Published:Updated:

பாறை போன்ற ராக்!

ஃபோக்ஸ்வாகன் T-ராக்
பிரீமியம் ஸ்டோரி
News
ஃபோக்ஸ்வாகன் T-ராக்

ஃபர்ஸ்ட் டிரைவ்: ஃபோக்ஸ்வாகன் T-ராக்

க்ஸ்போவிலேயே ஃபோக்ஸ்வாகன் சொன்னது: ``எங்கள் நிறுவனத்தில் இருந்து இந்த ஆண்டு வரப்போகும் முதல் கார் இதுதான்!’’

விலை: `19.99 லட்சம் (எக்ஸ் ஷோரூம், சென்னை)
விலை: `19.99 லட்சம் (எக்ஸ் ஷோரூம், சென்னை)

சொன்னபடியே T-ராக் காரை லான்ச் செய்துவிட்டது ஃபோக்ஸ்வாகன். எஸ்யூவியா க்ராஸ்ஓவரா என்றொரு குழப்பம் T-ராக் காரைப் பார்த்தால் யாருக்கும் வரத்தான் செய்யும். குழம்பவே தேவையில்லை; இது எஸ்யூவியும்தான்; க்ராஸ்ஓவரும்தான். என்ன, நான்கு மீட்டருக்குட்பட்ட சப் 4 மீட்டர் எஸ்யூவி இல்லை. அதுக்கும் கொஞ்சம் மேல! க்ரெட்டா, கரோக், ஜீப் காம்பஸ் போன்றவற்றுக்குத்தான் கடும்போட்டியாக வரவிருக்கிறது T-ராக்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

வெளித்தோற்றம்

4,300 மிமீ நீளம் கொண்ட க்ரெட்டா, 4,382 நீளம் கொண்ட கரோக் – இவற்றைவிட T-ராக் கொஞ்சம் சிறுசு. 4,234 மிமீ நீளம்தான். இதன் உயரம் 1,573 மிமீ. இதுகூட சில சப் 4 மீட்டர் கார்களைவிடக் குறைவு. ஆனால், ஃபோக்ஸ்வாகன் T-ராக் காரின் ரோடு பிரசன்ஸில் நிச்சயம் எந்தக் குறையுமில்லை. ஏதோ குட்டி கடோத்கஜன் போல் தெரிகிறது T-ராக். காரணம், இதன் கட்டுமானம்.

 1. கோல்டன் மற்றும் பியானோ பிளாக் தீம் இன்டீரியர் நச்! தரம் அருமை. 8 இன்ச் டச் ஸ்க்ரீன் ஃப்ளோட்டிங்காக இருந்திருக்கலாம்.  2. 17 இன்ச் அலாய்வீல்கள்தான் T-ராக்கை, பெரிய கார் போல் காட்டுகிறது. 
 3. பின்பக்கமும் LED டெயில் லைட் பக்கா!
1. கோல்டன் மற்றும் பியானோ பிளாக் தீம் இன்டீரியர் நச்! தரம் அருமை. 8 இன்ச் டச் ஸ்க்ரீன் ஃப்ளோட்டிங்காக இருந்திருக்கலாம். 2. 17 இன்ச் அலாய்வீல்கள்தான் T-ராக்கை, பெரிய கார் போல் காட்டுகிறது. 3. பின்பக்கமும் LED டெயில் லைட் பக்கா!

எல்இடி ஹெட்லைட்ஸ், க்ரோம் லைன்டு கிரில், எல்இடி டே டைம் ரன்னிங் லைட்ஸ், கீழே பனி விளக்குகள் என்று பொசிஷனிங் எல்லாமே பக்கா. DRLதான் இங்கே இண்டிகேட்டர்களாகவும் ஓவர்டியூட்டி பார்க்கின்றன. தேன்கூடு ஏர் டேமுக்குக் கீழே கார் அடிபடுவதைத் தடுக்க ஒரு ஸ்கஃப் பிளேட். வீல் ஆர்ச்சில் இருந்து ஆரம்பித்து, பாடி லைன், பின் பக்கம் எக்ஸாஸ்ட், காரின் ரூஃப் வரை அப்படியே அந்தக் கறுப்பு லைனிங் செம ஸ்போர்ட்டி. சிறுசாக இருந்தாலும், 17 இன்ச் வீல்கள் பெரிய லுக் தருகின்றன. எஸ்யூவி விரும்பிகள் கறுப்பு, வெள்ளை, கிரே கலரைப் பெரிதும் விரும்புவார்கள். ஆனால், T-ராக் கிடைப்பது மஞ்சள், புளூ, ஆரஞ்ச் என பளீரிடும் நிறங்களில்தான்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இன்டீரியர்

ஃபோக்ஸ்வாகனின் தரத்தைப் பற்றிச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. உள்ளே ஃபிட் அண்ட் ஃபினிஷ் பிரமாதம். கோல்டு கலர் மற்றும் பிளாக் பியானோ கலர் காம்பினேஷன் டேஷ்போர்டு நிச்சயம் பிடிக்கும். காரின் கிரில்லைப்போலவே உள்ளேயும் எல்லாமே நேர்கோட்டு டிசைன்கள்தான். சென்டர் கன்ஸோலில் 8 இன்ச் டச் ஸ்க்ரீன். செமி ஃப்ளோட்டிங்தானே இப்போதெல்லாம் ட்ரெண்ட். ஆனால், கன்ஸோலிலேயே உள்ளடக்கி இருந்தார்கள். கொஞ்சம் சாஃப்ட் டச் பிளாஸ்டிக்ஸ் கொடுத்திருக்கலாம். கதவு, டேஷ்போர்டு என எல்லாமே ஹார்டு பிளாஸ்டிக்ஸ்தான். ஆனால், தரம் அருமை.

சீட்கள்

சீட்கள் எல்லாமே லெதர் மயம். டிரைவர் சீட் வசதியாக அட்ஜஸ்ட் செய்ய முடிந்தது. ஆனால், பவர்டு சீட் இல்லையே? லம்பர் சப்போர்ட் பிரமாதமாக இருந்தது. ஆனால், ஹூண்டாய் போல வென்ட்டிலேட்டட் சீட் இல்லையே? டிரைவர் சீட்டில் உட்கார்ந்தால், எஸ்யூவி ஓட்டும் பயமே இருக்காது. விஸிபிலிட்டி அத்தனை பிரமாதம்.

பாறை போன்ற ராக்!

பின் சீட்டில் இட வசதி குறைவாக இருக்கிறது. காம்பைஸவிட (2,636 mm) கரோக்கைவிட (2,638mm) இதன் வீல் பேஸ் குறைவு. 2,590 மிமீதான். பின் சீட் இடவசதி என் போன்றவர்களுக்கே கால் நீட்ட வசதி இல்லை. ஆனால், தொடைக்கான சப்போர்ட் அருமை. 6 அடி உயரமானவர்கள் என்றால், நிச்சயம் கூரையில் தலை தட்டும். இத்தனைக்கும் இது கூஃபே மாடல் இல்லை. பின் பக்க பூட் வசதி 445 லிட்டர். காம்பஸ் காரைவிட (438 லி) அதிகம். ஆனால், கரோக்கைவிடக் (521 லி) குறைவு. டிக்கி தாழ்வாக இருப்பதால் பொருட்களை எளிதாக ஏற்றி இறக்க முடிகிறது.

வசதிகள்

இன்டீரியர் இடவசதியில் பென்ச்மார்க்கை ஏற்படுத்தவில்லை T-ராக். ஆனால், நிச்சயம் வசதிகளில் பேச வைக்கலாம். டூயல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல், ஆட்டோ எல்இடி ஹெட்லைட்ஸ், 10.25 டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கஸ்டைமைஸ்டு டிஸ்ப்ளே, எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், (ஆட்டோ ஹோல்டு உடன்) பனோரமிக் சன்ரூஃப், ஆண்ட்ராய்டு ஆட்டோ/ஆப்பிள் கார் ப்ளே, TPMS, 6 காற்றுப்பைகள், இன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப், ஹீட்டட் மிரர்ஸ், ரியர் டிஸ்க் பிரேக்ஸ், பார்க்கிங் சென்ஸார்கள், ஆட்டோ பார்க் அசிஸ்ட், ஆட்டோ வைப்பர்ஸ், லேன் கீப்பிங் அசிஸ்ட், ஃப்ரன்ட் கொலிஸன் அலெர்ட் போன்றவை உண்டு. ஆனால் க்ரூஸ் கன்ட்ரோல், சேட்டிலைட் நேவிகேஷன், பவர்டு சீட்கள், வென்டிலேட்டட் சீட்கள், வயர்லெஸ் சார்ஜிங் இல்லை.

பாறை போன்ற ராக்!

\டிரைவிங்

இப்போதெல்லாம் ஃபோக்ஸ்வாகன் குரூப்பின் 1.5 லிட்டர் TSI EVO இன்ஜின்தான் ஃபேவரைட். 7 ஸ்பீடு DSG ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், 150 bhp பவரும், 25.0 kgm டார்க்கும் கொண்ட கரோக்கில் இருக்கும் அதே TSI டர்போ பெட்ரோல் இன்ஜின் யூனிட்தான் T-ராக் காரிலும். இந்த DSG கியர்பாக்ஸ், க்விக் ஷிஃப்ட்டிங்குக்குப் பெயர் பெற்றது. சட் சட் எனக் கிளம்பும். T-ராக்கின் கட்டுமானம் ஸ்ட்ராங்தான். அதேநேரம் எடை, கரோக்கைவிட 45 கிலோ குறைவு. 1,350 கிலோ என்பது இந்த க்ராஸ்ஓவருக்குச் சரியான எடைதான். 0-100 கி.மீ வேகப்போட்டியில் T-ராக்தான் ராக் செய்கிறது. வெறும் 9.89 விநாடிகளில் 100 கி.மீ வேகத்தைத் தொடுகிறது. இதுவே கரோக்குக்கும் காம்பஸுக்கும் முறையே 10.03, 10.29 விநாடிகள் ஆகின்றன.

க்விக் டவுன் ஆக்ஸிலரேஷனிலும் T-ராக் கலக்குகிறது. 20-80 கி.மீ வேகத்தை 5.51 விநாடிகளிலும், 40-100 கி.மீ-யை 6.36 விநாடிகளிலும் தொடுகிறது T-ராக். இந்த டைரக்ட் இன்ஜெக்ஷன் டர்போ பெட்ரோல் இன்ஜினின் மிட்ரேஞ்சை அனுபவிப்பதே ஒரு தனி சுகம். இதன் ஃப்ரீ ரெவ்விங் செம! அதிலும் ஸ்போர்ட் மோடு வேறு. 6,500 ரெட்லைன் ஆர்பிஎம் வரை, எந்தவித முக்கலும் இல்லாமல் பறக்கிறது T-ராக். விரட்டி ஓட்டும் மூடில் இல்லையென்றால், குறைந்த இன்ஜின் லோடுகளில் இந்த 4 சிலிண்டர் இன்ஜினில் 2 சிலிண்டர்கள்தான் வேலை செய்யும். மீதி இரண்டு தானாக, க்வாரன்ட்டைன் ஆகிக்கொள்ளும்.

பாறை போன்ற ராக்!

ஹேண்ட்லிங்

ஐரோப்பிய மாடல்கள் என்றாலே, கொஞ்சம் ஸ்டிஃப் சஸ்பென்ஷன்தான். T-ராக் சஸ்பென்ஷன் சேஸி செட்-அப்பும் அப்படித்தான். நெடுஞ்சாலைகளில் செம ஸ்டெபிலிட்டி. ஆனால், குட்டிக் குட்டிப் பள்ளங்களில், குறைந்த வேகங்களில் போகும்போது பயணம் இறுக்கமாகி விடுகிறது. அப்படியே வேகத்தைக் கூட்டினால், ரஃப் அண்ட் டஃப் ரோடுகளுக்குக்கூட டஃப் கொடுக்கிறது இதன் சஸ்பென்ஷன். 17 இன்ச் வீல்கள் வேறு செம கிரிப். திருப்பங்களில் ஸ்டீயரிங் ஃபீட்பேக்கைத் தாண்டி, பாடி ரோலும் செம கட்டுக்குள் இருக்கிறது.

T-ராக் வாங்கலாமா?

19.69 லட்சத்தில் இருந்து 21.92 லட்சம் (Ex Showroom) வரை ஆட்டோமேட்டிக் ஜீப் காம்பஸ் காரின் விலை வருகிறது. ஆனால், ஒரே வேரியன்ட்டில், ஒரே விலையில்தான் வருகிறது T-ராக். இதன் விலை 19.99 லட்சம் (Ex Showroom) . கரோக்கின் விலையோ எட்ட முடியாத தூரம். 24.99 லட்சம் (Ex Showroom). விலையை ஒப்பிடும்போது T-ராக் ஜெயித்துவிடுகிறது.

செமையான ரோடு பிரசென்ஸ், நம் ஊர் எஸ்யூவிக்கு ஏற்றபடியான ஸ்பேஸ், பிராக்டிக்காலிட்டி, போதுமான கிரவுண்ட் கிளியரன்ஸ் போன்றவற்றில் கலக்குகிறது T-ராக். டிரைவிங் டைனமிக்ஸில் இன்னும் வேற லெவலில் நம்மை மயக்குகிறது T-ராக். ஜீப் காம்பஸுக்கு செம டஃப் கொடுக்கும் இதன் டைனமிக்ஸ். ஆனால், இதை ஒரு எஸ்யூவியாக ஏற்க மறுக்கிறது மனம். அப்படி நினைத்திருந்தால், 4x4 ஆப்ஷன் கொடுத்திருப்பார்களே? இந்த காரைத் தேர்ந்தெடுக்கும் முன்பு முதலில் இதற்கு நீங்கள்தான் விடை தேடிக்கொள்ள வேண்டும்.