Published:Updated:

ஹெக்டர் ப்ளஸ்ஸில் என்ன ப்ளஸ்?

எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்
பிரீமியம் ஸ்டோரி
எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்

ஃபர்ஸ்ட் டிரைவ்: எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்

ஹெக்டர் ப்ளஸ்ஸில் என்ன ப்ளஸ்?

ஃபர்ஸ்ட் டிரைவ்: எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்

Published:Updated:
எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்
பிரீமியம் ஸ்டோரி
எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்

நிறைய பேர் கொண்ட குடும்பத்தினருக்கு பெர்ஃபாமென்ஸெல்லாம் முக்கியம் இல்லை; அவர்களுக்கு இன்ஜின் ஆப்ஷனைவிட சீட்டிங் ஆப்ஷன்தான் முக்கியம். அதனால்தான் எம்பிவி, எஸ்யூவி ஆகியவை அவர்களின் விருப்பத் தேர்வாக இருக்கும். “டஸ்ட்டர் பிடிச்சிருக்கு; ஆனா 5 சீட்டர்தானே’’ என்று நிறைய பேர் டஸ்ட்டரைக் குறைபட்டுப் பேசிப் பார்த்திருக்கிறேன். எம்ஜி ஹெக்டருக்கும் அப்படியொரு குறை வந்துவிடக் கூடாதில்லையா? அதனால்தான் புத்திசாலித்தனமாக 6 சீட்டர் ஆப்ஷனைக் கொண்டு வந்துவிட்டது எம்ஜி. ஆம், எக்ஸ்ட்ராவாக ஒரு வரிசை சீட் வைத்து `ஹெக்டர் ப்ளஸ்’ எனும் மாடலை லாஞ்ச் செய்துவிட்டது அது. 16.47 லட்சத்தில் இருந்து 22.57 லட்சம் வரை ஆன்ரோடு விலையில் ஹெக்டர் ப்ளஸ், இனி சாலைகளில் ஓட ஆரம்பிக்கும். ஹெக்டர் ப்ளஸ் எப்படி இருக்குனு பார்க்கலாம்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நீளமான ஹெக்டரா இது?

முதல் விஷயம் – `ஹெக்டரின் உயரம் (1,760mm), அகலம் (1,835mm), வீல்பேஸ் (2,750mm) போன்ற டைமென்ஷன்களில் மாற்றம் செய்யாமல், நீளத்தில் மட்டும் 65 மிமீ கூட்டி புத்திசாலித்தனமாக வேலை பார்த்திருக்கிறது எம்ஜி. இதுகூட ரீ-டிசைன் செய்யப்பட்ட அந்த பம்பர்கள்தான் காரணம்.

எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் - விலை: `16.47 லட்சம் முதல் 22.57 லட்சம் (சென்னை ஆன்ரோடு), ப்ளஸ்: எக்ஸ்ட்ரா சீட், வசதிகள், 2-வது சீட் இடவசதி I மைனஸ்: டிரைவிங் பன்ச், 3-வது சீட் நெருக்கடி
எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் - விலை: `16.47 லட்சம் முதல் 22.57 லட்சம் (சென்னை ஆன்ரோடு), ப்ளஸ்: எக்ஸ்ட்ரா சீட், வசதிகள், 2-வது சீட் இடவசதி I மைனஸ்: டிரைவிங் பன்ச், 3-வது சீட் நெருக்கடி

அளவு, உருவம் எல்லாம் அதே ஹெக்டர்தான். நீளத்தைத் தவிர்த்து - உற்றுப் பார்த்தால் சில நுணுக்கமான மாற்றங்களைக் கண்டுபிடிக்கலாம். கிரில் மெஷ் டிசைன் மாறியுள்ளது. கிரில்லில் ஃப்ரேமே இல்லை. அதனால்தான் பெரிய கிரில்போல் தெரிகிறது. எல்இடி டே டைம் ரன்னிங் லைட்ஸ் கொஞ்சம் மேலே ஏறியிருக்கின்றன. எல்இடி ஹெட்லைட் யூனிட்டும் சற்றே கீழே இறங்கியிருக்கிறது.

பின் பக்கம் ரெஃப்ளெக்டர் லைட்கள், அப்படியே டெயில் லைட்ஸுடன் இணைந்திருப்பது சூப்பர். ஹைபிரிட் மற்றும் ஹெக்டர் ப்ளஸ் எனும் லோகோ. ஆடி கார்களில் இருப்பதுபோல் ஃப்ளோட்டிங் ஸ்டைல் இண்டிகேட்டர்கள், ஹைவேஸில் ஹெக்டர் நின்றால் தனித்துத் தெரிய வைக்கும். குவார்ட்டர் கிளாஸ், ரொம்ப சிறுசுதான். ஷார்க் ஃபின் ஆன்ட்டெனா, ரூஃப் ரெயில், பனோரமிக் சன்ரூஃப் ஆகியவை அப்படியே தொடர்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இன்டீரியரில் என்ன புதுசு?

டிரைவர் கார் ஓட்ட, பின்சீட்டில் ரிலாக்ஸ்டாகப் பயணிப்பவர்களை மனதில் வைத்து உருவாக்கப்பட்ட கார் இது. இதன் உள்ளே சென்றால் வழக்கம்போல் அந்தப் பெரிய 10.4 இன்ச் டச் ஸ்க்ரீன் வரவேற்கிறது. முக்கியமான மாற்றம் என்றால், அந்த நடுவரிசை கேப்டன் சீட்களும், பின் பக்கம் எக்ஸ்ட்ராவாக ஒரு வரிசை சீட்டும். பிரெளன் கலர் லெதர் வேலைப்பாடுகள், சீட்களைப் பளிச்சென காட்டுகின்றன. கேப்டன் சீட்டில் உட்கார்ந்தால், சாலையும் சுற்றுபுறமும் தடைகள் இல்லாமல் தெரிகிறது. குஷனிங், முதுகுக்கான சப்போர்ட் கொடுக்கும் ரெக்லைன் வசதி, ஹெட்ரூம், முழங்கைகளை வைத்துக்கொள்ள ஆரம்ரெஸ்ட். அதில் கப் ஹோல்டர்கள் வைக்க இடம்... எல்லாமே சொகுசு.

ஹெக்டருக்கும் ஹெக்டர் ப்ளஸ்ஸுக்கும் இன்டீரியரில் கலர் தீமில் மட்டும் சில மாற்றங்கள். சீட் கலரிலேயே டேஷ்போர்டில் வேலைப்பாடுகள். பெரிய 10.4 இன்ச் டச் ஸ்க்ரீன், செம கம்ஃபர்ட்.
ஹெக்டருக்கும் ஹெக்டர் ப்ளஸ்ஸுக்கும் இன்டீரியரில் கலர் தீமில் மட்டும் சில மாற்றங்கள். சீட் கலரிலேயே டேஷ்போர்டில் வேலைப்பாடுகள். பெரிய 10.4 இன்ச் டச் ஸ்க்ரீன், செம கம்ஃபர்ட்.

ஹெக்டரின் ட்ரம்ப் கார்டே – அந்தப் பின் பக்க தாராள இடவசதிதான். இதிலும் அப்படித்தான். உடலைக் குறுக்கி அமரத் தேவையில்லை. லெக்ரூமும் பிரமாதமாக இருந்தது. 3-வது வரிசை சீட்காரர்களிடம் திட்டு வாங்க வேண்டியதில்லை; கேப்டன் சீட்களை முன் பக்கம் நன்றாகவே இழுத்துக் கொள்ளலாம். என்ன, சீட்கள் இன்னும் கொஞ்சம் அகலமாகவும் மேல்நோக்கியும் இருந்திருக்கலாம். லோ பொசிஷன் செட்டிங் சீட்கள் என்பதால், தொடைக்கான சப்போர்ட் இன்னும் கொஞ்சம் தேவை. இருந்தாலும், இந்த செக்மென்ட்டில் நல்ல சொகுசான சீட்கள் எம்ஜி ஹெக்டர் ப்ளஸ்ஸில்தான்.

எம்ஜியின் ஹைபிரிட் வேரியன்ட்டில் மட்டும் இடவசதியில் இன்னொரு சிக்கல். லித்தியம் அயன் பேட்டரியை முன் பக்க சீட்டுக்கு அடியில் வைத்திருப்பதால், முன் பக்கப் பயணிக்கு லெக்ரூம் கொஞ்சம் டைட் ஆகவே இருக்கும்.

முக்கியமான 3-வது வரிசைக்குப் போகலாம். எம்ஜியே சொல்லிவிட்டது – இந்த எக்ஸ்ட்ரா சீட், பெரியவர்களுக்கானது இல்லை என்று. அது உண்மைதான். எர்டிகா, XL-6 போன்ற நெருக்கடியான கார்களைப் பார்த்ததுபோலவே இருக்கிறது. நடுவரிசை சீட்களைத் தள்ளி, குறுகலான பாதை வழியே 3-வது சீட்டுக்குப் போவது நல்ல `உடற்பயிற்சி'. பெரியவர்களை இந்தச் சீட்டில் அமர வைத்துப் பயணிப்பது, நிச்சயம் தண்டனைதான். சீட்களைக் கொஞ்சம் உயரமாக வடிவமைத்திருந்தாலும், எனக்கே முழங்காலை மடித்துத்தான் அமர வேண்டியிருந்தது. உயரம் அதிகமானவர்கள் – நடுவரிசையைப் பிடித்துக் கொள்ளுங்கள். ஆனால் மூன்றாவது வரிசையில் ஏ.சி வென்ட்டும், புளோயர் கன்ட்ரோலும் கொடுத்திருக்கிறார்கள்.

 1. ஹெக்டருக்கும் ஹெக்டர் ப்ளஸ்ஸுக்கும் லைட் அசெம்பிளியில் ஒரு ஸ்டைலான மாற்றம்.   
2. எலெக்ட்ரிக் விங் மிரர்கள். ஜன்னல் பெரிசாக இருப்பதால், டிரைவருக்கு விஸிபிலிட்டி செம. 
3. 17 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்...
1. ஹெக்டருக்கும் ஹெக்டர் ப்ளஸ்ஸுக்கும் லைட் அசெம்பிளியில் ஒரு ஸ்டைலான மாற்றம். 2. எலெக்ட்ரிக் விங் மிரர்கள். ஜன்னல் பெரிசாக இருப்பதால், டிரைவருக்கு விஸிபிலிட்டி செம. 3. 17 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்...

ஹெக்டரில் இல்லாத ஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் வசதி, ஹெக்டர் ப்ளஸ்ஸில் உண்டு. பம்பருக்கு அடியில் உள்ள சென்ஸார், பூட் கதவைத் தானாகத் திறக்க வைக்கும். ஆனால், பூட் வசதி செம அடி வாங்கியிருக்கிறது ஹெக்டர் ப்ளஸ்ஸில். கேட்டைத் திறந்தால், வெறும் 155 லிட்டர்தான் இடவசதி இருந்தது. பின் சீட்களை மடக்கினால், 530 லிட்டர். இதுவே 5 சீட்டர் ஹெக்டரில், 587 லிட்டர் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

மற்றபடி, இன்டீரியரில் ஹெக்டருக்கும் ப்ளஸ்ஸுக்கும் கலர் தீமில் மாற்றம் உண்டு. ஹெக்டரில் ஆல்-பிளாக் தீம் என்றால், ஹெக்டர் ப்ளஸ்ஸின் டேஷ்போர்டில் சீட் கலரிலேயே கொஞ்சம் பிரெளன் வேலைப்பாடுகள் தெரிந்தன. தாழ்வான டேஷ்போர்டும், பெரிய ஜன்னல்களும் டிரைவருக்கு நல்ல விஸிபிளிட்டியைத் தருகின்றன. டயல்களில் உள்ள கவர் மட்டும், ஸ்பீடோ, ஆர்பிஎம் கன்ஸோலைப் படிக்க முடியாமல் தடுக்கிறது.

டிரைவிங் ப்ளஸ்ஸா… மைனஸா?

ஹெக்டரைப்போலவே, ஹெக்டர் ப்ளஸ்ஸிலும் மூன்று இன்ஜின் ஆப்ஷன்கள். இன்ஜினும் அதேதான். ஒரு டீசல். இந்த 2.0 லிட்டர் டீசல் இன்ஜின், வழக்கம்போல் 170bhp பவரும், 35kgm டார்க்கும் தருகிறது. டீசலுக்கு 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும்தான்.

ஹெக்டர் ப்ளஸ்ஸில் என்ன ப்ளஸ்?

இதுவே 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினில் 6 ஸ்பீடு மேனுவல்/6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் என இரண்டுமே உண்டு. அதுவும் டூயல் க்ளட்ச் ட்ரான்ஸ்மிஷன். இதன் பவரும் டார்க்கும் முறையே 143bhp/25kgm. ஹைபிரிட் இல்லாமல் ஹெக்டரா? அதுவும் இருக்கு. 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினில்தான் இந்த 48V மைல்டு ஹைபிரிட். இதிலும் 6 ஸ்பீடு மேனுவல் மட்டும்தான்.

1,700 கிலோ எடை கொண்ட இந்த காருக்கு, டர்போ இன்ஜின்தான் சரியாக இருக்கும் என்று நினைத்தது சரிதான். டர்போ நன்கு கைகொடுக்கிறது. ஆனாலும், டிரைவிங் விரும்பிகளுக்கு இது கொஞ்சம் பன்ச் இல்லாததுபோல்தான் இருக்கும். க்விக் ரெவ்விங் கொஞ்சம் டல் அடித்தது. ஆனால், பவர் டெலிவரி கொஞ்சம் லீனியராக இருக்கிறது. ரிஃபைன்மென்ட்டும் பக்கா!

லைட் வெயிட்டான க்ளட்ச், ஈஸியாக மாறும் கியர்ஷிஃப்ட்டிங் என ஹைபிரிட்டும் ஓட்டுதலை எளிமையாக்குகிறது. `பெர்ஃபாமென்ஸெல்லாம் பெரிசா தேவையில்லை; மைலேஜ் ஓரளவு வந்தால் போதும்’ எனும் மிடில் க்ளாஸ் கார் ஆர்வலர்களுக்கு, இந்த ஹைபிரிட்தான் பெஸ்ட் சாய்ஸ் ஆக இருக்கும்.

ஹெக்டர் ப்ளஸ்ஸில் என்ன ப்ளஸ்?

6 பேரை ஏற்றிக் கொண்டு, 155 லிட்டர் டிக்கியையும் நிரப்பிக் கொண்டு போக வேண்டும் என்றால், டார்க்கியான டீசல்தான் பெஸ்ட் ஆக இருக்கும் என்று நினைக்கிறேன். 35kgm டார்க் கொண்ட டீசல், சட் சட் என இழுக்கிறது 1700 கிலோ எடை கொண்ட ஹெக்டர் ப்ளஸ்ஸை. ஆனால், இதிலும் ஒரு பன்ச் மிஸ் ஆவதைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். ஆட்டோமேட்டிக்கை இந்த இடத்தில் மிஸ் செய்கிறேன். அதாவது, சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், டிரைவிங் பிரியர்களுக்குப் பிடிக்காது; ஆனால் எல்லோருக்கும் ஓட்ட ஈஸியாக இருக்கும் ஹெக்டர் ப்ளஸ்.

பூட் வசதி, வெறும் 155 லிட்டர்தான். சீட்களை மடக்கினால் 530 லிட்டர். ஹெக்டரில் 587 லிட்டர் என்பதை நினைவில் கொள்ளவும்.
பூட் வசதி, வெறும் 155 லிட்டர்தான். சீட்களை மடக்கினால் 530 லிட்டர். ஹெக்டரில் 587 லிட்டர் என்பதை நினைவில் கொள்ளவும்.

ஹேண்ட்லிங்

பார்ப்பதற்குப் பெரிய காராக இருந்தாலும், லைட் வெயிட் ஸ்டீயரிங், ஈஸியான க்ளட்ச், குறைவான டர்னிங் ரேடியஸ் என்று ஓட்டுவதற்கு எளிதாக இருக்கிறது ஹெக்டர் ப்ளஸ். அதிலும் 360 டிகிரி கேமரா இருப்பது பெரிய ஹெக்டர் ப்ளஸ்ஸில் பெரிய ப்ளஸ். குறைந்த வேகங்களில் இறுக்கமாக இல்லை; நல்ல சொகுசாகவே இருக்கிறது ஹெக்டர் ப்ளஸ். அதிக வேகங்களில் இன்னும் ஓட்டுதலில் முன்னேற்றம் வேண்டும். கொஞ்சம் வெர்ட்டிக்கல் மூவ்மென்ட் இருப்பதுபோல் தெரிகிறது. அதிகமான சென்டர் ஆஃப் கிராவிட்டியும், லூஸான ஸ்டீயரிங்கும் உங்கள் டிரைவிங் ஆர்வத்தைக் கொஞ்சம் அசைத்துப் பார்க்கும். இன்னும் கொஞ்சம் நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும் எம்ஜி.

ஹெக்டரின் ப்ளஸ்ஸே - அதன் பின் சீட் இடவசதிதான். ஹெக்டர் ப்ளஸ்ஸிலும் அதே! தாராள லெக்ரூம், ஹெட்ரூம். சீட்டும் சொகுசு. என்ன, 3-வது வரிசை சீட்டுக்குப் போவதுதான் பெரிய உடற்பயிற்சி. கடைசி சீட், பெரியவர்களுக்கானது அல்ல!
ஹெக்டரின் ப்ளஸ்ஸே - அதன் பின் சீட் இடவசதிதான். ஹெக்டர் ப்ளஸ்ஸிலும் அதே! தாராள லெக்ரூம், ஹெட்ரூம். சீட்டும் சொகுசு. என்ன, 3-வது வரிசை சீட்டுக்குப் போவதுதான் பெரிய உடற்பயிற்சி. கடைசி சீட், பெரியவர்களுக்கானது அல்ல!

ஹெக்டர் ப்ளஸ் வாங்கலாமா?

ஹெக்டரை விட சுமார் 45,000 முதல் 65,000 வரை அதிக விலையில் வந்திருக்கிறது ஹெக்டர் ப்ளஸ். ஆகஸ்ட் முடிந்த பிறகு, இன்னும் விலை ஏற வாய்ப்புண்டு. டிரைவிங் விரும்பிகளுக்கான எஸ்யூவி என்று இதைச் சொல்ல முடியாது. ரிஃபைன்மென்ட் இருக்கும் அளவுக்கு பன்ச் மிஸ் ஆகிறது இன்ஜின்களில். அதே இன்ஜின்தான்; அதே ஓட்டுதல்தான்; அதே பில்டுதான்; என்ன நடுவரிசை மட்டும் சொகுசு; பின் சீட்டில் கொஞ்சம் இடம் – கூடுதலாக ஒருவர் போக வேண்டுமானால் மட்டும்தான், இந்த ஹெக்டர் ப்ளஸ் உங்களுக்கு ப்ளஸ்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism