பிரீமியம் ஸ்டோரி
பிஎம்டபிள்யூ, தனது X6 எஸ்யூவியின் 3-வது ஜென் மாடலைக் களமறிக்கி இருக்கிறது. இதை `பீஸ்ட்’ என்கிறது பிஎம்டபிள்யூ. நிஜம்தான்; எஸ்யூவி பாதி; கூபே மீதி என்று கலந்துகட்டி காட்டுத்தனமான, ஆனால் அழகான பீஸ்ட் போல்தான் உள்ளது X6.

அந்த கூபே ரூஃப்லைன் டிசைன்தான் இதில் வாவ் விஷயமே! XLine, M Sport என இரண்டே இரண்டு வேரியன்ட்களில் வரும் இந்த பீஸ்ட்டை இப்படியும் அழைக்கலாம் - SAC. அதாவது Sports Activity Coupe.

இதில் ஆயிரக்கணக்கில் வசதி உண்டு என்கிறது பிஎம்டபிள்யூ. உங்கள் விருப்பங்களுக்கு ஏற்ப பல வசதிகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

கிட்டத்தட்ட 500 மீட்டருக்கு வெளிச்சம் பீய்ச்சி அடிக்கும் லேசர் லைட்ஸ், பெரிய பனோரமிக் கிளாஸ் ரூஃப், வால்வோவில் மட்டுமே காணப்படும் ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, ரிவர்ஸ் அசிஸ்டன்ஸ் சிஸ்டம், பெரிய சைஸ் 20 இன்ச் அலாய்வீல் என்று வந்திருக்கிறது X6. பின்பக்கப் பயணிகளுக்கும் என்டர்டெயின்மென்ட் ஸ்க்ரீன் ஆப்ஷன் உண்டு. அதுவும் ஹர்மான் கார்டன் சரவுண்ட் சிஸ்டத்துடன்.

பழசைவிட 26 மிமீ நீளம், 15 மிமீ அகலம், 42 மிமீ வீல்பேஸ் என்று டைமென்ஷனில் மாறியிருக்கும் X6, பெட்ரோல் இன்ஜினில் மட்டும்தான் வந்திருக்கிறது. 3.0 லிட்டர் இன்லைன் 6 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினின் பவர் 340bhp, டார்க் 45kgm. இந்த X6-ல் இருப்பது 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்.

பிஎம்டபிள்யூ X6
பிஎம்டபிள்யூ X6

தரம் மற்றும் பில்டு குவாலிட்டியில் டாப் நாட்ச் ஆக இருக்கிறது X6. இருக்காதா பின்னே… 95 லட்சமாச்சே! ஒரே எக்ஸ் ஷோரூம் விலையில் வந்திருக்கும் X6 பீஸ்ட்டை, வீட்டில் இருந்தபடியே புக் செய்து கொள்ளலாம்.

0-100 கி.மீ-யை வெறும் 5.5 விநாடிகளில் எட்டும் இந்த X6-யை ஓட்டிப் பார்க்க உங்களைப்போல் நாங்களும் ஆர்வமாக இருக்கிறோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு