Published:Updated:

ஃபோக்ஸ்வாகனின் - சுட்டிக் குழந்தை... போலோ!

ஃபோக்ஸ்வாகன் போலோ GT ஆட்டோமேட்டிக்
பிரீமியம் ஸ்டோரி
ஃபோக்ஸ்வாகன் போலோ GT ஆட்டோமேட்டிக்

ஃபர்ஸ்ட் டிரைவ்: ஃபோக்ஸ்வாகன் போலோ GT ஆட்டோமேட்டிக்

ஃபோக்ஸ்வாகனின் - சுட்டிக் குழந்தை... போலோ!

ஃபர்ஸ்ட் டிரைவ்: ஃபோக்ஸ்வாகன் போலோ GT ஆட்டோமேட்டிக்

Published:Updated:
ஃபோக்ஸ்வாகன் போலோ GT ஆட்டோமேட்டிக்
பிரீமியம் ஸ்டோரி
ஃபோக்ஸ்வாகன் போலோ GT ஆட்டோமேட்டிக்
`லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்’ இயல்புதான்… ஆனால், `Love at Lakhs sight’-லும் சலிக்காமல் காதல் ஏற்படும் என்றால், அது போலோவின் டிசைன்தான். 10 ஆண்டுகளாக ஒரே டிசைன்தான்; ஆனால், கார் ஆர்வலர்களுக்கு போர் அடிக்கவே இல்லை போலோவின் டிசைன். செம காம்பேக்ட்டாக, ஜிவ்வென போலோவில் பறப்பவர்களைப் பார்த்தால் கொஞ்சம் பொறாமையாகத்தான் இருக்கும். 10 ஆண்டுகள், 8 விதமான இன்ஜின், ஏகப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் என வந்து கொண்டே இருக்கும் போலோ, BS-6-க்கு அப்டேட் ஆனது தெரிந்ததே!
1. கறுப்பு இன்டீரியர் டிசைனும் பெரிதாக மாறவில்லை. ஆனால் சிம்பிள் அண்ட் நீட்.  2. `இன்டர்நேஷனல் இன்ஜின் ஆஃப் தி இயர்’ விருது வென்றிருக்கும் பெட்ரோல் இன்ஜின்  3. 10 ஸ்போக் அலாய் வீல்கள், ஓகே. ஆனால் இன்னும் ஸ்போர்ட்டியாக இருந்திருக்கலாம்.  4. கிரில்லில் GT பேட்ஜ் வைத்துத்தான் GT மாடலைக் கண்டுபிடிக்க வேண்டும்.
1. கறுப்பு இன்டீரியர் டிசைனும் பெரிதாக மாறவில்லை. ஆனால் சிம்பிள் அண்ட் நீட். 2. `இன்டர்நேஷனல் இன்ஜின் ஆஃப் தி இயர்’ விருது வென்றிருக்கும் பெட்ரோல் இன்ஜின் 3. 10 ஸ்போக் அலாய் வீல்கள், ஓகே. ஆனால் இன்னும் ஸ்போர்ட்டியாக இருந்திருக்கலாம். 4. கிரில்லில் GT பேட்ஜ் வைத்துத்தான் GT மாடலைக் கண்டுபிடிக்க வேண்டும்.

ஃபோக்ஸ்வாகன் வரலாற்றில் முதல் முறையாக 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் வந்த போலோவின் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்டை ஜூலை மாதமே பார்த்திருந்தோம். ரிப்போர்ட்டின் முடிவில், விரைவில் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வரும் என்று சொல்லியிருந்தோம். வந்தே விட்டது. நமது அலுவலகத்தில் இருந்து வேளச்சேரி, கிண்டி, ரிங்ரோடு, வண்டலூர், அம்பத்தூர் என எல்லா ஏரியாக்களிலும் போலோவைப் புகுந்து புறப்பட வைத்தோம். எப்படி இருக்கு 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோ மேட்டிக் போலோ?

ஏற்கெனவே சொன்ன மாதிரி தோற்றத்தில் பெரிதாக மாறவில்லை போலோ. நீளமான அந்தச் சின்ன கிரில்லில் அந்த GT லோகோவைப் பார்த்தாலே வெறி ஏறுகிறது. பம்பருக்குக் கீழேயும் கிரில் ஸ்டைலிலேயே வேலைப்பாடு. பக்கத்தில் பனி விளக்குகள். பின் பக்கத்தில் பெரிய கறுப்பு நிற ஸ்பாய்லர், கறுப்பு நிற மிரர்கள், கறுப்பு ரூஃப் எல்லாமே ஸ்போர்ட்டியாக இருக்கின்றன. உள்ளேயும் கறுப்பு இன்டீரியர் செம! வெளியே அங்கங்கே GT TSI லோகோ அருமை. இதுதான் சாதா போலோவுக்கும் GT போலோவுக்கும் பெரிய வித்தியாசம். ஃப்ரெஷ், ஸ்போர்ட்டினெஸ் கலந்து கட்டி இருக்கிறது அவுட்லுக். ஓகே! டிரைவிங்தான் விஷயமே!

முதலில் போலோவின் இந்த TSI 3 சிலிண்டர் இன்ஜினுக்கு ஒரு பூங்கொத்து கொடுக்கலாம். `இன்டர்நேஷனல் இன்ஜின் ஆஃப் தி இயர்’ விருதை வென்றிருக்கும் இந்த டைரக்ட் இன்ஜெக்ஷன் – டர்போ பெட்ரோல் இன்ஜின்தான் ஃபோக்ஸ்வாகன் கார்களுக்குக் கெத்து!

ஒரு சோகமான விஷயம் – BS-4 போலோவில் இருந்த 7 ஸ்பீடு DSG கியர்பாக்ஸ், இனிமேல் BS-6 போலோவில் இருக்காது. ரேபிட், வென்ட்டோவில் இருக்கும் அதே 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர்தான். பெரிய கார்களில் இருக்கும் அதே அம்சங்கள், அதாவது 110bhp பவர் மற்றும் 17.5kgm டார்க் என்பதால், ஃபன் டு டிரைவில் எந்தச் சமரசமும் செய்ய வேண்டியிருக்காது போலோவில்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

குதிரைக்குக் கடிவாளத்தை இழுத்தால், விருட்டெனச் சீறுமே… D மோடுக்கு லீவரைத் தள்ளியவுடன் அதுபோல் கிளம்புகிறது போலோ. எப்படி என்றால், சீட்டை நோக்கி நாம் பின்னுக்குத் தள்ளப் படுகிறோம்; கார் முன்னே கிளம்புகிறது.

விலை: சுமார் ரூ.11.35 லட்சம் (சென்னை ஆன்ரோடு)
விலை: சுமார் ரூ.11.35 லட்சம் (சென்னை ஆன்ரோடு)

வென்ட்டோ, ரேபிட்டில் இருக்கும் அதே கியர்பாக்ஸ்தான் போலோ GT-ல் என்றாலும், ஓட்டுதலில் செம வித்தியாசம். சின்ன காராச்சே… விருட்டெனச் சீறுகிறது போலோ GT. போன இதழில் மேனுவல் போலோ 192 கிமீ வரை டாப் ஸ்பீடு போனது எனச் சொல்லியிருந்தோம். இதிலும் விரட்டிப் பார்த்தோம் – 185 வரை பறந்தது. இதைத் தாண்டியும் பறக்கக் காத்திருந்தது GT. சரியான சாலை இருந்தால், போலோவை வைத்து செம ஃபன் டிரைவ் பண்ணலாம். ஆனாலும், பழைய GT DSG அளவுக்கு இதன் பெர்ஃபாமன்ஸைச் சொல்ல முடியாது. அதன் விளைவாக, பழைய போலோவின் அராய் மைலேஜை விட (17.21kpl) கூடலாம் என்கிறார்கள் இந்த போலோ GT-ல்.

ஃபோக்ஸ்வாகனின் - சுட்டிக் குழந்தை... போலோ!

மற்றபடி இதன் இன்ஜின், கியர்பாக்ஸ் எக்ஸ்பீரியன்ஸ் எல்லாமே வென்ட்டோதான். அடுத்த பக்கம் இதை விரிவாகப் படிக்கலாம்.

போலோ வாங்கலாமா?

இந்த போலோ GT TSI ஆட்டோ மேட்டிக்கின் ஆன்ரோடு விலை சுமார் 11.35 லட்சம் வருகிறது. அதாவது, பழைய போலோவில் இருந்து 8,000 விலை ஏறியிருக்கிறது. Highline Plus எனும் டாப் வேரியன்ட்டில் மட்டும்தான் இந்த போலோ GT வருவதால், அடிப்படை வசதிகளைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. கி.கிளியரன்ஸில் ஃபோக்ஸ்வாகன் மனசு வைக்கவே வைக்காது போலிருக்கிறது. மற்றபடி `சரியான பெர்ஃபாமன்ஸ் வேணும்; சிட்டிக்குள்ளேயும் புகுந்து வரணும். ஹைவே ரைடிலும் பறக்கணும்’ என்பவர்கள், 11 லட்சம் பட்ஜெட் எடுத்து வைத்து ஃபோக்ஸ்வாகனின் சுட்டிக் குழந்தையை புக் பண்ணலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism