Published:Updated:

ஆல்ஸ்பேஸ்... ஆல் இஸ் வெல்லா?

ஃபோக்ஸ்வாகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஃபோக்ஸ்வாகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ்

ஃபர்ஸ்ட் டிரைவ்: ஃபோக்ஸ்வாகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ்

ஆல்ஸ்பேஸ்... ஆல் இஸ் வெல்லா?

ஃபர்ஸ்ட் டிரைவ்: ஃபோக்ஸ்வாகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ்

Published:Updated:
ஃபோக்ஸ்வாகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஃபோக்ஸ்வாகன் டிகுவான் ஆல்ஸ்பேஸ்
30லட்சத்தில் இருந்து 40 லட்சம் வரையிலான ஒரு 7 சீட்டர் கார் வாங்க வேண்டும் என்பவர்களுக்கு, ஃபார்ச்சூனர், எம்ஜி கிளாஸ்ட்டர், எண்டேவர், ஆல்ட்டுராஸ் என ஏகப்பட்ட ஆப்ஷன்கள் இருக்கின்றன. இந்தப் போட்டியில் ஃபோக்ஸ்வாகனும் தன் பங்குக்கு ஒரு காரை இறக்கியிருக்கிறது. டிகுவான் ஆல்ஸ்பேஸ்.

டைகர் + இகுவானா என்றொரு உடும்பு… இதுதான் டிகுவான். டிகுவான் என்ற பெயர் நமக்குப் புதிதல்ல. 5 சீட்டர் டீசல் இன்ஜின் டிகுவான் நிறுத்தப்பட்டு, 7 சீட்டர் பெட்ரோல் இன்ஜின் மாடல் மட்டும்தான் இப்போது விற்பனையில் உள்ளது. முந்தைய டிகுவானைவிட 215 மிமீ நீளமும், 110 மிமீ வீல்பேஸும் அதிகமாயிருக்கிறது. காரணம் மூன்றாம் வரிசை சீட். அதாவது, இது 7 சீட்டர் டிகுவான்.

1. பெரிய சன்ரூஃப், அட்டகாசம். சீட் இடவசதியும் அருமை. பின் சீட்டுகளை மடக்கினால் 1,274 லிட்டர் பூட் ஸ்பேஸ்.  2. டச் ஸ்க்ரீனில் ரிவர்ஸ் கேமரா, கிளார் அடிக்கவில்லை.  3. பெடல்களே டிகுவானில் செம ஸ்போர்ட்டி. 4.  18 இன்ச் வீல்கள் கிரிப், ஸ்டெபிலிட்டி அருமை. ஆனால், திருப்பங்களில் 5 சீட்டர் அளவுக்கு 7 சீட்டர் டிகுவான் சுறுசுறுப்பு இல்லை.
1. பெரிய சன்ரூஃப், அட்டகாசம். சீட் இடவசதியும் அருமை. பின் சீட்டுகளை மடக்கினால் 1,274 லிட்டர் பூட் ஸ்பேஸ். 2. டச் ஸ்க்ரீனில் ரிவர்ஸ் கேமரா, கிளார் அடிக்கவில்லை. 3. பெடல்களே டிகுவானில் செம ஸ்போர்ட்டி. 4. 18 இன்ச் வீல்கள் கிரிப், ஸ்டெபிலிட்டி அருமை. ஆனால், திருப்பங்களில் 5 சீட்டர் அளவுக்கு 7 சீட்டர் டிகுவான் சுறுசுறுப்பு இல்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முன்பக்க டிசைனில் LED ஹெட்லைட்கள், LED DRL, கார்னரிங் லைட்ஸ் புதுமையை வெளிப்படுத்துகின்றன. 18 இன்ச் டயர்கள், அலாய் வீல், பெரிய கிரில்லும், ஃபோக்ஸ்வாகன் முத்திரையும் கம்பீரத்தைக் கூட்டினாலும், நான் ஒரு சாந்தமான எஸ்யூவிதான் என்று சொல்கிறது இந்த டிசைன்.

இன்ட்டீரியர் டிசைனில் எந்த மாற்றமும் இல்லை. 8 இன்ச் டச் ஸ்கிரீன், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் ப்ளே, மிரர் லிங்க் போன்ற வசதிகளுடன், டேஷ்போர்டு செம ப்ரீமியம் லுக்கில் கலக்குகிறது. ஸ்டீயரிங் வில், டோர் பேடு, லெதர் சீட்கள் மற்றும் மெமரி வசதியுடன் கூடிய பவர்டு டிரைவர் சீட் என கேபின் அம்சங்கள் அனைத்துமே ப்ரீமியம்தான்.

இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் மட்டும் டிஜிட்டலுக்கு மாறி இருக்கிறது. பெரிய பனோரமிக் சன்ரூஃப் செம வியூ. சிறிய A பில்லர் மற்றும் பெரிய ஜன்னல்கள், விண்ட்ஸ்கிரீன் இருப்பதால் சுற்றுலா செல்லும்போது ‘sight seeing’ செய்வதற்கு உகந்ததாக இருக்கும் டிகுவான் ஆல்ஸ்பேஸ்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இரண்டாம் வரிசையில் இடவசதி அருமை. குறை சொல்வதற்கு எதுவுமில்லை. ஆனால் மூன்றாம் வரிசைக்குச் செல்வதற்குத்தான் வழக்கம்போல் ஒரு கஷ்டமான டாஸ்க்காக இருந்தது. சிறியவர்கள் மட்டுமே பயணிக்க முடியும் போல. மூன்றாம் வரிசையில் பெரியவர்கள், அதாவது 5.5 அடி உயரத்துக்கு மேல் இருப்பவர்கள் முயற்சிக்கக்கூட வேண்டாம். கஷ்டப்படுவீர்கள்.

விலை: ரூ.39 லட்சம் (சென்னை ஆன் ரோடு)
விலை: ரூ.39 லட்சம் (சென்னை ஆன் ரோடு)

பூட் ஸ்பேஸ் 230 லிட்டர். மூன்றாம் வரிசையை மடக்கினால் 400 லிட்டர் ஆக மாறிவிடும். மேலும் இரண்டாம் வரிசையை மடக்கினால் 1,274 லிட்டர் லக்கேஜ் இடவசதி கிடைக்கும். இரண்டு பேர் என்றால், பெரிய டூர் அடிக்கலாம் போங்கள்.

7 காற்றுப்பைகள், ஏபிஎஸ், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், ஆன்ட்டி ஸ்லிப் ரெகுலேஷன், பிரேக் அசிஸ்ட், பார்க்கிங் சென்சார்கள், ரிவர்ஸ் கேமரா, டிராக்‌ஷன் கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், பார்க்கிங் அசிஸ்ட் எனப் பல பாதுகாப்பு அமசங்கள் இருக்கின்றன.

4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட இந்த 7 ஸ்பீடு DCT, 2.0 லிட்டர் TSI பெட்ரோல் இன்ஜின் 190 bhp பவர் மற்றும் 32 kgm டார்க் கொண்டிருப்பது ஒரு எஸ்யூவி காருக்குப் போதுமான டெக்னிக்கல் அம்சங்கள்தான். இருப்பினும் 2,000 rpm தொட்ட பிறகுதான் இன்ஜின் பவர் முழுமையாக வெளிவருகிறது. அதாவது, டர்போ லேக் இருக்கிறது. மிட்ரேஞ்ச் பவர் பிரமாதமாக இருக்கிறது. ஆனால் மிட்ரேஞ்சில் இன்ஜின் சத்தம் கொஞ்சம் அதிகம்தான். 7 ஸ்பீடு கியர்பாக்ஸ் செம ஸ்மூத்.

4 டிரைவிங் மோடுகள் இருப்பது அருமை. ‘sand, snow, highway, hill’ சோதித்துப் பார்க்க ‘sand mode’-ல் பீச் மணலில் இறங்கி விட்டோம். எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல், அவஸ்தைப்படாமல் ECR பீச் ஓரம் சுற்றி வந்தது மறக்க முடியாத அனுபவம். ஹைவேஸில் மேனுவல் மோடு பேடில்ஷிஃப்ட்டரின் பெர்ஃபாமன்ஸ் பரவசப்படுத்தியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காரின் கிரிப் மற்றும் ஹேண்டிலிங் ஓகே ரகம்தான். 5 சீட்டர் டிகுவான் திருப்பங்களில் சுறுசுறுப்பாக இருக்கும். ஆனால் 7 சீட்டர் டிகுவான் சோம்பேறியாக இருக்கிறது. ஆனால் ஒட்டுமொத்த ஓட்டுதல் அனுபவத்தில் குறை எதுவும் இல்லை. ஸ்ட்ராங்கான சஸ்பென்ஷன் செட்-அப் சாலையில் இருக்கும் சிறுசிறு குழியைக்கூட உணர வைக்கிறது . அதுவே நெடுஞ்சாலையில் காரின் நிலைத்தன்மை அருமையாக இருப்பதால் நிம்மதி அளிக்கிறது.

டிகுவான் ஆல்ஸ்பேஸின் சென்னை ஆன்ரோடு விலை 39 லட்சம். நான் முன்பே கூறியதுபோல் 35 முதல் 40 லட்சம் வரையிலான கார்களின் வரிசையில் கடும் போட்டிக்கு மத்தியில் தன்னை நிலைநிறுத்தி இருக்கிறது ஆல்ஸ்பேஸ்.

போதுமான இன்ஜின் பவர், தரமான கட்டுமானம், சிறப்பான அம்சங்கள், சொகுசான லாங் டிரைவ் எக்ஸ்பீரியன்ஸ் எனப் பல வகைகளில் ஸ்கோர் செய்திருந்தாலும், போட்டியில் இருக்கும் மற்ற கார்களின் விலை மற்றும் அம்சங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இதன் தனித்துவமே இதுதான் என்று சுட்டிக் காட்டுவதற்கு எதுவும் இல்லை. இருப்பினும் ஃபோக்ஸ்வாகன் கார்களுக்கே உரிய தனி வாடிக்கையாளர்களும், பிரியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஃபோக்ஸ்வாகன் நிறுவனத்திற்கு அதில் ஒரு பெருமை உண்டு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism