Published:Updated:

ரா... ரா... ஹூண்டாயின் ஆரா!

ஹூண்டாயின் ஆரா!
பிரீமியம் ஸ்டோரி
ஹூண்டாயின் ஆரா!

ஃபர்ஸ்ட் லுக்: ஹூண்டாய் ஆரா

ரா... ரா... ஹூண்டாயின் ஆரா!

ஃபர்ஸ்ட் லுக்: ஹூண்டாய் ஆரா

Published:Updated:
ஹூண்டாயின் ஆரா!
பிரீமியம் ஸ்டோரி
ஹூண்டாயின் ஆரா!

ஹூண்டாய் எக்ஸென்ட்டின் அடுத்த ஜெனரேஷன் மாடலாக வந்திருக்கிறது, ஆரா. முன் பக்கம் பார்த்ததும் சட்டென கிராண்ட் ஐ10 நியோஸ் ஹேட்ச்பேக்தான் ஞாபகம் வருகிறது. ஆனால், ‘C’ பில்லரையும், ஸ்போர்ட்டியான பின் பக்க பூட்டையும் பார்த்ததும்தான் ‘அட, இது செடான்’ என்று தெரிகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

LED ரேப் அரவுண்ட் டெயில் லைட், பின் பம்பரில் நம்பர் பிளேட் போன்றவை சட்டென எலான்ட்ராவை ஞாபகப் படுத்துகின்றன. ஆனால், பின் பக்கம் தனித்துவம். வழக்கமாக ஹூண்டாய் கார்களின் பின் பக்கம் ஷார்ப்/மொழுக் இரண்டும் கலந்துதான் இருக்கும். ஆராவின் பின் பக்கம் செம ஷார்ப். எக்ஸென்ட்டின் அதே 3,995 மிமீ நீளம், 1,520 மிமீ உயரம்தான் ஆராவில். அகலத்தில் மட்டும் 20 மிமீ அதிகம். வீல்பேஸும் எக்ஸென்ட்டைவிட அதிகம் – 2,450 மிமீ.

ஃபர்ஸ்ட் லுக்: ஹூண்டாய் ஆரா
ஃபர்ஸ்ட் லுக்: ஹூண்டாய் ஆரா

நியோஸுக்கும் ஆராவுக்கும் வெளிப்பக்கம் சின்னச் சின்ன வித்தியாசம். ஆராவில் இரட்டை LED DRL இருக்கின்றன. நியோஸில் ஒற்றைதான். டாப் வேரியன்ட்களில் 15 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள் ஸ்டாண்டர்டு ஆப்ஷன். உள்பக்கமும் நியோஸ் வாடை. டேஷ்போர்டு கன்ட்ரோல், சீட்கள் உதாரணம். இதில் 8.0 இன்ச் டச் ஸ்க்ரீன் இருக்கிறது. ஆப்பிள்/ஆண்ட்ராய்டு கனெக்ட்டிவிட்டி எல்லாமே உண்டு. டிஜிட்டல் ஸ்பீடோ மீட்டருடன் 5.3 இன்ச் MID ஸ்க்ரீன் இருந்தது. வயர்லெஸ் சார்ஜிங்கை ஹூண்டாய் இப்போது டிரேட்மார்க் ஆகிவிட்டது.

வெல்டன்! மேலும், ஆர்க்கமிஸ் சவுண்ட் சிஸ்டம், பின்னால் ஆர்ம்ரெஸ்ட், டிரைவர் ரியர்வியூ மானிட்டர் என்று பல வசதிகள். வென்யூவில் போல் புளூலிங்க் கனெக்ட்டிவிட்டி இருக்கிறதா என்றால் இல்லை; அதற்குப் பதிலாக i–புளூ ஆடியோ ரிமோட் ஸ்மார்ட்போன் ஆப் கொடுத்திருக்கிறார்கள். இதுவும் நியோஸில் இருப்பதுதான்.

ஹூண்டாய் ஆரா
ஹூண்டாய் ஆரா

ஆராவின் டீசல்/பெட்ரோல் இரண்டுமே 1.2 லிட்டர் BS-6தான். கப்பா பெட்ரோல் இன்ஜினில் 83bhp பவரும் 11.4kgm டார்க்கும். டீசலின் பவர் 75bhp; டார்க் 19.0kgm. ஹூண்டாயின் முதல் BS-6 டீசல் இன்ஜின் இது. நைட்ரஜன் ட்ராப் அதாவது Lean NOx Trap (LNT) கொண்ட இது, வழக்கமான கேட்டலிக் ரிடக்ஷன் சிஸ்டத்தைவிட விலை மலிவானது. இரண்டு இன்ஜின்களிலுமே 5 ஸ்பீடு மேனுவல்/ஆட்டோ இரண்டுமே உண்டு. மூன்றாவதாக ஒரு பெட்ரோலும் உண்டு. வென்யூவில் இருக்கும் 1.0லி டர்போ பெட்ரோல். வென்யூவைவிட பவரிலும் டார்க்கிலும் குறைவாக ட்யூன் செய்துள்ளார்கள். (100bhp/17.2kgm). டர்போவில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும்தான்.

டிசையர், அமேஸ், ஆஸ்பயர், டிகோர் போன்ற கார்களுக்குக் கடும்போட்டியை ஏற்படுத்தப் போகும் ஆராவின் முழுமையான டெஸ்ட் ரிப்போர்ட்டுக்குக் காத்திருங்கள்!