Published:Updated:

ஃபோக்ஸ்வாகனின் - T-ராக்... பராக்... பராக்!

ஃபோக்ஸ்வாகன் T-ராக்
பிரீமியம் ஸ்டோரி
ஃபோக்ஸ்வாகன் T-ராக்

படங்கள்: கண்ணன்

ஃபோக்ஸ்வாகனின் - T-ராக்... பராக்... பராக்!

படங்கள்: கண்ணன்

Published:Updated:
ஃபோக்ஸ்வாகன் T-ராக்
பிரீமியம் ஸ்டோரி
ஃபோக்ஸ்வாகன் T-ராக்

ஃபர்ஸ்ட் டிரைவ்: ஃபோக்ஸ்வாகன் T-ராக்

T-ராக் டெஸ்ட் டிரைவ் செய்வதற்கு முந்தைய நாள்தான் ஃபோக்ஸ்வாகனின் டிகுவான் ஆல்ஸ்பேஸை டெஸ்ட் டிரைவ் செய்தேன். ஆல்ஸ்பேஸில் எவ்வளவு வசதிகள்!

ஆல்ஸ்பேஸில் எல்லாமே செமையாக இருந்தது. T-ராக்கில் உட்கார்ந்ததும் ஏதோ மிஸ் ஆனதுபோல் இருந்தது. ஆனால் T-ராக்கையும் ஆல்ஸ்பேஸையும் இப்படி ஒப்பிடுவதே தவறு என்று சொல்லியது மனது. ஆம், ஆல்ஸ்பேஸ் எக்ஸ்-ஷோரூம் விலை 33 லட்சம். டி-ராக்கின் விலை 19.99 லட்சம்தான். ஆன்ரோடு விலையே 24 லட்சம்தான். அதற்காக T-ராக் காரை சாதாரணமாக எடை போட்டு விடாதீர்கள். இதை நான் நிச்சயம் சொகுசு க்ராஸ்ஓவர் என்றுதான் சொல்வேன். ஃபோக்ஸ்வாகனுக்கும் நிச்சயம் நல்ல பெயர் வாங்கித் தரலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஃபோக்ஸ்வாகனின் இன்டீரியர் தரம் பற்றிக் குறை சொல்லவே முடியாது. எல்லாமே ப்ரீமியம் ரகம். ஆனாலும் அங்கங்கே சில ஹார்டு பிளாஸ்டிக்ஸ்களைத் தவிர்த்திருக்கலாம்.
ஃபோக்ஸ்வாகனின் இன்டீரியர் தரம் பற்றிக் குறை சொல்லவே முடியாது. எல்லாமே ப்ரீமியம் ரகம். ஆனாலும் அங்கங்கே சில ஹார்டு பிளாஸ்டிக்ஸ்களைத் தவிர்த்திருக்கலாம்.

ஆம், இறக்குமதி செய்த முதல் இது வரை 1000 T-ராக் கார்கள் சடசடவென விற்றுவிட்டன. இதிலிருந்து ஒன்று புரிகிறது. அப்படி என்ன விசேஷம் T-ராக்கில்?

4,234 மிமீ நீளம், 1,573 மிமீ உயரம். இது க்ரெட்டா, கரோக் போன்ற எஸ்யுவி கார்களைவிட சிறியதுதான். அதேசமயம் சப் 4 மீட்டர் கார்களைவிட அதிகம். மொத்தத்தில் எஸ்யூவி-யும் இல்லை, ஹேட்ச்பேக்கும் இல்லை. T-ராக் ஒரு க்ராஸ்ஓவர். போதுமான வசதிகளையும், அம்சங்களையும், சொகுசான சவாரி, திறன்கொண்ட இன்ஜின் மற்றும் சிறப்பான கட்டுமானம் என பெரும்பாலும் எஸ்யூவி கார்களுக்கே உரித்தான அம்சங்களை சிறிய அளவு காரில் கொண்டிருப்பது க்ராஸ்ஓவர் கார்களின் மகிமை.

LED ஹெட்லைட்ஸ், க்ரோம் லைன் கொண்ட கிரில், LED DRL, பனி விளக்குகள், ஸ்கஃப் பிளேட், வீல் ஆர்ச், மற்றும் 17 இன்ச் வீல்கள் காரின் ஸ்போர்ட்டி லுக்கை அதிகரிக்கின்றன. மஞ்சள் நிற T-ராக் உங்களைக் கடந்து சென்றால், நிச்சயம் உங்களின் கடைக்கண் பார்வை காட்டி விடுவீர்கள். அதாவது, இதன் ரோடு பிரசன்ஸ் நிச்சயம் கவரும் என்கிறேன்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பொதுவாக ஃபோக்ஸ்வாகன் கார்களின் தரத்தைப் பற்றிக் குறை சொல்ல வாய்ப்பிருக்காது. ஆனால், T-ராக்கின் இன்டீரியரைப் பொறுத்தவரை, ஃபிட் அண்ட் ஃபினிஷ் தரத்தில் ஒரு சின்னக் குறை என்று இதைச் சொல்லலாம். கதவு, டேஷ்போர்டு என எல்லாமே ஹார்டு பிளாஸ்டிக் கொடுத்திருப்பது மைனஸ். மற்றபடி ஒட்டுமொத்தமாக ஃபோக்ஸ்வாகன் தரம் ஆல்வேஸ் ஆஸம். செமி ஃப்ளோட்டிங் 8 இன்ச் டச் ஸ்க்ரீன், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்ப்ளே, ஸ்டீயரிங் வீல், டோர் பேடு, சொகுசான லெதர் சீட்கள் என கேபின் அம்சங்கள் ப்ரீமியம்தான்.

விலை: ரூ.24.28 லட்சம் (சென்னை ஆன்ரோடு) ப்ளஸ்: டைனமிக்ஸ், பாதுகாப்பு, கட்டுமானம், ஓட்டுதல் மைனஸ்: விலை, இன்னும் சிறப்பம்சங்கள் கொடுத்திருக்கலாம்.
விலை: ரூ.24.28 லட்சம் (சென்னை ஆன்ரோடு) ப்ளஸ்: டைனமிக்ஸ், பாதுகாப்பு, கட்டுமானம், ஓட்டுதல் மைனஸ்: விலை, இன்னும் சிறப்பம்சங்கள் கொடுத்திருக்கலாம்.

இதன் வீல் பேஸ் 2,590 மிமீ. எனவே பின் சீட்டில் இட வசதி குறைவாகதான் இருக்கிறது. 6 அடி உயரமானவர்கள் என்றால் ஹெட் ரூம், லெக் ரூம் இல்லாமல் அமர்வது கடினமாக இருக்கும். பூட் ஸ்பேஸ் 445 லிட்டர் கொடுத்திருக்கிறார்கள். இது ஒரு 3 நாள் டூருக்கு ஓகேவாக இருக்கும்.

சிறப்பம்சங்களை நோட் செய்து கொள்ளுங்கள். 10.25 டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கஸ்டைமைஸ்டு டிஸ்ப்ளே, டூயல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல், ஆட்டோ எல்இடி ஹெட்லைட்ஸ், பனோரமிக் சன்ரூஃப், 6 காற்றுப்பைகள், TPMS, பார்க்கிங் சென்ஸார்கள், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், இன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப், ஆட்டோ பார்க் அசிஸ்ட், லேன் கீப்பிங் அசிஸ்ட், ஆட்டோ வைப்பர்ஸ், ஹீட்டட் மிரர்ஸ், ரியர் டிஸ்க் பிரேக்ஸ், ஃப்ரன்ட் கொலிஸன் அலெர்ட்… இதில் பாதுகாப்புக்குத்தான் ஃபோக்ஸ்வாகன் அதிக முன்னுரிமை கொடுத்திருப்பதுபோல் தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனாலும் வென்ட்டிலேட்டட் சீட்கள், வயர்லெஸ் சார்ஜிங், சேட்டிலைட் நேவிகேஷன், க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் பவர்டு சீட்கள் போன்றவற்றை எல்லாம் ஃபோக்ஸ்வாகன் கண்டுகொண்டால் நன்றாக இருக்கும்.

ஃபோக்ஸ்வாகனிலும் இனி பெட்ரோலின் ஆதிக்கம்தான் அதிகமாக இருக்கும். இதில் இருப்பதும் 1.5 லிட்டர் TSI EVO டர்போ பெட்ரோல் இன்ஜின்தான். 7 ஸ்பீடு DSG ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பற்றி உங்களுக்குச் சொல்ல வேண்டுமா என்ன? சிட்டிக்குள்ளும் சரி; ஹைவேஸிலும் சரி – சட் சட் என கியர் மாறுகிறது. க்விக் ஷிஃப்ட்டிங் செய்யும் DSG கியர்பாக்ஸ்க்கு ஒரு சபாஷ்.

