Published:Updated:

கோனாவுக்கும் நெக்ஸானுக்கும் ஷாக்... வருது எம்ஜி எலெக்ட்ரிக்!

 வால் மவுன்டட் சார்ஜரில்  MG ZS EV-யை சார்ஜ் செய்வது சுலபம்.
பிரீமியம் ஸ்டோரி
வால் மவுன்டட் சார்ஜரில் MG ZS EV-யை சார்ஜ் செய்வது சுலபம்.

ஃபர்ஸ்ட் டிரைவ்: எம்ஜி ZS எலெக்ட்ரிக் எஸ்யூவி

கோனாவுக்கும் நெக்ஸானுக்கும் ஷாக்... வருது எம்ஜி எலெக்ட்ரிக்!

ஃபர்ஸ்ட் டிரைவ்: எம்ஜி ZS எலெக்ட்ரிக் எஸ்யூவி

Published:Updated:
 வால் மவுன்டட் சார்ஜரில்  MG ZS EV-யை சார்ஜ் செய்வது சுலபம்.
பிரீமியம் ஸ்டோரி
வால் மவுன்டட் சார்ஜரில் MG ZS EV-யை சார்ஜ் செய்வது சுலபம்.

ஹெக்டர் வாயிலாகக் கைநிறைய விருதுகளை அள்ளிய எம்ஜி மோட்டார்ஸ், அதே வேகத்தில் எலெக்ட்ரிக் எஸ்யூவியான ZS EV-ஐ அறிமுகப்படுத்தியிருக்கிறது. குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் உச்சக்கட்டத்தில் நடந்துகொண்டிருந்த வேளையில் - குருகிராமம், டெல்லி, நொய்டா எனப் பலவிதமான சாலைகளில் ஓட்டினோம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வெளித்தோற்றம்

ஹெக்டரின் தடங்கள் எதுவும் இல்லாமல், இது தனித்துவமாக இருக்கிறது. காந்தப்பரப்பை நினைவுப்படுத்துவதைப் போல வடிவமைக்கப்பட்டிருக்கும் இதன் கிரில், அதன் மையத்தில் அமைந்திருக்கும் MG மோட்டார்ஸின் பேட்ஜ் ஆகியவை, இதற்கு ஒரு தனி அடையாளத்தைக் கொடுக்கின்றன. இதன் புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ் வட்டவடிவில் இருப்பதால், இதை 'லண்டன் ஐ' என்கிறது எம்ஜி. 17 இன்ச் அலாய் வீல், டட்ச் நாட்டின் காற்றாலைகளின் சாயலில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. பின்பக்க டெயில்லைட்ஸ் - அர்சா மேஜர் என்ற விண்மீன் கூட்டத்தை அடிப்படையாகக் கொண்டு டிசைன் செய்ததாகச் சொல்கிறது எம்ஜி.

கோனாவுக்கும் நெக்ஸானுக்கும் ஷாக்... வருது எம்ஜி எலெக்ட்ரிக்!
கோனாவுக்கும் நெக்ஸானுக்கும் ஷாக்... வருது எம்ஜி எலெக்ட்ரிக்!

எம்ஜி கொடுக்கும் பில்ட்-அப்புக்குத் தகுந்த மாதிரி இருக்கிறதா இதன் டிசைன் என்றால்... ஆர்ப்பாட்டம் இல்லாமல் அலட்டல் இல்லாமல், எளிமையாக - அதே சமயம் தனி அடையாளத்துடன் இருக்கிறது. ஆனால் வீல்கள்தான் சிறியதாகத் தெரிகின்றன.

உள்ளலங்காரம்

ரிச் லுக் வரவேண்டும் என்பதற்காக, மெத்தென இருக்கும் லெதர் போன்ற மெட்டீரியலை டேஷ்போர்டு துவங்கி டோர் பேடுவரை பயன்படுத்தி இருக்கிறார்கள். இதன் தரமும் நன்றாகவே இருக்கிறது. டிரைவர் சீட்டை 6 வகைகளில் அட்ஜஸ்ட் செய்து கொள்ள முடிகிறது. பின்னிருக்கைகள் ஹூண்டாய் கோனாவை விடத் தாராளம். தட்டையான தரை என்பதால், பின்சீட்டில் மூன்று பேர் உட்கார முடிகிறது.

1. இதுவும் இன்டர்நெட் கார்தான் என்கிறது எம்ஜி.   2. பெரிய சன்ரூஃப், கேபினுக்கு அழகு சேர்க்கிறது.  
 3. கிரில்லிலேயே சார்ஜிங் பாயின்ட்.... செம.
 4. கியர் லீவருக்குப் பதிலாக டயல்... பார்க்க மாடர்னாக உள்ளது.
5.  ஆர்பிஎம் மீட்டருக்குப் பதிலாக பேட்டரி சார்ஜ் மீட்டர்...
1. இதுவும் இன்டர்நெட் கார்தான் என்கிறது எம்ஜி. 2. பெரிய சன்ரூஃப், கேபினுக்கு அழகு சேர்க்கிறது. 3. கிரில்லிலேயே சார்ஜிங் பாயின்ட்.... செம. 4. கியர் லீவருக்குப் பதிலாக டயல்... பார்க்க மாடர்னாக உள்ளது. 5. ஆர்பிஎம் மீட்டருக்குப் பதிலாக பேட்டரி சார்ஜ் மீட்டர்...

சன் ரூஃப், ரெயின் சென்ஸிங் வைப்பர்ஸ், க்ரூஸ் கண்ட்ரோல் என இதில் பல சிறப்பம்சங்கள் இருந்தாலும், ஒரு சில அம்சங்கள் மிஸ்ஸிங். உதாரணத்துக்கு இதன் ஸ்டீயரிங்கிற்கு டெலிஸ்கோபிக் அட்ஜஸ்ட் வசதி இல்லை. பேடில் ஷிஃப்ட் இல்லை. பின் சீட்டில் இருப்பவர்களுக்கு ஏசி வென்ட் இல்லை. பனி விளக்குகள் மிஸ்ஸிங்.

இதையும் இன்டர்நெட் கார் என்று எம்ஜி விளம்பரப்படுத்துவதால், இதன் 8 இன்ச் டச் ஸ்கீரின் கவனத்தை ஈர்க்கிறது. குரல் வாயிலாக நாம் இடும் கட்டளைகளை iSmart உடனுக்குடன் நிறைவேற்றுகிறது. ஹெக்டரில் நாம் இருக்கும் ஊரின் தட்பவெட்பத்தைத்தான் தெரிந்து கொள்ள முடியும். ஆனால் எம்ஜி ZS-ல் இருக்கும் அக்யூவெதர், எந்த ஊரின் தட்பவெட்பத்தையும் காட்டும். ஜியோ ஃபென்சிங் துவங்கி ஸ்பீட் லிமிட் அளவைக் கட்டுப்படுத்துவதுவரை, பல காரியங்கள் இதில் சாத்தியம்.

Euro NCAP க்ராஷ் டெஸ்ட்டில் இது

5 ஸ்டார் என்பதால், பாதுகாப்பு பற்றிக் கவலை கொள்ளத் தேவையில்லை. 6 காற்றுப்பைகள், ABS EBD, ஹில் அசிஸ்ட், ஹில் டிஸன்ட், குழந்தைகள் இருக்கைகளைப் பொறுத்த உதவும் கொக்கிகள் எல்லாமே உண்டு.

 வால் மவுன்டட் சார்ஜரில்  MG ZS EV-யை சார்ஜ் செய்வது சுலபம்.
வால் மவுன்டட் சார்ஜரில் MG ZS EV-யை சார்ஜ் செய்வது சுலபம்.

எலெக்ட்ரிக் எஸ்யூவி என்பதால், சத்தமே இல்லாமல் இயங்குகிறது. ஆனால் வெளிச்சாலைச் சத்தம் காருக்குள் கேட்கிறது. இதை ஸ்போர்ட்ஸ், நார்மல், எக்கோ என மூன்றுவிதமான டிரைவிங் மோடில் வைத்து ஓட்ட முடியும். எக்கோ மோடில் ஓட்டினாலே போதுமான சக்தி கிடைத்தது. ஸ்போர்ட்ஸ் மோடில் ஓட்டினால் இன்னும் உற்சாகம். இதன் 44.5 Wh லித்தியம் ஐயன் பேட்டரியும், எலெக்ட்ரிக் மோட்டாரும், 142.7 bhp சக்தி - 35.3kgm டார்க்கையும் அளிக்கிறது.

அதனால் 0 - 100 வேகத்தை 8.5 வினாடிகளில் கார் தொட்டுவிடுவதாக எம்ஜி சொல்கிறது. ஒரு முறை ஃபுல் சார்ஜ் செய்தால், 340 கி.மீ வரை போக முடியும் என்கிறது எம்ஜி. அவ்வளவு இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் 260 - 290 கி.மீயாவது செல்ல முடியும் எனத் தோன்றுகிறது. சிட்டி, ஹைவே என இரண்டு விதமான சாலைகளிலும் நாம் இந்தக் காரை ஓட்டினோம். இரண்டுமே திருப்தியாகத்தான் இருந்தது. பவர் போதவில்லை என்ற எண்ணம், இரண்டு இடத்திலுமே எழவில்லை.

வீட்டில் இருக்கும் 15A - 3 பின் ஏ.சி சாக்கெட்டிலும் இதை சார்ஜ் செய்துகொள்ள முடியும். இதில் முழு சார்ஜ் செய்வதற்கு 16 - 18 மணி நேரமாகும். இதுவே வால் மவுண்டட் 7.4kW ஏ.சி சார்ஜரில் (இப்படி ஒரு வசதியை எம்ஜி-யே செய்துகொடுக்கும்) சார்ஜ் செய்தால் 6 - 8 மணி நேரமாகும். எம்ஜி மோட்டர்ஸ் டீலர்ஷிப்பில் இருக்கும் DC சார்ஜரில் 80 சதவிகிதம் வரை சார்ஜ் செய்ய வெறும் 50 நிமிடம்தான் ஆகிறது.

எம்.ஜி ZS EV-யில் Kinetic Energy Recovery System (KERS) என ஒரு அம்சம் உண்டு. ஆக்ஸிலரேட்டரில் இருந்து காலை எடுத்தாலோ அல்லது பிரேக் பெடலைத் தொட்டாலோ, அப்போது உருவாகும் சக்தியை இந்த சிஸ்டம் மின்சாரமாக மாற்றி, பேட்டரியில் சேமித்து வைக்கிறது. இதன் 340 லிட்டர் வசதிகொண்ட பூட், பெட்டி படுக்கைகளை வைக்க போதுமானதாக இருக்கிறது. சஸ்பென்ஷனும் ஓகேதான். பாடி ரோலும் அவ்வளவாக இல்லை.

ஹூண்டாய் கோனாவுக்கு மட்டுமல்ல, டாடா நெக்ஸானின் EV-க்கும் இது போட்டியாக இருக்கும் என்பதால், ஐந்து வருட வாரன்ட்டியோடு இதைக் களமிறக்குகிறது எம்ஜி. விலை மட்டும் அதிரடியாக இருந்தால், கோனாவுக்கும் நெக்ஸான் EV-க்கும் இது ஷாக் கொடுக்கும்.

எம்ஜி ZS

எலெக்ட்ரிக் எஸ்யூவி

காரின் டிரைவ் வீடியோவைக் காண இந்த QR கோடை

ஸ்கேன் செய்யவும்.