கார்ஸ்
பைக்ஸ்
Published:Updated:

பிரெஸ்ஸா... ஃபேஸ்லிஃப்ட்டா... புதுசா?

மாருதி சுஸூகி விட்டாரா பிரெஸ்ஸா
பிரீமியம் ஸ்டோரி
News
மாருதி சுஸூகி விட்டாரா பிரெஸ்ஸா

ஃபர்ஸ்ட் டிரைவ்: மாருதி சுஸூகி விட்டாரா பிரெஸ்ஸா

எக்ஸ்போவில் பார்த்த விட்டாரா பிரெஸ்ஸாவை, கோவாவின் இண்டு இடுக்குகள் எல்லாம் விரட்டிப் பார்க்க மாருதி என்னை அழைத்திருந்தது. நான் ஓட்டிய ஆட்டோமேட்டிக் /மேனுவல் இரண்டுமே பெட்ரோல்.

இனி பிரெஸ்ஸாவில் டீசல் கிடையாது என்பதால், அதற்குப் பதிலாக இந்த பிரெஸ்ஸாவில் தனது சொந்தத் தயாரிப்பான 1.5 லி K சீரிஸ் இன்ஜினைப் பொருத்தியிருக்கிறது மாருதி. ஃபேஸ்லிஃப்ட் ஆகித்தான் வந்திருக்கிறது. ஆனால், இதை புதிய விட்டாரா பிரெஸ்ஸா என்று அழைக்கச் சொல்கிறது மாருதி. புது பிரெஸ்ஸா எப்படி இருக்கிறது?

ஸ்டைல்

கிரில்லில் இருந்தே மாற்றம் தொடங்கியிருந்தது புது பிரெஸ்ஸாவில். மிகப் பெரிய மாற்றம். வீட்டுக்கு ஜன்னல்போல் நான்கு ஸ்லாட்களில் வித்தியாசமாகவே இருக்கிறது. புரொஜெக்டர் LED ெஹட்லைட்ஸ், அதுவும் டூயல். DRL–ம் LED. ஸ்டைல். முன் பக்க பம்பரும் லேசாக மாறியிருக்கிறது. கீழே பனி விளக்குகள்; ஸ்கஃப் பிளேட் என்று உற்றுப் பார்க்காமலே மாற்றங்கள் தெரிந்தன.

 மாருதி சுஸூகி விட்டாரா பிரெஸ்ஸா
மாருதி சுஸூகி விட்டாரா பிரெஸ்ஸா

மற்றபடி காம்பேக்ட் எஸ்யூவிதான் என்பதால் நீள/அகலங்களில் பெரிதாக மாற்றம் இல்லை. 5 சீட்டர்தான். 16 இன்ச் ப்ரெசிஷன் கட் அலாய் வீல்கள், ஸ்போர்ட்டி லுக். பின் பக்கத்தில் டெயில் லைட்களும் LED. இங்கேயும் ஸ்கஃப் பிளேட்... நல்ல சேஞ்ச் ஓவர்தான். இந்த முறை சிவப்பு, நீலம் என்று கலர்களை அப்டேட் செய்திருக்கிறது மாருதி. மேலே கறுப்பு நிற ரூஃப் இருந்தது. இது டாப் மாடலான Zxi+ வேரியன்ட்டில் மட்டும்தான். ஆரஞ்ச் நிறத்திலும் ரூஃப் தேர்வு செய்து கொள்ளலாம். மாருதி ஷோரூமில் ஆக்சஸரீஸ் கேட்டும் வாங்கலாம். ஆனால், பின் பக்கம் டிஸ்க்கையும் சன்ரூஃபையும் தேடினேன். இல்லை. க்ரெட்டாவெல்லாம் இதில் அப்டேட் ஆகிவிட்டது.

உள்ளே

இன்டீரியரில் பழசுக்கும் புதுசுக்கும் பெரிய வித்தியாசமெல்லாம் இல்லை. பிரெஸ்ஸாவின் தனித்துவம் MID ஸ்க்ரீனில் ஹைபிரிட் சிஸ்டம் பற்றிய இன்ஃபோகிராபிக்ஸ். உயரமான டிரைவர் சீட்டில் உட்கார்ந்ததுமே நல்ல கம்ஃபர்ட் கிடைக்கிறது. உயரமான பில்லர்கள் எஸ்யூவி ஓட்டும் ஃபீலிங்கைக் கொடுத்தது. டிரைவிங் சீட் ஹைட் அட்ஜஸ்ட் பெரிதும் உதவியது. கோ–டிரைவர் சீட்டும் வசதியாக இருக்கிறது. ஹெட்ரெஸ்ட்கூடக் காரணமாக இருக்கலாம்.

பின் பக்கம் பெரிய விண்டோ. இடவசதியும் சூப்பர். ஹைபிரிட்டுக்கான லித்தியன் ஐயன் பேட்டரியை முன் பக்கப் பயணி சீட்டின் அடியில் வைத்திருக்கிறார்கள். இதனால் பின்னால் உட்கார்ந்திருப்பவர், காலை நன்றாக நீட்டி உட்கார முடியாது. பின் பக்கம் கப் ஹோல்டரோடு ஆர்ம்ரெஸ்ட்டெல்லாம் கொடுத்து அசத்தியிருந்தார்கள்.

வசதிகள்

2 காற்றுப்பைகள், ஏபிஎஸ், ISOFIX குழந்தைகள் சீட் ஆகியவை பேஸ் வேரியன்ட்டில்கூட உண்டு. ஆட்டோ ஹெட்லைட்ஸ், ஆட்டோ டிம்மிங் ரியர்வியூ மிரர், ஆட்டோ வைப்பர்ஸ், கீலெஸ் கோ, ஸ்டீயரிங் லெதர் ரேப்–அப், 7.0 இன்ச் டச் ஸ்க்ரீன், டூயல் டோன் ரூஃப், 16 இன்ச் அலாய் வீல்கள் எல்லாம் டாப் எண்டான Zxi+ வேரியன்ட்டில்தான். ஆனால், சில பிராக்டிக்கலான வசதிகளில் பின்தங்கிவிட்டது பிரெஸ்ஸா. ரியர் ஏ.சி வென்ட், ரியர் டிஸ்க் இதெல்லாம் இல்லை. ஹூண்டாய்போல வயர்லெஸ் சார்ஜிங், வென்டிலேட்டட் சீட்டுக்கெல்லாம் ரொம்ப நாள் ஆகும்போல!

டிரைவ்

இந்த 1.5லி K சீரிஸ் இன்ஜினையும் பெரிதாகக் குறை சொல்ல முடியவில்லை. சியாஸ், எர்டிகாவில் இருக்கும் அதே யூனிட்தான் இது. BS-6 தான்.. சாதாரண NA இன்ஜின்தான். இதன் பவர் 105bhp@6,000rpm, டார்க் 13.8kgm@4,400rpm.

இன்ஜின் I 1,462சிசி கியர் I 5 ஸ்பீடு மேனுவல்/4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் 
பவர் I 105bhp டார்க் I 13.8kgm விலை I சுமார்: ரூ.8.45–12 லட்சம்(மேனுவல்)
ரூ.11.75–13.5 லட்சம்(ஆட்டோமேட்டிக்)
இன்ஜின் I 1,462சிசி கியர் I 5 ஸ்பீடு மேனுவல்/4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் பவர் I 105bhp டார்க் I 13.8kgm விலை I சுமார்: ரூ.8.45–12 லட்சம்(மேனுவல்) ரூ.11.75–13.5 லட்சம்(ஆட்டோமேட்டிக்)

தினசரி டிரைவிங்குக்குப் பக்கவாக இருக்கும். ஐடிலிங்கில் செம ஸ்மூத் மற்றும் அமைதி. குறைந்த வேகங்களில் பெப்பியாக இருக்கிறது. ஆனால், எக்ஸைட்டிங் என்று சொல்ல முடியாது. ஓவர்டேக்கிங்கில் எனக்குக் கொஞ்சம் சிரமமாகவே இருந்தது. ‘சட் சட்’ எனக் கிளம்பிப் போக முடியவில்லை. காரணம், டர்போக்களில் காணப்படும் மிட் ரேஞ்ச் இதில் மிஸ்ஸிங். இருந்தாலும் 0–100 கி.மீ–யை இது 11.89 விநாடிகளில் கடந்து விடுகிறது. இதுவே வென்யூ டர்போ இன்ஜினுக்கு 11.4 விநாடிகள். அதாவது, டர்போவுடன் போட்டி போடுகிறது இந்த NA இன்ஜின். இதன் கியர் ஆக்ஸிலரேஷன் டெஸ்ட்டும் சூப்பர். 3–வது கியரில் 20–80 கி.மீ–க்கு 11.40 விநாடிகளும், 40–100 கி.மீ–க்கு 14.88 விநாடிகளும் ஆனது.

ஆட்டோமேட்டிக்/மேனுவல் இரண்டுமே ஓட்டிப் பார்த்தேன். க்ளட்ச்சும் செம லைட் வெயிட். ஓட்டவே ஆசையாக இருக்கிறது. இன்ஜினுடன் நல்ல பார்ட்னர்ஷிப் வைக்கிறது.

ஆட்டோமேட்டிக்கை ஸ்டார்ட் செய்தால், 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் இருந்தது. பழைய டீசல் ஏஎம்டி கியர்பாக்ஸைவிட கொஞ்சம் நவீனம். எல்லாம் ஸ்மூத். லேசாக மிதித்தாலே டாப் கியருக்கு ஆட்டோமேட்டிக்காக அப்டேட் ஆகிக் கொள்கிறது.

பொதுவாக ஆட்டோமேட்டிக்கில்தானே மைலேஜ் குறைவாக இருக்கும். ஆனால், ஆச்சரிய அதிசயமாக இந்த பிரெஸ்ஸாவில் ஆட்டோமேட்டிக்கில்தான் அராய் மைலேஜ் அதிகமாகக் காட்டுகிறது. லிட்டருக்கு 18.76 கி.மீ. இதுவே மேனுவலின் மைலேஜ் 17.03 கி.மீ.தான். இதுபோக, இந்த SHVS மைல்டு ஹைபிரிட் சிஸ்டத்தில் ஸ்டார்ட்/ஸ்டாப் வேறு இருப்பது மைலேஜுக்கு இன்னும் பலம். இதில் இன்டக்ரேட்டட் ஸ்டார்ட்டர் ஜெனரேட்டர் மற்றும் லித்தியன் ஐயன் பேட்டரி வைத்திருக்கிறார்கள். வேகம் குறையும்போது எனர்ஜி சேவரும் இருக்கிறது.

மற்றபடி இந்த டார்க் கன்வெர்ட்டரில் ‘ஹெட் நாட்’ என்று சொல்லக்கூடிய அந்தப் பிரச்னை தெரிந்தது. பொதுவாக, மைலேஜுக்காக AMT கியர்பாக்ஸில்தான் இந்தப் பிரச்னை தெரியும். அதாவது, ஆர்பிஎம் மீட்டரில் முள் எகிறும். ஆனால், வேகம் சொல்லிக்கொள்ளும்படி இருக்காது. ஆனால், இது ஒரு பெரிய பிரச்னை இல்லை.

ஹேண்ட்லிங்

ஸ்டீயரிங் செம லைட். மேடு பள்ளங்களில் ஏறி இறங்கும்போதும் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. ஆனால், அதிவேகங்களில் இந்த ஸ்டீயரிங்கின் துல்லியம் மேல் எனக்குக் கொஞ்சம் சந்தேகம். வேகமாகப் போனால், லேசாகத் தூக்கிப் போடவும் செய்தது. பாடி ரோலும் தெரிந்தது. கோவாவில் இருந்து 150 கி.மீ தொலைவில் இருக்கும் தூத்சாகர் அருவிக்குச் செல்லும்போது ஜீப்கள் மட்டும் போகக்கூடிய கரடுமுரடான தண்ணீர் நிறைந்த பாதையில் விட்டால் விட்டாரா தாங்குமா என்றுதான் நினைத்தேன். ஆனால், எந்த இடத்திலும் கீழே தட்டாமல் சென்றது பிரெஸ்ஸா. இதுபோன்ற நேரங்களில் `L’ கியர் பயன்படுத்துங்கள்.

 1. இன்டீரியர் பழசுக்கும் புதுசுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. 7 இன்ச் டச் ஸ்க்ரீன் ஓகே.
2.  மாருதியின் 1.5 லிட்டர் K சீரிஸ் இன்ஜின், மிட் ரேஞ்ச்சில் இன்னும் கொஞ்சம் பன்ச் தேவை.
3.  டூயல் டோன் ரூஃப். ஆரஞ்ச் நிற ரூஃபும் ஆப்ஷனில் உண்டு. ஆனால், க்ரெட்டா போல் ரியர் டிஸ்க், சன்ரூஃப் இல்லை.
1. இன்டீரியர் பழசுக்கும் புதுசுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. 7 இன்ச் டச் ஸ்க்ரீன் ஓகே. 2. மாருதியின் 1.5 லிட்டர் K சீரிஸ் இன்ஜின், மிட் ரேஞ்ச்சில் இன்னும் கொஞ்சம் பன்ச் தேவை. 3. டூயல் டோன் ரூஃப். ஆரஞ்ச் நிற ரூஃபும் ஆப்ஷனில் உண்டு. ஆனால், க்ரெட்டா போல் ரியர் டிஸ்க், சன்ரூஃப் இல்லை.

பிரெஸ்ஸா வாங்கலாமா?

புது பெட்ரோல் இன்ஜின், புது அப்டேட்ஸ் என்று புது பிரெஸ்ஸாவை ஓட்டியதே புது அனுபவமாகத்தான் இருந்தது. ஒரு 4 மீட்டர் கொண்ட எஸ்யூவிக்கு 1,462 சிசி என்பது செம. பெட்ரோல் இன்ஜினின் ஸ்மூத்னெஸ், ரிஃபைன்மென்ட் எல்லாம் ஓகே. அதிலும் ஆட்டோமேட்டிக்கின் ைஹபிரிட் சிஸ்டம் சூப்பர். சில கேபின் மாற்றங்களிலும், முக்கியமான சில மிஸ்ஸான வசதிகளையும் ஒப்பிடும்போது வென்யூ, எக்ஸ்யூவி 300 போன்றவற்றுடன் போட்டியிட இன்னும் நிறைய பயிற்சி வேண்டும் மாருதிக்கு. என்னதான் நெட்வொர்க், சேல்ஸ் போன்றவற்றில் கில்லியாக இருந்தாலும் – டீசலை மறந்துவிட்டு இந்த பெட்ரோலை வாடிக்கையாளர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பது போகப் போகத்தான் தெரியும்.