ஆசிரியர் பக்கம்
கார்ஸ்
Published:Updated:

ரிலாக்ஸ்டான செல்ட்டோஸ்... ஆனால்?

கியா செல்ட்டோஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
கியா செல்ட்டோஸ்

ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்: கியா செல்ட்டோஸ் NA பெட்ரோல் CVT

கியா செல்ட்டோஸ் - 7 மாதங்களில் 74 ஆயிரம் கார்கள் விற்பனை....

ஒரு புத்தம் புதிய நிறுவனம் நம் நாட்டில் இப்படி ஒரு சாதனையை செய்திருக்கிறது. கியா செல்ட்டோஸின் இந்த அதிரடி வெற்றிக்கு அதன் ஸ்மார்ட்டான டிசைன், அதிகப்படியான சிறப்பம்சங்கள், பலவிதமான வேரியன்ட்கள் மற்றும் இன்ஜின் - கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் ஆகியவை முக்கியக் காரணங்கள்.

இன்டீரியர் ஸ்போர்ட்டி. 10.25 இன்ச் டச் ஸ்க்ரீன் செம! வென்டிலேட்டட் சீட், வயர்லெஸ் சார்ஜிங், 7 இன்ச் MID மிஸ்ஸிங்.
டர்போ இல்லை. இந்த 115bhp கொண்ட 1.5 லி NA பெட்ரோல் இன்ஜின், பவர் பார்ட்டிகளுக்கானது இல்லை.
இந்த CVT கியர்பாக்ஸில் ரப்பர் பேண்டு எஃபெக்ட் தெரிகிறது. மேனுவல் மோடும் உண்டு.
இன்டீரியர் ஸ்போர்ட்டி. 10.25 இன்ச் டச் ஸ்க்ரீன் செம! வென்டிலேட்டட் சீட், வயர்லெஸ் சார்ஜிங், 7 இன்ச் MID மிஸ்ஸிங். டர்போ இல்லை. இந்த 115bhp கொண்ட 1.5 லி NA பெட்ரோல் இன்ஜின், பவர் பார்ட்டிகளுக்கானது இல்லை. இந்த CVT கியர்பாக்ஸில் ரப்பர் பேண்டு எஃபெக்ட் தெரிகிறது. மேனுவல் மோடும் உண்டு.

1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் (6 ஸ்பீடு மேனுவல் / 7 ஸ்பீடு DCT), 1.5 லிட்டர் டர்போ டீசல் (6 ஸ்பீடு மேனுவல் / 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர்) பொருத்தப்பட்ட கார்களை, நாம் ஏற்கெனவே டெஸ்ட் டிரைவ் செய்துவிட்டோம். தற்போது 1.5 லிட்டர் NA பெட்ரோல் இன்ஜின் - CVT கூட்டணி கொண்ட மாடலை ஓட்டிப்பார்த்தோம். இது விலை அதிகமான டர்போ பெட்ரோல் இன்ஜின் - DCT அமைப்பைவிடச் சிறந்ததாக இருக்கிறதா?

கேபின் சிறப்பம்சங்கள்

TechLine வெர்ஷனில் மட்டுமே, 1.5 லிட்டர் Naturually Aspirated(NA) பெட்ரோல் இன்ஜின் இடம்பெற்ற கார்களை வாங்க முடியும். HTE, HTK, HTK+, HTX எனும் நான்கு வேரியன்ட்களில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடனும், HTX வேரியன்ட்டில் CVT உடனும் செல்ட்டோஸ் வருகிறது. டாப் வேரியன்ட்டான HTX+ 1.5 லிட்டர் NA பெட்ரோல் இன்ஜின் - CVT கூட்டணி கிடைக்காதது ஏமாற்றம்தான்.

எனவே எலெக்ட்ரிக் சன்ரூஃப், வென்டிலேட்டட் சீட்கள், முன்பக்க பார்க்கிங் சென்சார், வயர்லெஸ் சார்ஜர், பவர்டு டிரைவர் சீட், Bose 8 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், 7 இன்ச் MID போன்ற ப்ரீமியம் வசதிகள் மிஸ்ஸிங் என்பது நெருடல். இருப்பினும் 17 இன்ச் அலாய் வீல்கள், LED ஹெட்லைட்ஸ், UVO கனெக்ட்டிவிட்டி உடனான 10.25 இன்ச் டச் ஸ்க்ரீன் சிஸ்டம், இன்பில்ட் நேவிகேஷன், புஷ் பட்டன் ஸ்டார்ட், 60:40 ஸ்ப்ளிட் சீட், ஏர் ப்யூரிஃபையர், டயர் ப்ரஷர் மானிட்டர் போன்ற வசதிகள் இருக்கின்றன.

இன்ஜின் பர்ஃபாமன்ஸ்

1.5 லிட்டர் NA பெட்ரோல் இன்ஜின், 115bhp பவர் மற்றும் 14.4kgm டார்க்கைத் தருகிறது. இதில் டர்போசார்ஜர் கிடையாது என்பதால், ரிலாக்ஸ்டான ஓட்டுதலை எதிர்பார்ப்பவர்களுக்கு மட்டுமே இந்த இன்ஜின் ஏற்புடையதாக இருக்கும். பவர் விரும்பிகளுக்கு டர்போதான் சரிபடும்.

இன்ஜின் I 1,493 சிசி பவர் I 115bhp டார்க் I 14.4kgm விலை I ரூ.17.19 லட்சம்
இன்ஜின் I 1,493 சிசி பவர் I 115bhp டார்க் I 14.4kgm விலை I ரூ.17.19 லட்சம்

ஐடிலிங் தொடங்கி, ஆரம்ப கட்ட மற்றும் மிட் ரேஞ்ச் வேகம்வரை இந்த இன்ஜின் ஸ்மூத்தாகவே இயங்குகிறது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, பவர் டெலிவரி சீராக இருப்பதுடன், த்ராட்டில் ரெஸ்பான்ஸும் சிறப்பாகவே உள்ளது.

இன்ஜினின் ரெட்லைன் 6,500 rpm வரை இருந்தாலும், 4,000 rpm-க்கு மேலே பவர் குறைபாடு அப்பட்டமாகத் தெரிகிறது. இதனால் டாப் எண்ட் பர்ஃபாமன்ஸில் சொல்லிக் கொள்வதற்குப் பெரிதாக ஒன்றும் இல்லை.

இந்த 1.5 லிட்டர் NA பெட்ரோல் இன்ஜினுடன் இணைக்கப்பட்டுள்ள CVT கியர்பாக்ஸ், தனது பணியைத் திறம்படச் செய்கிறது. இதிலும் CVT கியர்பாக்ஸுக்கே உரித்தான ரப்பர் பேண்ட் எஃபெக்ட் தெரிகிறது என்றாலும், அது வழக்கத்தைவிடக் குறைவான அளவில் இருப்பது சிறப்பு. எனவே ஆக்ஸிலரேட்டரில் கொஞ்சம் அழுத்தத்தைக் காட்டினாலும், கார் உடனடியாக முன்னோக்கிச் செல்கிறது. இதனால் நெரிசல்மிக்க டிராஃபிக்கில் செல்ட்டோஸைச் ஓட்டுவது சுலபம்தான். மேலும் நெடுஞ்சாலைகளில் முன்னே செல்லும் காரை ஓவர்டேக் செய்வதற்குத் தேவையான பவரும் உடனுக்குடன் கிடைக்கிறது. CVT-ல் மேனுவல் மோடு இருந்தாலும், அது இன்ஜின் பிரேக்கிங்கை அதிகப்படுத்தும் பொருட்டு, திடீரென Downshift ஆக மறுக்கிறது. ஆனால் D மோடுடன் ஒப்பிடும்போது, மேனுவல் மோடில் ஒவ்வொரு கியரும் வழக்கத்தைவிட அதிகமாக Hold ஆகி, அடுத்த கியருக்கு மாறுகிறது.

இதன் தொடர்ச்சியாக, 0 - 100 கி.மீ வேகத்தை 12.06 விநாடிகளில் கார் எட்டிப் பிடிக்கிறது. இது 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் - 7 ஸ்பீடு DCT கொண்ட மாடலைவிட 2.3 விநாடிகள் அதிகம்! செல்ட்டோஸை விரட்டாமல் க்ரூஸ் செய்யும்போது, 100 கி.மீ வேகத்தில் டாப் கியரில் செல்லும்போது, 2,000 ஆர்பிஎம்முக்குக் கீழே இன்ஜின் ரிலாக்ஸ்டாக இயங்குவது செம!

ஓட்டுதல் அனுபவம்

இறுக்கமான சஸ்பென்ஷன் செட்-அப் உடன் 17 இன்ச் வீல்கள் (215/60 R17 டயர்கள்) சேரும்போது, பெரிய மேடு பள்ளங்களில் கார் செல்வதை உள்ளே இருப்பவர்களால் உணர முடிகிறது. ஆனால், இது பயணிகளுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தாது.

அதிக வேகத்தில் செல்லும்போது, கார் அலுங்கிக் குலுங்காமல் நிலையாகச் செல்கிறது (உபயம்: 2,610 மிமீ வீல்பேஸ்). இந்த நேரத்தில் ஸ்டீயரிங்கின் எடை கூடினாலும், அதன் ஃபீட்பேக் இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்திருக்கலாம்.

கியா செல்ட்டோஸ்
கியா செல்ட்டோஸ்

தவிர, நல்ல வேகத்தில் க்ரூஸ் செய்யும்போதும் மலைச்சாலைகளில் செல்லும்போதும், திடமான சேஸியைக் கொண்ட செல்ட்டோஸின் நிலைத்தன்மை அசத்தல். பாடி ரோல் குறைவாக இருப்பதால், திருப்பங்களில் காரைச் செலுத்துவது நல்ல அனுபவமாக உள்ளது. பிரேக்குகளின் செயல்பாடு திருப்தியளிக்கும்படியே அமைந்துள்ளது.

முதல் தீர்ப்பு

17.19 லட்ச ரூபாய் சென்னை ஆன் ரோடு விலையில் கிடைக்கும் 1.5 செல்ட்டோஸ் HTX IVT, இதே பெட்ரோல் இன்ஜின் - 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட மாடலைவிட1.18 லட்ச ரூபாய் அதிக விலையில் வந்திருக்கிறது. இதுவே இதற்குச் சமமான டர்போ பெட்ரோல் இன்ஜின்- DCT காம்போ கொண்ட வேரியன்ட்டான 1.4 GTX DCT வாங்க வேண்டுமென்றால், கூடுதலாக 2.59 லட்ச ரூபாய் செலவழிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்!

ஆனால் பவர்ஃபுல் இன்ஜின், துல்லியமான கியர்பாக்ஸ், 6 காற்றுப்பைகள் - ஹில் ஹோல்டு அசிஸ்ட் போன்ற பாதுகாப்பு வசதிகள் வேண்டுமென்றால், இந்த விலையைக் கொடுத்துதான் ஆக வேண்டும் (19.78 லட்ச ரூபாய்).

எனவே உங்கள் பட்ஜெட் 20 லட்ச ரூபாயாக இல்லை என்றால், தாராளமாக 1.5 லிட்டர் NA பெட்ரோல் இன்ஜின் - CVT கொண்ட மாடலையே தேர்வு செய்யலாம். இது ஸ்மூத்தாக இயங்குவதுடன், ரிலாக்ஸ்டான ஓட்டுதலுக்கும் வழிவகுக்கிறது. போதுமான பவர் கிடைப்பதால், அவ்வப்போது விரட்டி ஓட்டுவதற்கு ஏற்புடையதாகவும் இந்த செல்ட்டோஸ் இருக்கிறது.