Published:Updated:

டிசையர்... ஆல் ரவுண்டரா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மாருதி சுஸூகி டிசையர் ஃபேஸ்லிஃப்ட் 2020
மாருதி சுஸூகி டிசையர் ஃபேஸ்லிஃப்ட் 2020

ஃபர்ஸ்ட் டிரைவ்: மாருதி சுஸூகி டிசையர் ஃபேஸ்லிஃப்ட் 2020

பிரீமியம் ஸ்டோரி
ப்போதெல்லாம் ஃபேஸ்லிஃப்ட் மாடல்களை உற்றுப் பார்த்தால்கூட மாற்றம் கண்டுபிடிப்பது ரொம்பக் கஷ்டமாக இருக்கிறது. அதாவது, வெளிப்புறம் மாற்றங்கள் அவ்வளவாகச் செய்திருக்க மாட்டார்கள். ஆனால், மூன்றாவது ஜென் மாருதி சுஸூகியின் டிசையர் ஃபேஸ்லிஃப்ட்டை சும்மா லாங் ஷாட்டில் பார்த்தாலே தெரிந்து விடும். ‘அட, புது டிசையர்’ என்று! கிரில்லில் ஆரம்பித்து, இன்ஜின் வரை… அடடா மாருதி அற்புதமாக வேலை பார்த்திருக்கிறது BS-6 டிசையரில். புது டிசையர் எப்படி இருக்கு?

முதன் முதலாகப் பார்க்கும்போது, ஆடி ஸ்டைலில் சிங்கிள் ஃபிரேம் அறுங்கோண வடிவ கிரில்லில்தான் பார்வை போகிறது. கீழே பூமராங் வடிவ ஃபினிஷிங்குக்குள் பனி விளக்குகள். எல்லாமே க்ரோம் ஃபினிஷிங். இதுவே டிசையரை ரொம்பவும் வேறுபடுத்திக் காட்டிவிட்டது போங்கள். 15 இன்ச் Precision Cut 2 டோன் அலாய் வீல்கள், செம ஸ்போர்ட்டி!

டிசையர்... ஆல் ரவுண்டரா?

ஆனால், கேபினுக்குள் பெரிதாக மாற்றங்கள் இல்லை. ஆனால், இது தேவையில்லாத விஷயமும்தான். சீட்கள் நல்ல உயரம். வெளிச்சாலை விஸிபிலிட்டி, போட்டி கார்களைவிட சூப்பர். ஏகப்பட்ட இடவசதி, முன்பக்கத்தில். 2,450 மிமீ வீல்பேஸாச்சே! பின் பக்கம் லெக்ரூமும் ஓகே! நல்லவேளை – எஸ்-க்ராஸ் மாதிரி டிசையரில் ரியர் ஏசி வென்ட்டில் கை வைக்கவில்லை மாருதி. சூப்பர்!

ZXi வேரியன்ட்டில் ஸ்மார்ட்ப்ளே ஸ்டுடியோ இன்டர்ஃபேஸ். 7.0 இன்ச் டச் ஸ்க்ரீன் நன்றாகத்தான் இருக்கிறது. இரட்டை வட்ட வடிவ அனலாக் கொண்ட TFT MID ஸ்க்ரீனும் புதுசு. ஸ்விஃப்ட்போலவே லெதர் சுற்றப்பட்ட, வுட் ஃபினிஷிங் கொண்ட ஃப்ளாட் பாட்டம் ஸ்டீயரிங் வீலில், கன்ட்ரோல்கள் இருந்தன. அட, க்ரூஸ் கன்ட்ரோல் சேர்த்திருக்கிறார்கள். ஆட்டோமேட்டிக்கில் ESP, ஹில் ஹோல்டு அசிஸ்ட் இருந்தது. வாவ்! ஒயர்லெஸ் சார்ஜிங்தானே இப்போ ட்ரெண்ட்? அதற்கெல்லாம் டிசையரில் நாளாகும் போல!

விலை: 7.17 – 10.55 லட்சம் வரை (சென்னை ஆன்ரோடு)
விலை: 7.17 – 10.55 லட்சம் வரை (சென்னை ஆன்ரோடு)

இன்ஜின்தான் முக்கியமான மாற்றம். ஸ்டார்ட் செய்தவுடனேயே டிசையரா இது என்று நம்ப முடியவில்லை. வைப்ரேஷன் காலியாகி இருந்தது. இதன் K Series டூயல் ஜெட் VVT இன்ஜின், செம ஸ்மூத். ஒவ்வொரு சிலிண்டருக்கும் இரண்டு இன்ஜெக்டர்கள் இருப்பதுதான் காரணம். இதனாலேயே இதன் ரெவ் ரெஸ்பான்ஸ் கூடியிருப்பதுபோல் தெரிகிறது.

இந்த 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினின் பவர் 90bhp. ரெவ் செய்ததும், பழைய டிசையரைவிட 1,000rpm-ல் இருந்து ஈஸியாய் முன்னேறியது புது டிசையர். கியர்ஷிஃப்ட்டிங் ஷார்ட்டாக இருந்தது. பெர்ஃபாமென்ஸில் திணறவில்லை. லோ ரெவ்களில் விர்ரெனக் கிளம்பியது டிசையர். சிட்டி டிராஃபிக்கில் இது செமையாய் இருக்கும். அதாவது, அதிகமான கியரில்கூட மெதுவாய்ப் போனாலும் திணறவில்லை.

அதே டாப் கியரில் 6,400rpm வரை டேக்கோ முள் துடிக்கவிட்டேன். இது பழைய K-12 இன்ஜினைவிட 1,000rpm அதிகம். சரியாக 12 விநாடிகளில் 100 கி.மீ வேகத்தைத் தொட முடிந்தது டிசையரில். 0.6 விநாடிகள் பழைய டிசையரைவிட வேகம் இது. 90bhp கொண்ட ஹோண்டா அமேஸைவிட 1 விநாடி வேகம். ஆனால், இதில் இதன் போட்டியாளரான ஹூண்டாய் ஆராவின் GDI பெட்ரோல்தான் கிங். 10.6 விநாடிகள்தான் ஆரா எடுத்துக் கொள்ளும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

புது டிசையரின் அராய் மைலேஜிலும் கணிசமான முன்னேற்றம். இந்த மேனுவலின் மைலேஜ் 23.26 கிமீ என க்ளெய்ம் செய்கிறது மாருதி. பழசைவிட 1.2 கி.மீ அதிகம்.

மாருதி சுஸூகி டிசையர் ஃபேஸ்லிஃப்ட் 2020
மாருதி சுஸூகி டிசையர் ஃபேஸ்லிஃப்ட் 2020

பிஹைண்ட் தி வீலிலும் டிசையர் அருமை. நெடுஞ்சாலைகளில் ஸ்டீயரிங் போதுமான எடையுடன் போதிய ஃபீட்பேக்கைத் தருகிறது. சஸ்பென்ஷனும் தேவையான அளவு ஸ்டிஃப்பாக, இறுக்கமாகவும் இல்லாமல், தூக்கியும் போடாமல் பயணிக்க முடிகிறது.

டிசையர்... ஆல் ரவுண்டரா?

ஹூண்டாய் ஆரா டர்போ அளவுக்கு ஒரு ஃபன் டு டிரைவ் இல்லைதான். ஆனால், ஃப்ரெண்ட்லியாக, ஜாலியாகவே ஓட்டலாம் இந்த டிசையரை. அந்தளவு இதன் பெட்ரோல் இன்ஜினின் ஸ்மூத்னெஸும் ரிஃபைன்மென்ட்டும் அருமை. இன்ஜின் வேலைப்பாடுகளைப் பார்த்தால், நிச்சயம் மைலேஜிலும் ஏமாற்றாது டிசையர். என்ன, ஆட்டோமேட்டிக்கின் ZXi டாப் வேரியன்ட்டின் விலை கொஞ்சம் கையைக் கடிக்கலாம்.

சர்வீஸ் நெட்வொர்க், ஹேண்ட்லிங், பெர்ஃபாமென்ஸ், மைலேஜ் என ஒரு ஆல்ரவுண்டர் காம்பேக்ட் செடானைத் தேடிக் கொண்டிருந்தால்… டிசையர் ஸ்டீயரிங் வீலைப் பிடியுங்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு