முன் பக்கம் நின்று கொண்டு இந்த காரை உற்றுப் பாருங்கள்... ‘போலோதானே’ என்று சொல்லிவிடுவீர்கள். அப்படியே பக்கவாட்டில் பார்வையைத் திருப்பினால் டிக்கியைக் கவனித்துவிட்டு, ‘அட, வென்ட்டோ’ என ‘உச்’ கொட்டுவீர்கள்.

வென்ட்டோவுக்கும் போலோவுக்கும் உண்டான ஒற்றுமை இதுதான். ஃபேஸ்லிஃப்ட்டாகி வந்திருக்கும் வென்ட்டோவும் இதற்கு விதிவிலக்கல்ல. அதே தேன்கூடு கிரில், பெரிய VW லோகோ, கீழே பனி விளக்குகளோடு ஏர்டேம், கார்னரிங் ஹெட்லைட்ஸ் என போலோவின் அதே அம்சங்கள்தான்! GT லோகோ மட்டும்தான் மிஸ்ஸிங். கறுப்பு சைடு ஸ்கர்ட்டுகள் மட்டும் புதுசு. பின் பக்கம் க்ரோம் எக்ஸாஸ்ட்கூட ஸ்போர்ட்டி. உள்ளே டேஷ்போர்டு டிசைனில் மாற்றமில்லை.

ஆனால் கலர் மட்டும் கறுப்பு–பீஜ் என டூயல் டோனுக்கு மாறியிருக்கிறது. ஸ்க்ராட்ச் ஏற்படும் சாஃப்ட் டச் பிளாஸ்டிக்குகள் கேபினில் இல்லாததே செம! முன் சீட் நல்ல கம்ஃபர்ட். பின் பக்கமும் லெக்ரூம், ஹெட்ரூம் என எல்லாமே அற்புதம். பின் சீட் ஹெட்ரெஸ்ட் மட்டும் லேசாக செங்குத்தாக இருப்பதால், சீட்களில் தொடைகளுக்கான சப்போர்ட் கொஞ்சம் குறைவோ எனத் தோன்றுகிறது. வழக்கம்போல செடான்களில் இருக்கும் பிரச்னையான நடுவரிசைப் பயணிக்கு இடைஞ்சலாக இருக்கும் டிரான்ஸ்மிஷன் டனல், வென்ட்டோவிலும் சிக்கலாக இருக்கிறது. ரியர் ஏ.சி வென்ட் இருந்தாலே இதை எதிர்கொள்ளத்தான் வேண்டும்போல!

டாப் மாடலான Highline Plus–ல் எவ்வளவு வசதிகள்! LED ஹெட்லைட்/DRL, 16 இன்ச் அலாய் வீல், 4 காற்றுப்பைகள், ஏபிஎஸ், ஆட்டோ டிம்மிங் இன்சைடு மிரர், ESP, ஹில்ஹோல்டு கன்ட்ரோல், ஆண்ட்ராய்டு/ஆப்பிள் கனெக்ட்டிவிட்டி கொண்ட டச் ஸ்க்ரீன் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல், ஆட்டோமேட்டிக் வைப்பர்ஸ், ரிவர்ஸ் கேமரா, ஆட்டோ லெவலிங் ஹெட்லைட்ஸ் எனக் கலக்குகிறது வென்ட்டோ. இந்த ஃபேஸ்லிஃப்ட்டில் கனெக்ட்டிவிட்டியும் சேர்த்திருக்கிறார்கள்.

3 இன்ஜின் ஆப்ஷன்களுடன் வெரைட்டி காட்டுகிறது வென்ட்டோ. நாம் ஓட்டியது 1.5 லி டீசல்–7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன். வெர்னா, சியாஸுக்கு இணையாக ரிஃபைன்மென்ட் லெவல் பக்கா. ஆனால் ஐடிலிங்கில் உதறியது வென்ட்டோ. ஹைரெவ்களிலும் கேபினுக்குள்ளே சத்தம் கேட்கிறது.. பரவாயில்லை; டர்போ லேக்கைப் பூசி மெழுகியிருக்கிறார்கள். பவர் டெலிவரி லீனியராகவே இருக்கிறது. மிட் ரேஞ்ச் பர்ஃபாமன்ஸ் பக்கா. 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், அற்புதம். ‘ஓவர்டேக் பண்ணணும்; பவரே வா’ என்றால், கியர்பாக்ஸ் டவுன்ஷிஃப்ட் ஆகி சட்டென நாம் நினைத்த வேலை முடிகிறது. ஓட்டுதல் தரத்துக்கு லேசான இறுக்கத்தைத் தருகின்றன 16 இன்ச் அலாய் வீல்கள். சத்தமில்லாமல் வேலை செய்கிறது சஸ்பென்ஷன். சில ஷார்ப்பான பள்ளங்களை மட்டும் கேபினுக்குள் உணர முடிந்தது. ஸ்டீயரிங் சிட்டிக்குள் லைட்டாகவும்; ஹைவேஸில் டைட்டாகவும் மாறி துணை நிற்கிறது. ஆனால் கார்னரிங்கில் இன்னும் கொஞ்சம் ஃபீட்பேக் கிடைக்க வேண்டும்.

வெர்னா–சியாஸ்தான் இந்த வென்ட்டோவுக்குப் போட்டி. 8.77 – 13.18 லட்சங்களில் பெட்ரோலும், 9.59 – 14.50 லட்சங்களில் (எக்ஸ் ஷோரூம்) டீசலும் ஆகிறது வென்ட்டோவுக்கு. டாப் மாடல் வென்ட்டோவின் எக்ஸ்ஷோரூம் விலைதான் சியாஸ், வெர்னா (SX) ஆன்ரோடு விலை என்பதை இந்நேரம் குறிப்பிட்டாக வேண்டும். பில்டு குவாலிட்டி, இன்ஜினில் வெரைட்டி, டீசலில் பன்ச் என வென்ட்டோ சொல்லியடிக்கிறதுதான். ஆனால் விலை?