பிரீமியம் ஸ்டோரி
ப்போதைக்கு எம்யூவி–யில் `Value for Money' என்றால், கண்ணை மூடிச் சொல்லலாம் – ரெனோவின் ட்ரைபர்தான். போன ஆகஸ்ட்டில் லாஞ்ச் ஆனதில் இருந்து இப்போது வரை 40,000 ட்ரைபர்கள் சாலையில் ஓடிக் கொண்டிருக்கின்றன. ஆரம்பத்தில் 1.0லி பெட்ரோல், 5 ஸ்பீடு மேனுவலை வைத்து ஓட்டிக் கொண்டிருந்தது ரெனோ. இப்போது AMT ஆட்டோமேட்டிக் கொண்டு வந்து விட்டது. ஆம், இப்போது BS-6–ல் அப்டேட் ஆகி வந்துவிட்டது ட்ரைபர். ட்ரைபர் AMT எப்படி இருக்கு? ஒரு ஷார்ட் லுக்!
இன்டீரியரில் டயல்கள் ஸ்போர்ட்டி. மேனுவலுக்கும் ஆட்டோவுக்கும் கியர் நாப் தவிர பெரிதாக மாற்றம் இல்லை.
இன்டீரியரில் டயல்கள் ஸ்போர்ட்டி. மேனுவலுக்கும் ஆட்டோவுக்கும் கியர் நாப் தவிர பெரிதாக மாற்றம் இல்லை.

இது AMTதானா என்பதைக் கண்டுபிடிக்க ஒரே வழி - காரின் பின்பக்கத்தில் Easy-R என்ற அந்த லோகோ. உள்ளே, வழக்கம்போல கியர்பாக்ஸை வைத்துத்தான் கண்டுபிடிக்க வேண்டும். க்விட்டில் ரோட்டரி நாப் வைத்த ரெனோ, ட்ரைபரில் பாரம்பரியமான அந்த ஆட்டோ கியர்பாக்ஸைப் பொருத்தியிருக்கிறது. அட, மேனுவல் ஷிஃப்ட்டிங்கும் கொடுத்திருந்தார்கள். க்விட்டில் மேனுவல் மோடு இருக்காது. ரெனோவின் ஃபேவரைட்டான அந்த Creep Function, ட்ரைபரிலும் இருந்தது. அதாவது, D மோடில் கியரில் இருந்தாலே போதும்; ஆக்ஸிலரேட்டர் மிதிக்காமலே கார் நகரும். இது மலைச்சாலைகளில் பயனுள்ளதாக இருக்கும். டிராபிக்கில் எடுபடுமா தெரியவில்லை. மற்றபடி, கியர் என்கேஜ்மென்ட் அருமை.

பாரம்பரியமான ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்...  மேனுவல் மோடும் உண்டு.
பாரம்பரியமான ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்... மேனுவல் மோடும் உண்டு.

பொதுவாக, AMT என்றாலே ஜெர்க்கினெஸ் இருக்குமே? ட்ரைபரில் எப்படி? அட, இதில் நன்றாகவே வேலை பார்த்துள்ளது ரெனோ. இத்தனைக்கும் அதே 3 சிலிண்டர் செட்–அப்தான். ரிலாக்ஸ்டாக ஓட்ட இந்த AMT சூப்பராக இருந்தது. ஆனால், அவசர அடிக்கு இந்த ட்ரைபர் வேலைக்கு ஆகாது என்றுதான் நினைக்கிறேன். இதன் 0–100 கி.மீ–யைக் கவனியுங்கள். 22.14 விநாடிகள் எடுத்துக் கொண்டு பொறுமையாகத்தான் கடக்கிறது ட்ரைபர் AMT. (இதுவும் ஈரச்சாலைதான்). இதுவே மேனுவல் கொஞ்சம் வேகமாக இருக்கிறது. இதன் 0–100 கி.மீ– 17.35 விநாடிகள்தான்.

மேனுவல் மோடில் காரை ஓட்டுவதும் ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. டாப் எண்ட், அதாவது ரெட் லைன் வரை மிதிக்க முடிகிறது. டாப் எண்டில் நல்ல பவர் கிடைக்கிறது ட்ரைபரில். இதன் பவர் 72bhp, 9.6kgm டார்க். மிட்ரேஞ்சில் பவர் கூடுதலாகக் கிடைக்க AMT–யில் கொஞ்சம் ட்யூனிங் செய்துள்ளார்கள். தினசரிப் பயன்பாட்டுக்கு இது செமையாக இருக்கும். 3,000 ஆர்பிஎம்–க்குப் பக்கத்தில் ட்ரைபரை ஓட்டுவது நைஸ். மேனுவலைவிட நான் AMT–யைத்தான் ரெக்கமெண்ட் செய்வேன்.

விலை ரூ: ‑சுமார் 8.28 லட்சம்
விலை ரூ: ‑சுமார் 8.28 லட்சம்

மைலேஜிலும் வாவ் சொல்ல வைக்கிறது ட்ரைபர் AMT. இதன் அராய் மைலேஜ் 19 கிமீ என்பது செம! இது மேனுவல். மேனுவலைவிட கொஞ்சம் மைலேஜ் குறைவாக 18.29 கிமீ கிடைக்கிறது AMT–ல். மற்றபடி ரைடிங் அண்ட் ஹேண்ட்லிங்கைப் பொருத்தவரை பழைய ட்ரைபர் மேனுவல் போலவேதான்.

RXE தவிர, வழக்கம்போல் டாப் 3 வேரியன்ட்களில் வருகிறது ட்ரைபர் Easy-R. ட்ரைபர் AMT வாங்கினால், வசதிகளில் காம்ப்ரமைஸ் செய்து கொள்ளத் தேவையில்லை. என்ன, மேனுவலைவிட சுமார் 75,000 அதிகம் கொடுக்க வேண்டும்.

பெரிய சொகுசு வசதிகளெல்லாம் பெரிதாக வேண்டாம்; தெறி பெர்ஃபாமென்ஸில் கார் பறக்க வேண்டாம்; கியர் மாற்றாமல் சிட்டிக்குள் ஓட்ட ஒரு நல்ல ஆட்டோமேட்டிக் வேண்டும் என்றால், ட்ரைபர் AMT நல்ல சாய்ஸ்!

அப்போ AMT–ல் ‘வ்வ்ர்ர்ரூம்’னு பறக்க முடியாதா என்பவர்கள், அடுத்த ஆண்டு வரை பொறுக்கவும். அட ஆமாங்க, டர்போ AMT–யைத்தான் சொல்றேன்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு