Published:Updated:

போட்டிக்கு யாரும் இல்ல... வேகத்தில் போலோதான் கிங்!

ஃபோக்ஸ்வாகன் போலோ
பிரீமியம் ஸ்டோரி
News
ஃபோக்ஸ்வாகன் போலோ

ஃபர்ஸ்ட் டிரைவ்: ஃபோக்ஸ்வாகன் போலோ 1,0 TSI

போலோ... நம் நாட்டுக்கு வந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில், 8 விதமான இன்ஜின்களை இந்த ஹேட்ச்பேக் கண்டிருக்கிறது.

மேலும் தோற்றம் மற்றும் வசதிகளில் சிற்சில முன்னேற்றங்களை இது பெற்றிருப்பதும் தெரிந்ததே! தற்போது போலோவின் BS-6 வெர்ஷனில் இருக்கும் 1.0 லிட்டர் TSI இன்ஜின்தான், இந்த ஃபோக்ஸ்வாகன் தயாரிப்பில் இடம்பெற்ற சிறந்த இன்ஜின் எனச் சொல்லலாம். International Engine of the Year விருதினை வென்றிருக்கும் இந்த 3 சிலிண்டர் டைரக்ட் இன்ஜெக்‌ஷன் - டர்போ பெட்ரோல் இன்ஜின், பர்ஃபாமன்ஸ் மற்றும் மைலேஜை சமவிகிதத்தில் வழங்கும் என நம்பலாம்.

போட்டிக்கு யாரும் இல்ல... வேகத்தில் போலோதான் கிங்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அதற்கேற்ற தொழில்நுட்பங்களைத் தன்வசப்படுத்தியிருக்கும் இந்த 1.0 லிட்டர் TSI இன்ஜின், முன்பிருந்த 1.2 லிட்டர் TSI - 4 சிலிண்டர் இன்ஜினைவிட 5bhp அதிக பவரைத் தருகிறது (110bhp). ஆனால் இது வெளிப்படுத்தும் டார்க் அதேதான் (17.5kgm). இதனால் ஒப்பீட்டளவில் இந்த இன்ஜின், ஹூண்டாயின் 1.0 லிட்டர் T-GDi - 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினுடன் போட்டி போடுகிறது (100bhp/120bhp - 17.5kgm). பத்தாண்டு கால போலோ வரலாற்றில் முதல்முறையாக, 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் BS-6 வெர்ஷனில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் BS-4 மாடலில் இருந்த 1.5 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் மற்றும் டர்போ பெட்ரோல் இன்ஜினில் இருந்த 7 ஸ்பீடு DSG கியர்பாக்ஸ் ஆகியவை, BS-6 வெர்ஷனில் கிடையாது என்பது கார் ஆர்வலர்களுக்கு வருத்தமான விஷயம்தான். அதற்குப் பதில், 1.0 லிட்டர் TSI இன்ஜினில் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது.

போட்டிக்கு யாரும் இல்ல... வேகத்தில் போலோதான் கிங்!

கடந்தாண்டு செப்டம்பர் மாதத்தில் இந்த ஹேட்ச்பேக்கின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வெளிவந்துவிட்டதால், காரின் தோற்றத்தில் ஃபோக்ஸ்வாகன் எந்த மாற்றத்தையும் செய்துவிடவில்லை. நம் நாட்டில் அறிமுகமாகி 10 ஆண்டுகள் ஆகிவிட்டாலும், போலோ இன்றுமே ஃப்ரெஷ்ஷாகவே காட்சியளிக்கிறது. கச்சிதமான அளவில் இருக்கும் இந்த ஹேட்ச்பேக்கின் கட்டுமானத் தரம் அசத்தலாக இருக்கிறது. GTI போலக் காரின் முன்பக்கம் இருந்தால், பக்கவாட்டில் இருக்கக்கூடிய Running Board-ல் கூடுதல் க்ளாடிங் செய்யப்பட்டுள்ளது. பின்பக்க பம்பர் Faux Diffuser உடன் ஸ்போர்ட்டியாக உள்ளது. இதுபோன்ற டீட்டெய்லிங் இருப்பதால், போலோவின் தோற்றம் ஸ்போர்ட்டியாகவே இருக்கிறது. வென்ட்டோவில் இருக்கும் LED ஹெட்லைட்ஸ் & கூடுதல் 2 காற்றுப்பைகள், இங்கே இருந்தால் நன்றாக இருந்திருக்கும். தவிர Shark Fin Antenna இல்லாதது & வழக்கமான ஹெட்லைட்ஸ், காரின் வயதைக் குறிக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இன்ஜின் பர்ஃபாமன்ஸ்

டர்போ பெட்ரோல் இன்ஜின்... பஞ்ச் ஆக இல்லாமல் போனால் எப்படி? 3,000 முதல் 6,000 ஆர்பிஎம் வரை பவர் டெலிவரி அதிரடியாக இருக்கிறது. எந்த கியரிலும் ஆக்ஸிலரேஷன் சிறப்பாக இருப்பது நைஸ். 0 - 100 கி.மீ வேகத்தை வெறும் 9.97 விநாடிகளில் எட்டிப் பிடிக்கிறது போலோ 1.0 லிட்டர் TSI. அபார்த் புன்ட்டோ, பெலினோ RS, டியாகோ JTP எனப் போட்டியாளர்கள் யாருமே இல்லாததால், வேகமான ஹேட்ச்பேக்காக இந்த ஃபோக்ஸ்வாகன் ஹேட்ச்பேக் தனித்து நிற்கிறது. அதிகபட்சமாக 192 கி.மீ வேகம் வரை போலோ TSI-ல் செல்ல முடிந்தது. இந்தச் சிறிய இன்ஜினில் இவ்வளவு செயல்திறனா என்ற வியப்பு இருக்கவே செய்கிறது. ஒருவேளை கிராண்ட் i10 நியோஸ் டர்போவை ஓட்டிப் பார்க்கும்போது, இந்த நிலைமையில் மாற்றம் இருக்கலாம். வழக்கமான 1.2 லிட்டர் K12 சீரிஸ் இன்ஜின் கொண்ட ஸ்விஃப்ட், இந்த போலோவைவிட 190கிலோ எடை குறைவு! 0 - 100 கி.மீ வேகத்தை எட்டுவதற்கு ஸ்விஃப்ட் இரு விநாடிகள் அதிகமாகவே எடுத்துக் கொள்கிறது.

ஃபோக்ஸ்வாகன் போலோ 1,0 TSI
ஃபோக்ஸ்வாகன் போலோ 1,0 TSI

1.2 TSI - 7 ஸ்பீடு DSG கூட்டணி, 0 - 100 வேகத்தை 11 விநாடிகளில் எட்டியது. இதுவே 0 - 160 கி.மீ வேகம் என்றால், போலோ 1.0 TSI-யைவிட 6 விநாடிகள் அதிகமான நேரத்தை எடுத்துக்கொண்டது போலோ 1.2 TSI. கிராண்ட் i10 நியோஸ் டர்போவில் இருப்பது 100bhp பவர்தான். என்றாலும், 120bhp பவரை வெளிப்படுத்தும் வென்யூ, 0 - 100 கி.மீ வேகத்தை 11.24 விநாடிகளில் தொடுகிறது. குறைவான வேகத்திலும் பவர் இருப்பதால், நெரிசல்மிக்க டிராஃபிக்கில் காரைச் செலுத்துவது நல்ல அனுபவமாகவே இருக்கிறது. எந்த கியரில் இருந்தாலும் அல்லது குறைவான 1,100 ஆர்பிஎம்மில் இருக்கும்போதும் கூட, ஆக்ஸிலரேட்டரில் அழுத்தம் காட்டும்போது எந்தத் திணறலும் இல்லாமல் வேகமெடுக்கிறது போலோ 1.0 TSI. ஆனால் 2,500 ஆர்பிஎம்மைத் தாண்டும்போதுதான் ஆக்ஸிலரேஷனில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. இதை டர்போ லேக் எனச் சொல்ல முடியவில்லை. கியர்களுக்கு இடையிலான வேகத்தைப் பொறுத்தவரை, இதைவிட பெலினோ RS வேகமாக இருக்கிறது.

6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸின் கியர் ரேஷியோ ஓகே. ஆனால் கியர் மாற்றும் அனுபவம், முன்புபோல துல்லியமாக இல்லாதது மைனஸ். முன்பைவிட 200சிசி மற்றும் ஒரு சிலிண்டர் குறைவு என்பதால், ரிஃபைன்மென்ட்டில் சரிவு இருக்கவே செய்கிறது. ஐடிலிங் ஸ்மூத்தாக இல்லாததுடன், இந்த நேரத்தில் கிளட்ச் பெடலில் கொஞ்சம் அதிர்வுகளை உணர முடிகிறது. பேலன்சர் ஷாஃப்ட் இல்லாததே இதற்கான காரணம். 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின்களைப் பொறுத்தவரை, ஃபோர்டு நிறுவனத்தின் 1.5 லிட்டர் Dragonதான் ரிஃபைன்மென்ட்டில் லீடிங்! ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், 1.2 லிட்டர் TSI-ன் ஸ்மூத்னெஸ் மற்றும் சீரான பவர் டெலிவரி, 1.0 லிட்டர் TSI-ல் கிடையாது.

ஓட்டுதல் அனுபவம்

வழக்கம்போலவே, திருப்பங்களில் அசத்திவிடுகிறது போலோ. ஸ்டீயரிங் லைட்டாகவே இருந்தாலும், வேகமாகச் செல்லும்போது அது கூடுதல் எடையுடன் துல்லியமாகச் செயல்படத் தொடங்கி விடுகிறது. இதனால் காரைத் திருப்பங்களில் நம்பிக்கையுடன் வேகமாகச் செலுத்த முடிகிறது. இதனுடன் இறுக்கமான சஸ்பென்ஷன், பெரிய வீல்கள், கிரிப்பான டயர்கள் சேரும்போது, காரின் கையாளுமை அட்டகாசமாக இருக்கிறது. 1.0 லிட்டர் TSI இன்ஜினின் மிட்ரேஞ்ச், டிரைவர்களுக்கு ரொம்பவே பிடிக்கும். பாடி ரோலும் கட்டுக்குள்ளேயே இருக்கிறது. போதுமான கிரவுண்ட் கிளியரன்ஸ் இருப்பதால், கரடுமுரடான சாலைகளில் பயமின்றிச் செல்லலாம். இறுக்கமான செட்டிங்கில் சஸ்பென்ஷன் இருந்தாலும், சீரற்ற சாலைகளை போலோ சிறப்பாகவே சமாளிக்கிறது. மைலேஜைப் பொறுத்தவரை, 18.24 அராய் மைலேஜைக் கொண்டிருக்கிறது 1.0 லிட்டர் TSI இன்ஜின். 11-12 கி.மீ ஆன் ரோடு மைலேஜை, இந்த ஃபோக்ஸ்வாகன் ஹேட்ச்பேக்கிலிருந்து எதிர்பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கேபின் மற்றும் சிறப்பம்சங்கள்

MID உடனான அனலாக் மீட்டர்கள் மற்றும் லெதர் சுற்றப்பட்ட ஃப்ளாட் பாட்டம் ஸ்டீயரிங் வீல் ஆகியவை, கார் ஆர்வலர்களுக்கு மிகவும் பிடிக்கும். போலோவில் இருக்கும் 6.5 இன்ச் டச் ஸ்க்ரீன் சிறியதுதான். ஆனால் இதன் தரம், செயல்பாடு நன்றாக இருக்கிறது. இதன் ஆப்பிள் கார் ப்ளே கனெக்ட்டிவிட்டி நச் ரகம். ரிவர்ஸ் கேமரா இல்லை. ஆனால் டாப் வேரியன்ட்டில் கூல்டு க்ளோவ் பாக்ஸ், க்ரூஸ் கன்ட்ரோல், வாய்ஸ் கமாண்ட், ஒன் டச் பவர் விண்டோஸ் இருக்கின்றன. கேபினில் இருக்கும் பட்டன்கள், பாகங்கள், ப்ளாஸ்டிக் தரம் ஆகியவை, இந்த ஹேட்ச்பேக்கைவிட இருமடங்கு விலையில் இருக்கும் கார்களில் இருந்து பெறப்பட்டதோ எனத் தோன்றுகிறது.

டிரைவிங் பொசிஷன் செம. ஸ்டீயரிங்கை Reach/Rake பாணியில் அட்ஜஸ்ட் செய்ய முடிவது நன்று. சீட்டின் அடிப்பகுதி அகலமாக இருந்தாலும், தோள்களுக்கான சப்போர்ட் கொஞ்சம் பெட்டராக இருந்திருக்கலாம். மற்றபடி சீட்கள் சொகுசு.

ஃபோக்ஸ்வாகன் போலோ 1,0 TSI
ஃபோக்ஸ்வாகன் போலோ 1,0 TSI

போலோவில் பின்பக்க இடவசதி குறைவுதான். புதிய போட்டியாளர்கள் இந்த விஷயத்தில் ஸ்கோர் செய்கிறார்கள். தொடைகளுக்கான சப்போர்ட் சூப்பர். சென்டர் ஆர்ம் ரெஸ்ட் இல்லை. பின்பக்க ஏசி வென்ட் இருந்தாலும், அதில் USB Slot இல்லை; வெறும் 12V பாயின்ட்தான். 280 லிட்டர் பூட் ஸ்பேஸ்தான். 1.2 TSI மாடலில் இருந்த ESP இங்கே மிஸ்ஸிங்.

முதல் தீர்ப்பு

சிம்பிளாகச் சொல்வதென்றால், இந்த விலையில் (8.02 லட்சம் - Highline Plus MT - எக்ஸ்ஷோரூம்) சிறப்பான டிரைவர்ஸ் கார் எது என்ற கேள்விக்கு, ஃபோக்ஸ்வாகன் போலோ முழு நியாயம் கற்பிக்கிறது. எனவே இடவசதி, சொகுசு, பிராக்டிக்காலிட்டி ஆகியவை தேவை என்றால், அவர்களுக்கு இந்த கார் நல்ல சாய்ஸாக இருக்காது. முந்தைய 4 சிலிண்டர் இன்ஜின் அளவுக்கு ஸ்மூத்தாக இல்லை என்பதுடன், விரட்டி ஓட்டினால்தான் 1.0 லிட்டர் TSI இன்ஜினின் செயல்திறன் வெளிவரும். சில சிறப்பம்சங்கள் இல்லாததும் நெருடல்தான். போலோவின் ஓட்டுதல் அனுபவம் சிறப்பு.

‘வேகமான ஹேட்ச்பேக்’ என்ற பெருமையே, போலோவுக்குத் தேவையான வரவேற்பை மக்களிடையே பெற்றுத் தரும். காரின் கட்டுமானத் தரம் மற்றும் கேபின் தரம் பெரிய வரப்பிரசாதம். எனவே, 5 ஆண்டுகளுக்குப் பிறகு பார்த்தாலும், போலோ உருக்குலைந்து (கடாமுடா சத்தத்துடன்) போயிருக்காது.

இந்த காரைவிட 34 ஆயிரம் ரூபாய் குறைவான விலையில் கிடைக்கும் கிராண்ட் i10 நியோஸ் டர்போ, டாப் வேரியன்ட்களில் வாங்க முடியாது. உதாரணத்துக்கு, ஸ்விஃப்ட் 1.2 ZXi+ வேரியன்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலையே 7.58 லட்ச ரூபாய் என்பதை வைத்துப் பார்த்தால், போலோ கொடுக்கும் காசுக்கு மதிப்பு உடையதே!