Published:Updated:

ஐ... அல்ட்ராஸில் i-டர்போ!

டாடா அல்ட்ராஸ்
பிரீமியம் ஸ்டோரி
டாடா அல்ட்ராஸ்

ஃபர்ஸ்ட் டிரைவ்: டாடா அல்ட்ராஸ் i-Turbo Petrol

ஐ... அல்ட்ராஸில் i-டர்போ!

ஃபர்ஸ்ட் டிரைவ்: டாடா அல்ட்ராஸ் i-Turbo Petrol

Published:Updated:
டாடா அல்ட்ராஸ்
பிரீமியம் ஸ்டோரி
டாடா அல்ட்ராஸ்

சக்தியில், `அல்ட்ராஸ் i- டர்போ' - `ஐ' என்று ஆச்சரியப்பட வைக்கிறதா... அல்லது சாதாரண NA இன்ஜினின் சற்றே மேம்பட்ட வேரியன்ட்டாக இருக்கிறதா? அல்ட்ராஸ் i-டர்போவை டெஸ்ட் செய்ய, நடுங்கும் குளிரில் டெல்லி சென்றிருந்தோம். ஒரு பக்கம் விவசாயிகளின் போராட்டம், இன்னொருபுறம் குடியரசு தின ஒத்திகை என்று பலவிதங்களிலும் கெடுபிடி இருக்கும் என்று நாம் அச்சத்தோடுதான் போயிருந்தோம். ஆனால் எந்தத் தடையும் இல்லாமல், டெல்லி எப்போதும்போல சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்ததால், நாம் போன பாதைகள் எதிலும் எந்தச் சிக்கலையும் சந்திக்காமல் அமைதியாகவே டெஸ்ட் டிரைவ் செய்ய முடிந்தது. ஆனால், அது ஒரு திங்கட்கிழமை என்பதால் காலை எட்டு மணிக்கே வீதிகளில் வாகன நெரிசல்.

ஐ... அல்ட்ராஸில் i-டர்போ!

அல்ட்ராஸ் நமக்குப் புதியது இல்லை. ப்ரீமியம் ஹேட்ச்பேக் செக்மென்ட்டில் மாருதி பெலினோ, ஹூண்டாய் ஐ20 ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக அதிக விற்பனையாகும் கார் இதுதான். எடுப்பான தனித்தன்மை வாய்ந்த வெளிப்புறத் தோற்றம், தாராளமான இடவசதி, நல்ல ரைடு அண்டு ஹேண்ட்லிங் என்று அல்ட்ராஸுக்கு நிறைகள் நிறையவே இருந்தாலும், குறையாக இருந்தது சுறுசுறுப்பில்லாத பெட்ரோல் இன்ஜின். இந்தக் குறையைப் போக்கத்தான் டாடா இப்போது அல்ட்ராஸில் ஐ-டர்போ என்று இந்தப் புதிய வேரியன்ட்டை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த செக்மென்ட்டில் ஹூண்டாய் ஐ20 தவிர, போலோ 1.0 TSI ஆகியவற்றிலும் டர்போ இன்ஜின் இருப்பதால் வாடிக்கையாளர்கள் அல்ட்ராஸை இவற்றோடுதான் ஒப்பிட்டுப் பார்ப்பார்கள்.

1
1
2
2
3
3
4
4

1. டேஷ்போர்டு டிசைன் நீட் அண்ட் க்ளீன். டர்போவில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ்தான். ஸ்போர்ட் மோடு உண்டு. 2. பின் பக்கம் i-Turbo எனும் பேட்ஜ்தான் அடையாளம். 3. முன் பக்க பனி விளக்குகளுடன் கார்னரிங் லைட்ஸ் செம! 4. அல்ட்ராஸின் டாப் எண்டில் 16 இன்ச் வீல்கள். XT-ல் 14 இன்ச்தான்!

ரெகுலர் அல்ட்ராஸில் எக்கோ மற்றும் சிட்டி மோடு ஆகிய இரண்டு ‘மோடு’கள்தான். ஆனால் i-டர்போ வேரியன்ட்டில், எக்கோ மற்றும் ஸ்போர்ட்ஸ் ஆகிய `மோடு’கள். ஸ்போர்ட்ஸ் மோடில் வைத்து ஓட்டும்போது சாதா அல்ட்ராஸுக்கும் இதற்கும் உள்ள வித்தியாசத்தை உணர முடிகிறது. ரெகுலர் அல்ட்ராஸில் இருக்கும் 1.2 லிட்டர் (டிகோர் மற்றும் டியாகோவில் உள்ள அதே!) இன்ஜின் 86bhp சக்தியையும் 11.3kgm டார்க்கையும் கொடுக்கிறது என்றால், i-டர்போ 110bhp சக்தியையும் 14.0kgm டார்க்கையும் கொடுக்கிறது.

இதில் விசித்திரம் என்னவென்றால், நெக்ஸானில் இருக்கும் அதே 1.2 லிட்டர் டர்போ இன்ஜின்தான் அல்ட்ராஸிலும். ஆனால் நெக்ஸான் 120bhp சக்தியையும் 17.0 kgm டார்க்கையும் கொடுக்கிறது. நெக்ஸானில் இருப்பது 6 ஸ்பீடு கியர்பாக்ஸ். ஆனால் அல்ட்ராஸ் i-டர்போவில் இருப்பதோ 5 ஸ்பீடு கியர்பாக்ஸ். இதன் போட்டியாளர்கள் எல்லாம் டைரக்ட் இன்ஜெக்‌ஷன் டர்போ பெட்ரோல் இன்ஜினைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் அல்ட்ராஸ் i-டர்போவில் இருப்பதோ இன்-டைரக்ட் இன்ஜெக்‌ஷன். மிட்ரேஞ்சில் இதன் சக்தி உற்சாகமளிக்கிறது. லேசாக ஆக்ஸிலரேட்டரை அழுத்தினாலே தேவைப்படும் சக்தி கிடைத்துவிடுகிறது. ஆனால்,குறைந்த வேகங்களில் செல்லும்போது இந்த i-டர்போ வேரியன்ட்டில் சற்றே டர்போ லேக் தெரிகிறது. 1,800rpm தாண்டினால், இது டர்போ இன்ஜின் என்று புரிய ஆரம்பிக்கிறது. இதன் முழு வீச்சையும் உணர வேண்டுமென்றால் 4,800rpm-யைத் தாண்டி இன்ஜின் ரெவ்வாக வேண்டும்.

ஐ... அல்ட்ராஸில் i-டர்போ!

டெல்லியின் வாகன நெரிசல் என்பது சென்னையில் நாம் பார்க்கும் வாகன நெரிசலோடு ஒப்பிடும்போது, வித்தியாசமானது. இங்கே பம்பர் டு பம்பர் ட்ராஃபிக் இருக்கும். ஆனால், அங்கேயும் ஏறக்குறைய அதேபோலத்தான். ஆனாலும் அகலமான எட்டு வழிச்சாலைகள் என்பதால்... அங்கே ஐம்பது அறுபது கிமீ வேகத்தில்கூட சிட்டியில் வாகனங்கள் பறக்கும். ஓவர்டேக் செய்யும். லேன் மாறும். இதுபோன்ற ட்ராஃபிக்கில் அடிக்கடி கியர் மாற்றாமல் i-டர்போவை ஓட்ட முடிகிறது என்றால்... அதற்குக் காரணம் மேம்பட்டிருக்கும் இதன் இன்ஜின்தான்.

அட்ராஸ் i-டர்போ, ஸ்போர்ட்ஸ் மோடில் 0-100 கிமீ வேகத்தை 12 விநாடிகளில் தொடுகிறது. ஆனால், ஃபோக்ஸ்வாகன் போலோ TSI காருக்கு 10 விநாடிகள் போதும். ஹூண்டாய் ஐ20யும் 0-100 கிமீ வேகத்தை அல்ட்ராஸைவிடச் சீக்கிரமாகத் தொட்டுவிடுகிறது.

அல்ட்ராஸ் ஸ்டாண்டர்ட் வேரியன்ட் லிட்டருக்கு 19.05 கிமீ மைலேஜ் கொடுத்தால், i-டர்போ வேரியன்ட் ARAI கணக்குப்படி, ஒரு கிமீ குறைவாக, அதாவது 18.13 கிமீதான் கொடுக்கிறது.

சிக்னல்களில் ஐடிலிங்கில் காத்திருக்கும்போது, இதன் 3 சிலிண்டர் இன்ஜினின் தாக்கத்தை கேபினுக்குள் உணர முடிகிறது. ஆனால், ஸ்டாண்டர்ட் வேரியன்ட்டைவிட அதிர்வுகள் குறைவுதான். சாலைகளில் சத்தமும் ஓரளவு கேபினுக்குள் கேட்கிறது. ஸ்டாண்டர்டைவிட ஸ்டீயரிங்கும் மேம்பட்டிருக்கிறது.

நெக்ஸானில் இருக்கும் ‘வாட் 3 வேர்ட்ஸ்’ என்ற நேவிகேஷன் செயலியும், எக்ஸ்பிரஸ் கூல் வசதியையும் இதில் டாடா சேர்த்திருக்கிறது. புதிய இன்டீரீயர், காற்றோட்டம் அளிக்கக்கூடிய பர்ஃபர்ரேட்டட் சீட்ஸ், கூடுதலாக சவுண்ட் சிஸ்டத்துடன் இரண்டு ட்விட்டர்ஸையும் டாடா இதில் சேர்த்திருக்கிறது.

iRA (Intelligent Real time Assist) எனப்படும் கனெக்டெட் கார் டெக்னாலஜியும் உண்டு.ஜியோஃபென்சிங், டைம் ஃபென்சிங் போன்ற பல வசதிகள் இதில் உண்டு. வாய்ஸ் கமாண்டின் சிறப்பு என்னவென்றால் இதற்கு இங்கிலிஷ், இந்தி தவிர - ஹிங்கிலிஷும் புரிகிறது. கூடிய சிக்கிரம் தமிழும் புரிந்துகொண்டால் நன்றாக இருக்கும்.

ஐ... அல்ட்ராஸில் i-டர்போ!

வர்ச்சியான வெளித்தோற்றம், பாதுகாப்பில் NCAP-ல் 5 ஸ்டார் ரேட்டிங், தாராளமான கேபின், டிக்கி, அற்புதமான ரைடு மற்றும் ஹேண்ட்லிங் ஆகியவற்றுடன் இப்போது செயல்திறனிலும் மேம்பட்டு வந்திருக்கும் அல்ட்ராஸ், போட்டி கார்களைவிட விலை குறைவுதான். ஆனால், இதில் போட்டி கார்களில் இருக்ககூடிய ஆட்டோமேட்டிக் ஆப்ஷன் கிடையாது என்பதும்... இதன் செயல்திறன் இன்னும்கூட சிறப்பாக இருந்திருக்கலாம் என்பதும்தான் நெருடல்கள். இதன் எக்ஸ் ஷோரூம் விலை 7.74, 8.46, 8.86 லட்சம் (XT, XZ, XZ+). மற்றபடி கொடுக்கும் பணத்துக்கு ஏற்ற கார் இது என்பதில் சந்தேகம் எதுவுமில்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism