டாடாவுக்கு எலெக்ட்ரிக் கார் புதிதல்ல. டாடாவின் டிகோர் EV ஏற்கெனவே விற்பனையில் இருக்கும் கார்தான். என்றாலும், இவர்கள் இப்போது அறிமுகப்படுத்தியிருக்கும் நெக்ஸான் EVதான், டாடாவின் முழுமையான எலெக்ட்ரிக் கார்.

நன்றாக விற்பனையாகிக் கொண்டிருக்கும் கார், எண்ணிக்கொடுக்கும் பணத்துக்கு ஏற்ற கார், 5 ஸ்டார் சேஃப்டி ரேட்டிங் என்றெல்லாம் பெயர் எடுத்திருக்கும் காம்பேக்ட் எஸ்யூவியான நெக்ஸான், சமீபத்தில்தான் ஃபேஸ்லிப்ட்டாகி இருக்கிறது. அதை அடிப்படையாகக் கொண்டுதான், எலெக்ட்ரிக் நெக்ஸானைக் களமிறக்கியுள்ளது.

டிசைன்

பழைய நெக்ஸானுக்கும், ஃபேஸ் லிஃப்ட்டாக இப்போது வந்திருக்கும் நெக்ஸானுக்கும் சிறு சிறு வித்தியாசங்கள்தான். அப்படியென்றால் நெக்ஸான் பேஸ்லிஃப்ட்டுக்கும் நெக்ஸான் EV-க்கும் வெளித்தோற்றதில் பெரிதாக வித்தியாசம் எதுவும் இல்லை. அதனால் நெக்ஸானின் வாட்டசாட்டமான லுக் இதிலும் அப்படியே இருக்கிறது.

மின்சாரத்தின் குறியீட்டு நிறம் நீலம் என்பதால்.... நெக்ஸானின் முகப்பில் உள்ள ஏர்டேமில் இடம்பெற்றிருக்கும் மூன்று முனைகளைக் கொண்ட நட்சத்திரங்கள், மயில் கழுத்தின் நிறத்தில் மிளிர்கின்றன.

LED ப்ரொஜெக்டர் விளக்குகளையும் இணைப்பதுபோன்று, அதே நீலத்தில் Humanity Line-யைச் சேர்த்திருக்கிறார்கள். இருபக்கமும் இருக்கும் பனி விளக்குகளுக்குப் பக்கத்தில், அடைப்புக்குறி போன்ற டிசைன் அதே வண்ணத்தில் கொடுக்கப் பட்டிருக்கின்றன. EV என்ற எழுத்துக்களும் கிரில்லிலேயே இடம்பெற்றிருக்கின்றன. காரின் பக்கவாட்டில் இருக்கும் ஜன்னல் கண்ணாடிகளுக்குக் கீழும் இதே நீல நிறம். காரின் பின்புறக் கண்ணாடிக்குக் கீழே மற்றும் பம்பர் ஆகிய இடங்களிலும்... நீலம்... நீலம்... நீலம்!

கேபின்

இதுவும் அப்படியே நெக்ஸான் ஃபேஸ் லிஃப்ட்தான். ஏ.சி வென்ட், இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டரின் விளிம்பு, சீட் கவரில் இருக்கும் முக்கோண நட்சத்திர டிசைன் என்று இங்கேயும் அதே மயில் கழுத்தின் நீலம் - இது EV என்பதைப் பறைசாற்றுகிறது. கியர் நாப் சிறிதாக ரோட்டரி வடிவில் இருப்பதால், அந்த இடத்தில் இப்போது கொஞ்சம் ஸ்டோரேஜ் ஸ்பேஸ் கிடைத்திருக்கிறது.

ZX+ LUX வேரியன்ட்டில் சன் ரூஃப்,லெதர் மாதிரியான சீட், ஆட்டோ ஹெட்லாம்ப்ஸ், ஆட்டோ வைப்பர்ஸ் சேர்க்கப் பட்டிருக்கின்றன. 350 லிட்டர் அளவு கொண்ட இதன் டிக்கி, பொருள்களை வைக்கப் போதுமானதாகவே இருக்கிறது.

இது ஒரு கனெக்டட் கார் என்பதால், ‘கனெக்டட் கார்’ செயலியின் மூலம், கார் செக்யூரிட்டி, லொகேஷன், ரிமோட் கமாண்ட்ஸ், அலெர்ட்ஸ் என்று 35 விதமான செயல்களைச் சாத்தியப் படுத்தியிருக்கிறது டாடா. 8 ஸ்பீக்கர்கள் கொண்ட ஹர்மான் ஆடியோ சிஸ்டம் இதில் உண்டு. ஆனால், பின்னிருக்கைகளுக்கான ஏ.சி வென்ட் கன்ட்ரோல் மற்றும் AUX இன்புட் மிஸ்ஸிங்.

பேட்டரி/மோட்டார்/ஓட்டுதல் தரம்

நெக்ஸானை இயக்கும் பேட்டரி காரின் அடியில், அதாவது கேபினுக்கு வெளியே பொருத்தப்பட்டிருக்கிறது. அதனால் நெக்ஸானின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 4 மிமீ குறைந்து, 205மிமீ ஆகியிருக்கிறது.

30.2 KWh பேட்டரி PM (Permanent Magnet Synchronous) மோட்டாருடன் இணைந்து செயல்பட்டு, 129bhp சக்தியையும், 24.5kgm டார்க்கையும் கொடுக்கிறது. IC இன்ஜினாக இருந்தால், 1,750 rpm-ல்தான் டார்க் முழுமையாக வெளிப்பட ஆரம்பிக்கும்.

நெக்ஸான் EV, எலெக்ட்ரிக் கார் என்பதால், 0 rpm-லேயே அதிக டார்க் வெளிப்படுகிறது. அதனால் காரின் ஆக்ஸிலேட்டரை மிதித்த அடுத்த கணமே, கார் பீறிட்டுக் கிளம்புகிறது. இதை நாம் புனேவின் பல சாலைகளில் ஓட்டி டெஸ்ட் டிரைவ் செய்தோம்.

என்ன வேகம் போனாலும் சரி... காரின் சக்தி நாம் கேட்கும்போதெல்லாம் கிடைக்கிறது. 120 கி.மீ-யைக்கூட இது எளிதாக எட்டிவிட்டது. அதிலும் ஸ்போர்ட்ஸ் ‘மோடில்’ வைத்து ஓட்டினால், நெக்ஸான் இன்னும் உற்சாகமாகச் சீறுகிறது. 0 - 100 கி.மீ வேகத்தை இது வெறும் 9.64 விநாடிகளிலேயே தொட்டுவிடுகிறது. பெட்ரோல் - டீசல் கார்களிலேயே பல சமயம், மின்கசிவு ஆகி தீ விபத்து ஏற்படுகிறது. அப்படியென்றால், எலெக்ட்ரிக் கார் மேலும் ஆபத்தா? இது ஷாக் அடிக்குமா? அதிலும் மழைக்காலங்களில் தண்ணீர் நிறைந்த சாலைகளில் சிக்கிக்கொண்டால் பேட்டரி வீணாகிவிடுமா? பேட்டரியைப் பராமரிப்பது எந்த அளவுக்குச் சுலபம் அல்லது கடினம், அல்லது செலவு பிடிக்கும் விஷயம்? பேட்டரி காருக்கு அடியில் இருப்பதால், அதில் தூசும் சேறும் சகதியும் பட்டால் அது கெட்டுவிடுமா...? இப்படி அடுக்கடுக்காக கேள்விகள் வரும் என்று டாடா ஏற்கெனவே கணித்திருந்ததால், சுமார் 300 மிமீ... அதாவது காரின் அடியில் இருக்கும் பேட்டரி மூழ்கும் அளவுக்குத் தேங்கி நிற்கும் தண்ணீரில் காரை ஓட்டிப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இது பேட்டரி கார் ஆயிற்றே... செங்குத்தான மேம்பாலங்களில் ஏறுவதற்குத் திணறுமா என்றெல்லாம் சோதனை செய்து பார்த்தோம். பெட்ரோல்/டீசல் காருக்கும் இதற்கும் எந்த வித்தியாசமும் தெரியவில்லை.

இதன் பேட்டரியை வீட்டில் இருக்கும் 3 பின் சாக்கெட்டில் சார்ஜ் செய்தால், 20% சதவிகிதம் துவங்கி 100% வரை சார்ஜ் ஏற எட்டு மணி நேரமாகும். இதுவே டாடாவின் சர்வீஸ் ஸ்டேஷனில் இருக்கும் DC சார்ஜரில் சார்ஜ் செய்தால், 0 - 80% சார்ஜ் செய்ய ஒரு மணி நேரமே ஆகும். இந்த பேட்டரியின் கூடுதல் எடை காரணமாக, நெக்ஸானின் மொத்த எடை 100 கிலோவுக்கு மேல் கூடியிருக்கிறது. ஆனால், கூடியிருக்கும் இந்த எடையை டாடா காருக்குள் சரிசமமாகவும் பரவலாகவும் பகிர்ந்தளித்திருப்பதால், கார் நிலைத்தன்மையோடு பயணிக்கிறது.

முதல் தீர்ப்பு

நெக்ஸானின் எல்லா ப்ளஸ் பாயின்ட்களும் இதில் உண்டு. கூடுதலாக இது இப்போது சத்தமே இல்லாமல் செயல்படுகிறது. ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 312 கி.மீ தூரம் போகலாம் (அராய்) என டாடா சொன்னாலும், ஓட்டுகிறவரின் ஸ்டைலுக்கு ஏற்ப நிஜத்தில் இது 200-220 கி.மீ தூரம்தான் போகும். இதன் விலை நெக்ஸான் ஃபேஸ் லிஃப்ட்டை விட சில பல லட்சங்கள் நிச்சயம் அதிகமாகத்தான் இருக்கும். இது எலெக்ட்ரிக் கார் என்பதால், ஓட்டுகின்ற ஒவ்வொரு கி.மீக்கும் பெட்ரோல் காரைவிட, லிட்டருக்கு 4 முதல் 5 ரூபாய்வரை மிச்சம் பிடிக்க முடியும்.

பேட்டரி என்னாகுமோ என்ற பயமும் தேவையில்லை. காரணம், இதற்கு எட்டு ஆண்டுகள் வாரன்ட்டி கொடுக்கிறார்கள். நெக்ஸானின் பலங்கள் ஒரு பக்கம், EV கார் என்பதால் அதன் சாதக பாதகங்கள் மறுபக்கம் - இந்த இரண்டையும் எடைபோட்டுத்தான், வாடிக்கையாளர்கள் இந்தக் காரைத் தேர்வு செய்வார்கள்.