸில் ஒரு 4வீல் ஃபர்ஸ்ட் டிரைவ்.்க, ட்ரையல்ஹாக்கைவிட 2 முதல் 3 லட்சம் குறைவான விலையில், அதே இன்ஜின், அதே 4வீல் டிரைவ், அதே கியர்பாக்ஸ் எனும்போது, ஆஃப்ரோடு பிரியர்களுக்கு டீல்தானே! காம்பஸில் ஒரு 4வீல் ஃபர்ஸ்ட் டிரைவ்.

இன்ஜின் I 1,956சிசி(டீ) பவர் I 173bhp டார்க் I 35kgm விலை I சுமார் ரூ.29.98லட்சம்
இன்ஜின் I 1,956சிசி(டீ) பவர் I 173bhp டார்க் I 35kgm விலை I சுமார் ரூ.29.98லட்சம்

2 வேரியன்ட்; நிறைய வசதிகள்!

உள்பக்கம் காம்பஸில் பெரிதாக மாற்றங்கள் இல்லை. ஆங்காங்கே சாஃப்ட் டச் மெட்டீரியல்கள் முளைத்திருக்கின்றன. வழக்கம்போல், முன் பக்க டிரைவ் சீட், நல்ல கம்ஃபர்ட். உள்ளே 7 இன்ச் டச் ஸ்க்ரீன், 4 காற்றுப்பைகள், டூயல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல், ரிவர்ஸ் கேமரா, கீலெஸ் கோ, ஆட்டோ ஸ்டார்ட்/ஸ்டாப், க்ரூஸ் கன்ட்ரோல் என வழக்கமான, தேவையான வசதிகள். காம்பஸின் விலை குறைந்த Longitude வேரியன்ட்டிலேயே இவை உண்டு. இன்னொரு வேரியன்ட்டான லிமிட்டட் ப்ளஸ் மாடலில், பவர்டு மெமரி டிரைவர் சீட், பனோரமிக் சன்ரூஃப், லெதர் சீட்கள், ஆட்டோ ஹெட்லைட்ஸ், ஆட்டோ வைப்பர்ஸ் ஆகிய வசதிகளைச் சேர்த்திருக்கிறார்கள். இந்த டாப் மாடலில் டச் ஸ்க்ரீன் அளவும் கொஞ்சம் பெரியது. (8.4 இன்ச்). காற்றுப்பைகளும் 2 எக்ஸ்ட்ரா.

BS-6 டிரைவ்...

ஜீப் காம்பஸில் BS-4 ஓட்டியவர்களிடம், இந்த 2.0 லிட்டர் மல்ட்டிஜெட் BS-6 டீசல் காம்பைஸை ஓட்டக் கொடுத்தால் உற்சாகமாகி விடுவார்கள். அத்தனை ரிஃபைன்மென்ட்.

 9 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் கியர்பாக்ஸ், அருமை. ஆனால், டூயல் க்ளட்ச் இல்லை.
9 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் கியர்பாக்ஸ், அருமை. ஆனால், டூயல் க்ளட்ச் இல்லை.

காம்பஸில் இது வரவேற்கத்தக்க விஷயம். சொல்லப்போனால், ட்ரையல்ஹாக்கை ஸ்டார்ட் செய்ததும் சில அதிர்வுகள் தெரியும். அது இந்த BS-6 காம்பஸில் அவ்வளவாக இல்லை. இதன் 173bhp பவரையும், 35kgm டார்க்கையும் கொஞ்சம் ஆப்டிமைஸ் செய்திருக்கிறார்கள். இதன் காரணமாக, சிட்டிக்குள் குறைந்த வேகங்களில் இன்னும் கொஞ்சம் பெப்பியாக இருக்கிறது காம்பஸ். எந்த வேகத்தில் த்ராட்டில் கொடுத்தாலும் பறப்பதற்குத் தயாராகவும் இருக்கிறது.

ஆக்ஸிலரேஷன் போட்டி...

ஆக்ஸிலரேஷன் டெஸ்ட்டிலும் ட்ரையல்ஹாக்கைவிட முந்துகிறது இந்த காம்பஸ். 20–80 கி.மீ–யை 6.6 விநாடிகளிலும், 40–100 கி.மீ–யை 8.05 விநாடிகளிலும் தொடுகிறது. இதுவே ட்ரையல்ஹாக்குக்கு 7.15–ம்... 10.34 விநாடிகளும் ஆகிறது. 0–100 கி.மீ–லும் ரெக்கார்டு அடிக்கிறது காம்பஸ். 12.49 விநாடிகள் எடுத்துக் கொள்ளும் ட்ரையல்ஹாக்கைவிட விரைவாக 11.4 விநாடிகளிலேயே 0–100 கி.மீ–யைத் தொடுகிறது BS-6 காம்பஸ்.