ஃபோக்ஸ்வாகன் T-ராக்
ஃபோக்ஸ்வாகன் T-ராக்

150 bhp பவரும் மற்றும் 25.0 kgm டார்க்கும் கொண்டது T-ராக். இந்த டைரக்ட் இன்ஜெக்ஷன் டர்போ பெட்ரோல் இன்ஜினில் மிட்ரேஞ்ச்தான் பிரமாதம். அதற்காக லோ எண்ட் சுமார் ரகம் என்று சொல்லிவிட முடியாது.

T-ராக்கின் எடை 1,350 கிலோ என்பது வாவ் ரகம். இதனால், சாலையில் வேகமாகச் செல்லும்போதும் காரின் நிலைத்தன்மை ஸ்ட்ராங்காக இருக்கிறது. சிட்டிக்குள்ளும் இதன் ஓட்டுதல் தரம் சூப்பர். இந்த இன்ஜினில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் ‘க்வாரன்ட்டைன்’. ஆமாம், வேகமாகவோ அல்லது விரட்டி ஓட்டவில்லையென்றால் 4 சிலிண்டர் வேலை செய்யும் இடத்தில் 2 சிலிண்டர்கள் மட்டும்தான் வேலை செய்யும். இன்ஜினின் லோடைக் குறைத்து மைலேஜை அதிகரிக்க இந்த அற்புதமான ஐடியா. வெல்டன் ஃபோக்ஸ்வாகன்!

சஸ்பென்ஷன் ஸ்டிஃப் என்பதால், மேடு பள்ளங்களில் சிறிது அதிர்வுகளை உணர முடிந்தது. இருப்பினும் நெடுஞ்சாலைகளில் செம ஸ்டெபிலிட்டி. 17 இன்ச் வீல்களின் கிரிப் சிறப்பாக வேலை செய்கிறது. ஸ்டீயரிங் ஃபீட்பேக் அருமை. பாடி ரோல் இல்லை. எஸ்யூவி கார்களைவிட சற்றே சிறியதாக இருந்தாலும், சென்னை நகரச் சாலைகளில் இங்கும் அங்கும் சுலபமாக ஓட்டிச் சென்றது என்னை வெகுவாகக் கவர்ந்தது. ஹேண்ட்லிங் பொறுத்தவரை ஹை ஸ்கோர் செய்கிறது T-ராக்.

காருக்குள் இடவசதி இருக்கிறதா? ஆமாம். பார்த்தவுடன் பிடிக்கும் ரோடு பிரசென்ஸ் இருக்கிறதா? ஆமாம். நல்ல கிரவுண்ட் கிளியரன்ஸ் இருக்கிறதா? போதுமான அளவு. பாதுகாப்பு அம்சங்கள் இருக்கின்றனவா? அத்தனையும் இருக்கின்றன. டிரைவிங் டைனமிக்ஸ்? அதிலும் பட்டையைக் கிளப்புகிறது.

`அப்புறமென்னப்பா? ஒரு T-ராக் பார்சேல்’ என்று பர்ஸைத் திறந்து விலையைக் கேட்டால்தான் தலை சுற்றுகிறது. இதன் சென்னை ஆன்-ரோடு விலை 24.28 லட்சம். இது க்ரெட்டா, டஸ்ட்டர் போன்ற எஸ்யூவி கார்களைவிட கொஞ்சம் அதிகம். அதாவது சுமார் 5 லட்சம் முதல் 7 லட்சம் வரை அதிகமாக இருக்கிறது T-ராக். இது கொஞ்சம் இல்லை; ரொம்பவே அதிகம்.

இருப்பினும் ஃபோக்ஸ்வாகன் தரத்தைக் குறைத்து மதிப்பிட முடியாது. ஃபோக்ஸ்வாகனின் தரத்துக்காக இந்த விலை கொடுக்கலாமா வேண்டாமா என்பது உங்கள் சாய்ஸ்! 21.92 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) விற்பனையாகும் ஆட்டோமேட்டிக் ஜீப் காம்பஸ் மற்றும் 24.99 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) விற்பனையாகும் கரோக் கார்களை ஒப்பிடும்போது, T-ராக் தனி ஒருவன்தான்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism