Published:Updated:

“எனக்கு பசிக்குது... எங்கே டிராஃபிக் இல்லை?” இந்த பென்ஸிடம் என்ன வேணாலும் கேட்கலாம்!

மெர்சிடீஸ் பென்ஸ் GLC 220
பிரீமியம் ஸ்டோரி
மெர்சிடீஸ் பென்ஸ் GLC 220

ஃபர்ஸ்ட் டிரைவ்: மெர்சிடீஸ் பென்ஸ் GLC 220

“எனக்கு பசிக்குது... எங்கே டிராஃபிக் இல்லை?” இந்த பென்ஸிடம் என்ன வேணாலும் கேட்கலாம்!

ஃபர்ஸ்ட் டிரைவ்: மெர்சிடீஸ் பென்ஸ் GLC 220

Published:Updated:
மெர்சிடீஸ் பென்ஸ் GLC 220
பிரீமியம் ஸ்டோரி
மெர்சிடீஸ் பென்ஸ் GLC 220

பென்ஸில் கார்கள் அடிக்கடி ஃபேஸ்லிஃப்ட் ஆகிக் கொண்டே இருக்கும். அப்படித் தான் பெங்களூருவில் இருந்து நந்தி ஹில்ஸ்... விமான நிலையம் என்று பாதி கர்நாடகா வரை சுற்றுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது – அதுவும் புதிதாக வந்த GLC ஃபேஸ்லிஃப்ட்டில். ஹெட்லைட்ஸ், டெய்ல் லைட்ஸ், பம்பர்கள், 19 இன்ச் அலாய் வீல்கள், புது இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் என்று ஏகப்பட்ட மாற்றங்களுடன் வந்திருக்கிறது புதிய பென்ஸ் GLC 220d.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பெரிய கிரில் மற்றும் லோகோவைப் பார்த்ததுமே கார் மாறியிருக்கு என்று சொல்லி விடலாம். பின்னால், டிஃப்யூஸருக்குள்ளேயே டபுள் எக்ஸாஸ்ட்டும் கொடுத்திருக்கிறார்கள். ஹெட்லைட், டெயில் லைட் முழுதும் LED மயம். வெளியே தெரியாத மாற்றம் ஒன்றும் இருக்கிறது – பூட் ஃப்ளோரில் ஸ்பேர் டயர் கொடுத்திருப்பதால், லக்கேஜ் இடவசதி முன்பைவிடச் செம!

1. சீட் அட்ஜஸ்ட்டுக்கான பட்டன் கதவில்...   2.இன்டீரியர் `C’ க்ளாஸை நினைவுப்படுத்துகிறது.
 3.10.25 டச் ஸ்க்ரீன்... கூடவே MBUX இன்டர்ஃபேஸ் சிஸ்டம்...
 4.மீட்டர்கள் அனலாக்தான். நடுவில் உள்ள MID ஸ்க்ரீனில், கியர் மோடு முதல் எல்லா தகவல்களும் தெரியும்.
 5.பூட் ஸ்பேஸ் தாராளம். பொருட்களை ஏற்றி இறக்கவும் சுலபமாக இருக்கிறது.
1. சீட் அட்ஜஸ்ட்டுக்கான பட்டன் கதவில்... 2.இன்டீரியர் `C’ க்ளாஸை நினைவுப்படுத்துகிறது. 3.10.25 டச் ஸ்க்ரீன்... கூடவே MBUX இன்டர்ஃபேஸ் சிஸ்டம்... 4.மீட்டர்கள் அனலாக்தான். நடுவில் உள்ள MID ஸ்க்ரீனில், கியர் மோடு முதல் எல்லா தகவல்களும் தெரியும். 5.பூட் ஸ்பேஸ் தாராளம். பொருட்களை ஏற்றி இறக்கவும் சுலபமாக இருக்கிறது.

எஸ்யூவி என்பதால், பெரிய 19 இன்ச் வீல்களைக் கொடுத்திருக்கிறார்கள். பழசில் 18 இன்ச்தான் இருந்தது. எனவே ரோடு பிரசன்ஸ் & கிரிப் அருமை.

உள்ளேதான் எக்கச்சக்க மாற்றங்கள். சென்டர் கன்ஸோலில் மர வேலைப்பாடுதான் அருமை. அப்படியே அருவி மாதிரி சரிந்து விழுவது நச். எஸ்யூவி என்றாலும், செடானுக்கான பல விஷயங்களைக் கொடுத்திருக்கிறது பென்ஸ். படுக்கைவாட்டில் 10.25 டச் ஸ்க்ரீன், ‘C’ க்ளாஸ் காரில் இருப்பதைப்போல இருந்தது. இந்த டச் ஸ்க்ரீன்தான், GLC–ல் பெரிய மாற்றம்.

ஆனால் டயல்கள் அனலாக்கிலேயே இருந்தன. ‘C’ க்ளாஸில் டிஜிட்டல் டிஸ்ப்ளே உண்டு. நடுவில் உள்ள சின்ன ஸ்க்ரீன் மட்டும்தான் டிஜிட்டல். கியர் இண்டிகேட்டர், ரேஞ்ச் போன்ற சில விஷயங்கள் இதில் டிஸ்ப்ளே ஆயின.

ஓகே! பென்ஸ் GLC–ன் முக்கியமான அப்டேட்டுக்கு வருவோம். MBUX எனும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்தான் நம் கவனத்தை ஈர்த்த அப்டேட். MBUX என்றால், Mercedes Benz User Experience என அர்த்தம். இதன் டச் இன்டர்ஃபேஸ் செம! கியர் லீவர் இருக்கும் இடத்தில், ஒரு டச் பேடு கொடுத்திருக்கிறார்கள். உயரம் குறைவானவர்கள் எட்டிப் போய் டச் ஸ்க்ரீனை ஆப்பரேட் செய்ய வேண்டியதில்லை. டச் பேடிலேயே தடவலாம்.

விலை: `57.75 லட்சம் (எக்ஸ் ஷோரூம்)
விலை: `57.75 லட்சம் (எக்ஸ் ஷோரூம்)

MBUX–ன் முக்கியமான அம்சம் – வாய்ஸ் கமாண்ட்தான். ‘‘ஹே மெர்சிடீஸ்’’ எனக் கூப்பிட்டு, ‘‘எனக்குப் பிரியாணி வேணும்... எந்த ரோட்டில் டிராஃபிக் கம்மி... நீ எவ்வளவு டாப் ஸ்பீடில் போவே... ’’ என்று இந்த பென்ஸிடம் என்ன வேண்டுமானாலும் ஜாலியாகக் கேட்கலாம்.

‘‘எனக்குப் பசிக்குது’’ என்றால், பக்கத்தில் உள்ள நல்ல ரெஸ்டாரன்ட் லிஸ்ட் வருகிறது. ‘‘கமல் பாட்டு வேணும்’’ என்றால், கமல்ஹாசன் பாடல்கள் லிஸ்ட் வருகிறது. ‘‘குளிருது’’ என்றால், ஏ.சி தானாகக் குறைகிறது. பாசக்கார பென்ஸாக இருக்கிறது GLC. எல்லாம் ஓகே! ஆனால், எம்ஜி போன்ற கார்களில் இருப்பதுபோல், சில முக்கியமான வாய்ஸ் கமாண்ட்கள் வேலை செய்யவில்லையே?

சன் ரூஃப் திறப்பது, பவர் விண்டோவை இறக்குவது போன்ற சில முக்கியமான விஷயங்களுக்குப் போராட வேண்டியிருக்கிறது. ஒருவேளை – இதை புரோக்ராம் செய்யவில்லையா எனத் தெரியவில்லை. அன்லிமிட்டெட் வாய்ஸ் கமாண்ட் உண்டு என்று பென்ஸ் சொன்னதால், இதைக் கேட்க வேண்டியிருக்கிறது.

பென்ஸின் டிரேட் மார்க்கான கியர் லீவர், இண்டிகேட்டர் ஸ்டாக் போல் ஸ்டீயரிங்குக்கு வலதுபுறம் கொடுத்திருக்கிறார்கள். சீட் அட்ஜஸ்ட்மென்ட்டும் கதவில் இருந்தது. மெமரி அட்ஜஸ்ட்தான். ஹூண்டாய்கூட இப்போது வென்டிலேட்டட் சீட்ஸ் தர ஆரம்பித்து விட்டது. மேலும் பென்ஸுக்கு முக்கியமான ஒரு கண்டனம் – ஹெட்அப் டிஸ்ப்ளே இல்லாதது. வால்வோ XC60 காருக்கு இந்த GLC போட்டி என்பதால், பென்ஸ் இதைக் கொஞ்சம் யோசித்திருக்க வேண்டும்.

 கிரவுண்ட் கிளியரன்ஸ், 19 இன்ச் வீல்ஸ் ஓகேதான்! ஆனால், 4 வீல் டிரைவ் இல்லை.
கிரவுண்ட் கிளியரன்ஸ், 19 இன்ச் வீல்ஸ் ஓகேதான்! ஆனால், 4 வீல் டிரைவ் இல்லை.

பெட்ரோல்/டீசல் இரண்டுமே BS-6. பென்ஸின் இன்ஜின் ரிஃபைன்மென்ட் பற்றிக் கேட்கவா வேண்டும்? இந்தப் புது டீசல் இன்ஜினின் பெயர் OM654 2.0 லிட்டர் இன்ஜின். பழைய 2.1 லிட்டரைவிட 24 bhp அதிகம். அதாவது, 194 bhp. ஆனால், பெரிய வித்தியாசம் தெரியவில்லை. காரணம், டார்க் 40kgm. ஏனோ டாடா ஹெக்ஸா நினைவுக்கு வந்துபோனது. ஐடிலிங் வழக்கம்போல், 900 rpm-க்குக் கீழ்தான் ஆரம்பிக்கிறது. ஆனால், இனிஷியல் பிக்–அப் செம! விருட்டென 140 கி.மீ–ல் பறக்க முடிந்தது GLC–ல்.

பவர் டெலிவரி பழசைவிட லீனியராக இருக்கிறது. 9 ஸ்பீடு ஆட்டோமேட்டிக், வழக்கம்போல் தானாகவே அற்புதமாக வேலை செய்கிறது. பெட்ரோலும் 2 லிட்டர்தான். இதில் இருப்பது 197 bhp–யும், 32.0kgm டார்க்கும். இதிலும் பவர் டெலிவரி சூப்பர். பெட்ரோலை ஓட்ட அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை.

பென்ஸின் ரைடு குவாலிட்டிதான் அடுத்த ப்ளஸ். C க்ளாஸ்போல், சஸ்பென்ஷனில் கொஞ்சம் வேலை பார்த்துள்ளார்கள். மேலும், பெரிய வீல்கள் என்பதால், கொஞ்சம் ஆஃப்ரோடும் செய்யலாம். நம்பிக்கையாகவும் இருக்கிறது. ஆனால், 4 வீல் இல்லை என்பதை ஆஃப்ரோடு அன்பர்கள் நினைவில் கொள்ளுங்கள். அதேபோல், இதன் ஸ்டெபிலிட்டியும் அடடா ரகம். 150 கி.மீ வேகத்தில் போனாலும், பருந்துபோல் ஸ்டேபிளாகப் பறக்கிறது GLC. பிரேக்கிங்கில் மட்டும் இன்னும் கொஞ்சம் ஷார்ப்னெஸ் இருந்திருக்கலாம்.

வால்வோ XC60, பிஎம்டபிள்யூ X3, ஆடி Q5 கார்களுக்குப் போட்டியாக வந்திருக்கிறது இந்த GLC. பெரிய எக்ஸைட்டிங் கிடைக்கவில்லை; ஆனால், ரைடு குவாலிட்டியும் நிலைத்தன்மையும் ஸ்மூத்தான ரிஃபைன்மென்ட் கொண்ட இன்ஜினும் நிச்சயம் வேற லெவல்! MBUX அப்டேட்டும் பெஸ்ட்.

சில வசதிக் குறைபாடுகளைத் தாண்டி விலையில் மட்டும் கொஞ்சம் அலெர்ட்டாக இருந்தால், மற்ற போட்டி கார்களுக்கு டஃப் கொடுக்கலாம் இந்த பென்ஸ் GLC.

பென்ஸ் GLC காரின் டிரைவ் வீடியோவைக் காண இந்த QR கோடை ஸ்கேன் செய்யவும்.