 இன்டீரியர் செம ஸ்போர்ட்டி. டாப் மாடலில் மட்டும் பெரிய 8.4 இன்ச் டச் ஸ்க்ரீன், லெதர் சீட்கள்.
இன்டீரியர் செம ஸ்போர்ட்டி. டாப் மாடலில் மட்டும் பெரிய 8.4 இன்ச் டச் ஸ்க்ரீன், லெதர் சீட்கள்.

மிட் ரேஞ்ச் ஓகேவா?

அப்படியென்றால், எல்லாவற்றிலும் ட்ரையல்ஹாக்கைவிட, இந்த BS-6 காம்பஸ்தான் ஓகேவா? என்றால், மிட்ரேஞ்சில் கொஞ்சம் சொதப்புகிறது இந்த காம்பஸ். ட்ரையல்ஹாக்கில் அந்த ஸ்ட்ராங்கான மிட்ரேஞ்சுக்காகவே டிரைவர் சீட்டில் உட்காரலாம். மற்றபடி இந்த BS-6–ன் பவர் டெலிவரி லீனியராகவே இருக்கிறது. இதன் 9 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் கியர்பாக்ஸ், சரியான டைமிங்கில் ஷிஃப்ட் ஆகி, டவுன்ஷிஃப்ட் ஆகிறது. ஸ்மூத்னெஸும் அருமை. இருந்தாலும், டூயல் கிளட்ச் ட்ரான்ஸ்மிஷன் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைக்கத் தவறவில்லை. மேனுவல் ஷிஃப்ட்டிங்கும் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், பேடில் ஷிஃப்டர்கள் இல்லை என்பது மைனஸ்.

சஸ்பென்ஷன்

காம்பஸில் மூன்று இலக்க வேகங்களில் பறந்து பாருங்களேன்... அதிவேகங்களில் நம்மை நன்றாக இம்ப்ரஸ் செய்வதுதான் காம்பஸின் ஸ்டைல். இதுவும் அப்படித்தான். 100–க்கு மேல் மிதித்தாலும், அப்படியே நிலையாகப் பறக்கிறது காம்பஸ். வேகங்களில்கூட பெரிய பள்ளங்களைக் கண்டு பயப்படவில்லை இதன் சஸ்பென்ஷன்.

ஹேண்ட்லிங்கிலும் ஒரு எஸ்யூவிக்கு இணையான நேர்த்தி. குறைந்த வேகங்களில் மட்டும் காம்பஸின் அந்த இறுக்கமான பயணம் தொடர்கிறது. ஆஃப்ரோடுக்கு இந்த காம்பஸ் ஓகேதான்.

இந்த நேரத்தில்தான் ட்ரையல்ஹாக்கை மிஸ் செய்கிறேன். ட்ரையல்ஹாக்கின் 225/60R17 இன்ச் டயர்கள் அளவு, காம்பஸின் 225/55R18 டயர்கள், மேடு பள்ளங்களைச் சமாளிக்கத் தவறுகின்றன. இத்தனைக்கும் இதில்தான் ஒரு இன்ச் அதிகம்.

வாங்கலாமா?

விலை கொஞ்சம் அதிகமாக இருந்தாலும், ஒரு தடவை காம்பைஸ ஓட்டிவிட்டால், வேறு எந்த காருக்கும் போகமாட்டார்கள். விலையைத் தவிர இந்த காம்பஸில் வேறெந்தக் குறைகளையும் கண்டுபிடிக்க முடியவில்லை. நல்ல ஆஃப்ரோடு தன்மை, ஸ்மூத்தாக இயங்கும் 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், 2.0 லிட்டர் இன்ஜினின் ரிஃபைன்மென்ட் என செம பேக்கேஜ்.

இன்ஜின் I 1,956சிசி(டீ) பவர் I 173bhp டார்க் I 35kgm விலை I சுமார் ரூ.29.98லட்சம்
இன்ஜின் I 1,956சிசி(டீ) பவர் I 173bhp டார்க் I 35kgm விலை I சுமார் ரூ.29.98லட்சம்

கேள்வியெல்லாம் ட்ரையல்ஹாக்குக்குப் பதில் இந்த காம்பஸ் வாங்கலாமா என்பதுதான். ஆம் என்பதற்கு இதுதான் விளக்கம். இதன் ‘லிமிட்டட் ப்ளஸ் AT’ எனும் டாப் மாடல், (29.98 லட்சம், சென்னை ஆன்ரோடு)ட்ரையல் ஹாக்கைவிட (33.09) சுமார் 3 லட்சம் குறைவு. ட்ரையல்ஹாக்கில் இருக்கும் அதே இன்ஜின், ஆஃப்ரோடு தன்மை என எல்லாமே அப்படியே ட்ரையல்ஹாக்தான் இந்த காம்பஸ். வேறென்ன வேணும்?