Published:Updated:

எஸ்யூவியில் இது S க்ளாஸ்!

விலை: சுமார் ரூ1.15 கோடி
பிரீமியம் ஸ்டோரி
News
விலை: சுமார் ரூ1.15 கோடி

ஃபர்ஸ்ட் டிரைவ்: மெர்சிடீஸ் பென்ஸ் GLS

பென்ஸில் செடான்களில் இருக்கும் சொகுசு, எஸ்யூவிகளில் இல்லையென்பதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. உதாரணத்துக்கு, பென்ஸில் s க்ளாஸை எடுத்துக் கொண்டால்... சொகுசின் உச்சம் இந்த S க்ளாஸ். அதே சொகுசோடு, ஒரு சொகுசான எஸ்யூவியைக் களம் இறக்கிவிட்டது மெர்சிடீஸ் பென்ஸ். பழைய GLS-ன் ஃபேஸ்லிஃப்ட்தான் இது. பார்ப்பதற்குப் பெரிய லிமோசின் மாதிரியும் சொகுசாக இருக்க வேண்டும்; எஸ்யூவி கேரக்டரிலும் அசத்த வேண்டும் என்று நினைத்துச் செய்திருக்கிறார்கள் இந்த பென்ஸ் GLS காரை.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

வெளியே

பழசைவிட 77 மிமீ நீளத்திலும், 22 மிமீ அகலத்திலும் பெருசாகி இருக்கிறது புது GLS. இதன் நீளம் 5,207 மிமீ. நீளத்தில் 60 மிமீ-யை வீல்பேஸுக்கு எக்ஸ்ட்ராவாக ஆக்கியிருக்கிறார்கள். இதன் வீல்பேஸ் 3,135 மிமீ. 7 சீட்டர்களின் அதிகபட்ச வீல்பேஸே- 2,700 முதல் 2,850 வரைதான் இருக்கும். ஆம், இந்த எஸ்யூவி ஒரு 7 சீட்டர். அதனால்தான் இத்தனை பெரிய வீல்பேஸ்.

விலை: சுமார் ரூ1.15 கோடி
விலை: சுமார் ரூ1.15 கோடி

ஏர் சஸ்பென்ஷன் என்பதால், காரின் உயரத்தையும் அதிகரித்திருக்கிறார்கள். இதன் பானெட்டே என் மார்புக்குப் பக்கத்தில் இருந்தது. 21 இன்ச் வீல்கள்.. எம்மாடியோவ்! 5 ஸ்போக் அலுமினியம் அலாய்வீல்கள், கறுப்பாக இருந்திருந்தால் இன்னும் செமையாக இருந்திருக்கும். இந்த டயர்களில் ஒரு வித்தியாசம் தெரிந்தது. முன்பக்கம் 275 செக்ஷனும், பின்பக்கம் 315-ம் இருந்தன. லம்போகினி கார்களில் இருக்கக் கூடிய செக்ஷன் இது. இதன் ரோடு பிரசன்ஸுக்கு இவைதான் காரணம்!

ஆனால், இதன் ஹெட்லைட்கள் இந்த காருக்கு ரொம்ப சிறுசாகத் தெரிந்தன. சிறுசு என்பதால், பவரும் சிறுசாக இருந்து விடுமோ என்று நினைக்க வேண்டாம். இதில் ‘Ultra Range High Beam’ வசதியைச் சேர்ந்திருக்கிறது. அதாவது, இது சுமார் 650 மீட்டர் வரை வெளிச்சத்தைப் பீய்ச்சியடிக்கும். எல்இடி டெயில் லைட்களும் ஸ்லிம் அண்ட் ஸ்லீக் டிசைனில் இருந்தன.

7 சீட்டர் லிமோசின்…

எத்தனையோ 7 சீட்டர்கள் இருக்கிறதுதான்; ஆனால், பென்ஸின் 7 சீட்டர்தான் சொகுசு ப்ளஸ் காஸ்ட்லி. நடுவரிசை சீட்களை ஒரு பட்டன் மூலம் இறக்கி, 3-வது வரிசைக்கு ஈஸியாகப் போய் வரலாம். ஆனால், எல்லாம் மெதுவாகத்தான் நடக்கிறது. பூட்டுக்குக்கூட பட்டன் உண்டு. பொருட்களை ஈஸியாக ஏற்றி இறக்க, பூட்டுக்குக் கீழே உள்ள பட்டனை ஆன் செய்தால் போதும், ஏர் சஸ்பென்ஷன் அப்படியே இறங்கி, காரும் கீழே இறங்குகிறது. 3 மற்றும் 2-வது சீட்களை மடிக்கவும் பட்டன்தான். 2,400 லிட்டர் இடவசதி கிடைக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

3-வது வரிசையில் பழைய வெர்ஷனைவிட இடவசதி குறைவு. ஆனால், ஓகே. நடுவரிசை சீட்களை இன்னும் கொஞ்சம் முன்னே நகர்த்தி இருக்கலாம். ஆனால், வேண்டுமென்றேதான் இதைச் செய்திருக்கிறது பென்ஸ். லிமோ ஃபீலிங் வர வேண்டுமென்றால், நடுவரிசைதானே முக்கியம். பூட்டில் 355 லிட்டர் இடவசதி கிடைக்கும் இதை, எத்தனை GLS ஓனர்கள் இதை 7 சீட்டராகப் பயன்படுத்தப் போகிறார்கள்? அதனால், நடுவரிசையில் வந்தமர்ந்தால், நிச்சயம் லிமோசின் காரில் பயணிப்பதைப்போல் சொகுசாகப் போகலாம். ஆர்ம்ரெஸ்ட்டை இறக்கினால், கப் ஹோல்டர்கள்போல், டேப்லெட் ஹோல்டரெல்லாம் கொடுத்திருந்தார்கள். அதுவும் ஒயர்லெஸ் சார்ஜிங் வசதியோடு. முக்கியமான விஷயங்களான சன்ரூஃப், நேவிகேஷன், சீட் அட்ஜஸ்ட் போன்றவற்றையும் இதில் சேர்த்திருந்தால், GLS ரசிகர்கள் அகமகிழ்ந்திருப்பார்கள். இந்த சீட்களை 30 டிகிரியில் ரெக்லைன் செய்யும் வசதி இருந்தாலும், எஸ் க்ளாஸ் அளவுக்கு ஒரு அனுபவம் மிஸ்ஸிங்.

முன் பக்கம்

லெதர் சீட்டில் ஆரம்பிக்கிறது பென்ஸின் அட்டகாசம். பின் சீட்டில் லிமோசின் சொகுசு என்றால், முன் சீட்கள்தான் என்டர்டெய்ன்மென்ட்டின் உச்சம். எவ்வளவு பெரிய டேஷ்போர்டில், எவ்வளவு பெரிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் என்று பார்த்தால்… டச் ஸ்க்ரீனையும் அதோடு சேர்த்திருந்தார்கள். அதனால்தான் இவ்வளவு நீளமாகத் தெரிகிறது. அதுவும் கண்ணாடி பேனல் என்பதால், ஹைடெக்காக இருக்கிறது.

1. டேஷ்போர்டில் எவ்வளவு நீளமான கன்ஸோல். டச் ஸ்க்ரீன், இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் எல்லாவற்றையும் சேர்த்திருக்கிறார்கள்.  2.  டிஜிட்டல்/அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் பேனலை கஸ்டமைஸ் செய்துகொள்ளலாம். 
3.  பின் பக்கம் டேப்லெட் கன்ட்ரோலர்... இதன் மூலமும் காரின் சில ஆப்ஷன்களை கன்ட்ரோல் செய்யலாம்.
1. டேஷ்போர்டில் எவ்வளவு நீளமான கன்ஸோல். டச் ஸ்க்ரீன், இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் எல்லாவற்றையும் சேர்த்திருக்கிறார்கள். 2. டிஜிட்டல்/அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் பேனலை கஸ்டமைஸ் செய்துகொள்ளலாம். 3. பின் பக்கம் டேப்லெட் கன்ட்ரோலர்... இதன் மூலமும் காரின் சில ஆப்ஷன்களை கன்ட்ரோல் செய்யலாம்.

டேஷில் செவ்வக வடிவ ஏர்வென்ட்டுகள் இன்னும் கொஞ்சம் பெரிதாக இருந்திருக்கலாம். GLE-ல் இருப்பதுபோல், சிறிசாகத் தெரிகிறது. காரைச் சுற்றிலும் 13 ஸ்பீக்கர்கள். பர்மெஸ்டர் ஆடியோ சிஸ்டம். ஹோம் தியேட்டர் எஃபெக்ட்டில் அலறுகிறது.

12.3 இன்ச் டச் ஸ்க்ரீன், பனோரமிக் சன்ரூஃப், 64 வகையான கலர் ஆம்பியன்ட் லைட் செட்டிங், முன்-பின் வயர்லெஸ் சார்ஜிங், பின் சீட்டில் டி.வி திரை, மொத்தம் 11 இடங்களில் USB சார்ஜிங் போர்ட்டுகள், ஜியோ ஃபென்ஸிங், வெஹிக்கிள் ஃபைண்டர், ஜன்னலுக்குக்கூட ரிமோட் ஆபரேஷன் என்று கலக்குகிறது.

டிரைவிங், ஆஃப்ரோடிங்

மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள். GLS 400d என்பது டீசல் வேரியன்ட். பெட்ரோல் வேரியன்ட்டின் பெயர் GLS450. இரண்டுமே 6 சிலிண்டர் இன்ஜின்கள். டர்போ பெட்ரோலின் பவர் 367bhp, டார்க் 50kgm. இதிலேயே 48v மைல்டு ஹைபிரிட் சிஸ்டமும் உண்டு. இது எக்ஸ்ட்ராவாக 22bhp பவரும், 2.5kgm டார்க்கும் கொடுக்கிறது. செம சைலன்ட்டாக இருக்கிறது பெட்ரோல். ஐடிலிங்கில் சுத்தமாகச் சத்தம் தெரியவில்லை. ஓடிக்கொண்டிருக்கும்போதுகூட ஆன்லதான் இருக்கா என்று சந்தேகமாகவே இருக்கிறது. டீசலைவிட செம க்விக்காக இருக்கிறது பெட்ரோல். ஹைபிரிட் சிஸ்டம் நன்றாக காலிபிரேட் செய்துள்ளார்கள். 9 ஸ்பீடு ஆட்டோ கியர்பாக்ஸ் என்கேஜிங்கும் அருமை. 0-100 கி.மீ-யை வெறும் 7.2 விநாடிகளில் கடக்கிறது இந்த 2.5 டன் எடை கொண்ட எஸ்யூவி. (போன இதழில் 6 விநாடிகள் என்று க்ளெய்ம் செய்திருந்தோம்.)

இதுவே டீசல், 0-100 கி.மீ-யை 7.48 விநாடிகளில் கடந்தது. S 350d மற்றும் G 350d கார்களில் இருக்கும் அதே இன்ஜின்தான் இந்த டீசல். அதைத்தான் 400d என்று மாற்றியிருக்கிறார்கள். அதாவது, இன்னும் பவர்ஃபுல். . இந்த 3.0லிட்டர், இன்லைன் 6 சிலிண்டர் டீசல் இன்ஜின், 330bhp பவரையும், 70kgm டார்க்கையும் கொடுக்கிறது. ஐடிலிங்கில் லேசாக உதறியது. அதற்குப் பிறகு சத்தமே இல்லை. வெறித்தனமான ஆக்ஸிலரேஷன் கிடைக்கும் என்று நினைத்தேன். பெரிதாக இம்ப்ரஸ் செய்யவில்லை. டீசலின் 9 ஸ்பீடு ஆட்டோ கியர்பாக்ஸ், ஆரம்பத்தில் டவுன்ஷிஃப்ட்டில் கொஞ்சம் தயங்கியது. ஆனால், இந்த நேரத்தில் டீசலின் எக்கச்சக்க டார்க் வந்து புல்லிங் பவரில் தலைதூக்குகிறது. 0-200 கி.மீ-யை இந்த டீசல் 32.92 விநாடிகளில் கடக்கிறது.

ஏர் சஸ்பென்ஷன் என்பதால், ஓட்டுதலில் செம சொகுசு. GLE போல இதில் ஸ்போர்ட் மோடைக் காலி செய்து விட்டார்கள். ஆஃப்ரோடிங்குக்கு ஏற்றபடி சஸ்பென்ஷனை உயர்த்திக் கொள்ளலாம். ஸ்டீயரிங் ஃபீட்பேக்கும் செம. அதனால், ஹைவேஸில் ஸ்டெபிலிட்டியில் பயப்படத் தேவையில்லை. ஆன்ட்டி ரோல் பார் இருப்பதால், பாடி ரோலும் கன்ட்ரோல் ஆகியிருக்கிறது. இத்தனை பெரிய காரை பார்க் செய்வது நீங்கள் நினைப்பதுபோல் பெரிய டாஸ்க்தான். இதன் டர்னிங் ரேடியஸ், 12.52 மீட்டர். U டர்ன் இல்லை; O டர்ன்தான் போட வேண்டும். ஆனால், இதன் லைட் வெயிட் ஸ்டீயரிங்தான் பார்க்கிங்கை எளிதாக்குகிறது.

எஸ்யூவியில் இது S க்ளாஸ்!

முதல் தீர்ப்பு

எஸ்யூவியின் S க்ளாஸ் என்று இந்த GLS-யைச் சொன்னாலும், சொகுசில் s க்ளாஸை நெருங்க முடியவில்லை. ஆனால், சொகுசுக்குப் பஞ்சமில்லை. S க்ளாஸைவிட சுமார் 38 லட்சம் குறைந்த விலை எக்ஸ் ஷோரூமில் கிடைக்கும் GLS, ஒரு பக்காவான சொகுசு, ஆஃப்ரோடிங், சாஃப்ட்ரோடிங் எஸ்யூவிதான். என்ன, இதற்கு ஒரு நீங்கள் சுமார் 1.15 கோடி எடுத்து வைக்க வேண்டும்.