Published:Updated:

வசதிகள் காலி; டிரைவிங்கில் ஜாலி! - வென்ட்டோ ஆட்டோமேட்டிக் எப்படி இருக்கு?

ஃபோக்ஸ்வாகன் வென்ட்டோ BS-6
பிரீமியம் ஸ்டோரி
ஃபோக்ஸ்வாகன் வென்ட்டோ BS-6

ஃபர்ஸ்ட் டிரைவ்: ஃபோக்ஸ்வாகன் வென்ட்டோ BS-6

வசதிகள் காலி; டிரைவிங்கில் ஜாலி! - வென்ட்டோ ஆட்டோமேட்டிக் எப்படி இருக்கு?

ஃபர்ஸ்ட் டிரைவ்: ஃபோக்ஸ்வாகன் வென்ட்டோ BS-6

Published:Updated:
ஃபோக்ஸ்வாகன் வென்ட்டோ BS-6
பிரீமியம் ஸ்டோரி
ஃபோக்ஸ்வாகன் வென்ட்டோ BS-6
செடானில் ஹோண்டா சிட்டியும் வெர்னாவும்தான் எப்போதுமே தாதாக்கள்! சிட்டி, வெர்னாவுடன் போட்டி போட வேண்டுமென்றால், ஒரு செடான் எப்படி இருக்க வேண்டும்? வென்ட்டோதான் சட்டென நினைவுக்கு வருகிறது. 10 ஆண்டுகளாக இந்த செக்மென்ட்டில் இருக்கும் வென்ட்டோவும் சீனியர்தான்.

ஃபோக்ஸ்வாகன் வென்ட்டோ, நிஜமாகவே சிட்டிக்கும் வெர்னாவுக்கும் சரியான போட்டிதானா? பில்டு குவாலிட்டியில்தான் ஃபோக்ஸ்வாகன், வேற லெவலில் கலக்கும். இப்போது ஸ்ட்ராங்கான பெர்ஃபாமன்ஸில் கலக்கலாக இருக்கிறது புது வென்ட்டோ BS-6 பெட்ரோல் இன்ஜின். சிட்டி போலவே ஆட்டோமேட்டிக், மேனுவல் என இரண்டுமே வென்ட்டோவில் இருந்தது. மேனுவல் வென்ட்டோவின் டிரைவ் ஏற்கெனவே பார்த்து விட்டோம். அதனால் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கொண்ட 1.0லிட்டர் டர்போ மாடலில் கை வைத்தேன்.

இன்டீரியர் தரம் சூப்பர். ஆனால், டிசைன் பழசாகி விட்டது. பெரிய 8 இன்ச் டச் ஸ்க்ரீனில் ஆண்ட்ராய்டு/ஆப்பிள் கார் ப்ளே போன்ற வசதிகள்.
இன்டீரியர் தரம் சூப்பர். ஆனால், டிசைன் பழசாகி விட்டது. பெரிய 8 இன்ச் டச் ஸ்க்ரீனில் ஆண்ட்ராய்டு/ஆப்பிள் கார் ப்ளே போன்ற வசதிகள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டிரைவர் சீட்டில் உட்காரும்போதே எனக்கு ஒரு சந்தேகம். ஃபோக்ஸ்வாகன் என்றாலே DSG தானே ஃபெமிலியர்? காஸ்ட் கட்டிங்குக்காக DSG-க்குப் பதில் டார்க் கன்வெர்ட்டர் வைத்துவிட்டதா? க்விக் ஷிஃப்ட்டிங்குக்குப் பெயர் போன DSG கியர்பாக்ஸ் அளவுக்கு, இந்த வழக்கமான டார்க் கன்வெர்ட்டர் எடுபடுமா?

ரியர் ஏசி வென்ட் உண்டு.
ரியர் ஏசி வென்ட் உண்டு.

இது DSG அளவுக்கு க்விக் ஷிஃப்ட்டிங் இல்லை என்றாலும், செம ஸ்மூத்தாகச் செயல்பட்டது. காரை ஸ்டார்ட் செய்து `D’ மோடுக்குத் தள்ளியதும் ஆக்ஸிலரேட்டர் மிதிக்காமலே ஸ்மூத்தாக மூவ் ஆனது. இததான் க்ரீப் ஃபங்ஷன். மற்ற கார்களின் க்ரீப்புக்கும் ஃபோக்ஸ்வாகன் கார்களின் செயல்பாடுக்கும் எவ்வளவு வித்தியாசம்! கேலிபரேஷன் அத்தனை அருமை. அதாவது, கேலிபரேஷன் இன்ஜீனியர்கள் ஐடிலிங் வேகத்தை அதிகரித்து ட்யூன் செய்திருக்கிறார்கள். அதனாலேயே ஒரு ஃபன் டு டிரைவ் கிடைக்கும்போல!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதுவே ரிவர்ஸ் எடுக்கும்போதும், பார்க்கிங் பண்ணும்போதும் பிரேக்கிங்குக்கு செம வேலை வைக்கிறது. எனக்கு இந்த நேரத்தில் மைலேஜ் பற்றிய பயமும் ஏற்பட்டது. அதனால் D2 மோடில் வைத்தால், கொஞ்சம் ரிலாக்ஸ்டு ஆக மூவ் ஆகிறது வென்ட்டோ.

6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஸ்மூத்தாகச் செயல்படுகிறது.  ஆனால் மேனுவல் மோடில் ஓட்ட பேடில் ஷிஃப்டர்கள் இல்லை.
6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஸ்மூத்தாகச் செயல்படுகிறது. ஆனால் மேனுவல் மோடில் ஓட்ட பேடில் ஷிஃப்டர்கள் இல்லை.

சிட்டிக்குள் வென்ட்டோ அருமை! டார்க் கன்வெர்ட்டர் கியர்பாக்ஸ்களில் ஒரு ப்ளஸ் சொல்கிறேன். லோ ரெவ்களில் கும்மென டார்க் கிடைத்து, கார் சீறும் . இந்த வென்ட்டோ டர்போவும் அப்படித்தான். ஆனால், 2,000-த்துக்குள் டர்போ லேக்கும் தெரிந்தது.

16 இன்ச் அலாய் வீல்கள், நல்ல கிரிப்.
16 இன்ச் அலாய் வீல்கள், நல்ல கிரிப்.

மற்றபடி இந்த 3 சிலிண்டர் இன்ஜினின் பெர்ஃபாமென்ஸ் செம ஸ்ட்ராங். சிட்டிக்குள் சட் சட் எனக் கிளம்பும்போதும், ஹைவேஸில்`வ்வ்ர்ர்ரூம்’ என ஓவர்டேக் செய்யும்போதும் இதை உணர்ந்தேன். இதன் டவுன்ஷிஃப்ட்டிங்கில்தான் இந்த டார்க் கன்வெர்ட்டர் கியர்பாக்ஸின் வேலைப்பாடு நச்! 17.5kgm டார்க்கும் மொத்தமாக அப்படியே கிடைத்துவிடும்போல! அப்படி ஒரு ஸ்ட்ராங் என்றுதான் சொல்ல வேண்டும். இதுவே DSG கியர்பாக்ஸின் பவர் டெலிவரியில் ஒரு சுணக்கம் தெரியும். இதில் எந்த இடத்திலும் ஜெர்க்கினெஸ் தெரியவில்லை. சிட்டிக்குள் பம்பர் ட பம்பர் டிராஃபிக்கில் இந்த கியர்பாக்ஸின் செயல்பாடு ஸ்மூத் அண்ட் நைஸ்! ஆனால், ஹைவேஸில் டாப் ஸ்பீடில் DSG –யை நான் மிஸ் செய்தேன். இந்த வென்ட்டோவின் அப்ஷிஃப்ட்டிங் பணிகள், DSG அளவுக்கு இல்லை என்றுதான் சொல்வேன்.

ஆட்டோமேட்டிக் என்றால், டிரைவிங் மோடுகள் இல்லாமலா? ஃபோக்ஸ்வாகன் சும்மாவே டிரைவிங் பிரியர்களுக்குப் பிடிக்கும். Sport மோடு, இன்னும் தெறி ரகம். D மோடைவிட கியர் ரேஷியோ கொஞ்சம் நீளமாக இருப்பதால், ஆர்பிஎம் மீட்டரின் ரெட்லைன் வரை முரட்டுத்தனமாக ஸ்பின் ஆகிறது மோட்டார். என்போன்ற டிரைவிங் வெறியர்களுக்கு இதுதான் ரொம்பப் பிடிக்கும்.

விலை: ரூ. சுமார் 14.5 லட்சம் (சென்னை ஆன்ரோடு)
ப்ளஸ்: பெர்ஃபாமன்ஸ், டிரைவிங் மேனர், கட்டுமானத் தரம்
மைனஸ்: விலை,  அவுட்டேட்டட் ஆன இன்டீரியர், வசதிகள் இல்லை
விலை: ரூ. சுமார் 14.5 லட்சம் (சென்னை ஆன்ரோடு) ப்ளஸ்: பெர்ஃபாமன்ஸ், டிரைவிங் மேனர், கட்டுமானத் தரம் மைனஸ்: விலை, அவுட்டேட்டட் ஆன இன்டீரியர், வசதிகள் இல்லை

இதன் 0-100 கிமீ-யை நோட் செய்தால், 11.77 விநாடிகள் காட்டியது. இது வென்ட்டோ DSG-யை விட மைக்ரோ விநாடிகள்தான் குறைவு. ஆனால் சிட்டியை (11.85விநாடி)விட, வெர்னா டர்போவைவிட (13.09 விநாடி) செம ஸ்பீடு. 0-100 மட்டுமில்லை; 0-60, 20-80, 60-100 கிமீ போட்டிகளிலும் இந்த வென்ட்டோதான் கெத்து. ஜெயித்து விட்டாய் டார்க் கன்வெர்ட்டர்.

எல்லாம் ஓகே! கூடவே, பேடில் ஷிஃப்ட்டர்கள் கொடுத்திருக்கலாமே ஃபோக்ஸ்வாகன்? ஒரு ஆத்திர அவசரத்துக்கு வென்ட்டோவை இன்னும் விரட்ட வசதியாக இருந்திருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வென்ட்டோ ஓகேவா?

இந்த வென்ட்டோ Highline Plus டாப் மாடலின் ஆன்ரோடு விலை, சுமார் 14.5 லட்சம் வருகிறது. இது மேனுவலைவிட 91,000 ரூபாய் அதிகம். இந்த வென்ட்டோவின் அதிகபட்ச வசதிகள் என்று பார்த்தால்… LED ஹெட்லைட்ஸ், 16 இன்ச் அலாய் வீல்கள், லெதர் அப்ஹோல்சரீஸ், க்ரூஸ் கன்ட்ரோல், ட்ராக்ஷன் கன்ட்ரோல், ஆண்ட்ராய்டு/ஆப்பிள் ப்ளே கொண்ட டச் ஸ்க்ரீன், ஆட்டோ டிம்மிங் உள்பக்க மிரர்கள், பவர்டு மிரர்கள் – இவ்வளவுதான்.

சுமார் 15 லட்சத்துக்கு இது போதுமா? ஹூண்டாய் வெர்னாவின் SX 1.5 CVT வெர்ஷனிலேயே எவ்வளவு வசதிகள்!! சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜிங், கீலெஸ் என்ட்ரி-கோ, பெரிய 8 இன்ச் டச் ஸ்க்ரீன், ஆட்டோ ஹெட்லாம்ப்ஸ். இத்தனைக்கும் இது வெர்னாவின் மிட் வேரியன்ட்தான். வென்ட்டோவைவிட 1 லட்சம் குறைவு. ஃபோக்ஸ்வாகனில் வென்ட்டிலேட்டட் சீட்களுக்கெல்லாம் நாளாகும்போல!

`வசதிகள்லாம் பிரச்னை இல்லைங்க; ஃபன் டு டிரைவ் இருக்கே…’ என்பவர்களுக்குத்தான் இந்த வென்ட்டோ 1.0 TSI டார்க் கன்வெர்ட்டர் செட் ஆகும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism