இனோவா க்ரிஸ்ட்டா... லாஞ்ச் ஆன 2016-ம் ஆண்டில் இருந்து, கிங் ஆஃப் எம்பிவி இதுதான். அட, 2005-ல் குவாலிஸுக்கு மாற்றாக இனோவா அறிமுகமான நாளில் இருந்தே, எம்பிவிகளின் 'ரூட் தல' இனோவாதான். 2.5 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் - 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனுடன் இருந்தது இனோவா. (போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால், 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் கொண்ட மாடல் நிறுத்தப்பட்டுவிட்டது).

இப்போது இனோவா க்ரிஸ்டா, பலவிதமான இன்ஜின் - கியர்பாக்ஸ் ஆப்ஷன்களைக் கொண்டிருக்கிறது. அதில் பவர்ஃபுல்லான 2.8 லிட்டர் டர்போ டீசல் இன்ஜினில், 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்பட்டிருந்தது தெரிந்ததே!

ஏப்ரல் மாதத்தில் அமலுக்கு வந்த BS-6 விதிகளுக்கேற்ப இந்தப் பெரிய 4 சிலிண்டர் இன்ஜினை அப்கிரேடு செய்வது கொஞ்சம் காஸ்ட்லி என்பதால், க்ரிஸ்ட்டாவில் இருந்து 2.8 லிட்டர் இன்ஜின் ஆப்ஷனையே டொயோட்டா நீக்கிவிட்டது. ஆனால் அதிலிருந்த ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், தற்போது 2.4 லிட்டர் இன்ஜினுடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே பவர் குறைவான இந்த டர்போ டீசல் இன்ஜின் (150bhp), புதிய கூட்டணியுடன் எப்படிச் செயல்படும் என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாகவே இருந்தோம். அதற்கான விடை இந்தக் கட்டுரையில்...!

டிசைன், வசதிகள், ஓட்டுதல்

இனோவா க்ரிஸ்ட்டாவின் தோற்றத்தில் எந்த மாறுதலும் இல்லை. அகலமான கிரில், LED ப்ரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், அதே நீளமான Profile, Inverted L வடிவ டெயில் லைட்ஸ், 17 இன்ச் அலாய் வீல்கள், க்ரோம் வேலைப்பாடுகள் போன்ற அம்சங்கள் அப்படியே! டெயில் லைட்டும் LED-க்கு மாறியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். காரின் வெளிப்புறத்தைப் போலவே, உட்புறத்திலும் எந்த வித்தியாசமும் இல்லை. டாப் வேரியன்ட்களில் வரக்கூடிய Ivory லெதர் அப்ஹோல்சரி நன்று. முன்புபோலவே சொகுசான 7 சீட் (நடுவரிசை - 2 கேப்டன் சீட்கள்) மற்றும் 8 சீட் ஆப்ஷனும் (நடுவரிசை - பெஞ்ச் சீட்) உண்டு. ஆனால் 28 லட்ச ரூபாய் மதிப்புமிக்க ஒரு காரில் இருக்கக்கூடிய டச் ஸ்க்ரீனில், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே போன்ற அத்தியாவசியமான கனெக்ட்டிவிட்டி அம்சங்கள் இல்லாதது ஏனோ?

மேலும் இவ்வளவு பெரிய காருக்கு, குறைவான USB/12V பாயின்ட்களே கேபினில் இருக்கின்றன. டாப் வேரியன்ட்களில் இருக்கும் 17 இன்ச் டயர்களின் Sidewall இறுக்கமாக உள்ளதால் (215/55), இனோவா க்ரிஸ்டாவின் ஓட்டுதல் தரம் கொஞ்சம் கரடுமுரடாகவே இருக்கிறது. இதுவே பள்ளம் மேடுகளில் கார் இறங்கி ஏறும்போது, ஸ்டீயரிங்கில் அதை டிரைவர் உணர முடிவது மைனஸ். தவிர குறைவான வேகங்களில் காரைச் செலுத்தும்போது (பார்க்கிங்/யூ-டர்ன்), ஸ்டீயரிங் அமைப்பு கொஞ்சம் கனமாகவே இருக்கிறது. மற்றபடி விலை குறைவான வேரியன்ட்களில் இருக்கும் 16 இன்ச் டயர்கள் உயரமான Sidewall கொண்டிருப்பதால் (205/65), அதன் ஓட்டுதல் தரம் பரவாயில்லை. இருப்பினும் லேடர் ஃப்ரேம் வாகனங்களுக்கே உரித்தான இறுக்கமான ஓட்டுதல் அனுபவம், குறைவான வேகங்களில் தெரிகிறது.

இன்ஜினில் என்னென்ன மாறியிருக்கிறது?

இதர BS-6 டர்போ டீசல் இன்ஜின்களைப் போலவே, இங்கும் Selective Catalytic Reduction (SCR), Diesel Particulate Filter (DPF) போன்ற தொழில்நுட்பங்கள் இடம் பெற்றுள்ளன. குறைவான ஆர்பிஎம்மில் தொடர்ச்சியாக இயங்கும்போது, DPF அமைப்பு அடைத்துக் கொள்ளக்கூடும். அதாவது DPF-ல் அடைப்பு ஏற்பட்டு இருப்பதை காரின் ECU கண்டறிந்துவிட்டால், இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டரில் அதற்கான வார்னிங் லைட் எரியத் தொடங்கிவிடும். எனவே இதைச் சுத்தப்படுத்த, டேஷ்போர்டின் கீழ்ப்பகுதியில் ஒரு பட்டன் வழங்கப்பட்டுள்ளது. இதனால் சிறிது நேரத்துக்கு இன்ஜின் அதிக ஆர்பிஎம்முக்குத் தானாக மாறி, அதனால் உண்டாகும் அதிக வெப்பமானது DPF அமைப்பில் இருக்கும் Soot Particles-யை எரியூட்டிவிடும். இதைத் தேவைப்படும்போது மட்டுமே செய்வது நலம். மற்றபடி 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட மாடல் 34.3kgm டார்க்கைத் தந்தால், 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட வெர்ஷன் 36kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது. இது பவர்ஃபுல்லான 2.8 லிட்டர் இன்ஜினுக்கு இணையானது என்பது கவனிக்கத்தக்கது (ஆனால் 24bhp பவர் குறைவு).

இன்ஜின் பெர்ஃபாமென்ஸ்

BS-4 மாடலுடன் ஒப்பிடும்போது, BS-6 வெர்ஷனின் இன்ஜின் குறைவான ஆர்பிஎம்களில் ஸ்மூத்தாகத் தனது பணியைச் செய்கிறது. இதனால் நெடுஞ்சாலைகளில் க்ரூஸ் செய்வது Refined அனுபவமாக மாறிவிட்டது. ஆரம்பகட்ட மற்றும் மிதவேகங்களில், இந்த 2.4 லிட்டர் GD-FTV டர்போ டீசல் இன்ஜினின் த்ராட்டில் ரெஸ்பான்ஸ் சிறப்பாக இருக்கிறது. 2.8 லிட்டர் இன்ஜினில் கிடைத்த அந்த அதிரடியான பன்ச் இங்கே இல்லையென்றாலும், ஃபுல் லோடிலும் இந்தக் காரின் இழுவைத் திறன் மனநிறைவைத் தருகிறது. 0 - 100 கிமீ வேகத்தை 13.23 விநாடிகளில் எட்டிப்பிடிக்கும் 2.4D AT கூட்டணியில், 2.8 லிட்டர் மாடலில் இருந்த டாப் எண்ட் பெர்ஃபா,என்ஸ் இல்லை என்பதே நிதர்சனம் (0 - 100 கிமீ வேகம்: 11.46 விநாடிகள்). கியர்களுக்கு இடையேயான வேகத்திலும் 2.8 லிட்டர் மாடலின் கையே ஓங்கியிருக்கிறது.

மற்றபடி 6 ஸ்பீடு ECT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸில் உடனடியாக கியர்கள் மாறுவதுடன், விரட்டி ஓட்டப்படும்போதும் அது டிரைவரின் கட்டளைகளுக்கு ஏற்பச் செயல்படுகிறது. இதில் இருக்கும் S மோடு, கியர்களை Hold செய்வதற்கு உதவுகிறது. கியர் லீவரை மேல்/கீழ்நோக்கித் தட்டும்போது, Sequential மேனுவல் மோடு ஆக்டிவேட் ஆகிவிடும் இங்கே வழக்கமான மேனுவல் கியர்பாக்ஸ் போல, ரெட்லைன் வரை கியர் மாறாது என்பது செம! ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், நெரிசல்மிக்க நகரச்சாலைகளில் இனோவா க்ரிஸ்ட்டாவை எளிதாக இயக்க முடிகிறது. முன்பைவிட அதிக டார்க் கிடைப்பதால், நெடுஞ்சாலைகளில் முன்னே செல்லும் காரை ஓவர்டெக் செய்வதும் சுலபம்தான். BS-4 மாடல் போலவே, 2 பவர் மோடுகள் (Eco, Power) & ஸ்டார்ட் ஸ்டாப் சிஸ்டம் ஆகியவையும் இருக்கின்றன.

முதல் தீர்ப்பு

2.4 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் - 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் காம்போவுடன் வரும் இனோவா க்ரிஸ்டா BS-6, நம்பகத்தன்மை வாய்ந்த தயாரிப்பாகத்தான் இருக்கிறது. போதுமான செயல்திறனைத் தரும் டீசல் இன்ஜின், சொகுசான கேபின், எம்பிவிகளுக்கே உரித்தான பிராக்டிக்காலிட்டி, தேவையான வசதிகள் என ஒரு ஆல்ரவுண்டராக இந்த டொயோட்டா கார் இருக்கிறது. அதற்கேற்றபடி விலை விஷயத்தில் ரொம்பவே ப்ரீமியமாக இருந்தாலும் (2.4 ZX AT - 23.63 லட்ச ரூபாய், எக்ஸ்-ஷோரூம்), இனோவா க்ரிஸ்டாவின் 4 தூண்களாக இருக்கும் மெக்கானிக்கல் பேக்கேஜ் - ஒட்டுமொத்தத் தரம் - ரீசேல் மதிப்பு - பராமரிப்புச் செலவு ஆகியவையே, அதன் வெற்றிக்கான காரணிகள். இல்லையென்றால் கடந்த 15 ஆண்டுகளில், 9 லட்சத்துக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை, ஒரு பிராண்ட் எளிதாகப் பெற முடியுமா என்ன?