Published:Updated:

டஸ்ட்டர் மாறிடுச்சு!

கார்
பிரீமியம் ஸ்டோரி
கார்

ஃபர்ஸ்ட் டிரைவ்: ரெனோ டஸ்ட்டர் 2019 ஃபேஸ்லிஃப்ட்

டஸ்ட்டர் மாறிடுச்சு!

ஃபர்ஸ்ட் டிரைவ்: ரெனோ டஸ்ட்டர் 2019 ஃபேஸ்லிஃப்ட்

Published:Updated:
கார்
பிரீமியம் ஸ்டோரி
கார்

நீல நிறத்தில், சில பல வசதிகளில் செம மாற்றங்களுடன் ‘பளிச்’ என இறங்கியிருக்கிறது டஸ்ட்டர் ஃபேஸ்லிஃப்ட் 2019. இந்த டஸ்ட்டரில் என்ன மாறியிருக்கு?

கிரில், புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், LED DRL, பம்பருக்குக் கீழே ஸ்கஃப் பிளேட், அலாய் வீல் என பார்த்தவுடன் டஸ்ட்டர் மாறியிருப்பது தெரியும். ஆனால், தோற்றம் மாறவில்லை. அருகில் நின்று பார்த்தால், பாதசாரிகளின் பாதுகாப்பு விதிகளுக்கு ஏற்ப, பானெட் உயர்ந்திருப்பது தெரியும்.

டஸ்ட்டர் மாறிடுச்சு!

ஆங்காங்கே க்ரோம் லைன்கள், டஸ்ட்டர் பேட்ஜ் கொண்ட ஸ்போர்ட்டியான ரூஃப் ரெயில், பின் பக்கம் டெயில் லைட் ஏரியாவில் கறுப்பு வேலைப்பாடுகள் என பழசுக்கும் புதுசுக்கும் நல்ல வித்தியாசம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இன்டீரியரிலும் எல்லாமே புதுசு. ஸ்டீயரிங் வீலைப் பாருங்கள். புது இறக்குமதியான ட்ரைபரில் இருப்பது. இன்ஸ்ரூமென்ட் கிளஸ்டரில் புது ஃபான்ட்கள், லெதர் சீட்கள், கீழே சிவப்பு நிற ஃப்ளோர் வேலைப்பாடுகள் என பார்த்தவுடனே மாறியிருப்பது தெரிகிறது. செவ்வகம்-உருண்டை-நீளம் என ஏ.சி வென்ட்கள் கலந்து கட்டி இருக்கின்றன. 7 இன்ச் டச் ஸ்க்ரீனும், க்ளைமேட் கன்ட்ரோல் பட்டன்களும் அதே இடத்தில். ஆண்ட்ராய்டு/ஆப்பிள் கார் ப்ளே எல்லாம் கொடுக்கப்பட்டிருக்கிறது. டஸ்ட்டரின் நடு வேரியன்ட்டான RXS-ல் இருந்தே கனெக்ட்டிவிட்டியும் ஸ்டீயரிங் ஆடியோ கன்ட்ரோல்ஸும் ஸ்டாண்டர்டு ஆப்ஷன்.

டஸ்ட்டர் மாறிடுச்சு!

டஸ்ட்டரில் ஒரு குறையாக இருந்தது - ஸ்டோரேஜ் ஸ்பேஸ். இந்த ஃபேஸ்லிஃப்ட்டில் இரண்டு க்ளோவ்பாக்ஸ் கொடுத்திருக்கிறார்கள். இரண்டுமே கூல்டு க்ளவ்பாக்ஸ். இதன் பூட் ஸ்பேஸ் - 475 லிட்டர். பெரிய டூருக்கு ஓகே!

டிரைவர் சீட் தாழ்வாக இருப்பதால், டச் ஸ்க்ரீன் பயன்படுத்தும்போது, சாலையிலிருந்து பார்வையை எடுத்துத்தான் ஆக வேண்டும். அதாவது, எர்கானமிக்ஸ் குறை. டயல்களில் டிரைவரின் ஓட்டுதல் முறையைக் கணிக்கும் எக்கோ ரீட்-அவுட் வசதி இருக்கிறது.

ஆட்டோமேட்டிக் க்ளைமேட்/க்ரூஸ் கன்ட்ரோல், ரியர் பார்க்கிங் கேமரா, ஸ்பாய்லர் போன்ற வசதிகள் டாப் மாடலான RXZ-ல் மட்டும்தான். 110bhp பவர் கொண்ட டீசல் மாடலும் டாப் மாடலில்தான் (மேனுவல்/AMT). குறைந்த ரெவ்களில் பவர் டெலிவரி ஃப்ரெண்ட்லியாக இருக்கிறது டஸ்ட்டர். அதே டிரைவிங் அனுபவம்தான் கிடைத்தது. அந்த டர்போ லேக்கும்தான். கியர்பாக்ஸும் இதில் நல்ல பார்ட்னர்ஷிப்.

டஸ்ட்டர் மாறிடுச்சு!

ஸ்டீயரிங் ஃபீட்பேக் ஓகேதான். ஆனால், மோசமான சாலைகளில் பயணிக்கும்போது, சஸ்பென்ஷனோடு சேர்த்து ஸ்டீயரிங்கும் வேலை பார்ப்பதுபோல் இருக்கிறது. அதாவது, கைகளில் அந்தளவு ‘தடதட!’

7.99 - 12.49 லட்சம். இதுதான் புது டஸ்ட்டரின் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை. இந்த 4.3 மீட்டர் எஸ்யூவிக்கு இது சரியான விலைதான்.

ஒரு முக்கியமான விஷயம் - இது BS-6 இன்ஜின் இல்லை. அநேகமாக, ஏப்ரல் 2020-க்கு மேல் டீசல் டஸ்ட்டர் வராமலும் போகலாம்!