Published:Updated:

ப்ரீமியம் ஹேட்ச்பேக் தர்பாரில் - டாடா அல்ட்ராஸ்?

ப்ரீமியம் ஹேட்ச்பேக் தர்பாரில் டாடா அல்ட்ராஸ்?
பிரீமியம் ஸ்டோரி
ப்ரீமியம் ஹேட்ச்பேக் தர்பாரில் டாடா அல்ட்ராஸ்?

ஃபர்ஸ்ட் டிரைவ்: டாடா அல்ட்ராஸ்

ப்ரீமியம் ஹேட்ச்பேக் தர்பாரில் - டாடா அல்ட்ராஸ்?

ஃபர்ஸ்ட் டிரைவ்: டாடா அல்ட்ராஸ்

Published:Updated:
ப்ரீமியம் ஹேட்ச்பேக் தர்பாரில் டாடா அல்ட்ராஸ்?
பிரீமியம் ஸ்டோரி
ப்ரீமியம் ஹேட்ச்பேக் தர்பாரில் டாடா அல்ட்ராஸ்?

புதிய ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறது டாடா. ப்ரீமியம் ஹேட்ச்பேக் செக்மென்ட்டில் ஏற்கெனவே பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கும் ஹூண்டாய் எலீட் i20, ஹோண்டா ஜாஸ், மாருதி சுஸூகி பெலினோவுக்குப் போட்டியாக அல்ட்ராஸ் களம் இறங்கியிருக்கிறது. செக்மென்ட்டைத் தனதாக்கிக் கொள்ளுமா இந்த கார்...? பார்ப்போம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வெளித்தோற்றம்:

சுறாவின் முகத்தை நினைவுபடுத்தும் கிரில். அதன் இருபுறமும் இருக்கும் புரொஜெக்டர் ஹெட்லைட்ஸையும் ஒரு கறுப்பு டிசைன் ஸ்டைலாக இணைக்கிறது. பக்கவாட்டில் இருந்து பார்க்கும்போது, இது ஸ்போர்ட்ஸ் காரோ என்று பலருக்கும் சந்தேகம் வரலாம்.

ப்ரீமியம் ஹேட்ச்பேக் தர்பாரில் - டாடா அல்ட்ராஸ்?

காரணம், விண்டோ பேனல்களை வியாபித்திருக்கும் கறுப்பு வண்ணம். வழக்கமான இடத்திலிருந்து C பில்லருக்கு இடம் மாறியிருக்கும் பின்பக்கக் கதவின் கைப்பிடி. பெரிய வீல் ஆர்ச்சுகள்! ஆனால் 16 இன்ச் வீல்கள்தான் அந்த இடத்துக்குச் சிறியதாகத் தெரிகிறது. ஷார்க் ஃபின் ஆன்ட்டெனா கொடுத்திருந்தால், இன்னும் எடுப்பாக இருந்திருக்கும்.

விரும்பினால் காரின் மேல்கூறைக்குக்கூட ஸ்போர்ட்டியாக கறுப்பு வண்ணத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஸ்போர்ட்டியான கறுப்பு வண்ணம் டெயில் கேட்டை வியாபித்திருக்கிறது. இந்த காரில் கண்ணுக்குத் தெரியாத டிசைன் அம்சம் - இது உருவாகியிருக்கும் புத்தம் புதிய ஆல்ஃபா ப்ளாட்ஃபார்ம். இனி டாடா அறிமுகப்படுத்தும் பல கார்கள், இந்த ப்ளாட்ஃபார்மில்தான் தயாராகும்.

1. 7 இன்ச் ஃப்ளோட்டிங் டச் ஸ்க்ரீன் அருமை!  2. அல்ட்ராஸின் கேபின், இடவசதி வேற லெவல்!
 3.கதவுக் கைப்பிடி, கதவை மூடும்போதே காரின் தரம் தெரிகிறது.
 4.புதிய ஸ்டீயரிங் வீலில் எல்லா கன்ட்ரோல்களும் உள்ளன.
5. ஹேரியரில் இருக்கும் அதே அனலாக்/டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்ஸோல்...
1. 7 இன்ச் ஃப்ளோட்டிங் டச் ஸ்க்ரீன் அருமை! 2. அல்ட்ராஸின் கேபின், இடவசதி வேற லெவல்! 3.கதவுக் கைப்பிடி, கதவை மூடும்போதே காரின் தரம் தெரிகிறது. 4.புதிய ஸ்டீயரிங் வீலில் எல்லா கன்ட்ரோல்களும் உள்ளன. 5. ஹேரியரில் இருக்கும் அதே அனலாக்/டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்ஸோல்...

உள்ளலங்காரம்

உள்ளே எப்படி இருக்கிறது என்று பார்க்க காரின் கதவைத் திறந்தால், அது அல்பட்ராஸ் பறவையின் சிறகுகளைப் போல 90 டிகிரிக்கு விரிகிறது. அதனால் காரின் உள்ளே செல்வதும் வெளியே வருவதும் சுலபமாக இருக்கிறது. வெளிப்புற டிசைன் அளவுக்கு காரின் உட்புறம் கவரவில்லை என்றாலும், டெக்ஷர்ட் ஃபினிஷ், கிளாஸி ஃபினிஷ் என்று டேஷ்போர்டை லேயருக்கு லேயர் வித்தியாசப்படுத்திக் காட்ட முயற்சி செய்திருக்கிறார்கள்.

இந்த செக்மென்ட்டுக்கு என்ன தரத்தில் உள்ளலங்காரம் இருக்க வேண்டுமோ, அந்தத் தரம் குறைவில்லாமல் இருக்கிறது. ஆனால் க்ளோவ் பாக்ஸ் இருக்கும் இடத்தில், ஒரு பேனலுக்கும் அடுத்த பேனலுக்கும் இடையே இடைவெளி இருப்பது நெருடலான விஷயம். எத்தனை பெரிய காராக இருந்தாலும் சரி, அதன் தரம் வெளிப்படுவது காரின் கதவை மூடும்போது கேட்கும் சத்தம். இந்தப் பரீட்சையிலும் அல்ட்ராஸ் தேர்ச்சி பெறுகிறது.

ஸ்டீயரிங் வீலுக்குக் கொடுக்கப் பட்டிருக்கும் லெதர் கவர் நல்ல உணர்வைக் கொடுக்கிறது. இதன் 7 இன்ச் டச் ஸ்கிரீனை, ஃப்ளோட்டிங் ஸ்க்ரீன் என்கிறது டாடா. இதில் பளிச்சிடும் நேவிகேஷன் இன்ஸ்ட்ரக்‌ஷன் போன்ற தகவல்கள் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலிலும் தெரிவதால், சாலையில் இருந்து கண்களை எடுக்காமலேயே காரை ஓட்ட முடிகிறது. ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் ப்ளே போன்ற வசதிகள் வழக்கம்போல உண்டு. பின்பக்க இருக்கைகள் சற்றே உயரமாக இருப்பதால், ஜன்னல் கண்ணாடியின் வழியாக வெளியே சுலபமாகப் பார்க்க முடிகிறது. தட்டையான தரையாக இருப்பதாலும், அகலமான காராக இருப்பதாலும், பின்னிருக்கையில் மூன்று பேர் தோளோடு தோள் உரசாமல் வசதியாக உட்கார முடிகிறது. இங்கே இரண்டு பேர் உட்கார்ந்தால், இரண்டு பேரும் கைவைத்துக் கொள்ள, ஆர்ம் ரெஸ்ட்டை வெளியில் எடுத்துக்கொள்ளலாம். ஏறக்குறைய போட்டியாளர்கள் அளவுக்குத்தான் இதன் டிக்கி கொள்ளளவும் இருக்கிறது. அதாவது 339 லிட்டர்.

இன்ஜின்

டியாகோ/டிகோரில் இருக்கும் மூன்று சிலிண்டர்கள் கொண்ட அதே 1.2 லிட்டர் Revotron பெட்ரோல் இன்ஜின்தான் இதிலும். ஆனால் இது BS-6 இன்ஜின். டாடாவின் முதல் BS-6 பெட்ரோல் இன்ஜினும் இதுதான். இது வெளிப்படுத்தும் 86bhp பவரும் 11.3kgm டார்க்கும், போட்டியாளர்களோடு ஒப்பிடும் அளவுக்குத்தான் இருக்கிறது.

ஃபர்ஸ்ட் டிரைவ்: டாடா அல்ட்ராஸ்
ஃபர்ஸ்ட் டிரைவ்: டாடா அல்ட்ராஸ்

ஆக்ஸிலேட்டரை லேசாக அழுத்தும்போது போதுமான சக்தி கிடைக்கிறது. ஆனால் பெலினோ அளவுக்கு இது பெப்பியாக இல்லை. காரணம் இதன் எடை... ஏறக்குறைய எலீட் i20 மற்றும் ஹோண்டா ஜாஸ் அளவுக்கு இருந்தாலும், இது பெலினோவைவிட 146 கிலோ அதிகம்! 5 ஸ்பீடு மேனுவல் கியர்களைக் கொண்ட அல்ட்ராஸில், DCT ஆப்ஷன் வர இன்னும் சிறிது காலமாகும். டர்போ இன்ஜின் தேவைப்படுகிறவர்களும், சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருக்கும்.

டீசல் இன்ஜினைப் பொறுத்தவரை, அதே 4 சிலிண்டர் 1.5 லிட்டர் Revotorq-தான் அல்ட்ராஸையும் இயக்குகிறது. 90bhp சக்தி மற்றும் 20kgm டார்க்கை வெளிப்படுத்தும் இந்த BS-6 இன்ஜின், பெட்ரோல் போலவே 5 ஸ்பீடு கியர்பாக்ஸோடு இணைக்கப் பட்டிருக்கிறது. பர்ஃபாமன்ஸ் விஷயத்தில் இது எலீட் i20, ஜாஸ், பெலினோவுடன் சிறப்பாக போட்டி போடுகிறது. குண்டும் குழியுமான சாலைகளை எல்லாம், அல்ட்ராஸின் சஸ்பென்ஷன் அனாயாசமாகச் சமாளிக்கிறது. வேகமாகச் செல்லும்போதும் கார் அலைபாயாமல் நிலைத்தன்மையோடு பயணிக்கிறது. எந்த வேகத்தில் சென்றாலும், இதன் எலெக்ட்ரிக் ஸ்டீயரிங் கொடுக்கும் ‘பீட் பேக்’ நம்பிக்கை அளிக்கிறது. ஆனால் வெளிச்சாலைச் சத்தம், காருக்குள் கேட்பது எரிச்சலை ஏற்படுத்துகிறது.

முதல் தீர்ப்பு

போட்டி கார்களைவிடப் பார்க்க ஸ்டைலாக இருக்கும் டாடா அல்ட்ராஸ், பயணிக்க வசதியானதாகவும் தாராளமானதாகவும் இருப்பதால், குடும்பத்தோடு செல்வதற்கு ஏற்ற ஹேட்ச்பேக்காகவும் இருக்கிறது. இதன் டீசல் வேரியன்ட், ஓட்டுவதற்கு உற்சாகத்தைக் கொடுக்கிறது. பெட்ரோல் இன்ஜினில் இன்னும் பெப்பினெஸ்ஸும் ரிஃபைன்மென்ட்டும் தேவை.

இப்போது விலை, மைலேஜ் ஆகிய இந்த இரண்டும்தான், அல்ட்ராஸின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் முக்கியமான அம்சங்களாக இருக்கும். இவை இன்னும் சில நாள்களில் தெரிந்துவிடும்.

அல்ட்ராஸ் காரின் டிரைவ் வீடியோவைக் காண இந்த QR கோடை ஸ்கேன் செய்யவும்.